1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Lol
     
  2. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Veda hope you heard this beautiful :worship2:
    Ponniyin selvan
     
    singapalsmile likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    singapalsmile likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வணக்கம் C. எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்கள் கழித்து இங்கு வருகை புரிந்து இருந்தாலும் அருமையான பாடலை கிப்ட் ஆக கொடுத்ததிற்கு நன்றி. நீங்க போஸ்ட் பண்ண பிறகு தான் அந்த பாடலை முதல் முறையாக கேட்டேன்; என்னையே மறந்தேன்; கற்பனை உலகில் தொலைந்தேன் :wink::wink:

    எனக்கு நாவல் படிக்கும் பழக்கம் இல்லை என்பதை இங்கு எத்தனையோ முறை சொல்லி இருக்கிறேன். பொன்னியின் செல்வன் நான் படித்தது கிடையாது. புத்தகத்தின் முன் பக்கம் எப்படி இருக்கும் என்று கூட தெரியாது. எவ்ளோவோ கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் படிக்கவேண்டும் என்று என்னவோ இதுவரைக்கும் உந்துதல் இல்லை. வயதான காலத்தில் படிக்க வேண்டிய புத்தகத்தில் இதுவும் ஒன்றாக வைத்து இருந்தேன். படம் பார்ப்பதற்கு முன்னர் அடிப்படை விஷயங்களை கதாபாத்திரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காக மேலோட்டமாக youtube ல கேட்டு தெரிந்து கொண்டேன்.

    இந்த பாடல் கேட்டவுடனே மதி மயங்கி சமுத்திரகுமாரி பூங்குழலி பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிவிட்டேன். தேடியதில் கிடைத்த ஒரு அருமையான விளக்கம். பாடல் வரிகளின் விளக்கத்தோடு. YT - Poonguzhali - Decoding Alaikadal Aazham song

    பாடலை பாடியவர் தமிழ் பெண் இல்லை (Singer: Antara Nandy) என்றாலும் செமையாக வரிகளுக்கு உயிர் கொடுத்து உணர்வுகள் நிறைத்து பாடி இருக்கிறார். அடடா அட்டகாசம்!!வரிகள் - ஆழம் அதிகம் :wink::wink: ARR இசை மயக்குகிறது!! Aishwarya Lekshmi - பார்த்து பார்த்து வடித்து வைத்த சிலை உயிர் பெற்று நடிக்கிறது. பார்த்த காட்சி அமைப்பு கற்பனையில் கடலுக்கு இழுத்து செல்கிறது. Director Maniratnam - எத்தனை பாராட்டினாலும் தகும்!!

    எனக்கு கடல் மீது எப்போதுமே காதல் உண்டு. இந்த பாடல் இன்னும் காதலை கூட்டுகிறது. இந்த பாடல் கேட்டதுமே எனக்குள் தோன்றிய எண்ணம் - (அடுத்த வருடம் ஒரு குட்டி cruise vacation பிளான் ஏற்கனவே இருந்தது) கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகத்தை கையோடு எடுத்து சென்று நான் படித்து என்னோடு பயணிப்பவரையும் படிக்க வைத்து கடலுக்கு நடுவில் படித்ததை பகிர்ந்து கொள்ளவேண்டும். நினைத்தது நடந்தால், புத்தகத்தில் படித்ததை பயண அனுபவத்தை Feb 2024 இங்கு கிறுக்குகிறேன். :wink::wink:
     
    cinderella06 and vidhyalakshmid like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    வணக்கம் V.

    பாடலில் மணாளனின் அடைமொழிகளாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் பிரயோகம் பிரமாதம் - பேரழகன் மாவீரன் வாய்ஜாலன் காவலன் ஏவலன் போராளி கவியரசன் மாயன்.

    குந்தவையும் வானதியும் பிரியமான தோழிகள். இவர்களது உரையாடல்கள் பாடல் இனிது. நட்போடு சொல் சொல் என்று சொல்லும்போதெல்லாம் அழகு வடிகிறது.

    இளமை காலத்தில் காதல் வயப்பட்ட சில நண்பர்களை நான் கலாய்த்த அனுபவம் நினைவிற்கு வந்தது. என்னவோ இந்த பாடல் எனது நினைவிற்கு வந்தது:

    YT - மல்லியகையே மல்லிகையே - நினைத்தேன் வந்தாய்
     
    vidhyalakshmid likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒரு மாதம் காணாமல் போகிறவர்கள் பட்டியலில் என்னை சேர்த்து கொள்ளுங்கள்.

