1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் யோசிப்பதை ரூமில் போட்டு அடைக்க முடியாது. பரந்த வெளி தேவைப்படும் என்று நினைக்கிறேன் :smile::smile:

    உங்களுக்கும் ஒரு ஸ்பெஷல் Feb assignment. பட்டி மன்ற ஸ்டைல் ல. பங்கேற்க முயற்சிக்கவும்.

    தலைப்பு:
    அதிகமாக சந்தோசமாக இருப்பவர்கள் - இளம் தம்பதிகளா? முதுமையான தம்பதிகளா?
    • இளம் தம்பதிகள் சார்பாக 3 points எழுதவும்
    • முதுமையான தம்பதிகள் சார்பாக 3 points எழுதவும்
    • இரண்டு வகையினருக்கும் சப்போர்ட் பண்ணவும்
    நானும் இரண்டு வகையினருக்கும் எனது சப்போர்ட் தெரிவித்து அடுத்த மாதம் எழுதறேன்.
     
    vidhyalakshmid likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடம் நான் கேட்டு ரசித்த மற்றும் ஒரு புது ரொமான்டிக் பாடல்.

    சங்க இலக்கிய ஸ்டைல் ல தூக்கலான பாடல் வரிகள். சங்க இலக்கிய காதல் வரிகளில் புகுந்து விளையாடுவார்கள் என்று சொல்லி தான் தெரியனுமா? :wink::wink: Imaan இசையும் இதம். கொஞ்சி கொஞ்சி பாடும் பெண் குரல் வளம் (Singer Vandana Srinivasan) வசீகரிக்கும். இவர் பாடிய சில ரொமான்டிக் பாடல்கள் எப்போது கேட்டாலும் தித்திக்கும். இவரது பாடல்கள் தேடிப்பிடித்து கேட்கவும்.

    பாடல் ஆரம்ப காட்சிகளில் வரும் ஹீரோ சூர்யா வின் முகத்தில் முக்கியமான ஒன்று மிஸ்ஸிங். ஆனால் கடைசி சீன் காப்பாற்றி விட்டது. (அது என்னவென்று கண்டுபிடித்து இது ரொம்ப முக்கியமா னு என்னை கேள்வி கேக்காதீங்க. ஒவ்வொருத்தற்கும் ஒரு டேஸ்ட் :wink::wink:)

    உள்ளம் உருகுதையா - எதற்கும் துணிந்தவன்
     
    vidhyalakshmid likes this.
  3. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    தங்களது மனம் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றிகள் வேதா! 3 குரங்குகள் கருத்தும் நினைத்தேன். நேர கட்டுப்பாட்டினால் அதை விடுத்தேன். கடைசி கேள்வி
    நேரம் தான் சிறிது பதட்டத்தை தந்தது. பகவத் கீதை ஸ்லோகம்
    தாங்கள் குறிப்பிட்டதை படிக்கிறேன்.
    கல்வி கரையில ; கற்பவர் நாள் சில !
     
    singapalsmile likes this.
  4. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    First time I am listening to Vandana Srinivasan, melodious!
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Happy Feb 2022!! இந்த ஸ்பெஷல் மாதம் நம்ம thread க்கு வராமல் என்னால் இருக்க முடியுமா? வேலையின் காரணமாக தினமும் வர இயலாது. வாரம் ஒருமுறையாவது வர முயற்சிக்கிறேன். அதனால் இந்த மாத ஸ்பெஷல் தீம் - "Variety வாரம்" - ஒவ்வொரு வாரமும் ஒரு வகையான/வித்யாசமான ரொமான்டிக் தீம்.

    இந்த வார தீம் #1 - ஒரு ரொமான்டிக் நாவல் அலசல். போன வருடத்தில் விட்டதை இந்த வாரம் மட்டும் தொடர்கிறேன். ரொமான்டிக் நாவல் பரிந்துரைத்த thread நண்பருக்கு @stayblessed நன்றி. ஒரு வருடம் ஆச்சு. நான் சொன்ன சொல்ல காப்பாத்துவதற்கு. நாவல் படிப்பதில் அவ்ளோவாக விருப்பம் எனக்கு இல்லாததால் தான் இத்தனை தாமதம். அலசல் அடுத்த பதிவில்.

    அதிரடியான ஒரு கிராமத்து ரொமான்டிக் பாடலை வைத்து துவங்குகிறேன். :wink::wink:

    இந்த நாவலில் வரும் கிராமத்து நாயகிக்கு பொருத்தமான ஒரு ரொமான்டிக் பாடல்.

