1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    YT - பூவே உனக்காக - Climax

    இந்த படத்தின் கிளைமாக்ஸ் ரசித்தவர்கள் எத்தனையோ நபர்கள் இருப்பார்கள். நானும் அப்போ சிலாகித்து போனேன். இப்போ யோசிச்சு பார்த்தால் வேறு மாதிரி எண்ணங்கள் தோன்றுகிறது.

    இந்த படத்தின் கிளைமாக்ஸ் பற்றி இப்போ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? என்னுடைய கிறுக்கல்கள் அடுத்தமுறை பதிவில்.

    சில வருடங்களுக்கு முன்பு நம்ம poetic thread க்கு வந்து சிறப்பாக பங்களித்த நடிகர் விஜயின் தீவிர ரசிகை ஒருவர் இன்று எனது நினைவிற்கு வந்தார். மலரும் நினைவுகள்!! அவர் நலமும் வளமும் ஆக இருப்பார் என்று நம்புகிறேன். :grinning::grinning:
     
  2. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    One of my fav movie...
    90s kids மிகவும் ரசித்த climax. இப்போது யோசித்து பார்த்தால் கதாநாயகன் தனது காதல் நினைவுகளிலிருந்து வெளிவந்து சிறிது காலம் கழித்துகூட வேறு ஒரு துணை அமைத்து கொள்ளலாமே என்று தோன்றுகிறது...
     
    singapalsmile and Thyagarajan like this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Very melodious! Feelu - failu, oruthala - tharudhala expression of aesthetic emotions in casual words. Thanks for sharing. I think this will be trendy soon.:blush:
     
    Thyagarajan and singapalsmile like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Priya,
    உங்களது அபிப்ராயத்தை பகிர்ந்ததிற்கு நன்றி. நீங்கள் பண்பாளர் போல பதில் அளித்தது படிப்பதற்கு எனக்கு பிடித்தது.

    சிறிது காலம் கழித்துகூட, துணை அமைத்து கொள்ளலாமே - நீங்கள் பதில் சொன்ன விதத்தில் பண்பு தெரிந்தது. :grinning::grinning:
     
    svpriya and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னை பொறுத்தவரை இந்த ஹீரோ எடுத்தது emotional decision. அதுவும் ஒருதலை காதலுக்காக? Sensibility சுத்தமாக இல்லை.

    திருமணத்திற்கு முன்பு காதல் வயப்படுவது ரொம்ப ஈஸி. காதல் கவர்ச்சி கண்ணை /மூளையை மறைக்கும். சேர்ந்து செலவிடும் நேரம் குறைவாக இருப்பதால் ஏங்க வைக்கும். பொதுவாக பிடித்த விஷயங்களை பூத கண்ணாடி போல பெரிதாக காட்டும். குறைகள் பெரிதாக தெரியாது. வீட்டு பொறுப்புகள் அதிகம் இருக்காது. கற்பனைக்கு நேரம் அதிகம் இருக்கும்.

    திருமணத்திற்கு பின்பு காதல் ரொம்பவே கடினம். சேர்ந்து செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் நிறைகளை விட குறைகள் பெரிதாக தெரியும். அதிக அக்கறை இல்லாமல் இருத்தல், Ego clashes, வீட்டு வேலையை பகிர்ந்துக்கொள்ளாமல் இருத்தல், பண விஷயத்தில் வேற்றுமை, பெற்றோர்/மற்ற உறவினர்கள் தலை இடல், சொசைட்டி எதிர்ப்பார்ப்புகள் என்று எத்தனையோ விஷயங்கள் குறுக்கே வரும். காதலிக்க கிடைக்கும் நேரத்தை விட பிரச்னைகள் சமாளிக்கும் நேரம் அதிகமாகவே இருக்கும்.

    காதல் திருமணம் முடித்த அத்தனை தம்பதிகளும் கடைசி வரை சந்தோசமாக இருக்கிறார்களா? முதல் காதல் என்றாலும் திருமணத்திற்கு பிறகு சிக்கல்களை சந்தித்தே ஆக வேண்டும். என்னை பொறுத்தவரை 'காதல்' மட்டுமே திருமணத்தை வெற்றி பெற வைப்பதில்லை. ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக்கொள்ள வைக்கும் 'புரிதல்' திருமண வெற்றிக்கான முக்கிய மந்திரக்கோல்.

    முதல் காதல் தோல்வி அடைந்தவர்கள் திருமணம் முடிந்தபிறகும் தங்களது முதல் காதலை இன்னும் மறக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் --> முதல் காதலி/காதலனோடு திருமண வாழ்வில் இணையாததால். திருமணம் முடிந்து இருத்தால் இவர்களது கதையே வேறாக இருக்கும். ஏன்டா கல்யாணம் பண்ணோம்? என்று இவர்களும் ஒரு நாள் கண்டிப்பாக வருத்தப்பட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். காதலியாகவோ காதலனாகவோ இருப்பது ஜுஜுபி. ஆனால் மனைவியாகவோ கணவனாகவோ இருப்பது சாமான்யமான விஷயமா? :wink::wink:

    வளர்ந்த கலை மறந்துவிட்டாள் - காத்திருந்த கண்கள்
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பதிவு பொன்னியின் செல்வன் படத்தை பற்றியது.

