1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் ஓரு ரசப்பிரியன்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 16, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: நான் ஓரு ரசப்பிரியன்
    :hello:

    சாத்துமது (ரஅசம்) சாற்றமுது சாற்று அமுது- சாற்றின் அமுது சாத்து அமுது சாதத்திற்கு அமுது சாற்று அமுது

    அமுதை பெருமாளுக்கு சாற்றுவதால் அது சாற்றமுது!
    இது இல்லாத ஒரு தளிகை முக்கால்வாசி ஸ்ரீ வைஷ்ணவ ப்ராஹமண குடும்பங்கள்ல கிடையாது. தயிர்சாதம் எப்படி ப்ரதானமோ அந்த மாதிரி சாத்துமது ரொம்ப முக்கியமானது.

    சாத்துமதுல பல வகைகள் இருக்குனா நம்ப முடியுமா. மருந்து சாத்துமதுலேந்து, கல்யாண சாத்துமது, ஸ்ரார்த்த சாத்துமதுனு, 90 நாட்கள் 90 சாத்துமதுனு அவள் விகடனுக்கு இணைப்பே அனுப்பலாம்.

    கொட்டு சாத்துமதுல ஆரமிச்சி, நார்த்தங்கா, எலுமிச்சம்பழம், பைனாப்பிள், ஆரஞ்சு, கண்டதிப்பிலி, வேப்பம்பூனு அவ்வளவு வெரைட்டீஸ் இருக்கே.

    சாத்துமது பாக்க சாதாரணமா இருக்குமே தவிர அது தளிகை பண்ணறவுள்ள இருக்கற ஒரு டாக்டர். உடம்புக்கு சரியில்லைனாலும் சரி, கல்யாணத்துக்கு போனாலும் சரி, வேலை விஷயமா வெளியூர் போனாலும், என்ன சாத்துமதுனு கேக்க தவறினது இல்லை.

    குழம்பு இல்லாட்டாலும் பரவாயில்லை, பொடிய, ஊறுகாய போட்டு ஒப்பேத்திகலாம், ஆனா ஒரு நாள் கூட சாத்துமது இல்லாம இருக்க முடியாது, கல்யாணம் ஆகி க்ருஹப்ரவேசம் ஆனா ஆத்துகாரிக்கு சொன்ன முதல் விஷயம். அந்த அளவுக்கு என்னோட வாழ்க்கைல பின்னி பெணைஞ்சி போன விஷயம் சாத்துமது.

    எனக்கு நன்னா பண்ண தெரிஞ்ச தளிகைல ஒண்ணு சாத்துமது. அதுனால யாராவது சுமாரா பண்ணினா எனக்கு மனசே கேட்காது. அவாளுக்கு சொல்லி தரணும்னு தோணும், இல்லைனா, நாமளே பண்ணி அவாளுக்கும் குடுத்துட்டு வரணும்னு கை பரபரக்கும்.

    ஒரு ஹோட்டல்ல போய் தங்கி ரூம் ஸர்வீஸ கூப்பிட்டு, ஸாலட் வித்தவுட் ஆனியன், ரசம் வித்தவுட் கார்லிக்னு (பரண்யாசகம் எல்லாம் ஆகலை இருந்தாலும், முடிஞ்ச வரைக்கும் சாபிடறது இல்லை) சொல்லிட்டு போன் வச்ச அடுத்த நிமிஷம் chef கிட்டேந்து கால். கார்லிக் இல்லாம ரசம் பண்ணவே முடியாது.
    இது என்ன அநியாயம். பூண்டு போடாம சாத்துமது பண்ணமுடியாதா, பண்ண தெரியாதுனு வேணா சொல்லுங்கோனு நான் சொல்ல, அது அவரோட ஈகோவ பதம் பாத்துடுத்து.
    You may teach me I'll tryனு வீராப்பா சொல்ல, நான் பருப்பு சாத்துமத சொல்லி தர, அந்த அளவுக்கு சாத்துமது வெறியன்.

    சாத்துமதுல பல வெரைட்டி இருந்தாலும், அத எந்த பாத்தரத்துல பண்ணறோம் அதுதான் முக்கியம்.

