1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெளிக்காட்டா நேசம்

Discussion in 'Regional Poetry' started by bluefairy, Feb 23, 2010.

  1. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    சிறு வயதில் நீங்கள் என்னை தூக்கி கொஞ்சி இருக்கிறீர்கள்,
    அதை நினைத்தால் இன்று எனக்கு ஏக பெருமை.

    அவ்வளவு வியந்திருக்கிறேன் உங்களை பார்த்து,
    எத்தனை வியாபாரங்கள் எவ்வளவு நண்பர்கள்.

    நீங்கள் என்னோடு அதிகம் பேசியதில்லை,
    ஆனால் என் மீது கொண்ட பாசத்தை எப்படியோ உணர செய்தீர்கள்.

    ஊரே மது புகையால் மூழ்கிய போதும்,
    பல நண்பர்கள் தொடர்பு இருந்தும் நீங்கள் அதை சீண்டவே இல்லை.

    எடுத்த எல்லா வேலைகளிலும் அழுத்தம் திருத்தமாக ,
    கண கச்சிதமாக செய்யும் உங்கள் தோரணையை பார்த்து கொண்டே இருக்கலாம்.

    இது வேண்டும் என்று கேட்கும் வாய்ப்பையே எனக்கு கொடுக்கவில்லை,
    நான் நினைப்பதை விட அதிகமாக அல்லவா தருவீர்கள்.

    அன்று, நான் புகுந்த வீடு செல்லும் முன்,
    அம்மா சித்தியின் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.

    நானோ அறையறையாக தேடி கொண்டிருந்தேன் ,
    என் நினைவுகளை அல்ல, யாருக்கும் தெரியாமல் நீங்கள் வடித்து வைத்த கண்ணீரை.........

    அப்பா, நீங்கள் தான் என் முன் உதாரணம் அன்று முதல் இன்று வரை......
    இன்றும் என்றென்றும்..........
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள எழில்,

    சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடனே.... ஆனால் கடனாக செய்யாமல் கருத்தாக செய்யும் தந்தையை பற்றி அற்புதமான கருத்துள்ள கவிதை.
    என் தந்தை தான் எனது ஹீரோ என்றுமே...... ஆழ்மனதில் உறங்கி கிடந்த தந்தை பற்றிய நினைவுகள் ஊற்று போல் பீரிட்டு வந்தது.

    உளமும், புறமும் உற்சாக ஊற்று.
    இந்த வெயிலின் தென்னங் காற்று.

    மிகவும் அருமை.
    வெளிக்காட்டத நேசம் - என் தந்தையின் பாசம்
     
  3. deraj

    deraj Platinum IL'ite

    Messages:
    2,312
    Likes Received:
    533
    Trophy Points:
    210
    Gender:
    Female
    Dear Ezhil

    Nesathai mattum alla. Edhayum velikattamal irupavar en thandhai. Migavum aurumail
     
  4. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Thanks for your feedback Deepa.
    Happy that i made u think of ur father.
     
  5. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    அன்புள்ள வேணி,

    உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
    உங்கள் அப்பாவின் நினைவை கொண்டு வந்தது எனக்கு மகிழ்ச்சி..........
    உங்கள் எண்ணங்கள் தான் என்னை எழுத தூண்டுகிறது.
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    எழில்,

    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
    ஆனால் அதை அவர் சொல்லாமலே,
    உங்களை உணரச் செய்தது மிக அருமை.

    சொல்லித் திரிவது செயற்கை,
    சொல்லாமல் தெரிவது இயற்கை.

    அவர் அன்பினை உணர்ந்து,
    அதனைக் கவிதையில் கொணர்ந்து,
    எங்களிடம் நல்லவண்ணம் பகிர்ந்து,
    கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
     
  7. susri

    susri Silver IL'ite

    Messages:
    1,596
    Likes Received:
    42
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Dear Azhil,
    Attakaasam.:clap......arumaiyaana kavithai .
     
  8. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    நட்புடனுக்கு,

    உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஒரு ஊன்றுகோளாய் இருக்கிறது.
    மிக்க நன்றி.


    அன்புடன்,
    எழில்
     
  9. bluefairy

    bluefairy New IL'ite

    Messages:
    64
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Dear susri,

    Attakasamnu ore varthila enna attakasa paduthinga. Romba thanks susri for ur appreciation.
     

Share This Page