    YT - சாமி சாமி - புஷ்பா
    பாடியவர் ஒரு folk singer - Rajalakshmi Senthilganesh. பாடல் வரிகள் 100 சர வெடி என்றால் இந்த பாடலை இவர் பாடி இருக்கும் விதம் 10000 சர வெடி. கொளுத்தி இருக்கிறார். :clap2::clap2: செம எனர்ஜி!!
     
    stayblessed likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நாவல்: வயல்விழி
    இயற்றியவர்: N. Seethalakshmi

    ஒன் லைனர் கதை சுருக்கம்:
    IIT யில் கம்ப்யூட்டர் இன்ஜினீரிங் படிப்பு முடித்து அமெரிக்காவில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரிந்த ஹீரோ சூழ்நிலை காரணமாக தாய் நாட்டில் விவசாயம் பார்த்து கன்னா பின்னாவென்று மகசூல் காட்டி கின்னஸ் புத்தகத்தில் பெயர் இடம்பெறும் அளவிற்கு சாதிப்பது தான் கதை.

    (ஹீரோ IIT la படித்தது, கணினி துறையில் வேலை பார்த்தது, கை நிறைய சம்பாதித்தது, இன்வெஸ்ட் பண்ணது, அந்நிய தேசத்தில் வசித்தது, விவசாயத்தில் சாதித்தது முக்கியமா? நாவலில் அலச எனக்கு இது எதுவுமே முக்கியமில்லை. ரொமான்ஸ் மட்டும் தான் எனக்கு முக்கியம்.)

    நாயகனின் பெயர்: கெளதம்; நாயகியின் பெயர்: சின்னப்பொண்ணு

    நாயகி: நாவலில் வருவது போல ஒரு வரியில் சொன்னால் - கள்ளு குடிச்ச சில்வண்டு.
    பதிபக்திக்கு அளவே இல்லை. அப்படி ஒரு சரணாகதி.

    நாயகன்: No intro. எனக்கு இந்த ஹீரோவை பிடிக்கலை. என்ன காரணம்? Dominate பண்ற கணவனை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. எனது நல்ல ஓட்டு கள்ள ஓட்டு எல்லாமே காலில் விழும் கணவனுக்கு தான். :wink::wink:

    அப்புறம் எதுக்கு இந்த நாவல் எனக்கு பிடிச்சது: எதிர் துருவங்கள் ஆன இரண்டு நண்பர்களுக்கு இடையே இருந்த ஆழ்ந்த நட்பு, நாயகனின் நண்பனிடம் இருந்த நற்பண்புகள், எதிர்பாராது வந்த ஷாக்கிங் ட்விஸ்ட், நாயகியின் கண்மூடித்தனமான காதல்/சரணாகதி/பதிபக்தி, உண்மையிலே சிரிக்க வைக்கும் நகைச்சுவை மொமெண்ட்ஸ், ரிசர்ச் பண்ணி எழுதப்பட்ட விவசாய விஷயங்கள், கிராமத்து மனிதர்களின் பாசம்/பரிவு/ இயல்புகள், குறிப்பாக கொஞ்சம் தூக்கலான ரொமான்ஸ். (நாவல் பிடிக்க இன்னொரு முக்கிய காரணம்: என்னோட இயல்பு = 40% Hero's attitude plus 35% Hero's friend's nature plus 25% Heroine's கண்மூடித்தனமான காதல். :wink::wink:)

    விசயத்திற்கு வருகிறேன். நான் ரசித்த நாவலில் எனக்கு பிடித்த ரொமான்டிக் மொமெண்ட்ஸ்/வரிகள்:

    • ஹீரோ ஹீரோயின் பைக் பயணத்தில் ஹீரோயின் வலது கை இடது கை முகம் எந்தெந்த இடத்தில ஹீரோவின் மீது வைக்கணும்னு விரிவா எழுதியது கிக். அவனிடம் இருந்து வந்த மிதமான சென்ட் வாசனை அவளுக்குள் இருந்த மையலுக்கு மோக வண்ணம் பூசியது. அவனுக்குள் ஒரு உரிமை ஒருவித பொறுப்பு ஒரு சொந்தத்தன்மை. அவனுக்குள் மோக மழை மேகமா பரவியது - இது சம்திங் ஸ்பெஷல் பைக் பயணம்.
    • ஆளுமை இருந்த கூடல்; புரிதல் நிரம்பி வழிந்த கூடல் - வித்தியாசம் அழகாக இருந்தது. அடக்கும் போது வரும் சந்தோசத்தை விட அடங்கி போவதில் சந்தோசம் பன்மடங்காய் பல்கி பெரியது.
    • ஹீரோவிற்கு ஹீரோயினை பிடித்ததற்கான காரணங்கள்: எப்பேதும் சிரித்த உதடுகள், பேச்சு வழக்கு, மண் மனம் மாறாத பேச்சு, பேச்சில் சொட்டும் பாசம், எளிமையான வாழ்க்கை, அதை விட வாழும் வாழ்க்கையில் குறை தேடாத குணம்.
    • அவளை பொறுத்தவரை அவன் ஒரு hero figure.
    • மண்ணும் மழையும் புருஷன் பொண்டாட்டி மாதிரி.
    • எம் புருஷனை ஏதானும் சொல்லிட்டு இருந்த உனக்கும் எனக்கும் ஜென்ம பகையாகி போகும் தெரிஞ்சுக்கோம்மா.
      சின்னப்பொண்ணு கெளதம் மேல கொண்டிருந்தது மயக்கமோ கிறக்கமோ அல்ல மையல்.
    • சின்னப்பொண்ணு அப்பாவுக்கும் கணவனுக்கும் விவாதம் நடக்கும். வழக்கம் போல கணவனுக்கு (hero) கோபம் வந்திடும். உடனே சின்னப்பொண்ணு, அறிவிருக்காப்பா? என்று கத்த ஆரம்பிப்பாள். அம்மா குறுக்கிட்டு, அப்பாவை எதிர்த்து பேசும் அளவிற்கு உனக்கு மாமன் கிறுக்கு பிடிச்சிருக்கோ? ஆமா அப்படி தான் என்று சொல்வாள்.
    உன் மூளை அளவை பார்த்து தான் சின்னப்பொண்ணு னு பேர் வச்சிருப்பாங்க னு நினைக்கிறேன்
    என்று ஹீரோ சொல்வான். போங்க மாமா என்று சிணுங்கலுடன், உங்களுக்கு கோபம் போய்டுச்சா? என்று கேட்பாள்.
    • நான் விவசாயம் பண்ற அழகை பார்த்து எங்கம்மா ஐயோ நாம விவசாயம் பாக்காம போய்ட்டோம் னு தவிக்கணும்; தவிச்சு தண்ணி குடிக்கணும். நான் விவசாயம் பார்ப்பேன். மேரி கியூரி அம்மா கணக்கா பரிசு வாங்குவேன்.

