1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மோர் குழம்பு

Discussion in 'Interesting Shares' started by jayasala42, Aug 23, 2022.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மோர் குழம்பு
    எங்க பாட்டி, அம்மா, இப்போ ஆத்துகாரி இவா அத்தனை பேறும் ஒரு விஷயத்துல நல்ல எக்ஸ்பர்ட்.
    எல்லா குழம்பும் போரடிச்சி போயாச்சினா கைகுடுக்கும் கை இது. கல்யாணம், விசேஷம் எல்லாத்துலியும் மஞ்சள் குங்குமத்தோட மங்களகரமா நிக்கற பெண் மாதிரி பாக்கரச்சேயே பளிச்சுனு வசீகரிக்கும். மத்த குழம்புக்கு எல்லாம் இல்லாத ஸ்பெஷலிடி இந்த குழம்புக்கு உண்டு. இவர் பிரதம மந்திரி மாதிரி, அகில பாரத சொத்து.
    இல்லையா பின்ன. வடக்கே பஞ்சாப்ல மற்றும் மேற்க குஜராத்ல கடிங்கற பேர்ல, கிழக்க பீஹார்ல பாரி கடி, தெற்க புளிசேரி மோர்குழம்புனு பல பெயர வச்சிண்டு பெருமையா வலம் வரவன் ஆச்சே.
    தமிழ்நாட்டுலியே, தஞ்சாவூர் மோர்குழம்பு, திருநெல்வேலி மோர்குழம்பு, உப்பு சாறு, மோர் சாத்துமதுனு பல வகைகள் இருக்கு. வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாதிரி, மோர் குழம்ப பொறுத்த வரைக்கும் தான் (காய்) பத்தி கவலையே படவேண்டாம். பச்சை காய்கறி, நீர் காய்கறி, கிழங்கு காய்கறி, வத்தல், எத போட்டாலும், கல்யாணம் ஆகி 10 வருஷம் முடிஞ்சி போன மாமா மாதிரி எல்லாத்தையும் ஏத்துண்டு நல்ல ருசிய குடுக்கற மஹானுபாவன்.
    ரொம்ப simple yet very tasty குழம்பு. ரொம்ப stain பண்ணிக்காம பட்டுனு 5 நிமிஷத்துல ட்ரெஸ் செலக்ட் பண்ணற ஆண்கள் மாதிரினு சொல்லலாம். அடுப்புல வச்சி கொதிக்க வெச்சும் பண்ணலாம், பச்சை மோர்குழம்பாவும் பண்ணலாம் (அரைச்சிகலக்கி).
    எப்படி பட்ட காய்கறிகள வேணாலும் சேக்கலாம்னு சொன்னாலும், வெண்டைக்காய், சேப்பங்கிழங்கு, இந்த ரெண்டும், எப்படி மகாவிஷ்ணுக்காகவே கோதை நாச்சியார் பிறவி எடுத்தாளோ, அந்த மாதிரி மோர்குழம்புக்குனே பிறவி எடுத்த கறிகாய்கள். ரெண்டும் குழம்புல போட்டா கொழகொழத்து பொயிடும்னு நெனைச்சா, அதுதான் இல்லை, அத சேக்கற விதமா சேத்தா, கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லைனு சொல்லறா மாதிரி, அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது, ஆனந்தமா அனுபவிக்கத்தான் முடியும். அதுவும் மண் சட்டில பண்ணற மோர்குழம்பு, ஆஹா, நம்ம மண்ணுக்கு ஒரு ருசி இருக்குனு ரசிக்க வெக்கும்.
    நம்ப பருப்பு உருண்டை மோர் குழம்பு, நார்த் இண்டியன் கடிய நம்ம முன்னாடி மண்டி போட்டு பிச்சை எடுக்க வைக்கும். மஞ்சள் கலர்ல, தேங்காய் எண்ணெய், பளபளக்க, கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் எல்லாம் மிதக்கற மோர்குழம்புல, அங்கயும் இங்கயும், சின்ன சின்ன எலுமிச்சம் பழங்கள் மாதிரி துள்ளி குதிக்கற உருண்டைகள, சூடான சாதத்துல, தேங்காய் எண்ணெய விட்டு பெசஞ்சி, உருண்டைகள உதிர்த்து கலந்து, மோர் குழம்ப விட்டு கலந்து சாப்பிட்டா, வடமதுரைல வெண்ணையும் தயிரையும் அள்ளி அள்ளி சாப்பிட்ட குட்டி க்ருஷ்ணனே அத மறந்து போயிடுவார்னா, அதோட ருசி எப்படி இருக்கும்னு பாத்துக்கோங்கோ.