    ஆத்துல இருக்கற இலுப்பசட்டி இல்லை எவர்சில்வர் பாத்திரங்கள் எல்லாம் சாத்துமது பண்ண தகுந்தது இல்லை. நல்ல பசும்பால் கிடைக்கலைனா ஆவின் பால்ல காபி சாப்பிடறா மாதிரி ரெண்டாம் பஷம்தான்.
    சாத்துமதுனா ஈய சொம்புல தான் பண்ணணும்னு நள / பீம பாக சம்ஹிதைல எழுதலைனாலும், அம்மா, பாட்டினு வழி வழியா பண்ணி பொறந்த அன்னிலேந்து நம்ம நாக்க வளத்து வெச்சி இருக்காளே. சாதாரண சாத்துமது கூட ஈய சொம்புல பண்ணினா அதோட வாசனையும் ருசியும் அலாதி தான். எப்படி சுதா ரகுநாதன் ராகமாலிகைல ஸ்வரத்தோட சில மணி நேரம் ஆலாபனை பண்ணி பாடினா அதரசிச்சி அனுபவிக்க முடியும், ஆனா நம்ம வார்த்தைகளால விவரிக்க முடியாதோ அந்த மாதிரி.
    ஈய சொம்ப, சும்மா எல்லா பாத்திர கடைலியும் வாங்கிட முடியாது. கும்பகோணத்துலதான் வாங்கணும். அதுக்கு சில ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் இருக்கு.
    நல்ல ஈய சொம்பா பாத்து வாங்கிண்டு வாங்கோ, காரீயமா இருக்க போறது, காத்ரமா கனமா இருக்கணும், தக்கையா இருந்தா அடுப்புல உருகி வழிஞ்சிடும் (சமைக்க தெரியாம அடுப்ப பெரிசா எரியவிட்டா இரும்ப வெச்சாலும் உருகிதான் போகும், இதெல்லாம் மனசுக்குள்ள தான் நெனைச்சிக்க முடியும்). பாமக விஜயம் முத்துராமன் நினைவுல வருகிறர் .
    ராமஸ்வாமி கோவில் சன்னதி தெருல கோவில பாத்தா மாதிரி நின்னா இடது கை பக்கம் இருக்கற கடைல வாங்குங்கோ. மாத்தி நின்னு எதிர் கடைல வாங்கிட போறேள். இத்தனை இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்தா பதட்டத்துல நமக்கு இடது வலதே மறந்து போயிடும். ஒரு வழியா வாங்கிண்டு வந்தா, நன்னா இருக்குனு சொல்ல மாட்டா, பரவாயில்லை இன்னும் கனமா இருந்திருக்கலாம்னு கமெண்ட் வரும். இன்னும் கனமா இருந்தா ஆந்திராலேந்து அடியாள தான் ஏற்பாடு பண்ணனும், பின்ன தினம் அடுப்புல ஏத்தி இறக்க வேண்டாமா (மைண்ட் வாய்ஸ்தான்).
    புளிய, பழைய புளியா இருக்கணும், புது புளியா இருந்தா சாத்துமது நாம ஆத்துகாரிய பாத்து பயத்துல வெளிறி போனா மாதிரி வெளிறி இருக்கும். நீர்க்க கரைச்ச புளி ஜலத்துல துளி மஞ்ச பொடி, சின்ன சின்னதா திருத்தின தக்காளிய (நாட்டு தக்காளியா இருந்தா நல்லது) போட்டு கொதிக்க விடணும். ரொம்ப கொதிச்சா வத்த குழம்பு ஆயிடும். கொதிக்றச்சே இன்னோரு அடுப்புல இலுப்பசட்டிய வெச்சி, ஒரு ஸ்பூன் நெய்ய விட்டு, வரமிளகாய், தனியா, கடலை பருப்பு, துவரம்பருப்பு, மிளகு, சீரகம், சின்ன கட்டி பெருங்காயம் எல்லாத்தையும் வாசனை வர வறுத்துக்கணும். அத மிக்ஸில கரகரப்பா பொடிச்சிக்கணும்.