      சவால் எல்லாம் சுகர் இல்லை சின்னு குட்டி. சும்மா அள்ளி வாயில போட்டுக்க கூடாது.

      நீ பாட்டுக்கு மேரி க்யூரி பேரி க்யூரி னு பினாத்திட்டு இருக்க. அந்தம்மா ரேடியம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தான் கேன்சர் வந்து இறந்து போய்ட்டாங்க. நீ சொன்னதில் இருந்து எனக்கு மனசு உறுத்திட்டே இருக்கு. I need you. அந்த ப்ரைஸ் உனக்கு வேணாம். கின்னஸ் ரெக்கார்ட் பெரிய ப்ரைஸ் தான். இதை வாங்கிக்கோ.

    • எத்தன வருஷம் போனாலும் உம்மேல எனக்கு ஆசை போகவே செய்யாது மாமா. ஆசை கூடிட்டே தான் இருக்கும்.
    • இரண்டு இடங்களில் வரும் ரொமான்ஸ் சபை நாகரீகம் கருதி இங்கே நான் குறிப்பிடவில்லை. படித்து ரசித்து கொள்ளுங்கள். இப்போ இந்த நாவல் படிக்க ஆவலாக இருக்கீங்களா? Enjoy reading!!
     
    vidhyalakshmid and stayblessed like this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Do you have the link for Vayal vizhi novel, Veda?
     
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    இளம் தம்பதியினர்

    1. வசந்தத்தின் வாசலில் இருப்பதால் புதுமையை காணும் ஆர்வத்தில் மகிழ்ச்சி
    2.தங்கள் குறிக்கோளை அடைவதில் வாழ்க்கை இணையும் (துணையும் )
    உதவுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி
    3.தங்களுடைய பிரதி பிம்பங்களை , தம் சந்ததிகளாக பெறும் ஆர்வம்,
    பெற்றபிறகு பெற்றோரான பெருமை

    முது தம்பதியினர்
    1. வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைப் பார்த்து விட்டதால், மனப்பக்குவம்
    அடைந்து விட்ட மகிழ்ச்சி
    2. ஒருவரை ஒருவர் ஒத்துப் போனாலும் போகாவிட்டாலும்,
    மற்றவரின் இன்றியமையாமையை அறிந்து விட்ட திருப்தி
    3. பெரும்பாலான கடமைகளை முடித்து, இளைப்பாறி, விரும்பியதை
    செய்ய நேரம் கிடைத்த இன்பம்

    காதலர் தினம் தொடர்பாக ஒரு பட்டிமன்றம் பேசுகிறேன்,
    விவரங்கள் விரைவில் போடுகிறேன் .
     
    singapalsmile likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi SB,

    எப்படி இருக்கீங்க? நீண்ட நாட்கள்/மாதங்களுக்கு பிறகு இங்கு வருகை புரிந்து நான் பதிவிட்ட போஸ்ட்ஸ் படித்து லைக் போட்டதிற்கு நன்றி. நீங்கள் சமீபத்தில் படித்த ரொமான்டிக் நாவல் இருந்தால் அதை பற்றி எழுதுங்க. கருத்துக்களை/ நாவல்களை பகிர்ந்து இன்புறுவோம்.
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    VayalVizhi PDF | PDF

    படித்து கருத்து பதிவிடவும்.
     

Share This Page