1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Mr T's ஸ்டாக் மார்க்கெட் பதிவு என்னை இந்த பதிவை எழுத தூண்டியது. இந்த பதிவு முற்றிலும் எனது சொந்த அனுபவத்தை வைத்து எழுதுகிறேன். முடிந்தவரை எளிமை படுத்துகிறேன். படித்து ஒருவர் பயன்பட்டாலும் சந்தோசம் கொள்வேன்.

    எனது கண்ணோட்டத்தில் ஸ்டாக் மார்க்கெட் முதலீட்டை பொறுத்தவரை பொதுவாக இரண்டு வகையினர்:

    1) பணத்தை தொலைத்தவர்கள்
    2) பணத்தை தொலைக்க போகிறவர்கள்

    அப்புறம் எதற்கு இதில் முதலீடு செய்ய வேண்டும்? மேலே சொன்னது Traders க்கு பொருந்தும். எத்தனையோ லட்ச நபர்கள் சினிமாவில் சேர முயற்சிப்பார்கள். அதில் எத்தனை நபர்கள் இமாலய வெற்றி பெற்று டாப் 10 ல இடம் பெறுவார்கள்? அது போல இமாலய வெற்றி பெற்ற traders சொற்பமான அளவில் தான் இருப்பார்கள். Traders யார்? Stock price ஏற்றம் இறக்கம் (Uptrend/downtrend) கணித்து(?) குறிப்பாக technical analysis (Candlestick charts/patterns/trading volume) செய்து குறுகிய மணி நேரத்தில்/ நாட்களில்/மாதங்களில் லாபம் சம்பாதிக்க பார்ப்பவர்கள். இது எங்கு கொண்டு போய் முடியும்? கிட்டத்தட்ட சூதாட்ட முடிவு தான்.

    Investors யார்? Fundamental analysis** செய்து நம்பகத்தன்மை உள்ள நிறுவனங்களின் பங்குகள் வாங்கி நிறுவனங்களின் லாபத்தால் பங்கு விலை உயர்ந்து கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையில் நீண்ட காலம் (>5 years) பங்குகளை பொறுமையாக வைத்து இருந்து இலாபம் பார்ப்பவர்கள். இதில் வெற்றி பெற சாத்தியக்கூறுகள் அதிகம்.

    **Fundamental analysis என்றால் என்ன ? இதெல்லாம் ரிசர்ச் செய்வது: ஒரு நிறுவனம் எப்படி பணம் சம்பாதிக்கிறது? எத்தனை வருடங்கள் அந்த துறையில் அனுபவங்கள் இருக்கிறது ? எப்படி பட்ட நிர்வாகிகள்? (Tata vs Ambani) இவர்கள் விற்பனை செய்யும் Products/Services இன்னும் எத்தனை காலத்திற்கு பொருந்தும்/தாக்கு பிடிக்கும்? யாரெல்லாம் போட்டியாளர்கள்? Revenue/Net income/Free Cash Flow வருடம் தோறும் கடந்த ஐந்து வருடங்களாக உயர்ந்து கொண்டே இருக்கிறதா? எவ்ளோ கடன் வைத்து இருக்கிறார்கள்? வளர்ச்சிக்கான கடனா? ஏதாவது தப்பான தகவல்கள் இவர்களை பற்றி மீடியாவில் உதவுகிறதா?

    கண்ணை கட்டுதா ? எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் கண்ணை மூடிவிட்டு வாங்கலாம் நீண்ட கால முதலீட்டிற்கு index funds (basket of stocks) -> Examples: S&P 500 in the US, Nifty50 in India. அந்தந்த நாட்டில் கண்காணிப்பில் உள்ள பல முன்னணி நிறுவனங்களின் பங்குகளை கொண்ட ஒரு கூடை. பல வருடங்கள் பொறுத்து இருந்தால் இது பொன் முட்டையிடும் வாத்து கூடை. (என்னிடம் இந்த கூடைகள் இருக்கிறது.)

    அப்புறம் எதற்கு இந்த தனிப்பட்ட ஸ்டாக் வாங்கும் மோகம் எனக்கு அதுவும் $ ல? அடுத்த பதிவில்.
     
    Thyagarajan likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னுடைய தேவைகள் எல்லாம் கருத்தில் கொண்டு SP 500, Dow Jones ல இருக்கற நான் தேர்ந்து எடுத்த 80 நிறுவங்கங்களின் தனிப்பட்ட ஸ்டாக்ஸ் வாங்கி நானே ஒரு index build பண்ணிட்டேன். இவற்றில் 10 தோற்றாலும் 70 காப்பாத்தும். லாபத்தில் தான் நிறுத்தும்.