    சாத்துமது கொதிச்சி வரச்சே இந்த பொடிய போடணும். பொடிய போட்டு பொங்கி வரச்சே பருப்பு ஜலத்த விட்டு மேல ஒரு ஸ்பூன் நெய்ய விட்டா ஜம்முனு நுரை கட்டிண்டு வரும். பச்சை கொத்தமல்லிய அலம்பி சின்னதா திருத்தி வச்சிக்கணும். இறக்கறதுக்கு முன்னாடி அத தாராளமா சேத்து, இறக்கி, இலுப்ப கரண்டில நெய்ய விட்டு கடுகு, கருவேப்பிலை, சீரகம் வரமிளகாய, திருமாறணும். திருமாறின உடனே ஒரு தட்ட போட்டு முடிடணும். அப்போ தான் திருமாறினது, சாத்துமது எல்லாம் ஒண்ணா சேந்து வாசனையா இருக்கும் (இது சாதாரண சாத்துமது).
    சாத்துமத நன்னா பண்ணினா போறாது. சாதம் அதுக்கு தோதா இருக்கணும். கொஞ்சம் கொழவா இருக்கற சாதம் தான், பத்து பொருத்தமும் பொருந்தி போன தம்பதி மாதிரி சாத்துமது சாதத்துக்கு நல்லதா இருக்கும். இல்லைனா, ஏழாம் பொருத்தமா இருக்கற மாமியார் மாட்டு பொண் மாதிரி ஒண்ணா சேராம இருக்கும். கொழசலா சாதத்த வடிச்சி, ஒரு ஸ்பூன் உருக்கின நெய்ய சேத்துக்கணும். அது மேல பருப்ப சேத்து பிசிஞ்சிக்கணும். நன்னா பிசிஞ்ச சாதத்துல சாத்துமத விட்டு கலந்துக்கணும். குழம்பு சாதம் மாதிரி கெட்டியா இருக்க கூடாது. தளர தளர, சாத்துமது தட்டுல ஓடணும். இலைல சாத்துமது சாதம் சாப்பிடறது ஒரு கலை. அதுக்கு ஒரு தனி ப்ராக்டீஸ் வேணும். சிவில் இஞ்சினியரிங் படிச்சி டாம் கூட கட்டிடலாம் ஆனா கல்யாண பந்தில சாத்துமதுக்கு அணை கட்டற சாமர்த்தியம் இருக்கே, அத நம்ம மாமா மாமிக்கள் கிட்ட தான் கத்துக்கணும்.
    இலையோட கோட்ட தாண்டி கறமது கூட்டு இருக்கற பக்கம் போயிட கூடாது, இடது வலது பக்கம் பொயிட்டா பக்கத்து இலை மாமி, மாமா, ச்சே இதகூட கட்டி காப்பாத்த முடியலியானு, கேக்க மாட்டா ஆனா பார்வைல தெரியும். கொஞ்சம் வழிஞ்சி நம்ம பக்கம் வந்தா, நம்ம வெள்ளை வேஷ்டி அவ்வளவு தான். கரை நல்லதுனு டிவில வர மாமிதான் சொல்லுவா. நம்மாத்து மாமி அறை விடாத குறையா நம்மள தோய்க்க வெப்பா. ஒரு சாத்துமது சாதம் கூட சாப்பிட தெரியாம வளத்து இருக்கானு நம்ம வம்சத்துக்கே திட்டு விழும். இத கேட்டு, எங்க அப்பா, அண்ணா எல்லாரும் நன்னா சாப்பிடுவா, இந்த குடும்பத்துக்கு தான் தெரியாதுனு தன்ன அம்மா காப்பாத்திப்பா, நாம ஙேனு முழிக்கணும்.
    சாத்துமதுக்கு நல்ல காம்பினேஷன் பருப்பு உசிலி, உருளைக்கிழங்கு கார கறமது, சேப்பங்கிழங்கு ரோஸ்ட். பொறிச்ச உளுத்தம் அப்பளாம், அரிசி அப்பளாம், ஜவ்வரிசி வடாம், இலை வடாம் இதெல்லாம் சிட்டை ஸ்வரங்கள் மாதிரி ருசிக்கு ருசி சேர்க்கும்.
    இப்படி பல சுவைகளோட, நல்ல கல்யாண குணங்கள் கொண்ட சாத்துமத தின தளிகைல ஒரு இன்றியமையாத விஷயம்னு சொன்னா என்ன தப்பு சொல்லுங்கோ !
    என் அப்பா பாராட்டு BESH BESH BESH பேஷ் ! பேஷ் ! ரொம்ப நன்னா இருக்கு !
     
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thanks For your visit.
    My late Dad used to appreciate this way when rasam or any other food items served conforming to his specification. But my generation this phrase is not in vogue and for generation next it is obsolete.
     
    Kohvachn likes this.

Share This Page