    Stock market - இந்த வருடம் முழுவதும் இன்றுவரை rollercoaster ride. கடந்த வெள்ளி அன்று தான் முதல் முறையாக எனது returns negative தொட்டு இருக்கிறது. இன்னும் முதலீடு செய்வதற்கு பொன்னான நேரம். இந்த சமயத்தில் ஒரு மாதம் விலகி இருக்கப்போகிறேன் என்பதில் எனக்கு சின்ன வருத்தம்.

    Crypto market - என்னை பொறுத்தவரை இது ஒரு சூதாட்டம் இன்றைய சூழலிற்கு. கிக் வேணும் என்பதற்காக இந்த வருடம் இறங்கினேன். தாய் நாட்டு பயணத்திற்கான டிக்கெட் மற்றும் அங்கு செலவழிக்கும் பணம் எவ்ளோவோ அவ்ளோ மட்டும் தான் சூதாட்டம் ஆட வேண்டும் என்று எனக்கு நானே வைத்து கொண்ட லிமிட். லிமிட் முடிந்து விட்டது. முதலுக்கு மோசம் வந்தால் அடுத்த வருட தாய் நாட்டு பயணம் கட்.

    Workplace - ரிசர்ச் பண்ண crypto விஷயங்கள் வேலைக்கு சின்னதாக போன வாரம் உதவியது. ஒரு சின்ன கோடு போட்டு கொடுத்தது. ரோடு போடுவேனா என்பது தெரியவில்லை. வேலை வேலை என்று இந்த வருடம் இதுவரைக்கும் ஓடியாயிற்று. இதில் இருந்தும் ஒரு சில வாரங்கள் பிரேக்.

    இந்த Poetic thread - தாய் நாட்டில் தான் பொன்னியின் செல்வன் படம் பார்க்கவேண்டும் என்று தலையில் எழுத பட்டு இருக்கிறது. படம் பார்த்த அனுபவத்தை உடனே இங்கு கிறுக்க முடியாததை மிஸ் பண்ணுவேன்.

    நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இருள் நீக்கி பிரகாசமாக வாழ்க்கையை மிளிர வைப்போமாக !! :grinning::grinning:
     
    cinderella06 and vidhyalakshmid like this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நானும் படித்தது கிடையாது. சின்ன வயதில் நிறைய
    கேள்வி பட்டு இருக்கிறேன். சமீபத்தில் ஆடியோ
    முழுவதும் கேட்டேன். நடையும், கதை சொல்லும்
    பாங்கும் , இயல்பான உரையாடலும் கல்கியின்
    சிறப்பாக நினைக்கிறன். சிவகாமியின் சபதம்
    படித்து வியந்திருக்கிறேன், அழுதும் இருக்கிறேன்.
    பொன்னியின் செல்வனில் உலவும் அதிக
    கதாபாத்திரங்கள் விறுவிறுப்புக்கும் ,ஆவலை
    தூண்டுவதற்கும் ஒரு காரணம். திரையில்
    காண தயாராகி விட்டேன் குடும்பத்தோடு!
     
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Veda, Happy deepavali! Hope you are back after enjoying the vacation.
     
    singapalsmile likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பட்டிமன்றம் என்று எழுதாமல் பாட்டுமன்றம் என்று குறிப்பிட்டது நன்று. தேர்ந்து எடுத்த பழைய Black and White பாடல்களும் நன்று. சரளமான பேச்சும் நன்று.

    எனது இன்றைய பார்வையில்:
    அந்த காலத்து தத்துவங்கள் அனைத்தும் இக்காலத்திற்கு பொருந்துமா?

    ஒவ்வொரு பூக்களுமே பாடலில் தத்துவம் இல்லையா?

    இப்போதெல்லாம் நின்று நிதானமாக வாழ்க்கை வாழ முடியுமா? ஓடி கொண்டிருக்க வேண்டி இருக்கிறதே? ஓடும் வேகத்திற்கு அக்காலத்து பாடல்கள் கேட்கும்போது பொறுமையை சோதிக்குமா? இல்லையா ?
     
    vidhyalakshmid likes this.

Share This Page