    என்னுடைய தேவைகள்:
    1) குறைந்த பட்சம் >2% returns வேண்டும் (நான் வசிக்கும் இடத்தில சராசரியாக வருடத்திற்கு inflation 2% ஆக இருந்தது) – Beating inflation
    2) Annual dividend >2% வேண்டும் – Regular Cash flow + Beating inflation
    விடாமல் dividend வேணுமா ? Dividend Aristocrat stocks வாங்கணும். மொத்த ஸ்டாக் மார்க்கெட் கவலைக்கிடமாக இருந்தாலும் dividend கட்டாயமாக கிடைக்கும். எவ்ளோ நேரம் செலவிடுகிறேன்? என்னுடைய நேரத்திற்கு இந்த >2% returns பலனாவது இல்லை என்றால் எப்படி? (மற்ற நிறுவனங்களில் Pay out ratio பார்த்து கொள்ளவேண்டும்.)
    3) International companies பங்குகள் வேண்டும் - Global diversification - பல நாடுகளில் செழிப்பா இருக்கற நிறுவனங்களை ஏன் விட்டு வைக்க வேண்டும் ?
    4) Growth stocks - Express train - வளர்ச்சி வேகமானது - Index fund 20% returns என்றால் growth stocks 40% returns கிடைக்கலாம்
    5) Value stocks - Bus - சீராக நிதானமாக விலை ஏறும்
    6) Risky stocks - Jet - Multibaggers - தலைசிறந்ததா இல்லை தலை குப்புற விழப்போகுதா ? யாருக்குமே தெரியாது (10 நிறுவனங்களில் ஒன்றோ இரண்டோ ஜெயித்தால் மீதி தோற்றாலும் பரவாயில்லை. லாபத்தில் நிற்கும்)

    மேலே சொன்னதெல்லாம் சேர்ந்தது தான் என்னோட index.

    Stock Price! Price! Price!
    என்ன விலையில் பங்குகள் வாங்குகிறோம் என்பது தான் மிக முக்கியம். அதிக விலை (52 week high) கொடுத்து வாங்கியது சரிந்தால் திரும்ப எழுவதற்கு மாதங்கள்/வருடங்கள் கூட ஆகலாம். இதனால் பொறுமையாக காத்திருந்து குறைந்த விலையில் (52 week low to medium) வாங்க வேண்டும்.

    சரியான விலை எப்படி கணிப்பது ? Valuation models - PEG ratio, P/E, EV/EBITA, DCF இருக்கிறது. இதெல்லாம் 100 % சரியான முறையா? Market sentiment இருக்கிறது. Supply/demand விலையை தீர்மானிக்கிறதா? உலக நடப்பு இருக்கிறது. உள்ளூர் அரசியல் இருக்கிறது. Insider trading இருக்கிறது. Corona இருக்கிறது. War இருக்கிறது. Inflation/interest rate/unemployment இருக்கிறது. இதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு சரியான விலையை துல்லியமாக யாராலும் அனுமானிக்க முடியாது.

    மொத்தமாக ஒரே company stocks வாங்கவே கூடாது. Dollar Cost Averaging முயற்சிக்கலாம். இதை நான் 100% follow பண்ணுவேன். $100 குடுத்து ஒரு ஸ்டாக் வாங்கி இருப்பேன், $50 விலை வந்தால் திரும்பவும் வாங்குவேன். வைத்திருக்கும் பங்கிற்கு நான் குடுத்த விலை $75 (average)

    Calculated risk எடுத்து இருந்தாலும் இழப்புகள் வந்தால் கொரோனா பேரில் கணக்கு எழுதிட வேண்டியது தான் - கொரோனா ஆண்டுகளில் (அதிகபட்சம் 4 ஆண்டுகள்? ) வேலை பார்த்து சம்பாதித்தது மட்டும் கோவிந்தா என்று நினைத்து கொள்வேன். இன்னும் 14 ஆண்டுகள் என்னோட index வளர விட போகிறேன் எனது கண்காணிப்பில். வென்றால் $1M. குடிப்பினை இருந்தால் Jan 2038 ல update தரேன்!! :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed reading your பாணி. Good style and elân.

    I must say your post reveals your in-depth study & understanding of nitty-gritty of stock market and am sure you must have been steadily growing your invested monies with accumulated dividends.

    The post reveals that you are one of those rare discerning investors who remain unperturbed with short term fluctuations in the market with clear cut long term goals intact.


    Is there any lyrics composed in Tamil & in English referring to stocks & shares.