    முதல் முறையாக எங்கள் வீட்டு பொன்னியின் செல்வனோடு குடும்பமாக சேர்ந்து திரை அரங்கில் படம் பார்த்தேன். படம் புரிந்த மாதிரியும் புரியாதது மாதிரியும் இருந்தது. படத்தின் பிரமாண்டம் பிடித்து இருந்தது. இரண்டாவது முறையாக 20 வருடங்களாக திரை அரங்கு பக்கமே எட்டி பார்க்காமல் இருந்த ஒரு நெருங்கிய நண்பர்/உறவினர் மற்றும் அவரது குடும்பத்தோடு படம் பார்த்தேன். வந்திய தேவனை follow பண்ணேன். படம் தெளிவாக புரிந்தது. மூன்றாவது முறையாக எனது இணையுடன் கடந்த வார இறுதியில் Amazon Prime ல படம் பார்த்தேன். நான்கு மணி நேரங்கள் ஆனது. அவ்வப்போது படத்தை நிறுத்தியவர்க்கு நான் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தேன். இருவருக்குமே படம் 100% புரிந்தது. என்னால் விளக்கம் சொல்ல முடியாமல் போனது ஒரே இடத்தில்: பூங்குழலிக்கு செந்தேன் அமுதனை எப்படி தெரியும்? ஏதோ ஒரு காட்சி அமைப்பில்/டயலாகில் இவர்கள் தொடர்பை காண்பித்து இருக்கலாம்.

    Buffet - நான் foodie கிடையாது. ஆனால் எனக்கு பிடித்த ஐட்டம் அனைத்தும் ஒரு வாய் சாப்பிடுவேன். எவ்ளோ தான் பிடித்தாலும் அதிகம் சாப்பிட மாட்டேன். எப்போதும் குறைவாக தான் உண்பேன். நிறைய ஐட்டம் கொஞ்சமே கொஞ்சமாக சாப்பிட்டாலே எனக்கு போதுமானதாக இருக்கும். அதுபோல தான் படத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் கொஞ்சம் நேரமே வந்தாலும் எனக்கு திருப்தியாக தான் இருந்தது. எனக்கு தெரிந்த சில நபர்களுக்கு buffet பிடிக்காது. ஒரு சில ஐட்டம் மட்டுமே ஆசை தீர உண்பார்கள். அழுத்தமான கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் அவ்ளோவாக பிடிக்காது.

    எழுத்து வடிவம் வேறு. காட்சி அமைப்பு வேறு. கற்பனை திறன் பொறுத்து மாறுபடும். செக்க சிவந்து இருந்தாள் என்று எழுதுகிறேன். இதை காட்சி படுத்துங்கள் என்று சொன்னால் எப்படி வரும் --> அந்தி வானம் ? இளம் மனைவி? பச்சிளம் பெண் குழந்தை? ரத்த வெள்ளத்தில் ஒரு பெண்?

    புத்தகம் எழுதியவருக்கு ஒரு கற்பனை. புத்தகம் படித்தவர்களுக்கு வேறு ஒரு தனி கற்பனை இருந்து இருக்கும். புத்தகம் முழுவதும் படித்து/கரைத்து குடித்த இரண்டு நபர்களை அழைத்து கதை/கதைப்பாத்திரங்கள் விவரிக்க சொன்னால் இரண்டும் அச்சு பிசகாமல் ஒன்றாகவா இருக்கும்? இதற்கு கண்டிப்பாக சாத்தியமில்லை. இந்த படத்தை புத்தகத்தோடு ஒப்பிடுவது எனக்கு சரியாக படவில்லை.

    இந்த புத்தகம் படிக்காத எங்கள் இருவருக்குமே இந்த படம் பிடித்தது. இந்த படத்தில் அலைகடல் ஆழம் பாடல் முழுவதுமாக காண்பிக்கப்பட்ட வில்லை என்பதில் இருவருக்கும் சின்ன வருத்தம். இந்த பாடல் இருவருக்குமே favorite forever. பாடியவர்க்கு தேசிய விருது கொடுக்கலாம். YT ல வீடியோ இருக்கிறது. பார்த்து ரசித்தோம்!! Beauty lies in the eye of the beholder. :wink::wink:

    பொன்னியின் செல்வன் part 2 ல என்ன வரும் என்று YT ல ஆராய்ந்து கதையை முழுவதும் சொல்லி முடித்து விட்டேன். நாங்கள் இருவரும் தியேட்டர் சென்று April 2023 ல படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    Spoilers நிறைய இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் இதை பார்த்து part 2 கதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த வீடியோ க்கு 3.9 million views. Worth watching!!
     
    svpriya and Thyagarajan like this.
  7. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female

    kattu vakula rendu kadal. Ennaku parakara madiri oru feel. I miss this song indha movie release agum pozhuthu.
     
    singapalsmile and svpriya like this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    You had established here how super _ superior your profound understanding of human emotions. A succinct summing up that propels cine buffs to watch the movie online or big screen at once!
    தேன் தமிழில் தங்கள் நடை இங்கு “துள்ளுவதோ இளமை”.
    நன்றி. மீண்டும் வருக.
     
    singapalsmile and svpriya like this.
  9. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    நன்றி :blush::grinning:
     
    Thyagarajan likes this.
  10. svpriya

    svpriya Silver IL'ite

    Messages:
    150
    Likes Received:
    236
    Trophy Points:
    95
    Gender:
    Female
    நிதர்சனமான உண்மை :sweatsmile:
     
    Thyagarajan likes this.

Share This Page