    கடி, மலையாள மோர்குழம்பு, தஞ்சாவூர் மோர்குழம்பு, இதுல எல்லாம் வெறும் திக்கான மோர் சேர்த்து பண்ணுவா. ஆனா திருநெல்வேலி மோர்குழம்பு பாதி புளி ஐலம் பாதி மோர் விட்டு பண்ணற பழக்கம். மத்த மோர்குழம்புக்கு, தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், இல்லைனா துவரம்பருப்பு, தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம் அரைச்சு விடுவா. திருநெல்வேலி மோர்குழம்புல தனியா, கடலை பருப்பு, வரமிளகாய், தேங்காய், கொஞ்சம் வெந்தியம், கொஞ்சம் உளுத்தம் பருப்பு வறுத்து அரைச்சு சேக்கணும் (தேங்காய் பச்சையா அரைக்கணும்). தான (காய்), தேங்காய் எண்ணெல நன்னா வதக்கி, கொஞ்சம் நீர்க்க கரைச்ச புளி ஜலத்த விட்டு கொதிக்க விட்டு, அதுல அரைச்சு வெச்சத விட்டு கொதிக்க விடணும். தேங்காய், உளுத்தம் பருப்பு இருக்றதால உடனே கெட்டியாயிடும். கடைசியாக தயிர கெட்டி மோரா சிலுப்பி சேத்து, அடுப்ப சிம்ல வெச்சி நுரைச்சி வந்ததும் (கொதிக்க கூடாது) இறக்கிடணும். மோர்குழம்புக்கு தேங்காய் எண்ணெய் சரியான ஜோடி (வரதராஜ பெருமாளும், காஞ்சிபுரம் இட்லியும் மாதிரி). தேங்காய் எண்ணெய்ல கடுகு, கறிவேப்பிலை திருமாறினா மணக்க மணக்க திருநெல்வேலிலேந்தே மனுஷால வண்டி புடிச்சி வரவெச்சிடும். எங்க அம்மாக்கு கீழநத்தம் ஆத்துல இருக்கற பீல் வந்துடும்.
    மோர்குழம்ப பண்ணறது ஒரு கலைனா அத சாப்பிடறது அதவிட அழகான கலை. வாழையிலைல சூடா சாதத்த சாதிச்சிண்டு தேங்காய் எண்ணெய விட்டு மோர்குழம்ப விட்டுக்கணும். நன்னா கொழவா வெண்ணெய் மாதிரி பிசிஞ்ச குழம்பு சாதத்துக்கு, எப்படி மஹாலக்ஷ்மி தாயார், பூதேவி தாயார், நீளா தேவி தாயார்னு 3 பிராட்டிகளோட பெருமாள் ஸேவை ஸாதிக்கறாரோ அந்த மாதிரி, ஒரு பருப்பு உசிலி, ஒரு கார கரமது, ஒரு பருப்பு கூட்டு இருந்தா போறும், பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் பிறப்பெடுத்தாலும் சந்தோஷமா சாப்பிடலாம்.
    சாதத்துக்கு மட்டும் இல்லை, ஸேவைக்கு திருநெல்வேலி மோர்குழம்பு ஒரு perfect combination. நான் முன்னாடி சொன்னா மாதிரி அரிசி உப்புமாவுக்கு இத தொட்டுண்டு சாப்பிட்டா, அடாஅடா, தேவாம்ருதம். அதெல்லாம் ரசிச்சி சாப்பிடற மனுஷாளுக்கு மட்டும் தான் தெரியும்.
    A nice combination of smartha vaishnava paribhashai
    jayasala42



    --
     
    Loading...

  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    what an aesthetic sense and emotion in the enjoyment of eating! Nice writeup. Co incidentally I cooked PARUPPU URUNDAI Moorkuzhambu yesterday, It is a favorite to the whole family. Enjoyed reading it.
    If you have time watch my debate with Bharathiyar`s great grandson.
    Independence Day Debate ! | Indusladies
     
    Thyagarajan likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thanks for sharing. I heard Nellai people use solid curd for making morekuzhambu. The writing echos houmour of writer late Sujatha.
    Regards.
     
    vidhyalakshmid likes this.

Share This Page