    Long before I read a book entitled “The Midas Touch” based on real happenings in South Africa stock market. The author himself was the manipulator and he wrote this book from jail.

    With best wishes for continuous robust growth of your Money-Tree
    T
     
    Last edited: Jan 13, 2023
    singapalsmile likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Incontinuation to my previous post #7793 this chartis added as addendum

    upload_2023-1-13_19-2-32.jpeg
     
    singapalsmile likes this.
  5. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Dear @vidhyalakshmid
    I enjoyed every sentence you had uttered on this video with quotes from eminent Tamilian Bharathi Dasan, Ulaga Nayagun Saint Thiruvalluvar.

    It is 100 % truth that பொருள் இல்லார்க்கு இவ்உலகம் இல்லை.
    My tamil teacher sir in school used to say
    காசு லேசா
    காசாலே சா.

    சினிமா பாடல் வரிகள்......
    காசே தான் கடவுளடா
    இது அன்த
    கடவுளுக்கும்
    தெரியுமடா
    You have begun it with humbleness in your sonorous stentorian voice which gave lilt to your entire speech. Very true that monetary wealth would be the torch bearer in every place along all latitudes except heaven.
    But then we heard even Tirupathi Sreenivasa Garu too borrowed for wedding Consort Laksmi several trillions of money for which it is believed that He is paying Interest even today to Lord Kuberan.
    The reference to ancient days tamil savants eulogising the king establish that even in those days who had the gold coins from the king as reward command respect.

    Kuselar had an affluent friend from gurukulam yet his self-dignity prevented him from voicing his need for money -The Vitamin M for living the family life. But he was blessed with huge windfall. This could be an example of mere thought of maintaining once dignity and humbleness could lead to richness.

    பணம் எங்கும் பேச ஆரம்பித்துவிடும் என்று நன்கு அழுத்தமாக பொருத்தமாகச்சொன்னீர். ஆம் பணம் பாதாளம் வரை பாயும் என்பது உறுதி.
    கருவரையிலிருன்து கல்லறைவரை தேவை சில்லறைதானே... அருமை.

    தனம்தான் - தனம் தரும் - அந்தாதி அபிராம பட்டர் குறிப்பு மிகச்சிறந்த ஒன்று. என் காலை வழிப்பாடல்களில் இது ஒன்று.

    இலான் மஸ்க் பல் தேய்த்தாலும்... உலகச்செய்தி ஆகும். சிரிக்க சிந்திக்கவைத்தீர்.
    தங்கள் குறள் குறல் போட்டியில் வென்று இருக்கும் என்று நம்புகிறேன்.

    வாழ்க தமிழ் பற்று வாழ்க சீமாட்டி வித்யா லஷ்மி D.

    This debate reminded me of somewhat similar titled debate in the link

    It also reminded me of Tamil box office movie பணமா பாசமா.​
     
    Last edited: Jan 17, 2023
    vidhyalakshmid likes this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Thank you Thyagarajan Sir! You have taken time to analyse my speech and provided me the positive feedback with your perspectives and examples. Happy to know that you chant the verse from Abirami Andhadhi. I liked the Tirupathi Perumal example, may be I can use it in another speech.:blush:
    காசு லேசா - காசாலே சா first time I am reading this! Always a pleasure to get a comment from you. Generally the debates judgements are not much relevant to the speakers. How they argued and gave their presentation matters!
     
    Thyagarajan likes this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I like your encouragung response.
    Regards.
     
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மிக்க நன்றி T. Stock market கடல் போன்றது. நான் கற்றது கடுகளவு மட்டுமே. இதில் இன்னும் கற்றுக்கொள்ள எவ்ளோவோ இருக்கிறது. இன்னும் சில விஷயங்கள் என்னுடைய index பற்றி குறிப்பிட தோன்றியது.

    1. Sector allocation - 11 sectors சேர்த்து இருக்கிறேன். எதையும் விடவில்லை. முதலீட்டின் % அளவு மட்டுமே வேறுபடும்.
    2. Asset allocation - Stocks, ETFs, Mutual Funds, Personal VV's index :grinning::grinning:, Real Estate, Gold, Debt Instruments, Crypto, Cash. Total net worth ல 40% stock market investments. அதற்கு மேல ரிஸ்க் வேண்டாம். Cash is King. Total networth ல10% cash Savings account ல எப்போதும் இருந்தால் கடன் வாங்காமல் தாயகத்தில் இடம்/வீடு வாங்க முடியும். பெரிதாக ஒரு வீடு வாங்குவதை காட்டிலும் 4 வீடுகள்/நிலங்கள் வாங்கினால் பிற்காலத்தில் விற்க கூடிய சூழ்நிலை வந்தால் சுலபமாக விற்றுவிட்டு போகலாம். Gold bars, Bonds - Safe haven investments. Hedging க்கு உபயோகப்படும். ஸ்டாக் மார்க்கெட் ஏறினால் தங்கம் இறங்கும் (Negative correlation coefficient).
    3. வரும் காலத்தில் சூடு பிடிக்க கூடிய விஷயங்கள் - Metaverse/Web 3.0/Renewable energy/Electric vehicles -இதில் இறங்கியுள்ள நிறுவனங்களையும் VV's index la சேர்த்து இருக்கிறேன்.
    4. With vs Without dividends - Chart பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி. இதை நான் ஏற்கனவே கருத்தில் கொண்டிருந்தேன். என்னுடைய எதிர்ப்பார்ப்பு :10% returns. Annual Dividends 2.5% கண்டிப்பாக இருக்கும் பட்சத்தில் மார்க்கெட் குறைந்த பட்சம் 7.5% குடுத்தால் போதும். என்னுடைய டார்கெட் எளிதில் நிறைவேறி விடும்.

    Business, Pleasure நான் கலப்பது இல்லை. Lyrics - Pleasure; Stock market - Business. :grinning::grinning:

    நேரம் ஒதுக்கி கண்டிப்பாக இந்த புத்தகம் படித்துவிட்டு இங்கு எழுதுகிறேன். நன்றி.
     
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    ரொம்ப பொருத்தமான தலைப்பை தேர்ந்து எடுத்து இங்கு பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி.

    செல்வம் வழி காட்டும் ஒளி கூட்டும், நிம்மதியில் நிதி தன்னகத்தை கொண்டு நிறைவை கொடுக்கிறது, உறவுகளை இணைக்கும் பாலம் தனம், பணம் வைராக்கியம் தரும் வைட்டமின், பகைவர் செருக்கு அழிக்கும் ஆயுதம் னு பணத்தை ஆதரித்து பேசியதற்கு சில்லறையை நோட்டை சிதறவிட்டு உங்களை பாராட்டலாம். :grinning::grinning: கருத்து கேடயம் கொண்டு தடுத்து விடுவோம் னு நீங்கள் குறிப்பிட்டதை கேட்டவுடனே எனது சிந்தனையில் ஒரு பிரகாசமான ஒளி. சொற் புலமையும் உங்களுக்கு இருக்கிறது.

    நான் எந்த பக்கம் ?

    என்னை பொறுத்தவரை, பணம் இல்லை இல்லை என்று புலம்புவர்களிடம் பணம் சேர்வதே இல்லை. இருக்கும் பணத்தை ஆராதிக்கும் போது அது இடம் பெயர முயற்சிப்பதில்லை. கொண்டாடும்போது இன்னும் கொடுத்து மகிழ்ச்சியை கூட்டுகிறது. இதற்கு பிறந்த ஜாதகம் கட்டத்தில் பதினோராம் இடம்(11th house) வரம் வாங்கி இருக்கணும். லக்கினத்தில் அமர்ந்து இருக்கும் Jupiter, வரம் கொடுக்கும் இடத்தில அமர்ந்து இருக்கும் Exalted Venus என்னை மன்னிப்பார்களாக - எனது உண்மையான கருத்தை கீழே பதிவிடுவதற்கு!!

    எப்படியும் வாழலாம் என்று வழி நடத்தும் பணம்; இப்படி தான் வாழனும் என்று வழி நடத்தும் குணம். தண்ணீருக்கு நிறம் இல்லை. ஒரே மாதிரி தான் இருக்கும் - அப்படி தான் குணம். பச்சோந்தி நிறம் மாறும் - அப்படி தான் பணம்.

    பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்று சொல்வார்கள். பிணம் தானாகவே சுடுகாடு சென்று விடுமா என்ன? தூக்கிப்போட நாலு நபர்கள் வேண்டாமா? அந்த நபர்கள் தூக்கி போடும்போது என்ன நினைக்க வேண்டும் - எவ்ளோ குணமான நபர் தவறி விட்டாரே என்று வருந்தி கண்ணீர் சிந்த வேண்டாமா?

    பணத்திற்காக என்னால் ஒரு போதும் குணத்தை விட முடியாது. எனது குணத்திற்காக பணத்தை என்னால் விட முடியும். உலகத்திலே எனக்கு சுகமானது தூக்கம் தான். நான் நிம்மதியா தூங்கணும். நிம்மதியா இருக்க நிதியை காட்டிலும் குணத்தை காட்டும் மதி தான் எனக்கு வேண்டும். :grinning::grinning:
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page