1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,466
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Thank you.
     
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் உரையைக் கேட்டேன். உங்கள் வார்த்தைத் தேர்வும், சரளமும், பாடல்களும் நன்றாக இருந்தன. MSV அவர்களின் வேறு சில பாடல்களை நினைத்துக் கொண்டேன். குறிப்பாக - "சொல்லத் தான் நினைக்கிறேன்!".
    நன்றி.
     
    vidhyalakshmid likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,466
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அருமையோ அருமை. சென்தமிழில் விரிவாகப்பேசி மெல்லிசை மன்னர் பாடிய பாடல்களை எடுத்து இயம்பியும் இனிய குரலில் பாடியும் காட்டி உள்ளீர். அல்லா அல்லா அற்புதமான எடுத்துக்காட்டு.

    படித்ததில் பிடித்தது.
    எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான்(அவரது பொற்காலத்திற்குப் பிறகு மூன்று தலைமுறைகள் கடந்துவிட்டாலும்). மனிதர் சகட்டுமேனிக்கு இசையை வாரி வழங்கியிருக்கிறார். ராமமூர்த்தியுடன் இணைந்து இசையை ஈன்றெடுத்ததாயிருக்கட்டும், வெளிநாட்டிலிருந்து இசையை இறக்குமதி செய்ததாகயிருக்கட்டும், தன்னளவில் அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ஏன், பல நேரங்களில் அசல் தந்த உணர்வை விட இவர் பாடல்களில் அதிக ஒத்துணர்வை நான் அடைந்திருக்கிறேன். உதாரணம் ’காதலிக்க நேரமில்லை’யில் வரும் ’அனுபவம் புதுமை’. என்னைப் பொறுத்த வரை பின்னணி இசையில் மனிதர் உச்சபட்சமாக மிரட்டியெடுத்தது ’ஞான ஒளி’மற்றும் ’தில்லு முல்லு’ திரைப்படங்களில்.

    எம்.எஸ்.வி.யின் மறைவு நிச்சயமாக ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்களில் எனக்குப் பிடித்தவை இவை என்று இங்கே பகிர்ந்துக்கொள்வது ஒரு 21-ம் நூற்றாண்டு சிறுவனால் முடிந்த ஒரு குறைந்தபட்ச நினைவுகூறலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே அவற்றை வரிசைப்படுத்திப் பகிர்ந்துக்கொள்கிறேன். அவை ஒவ்வொன்றும் என்னுள் ஒவ்வொரு நினைவைக் கிளறுபவை.
     
    vidhyalakshmid likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    என்னுடைய பழைய போஸ்ட்கள் படித்து நீங்கள் அளித்த Like மழைக்கு நன்றி. மனசுக்கு பிடித்ததை உண்மையாக வெளிப்படையாக எழுதுவது/பேசுவது எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும். பேர்ல V இருக்கு னு பொதுவா சொல்லிட்டு போகாம மிஸ் சொன்னதை அப்படியே சொல்லி விட்டேன். IL பொறுத்தவரை V for Villangam - ஒரு V போதும். :grinning::grinning:

    நீங்கள் கேட்ட நாவலின் பெயர்: கனிந்த மனத் தீபங்களாய்
    நாவல் ஆசிரியர்: ஜெய்சக்தி

    எனக்கு காபி/டீ குடிக்கும் பழக்கமில்லை. அதனால் உங்க காபி பதிவை என்னால் அவ்ளோவாக ரசிக்க முடியவில்லை. காபி தொடர்பாக ஒரு தோழியிடம் நிகழ்ந்த உரையாடல் எனது நினைவிற்கு வந்தது.

    சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு தோழி ஒருவர் அவரது திருமணத்திற்கு என்னை அழைப்பதற்கு கால் பண்ணி இருந்தார்.(மாப்பிள்ளை அந்நிய தேசத்தில் வசிக்கிறார்) என்னால் முடிந்த ஒரு பொது சேவை செய்யலாம் என்று நினைத்து நான் தோழிக்கு சொன்ன அறிவுரை இது:

    V: காலங்காத்தால ஏழு மணிக்கு எழுந்திருக்கற பழக்கம் இருக்கா?
    K: எட்டு மணி தான்
    V: காபி போட தெரியுமா?
    K: ஓரளவிற்கு தான் காபி போட வரும்

    அறிவுரை: ஆரம்பத்தில இம்ப்ரெஸ் பண்றதுக்கு, திருமணம் முடிந்து காலங்காத்தால ஆறு மணிக்கு எழுந்து காபி போட்டு தர பழக்கம் வச்சுக்காத. அப்புறம் ஆயுளுக்கும் அந்த பழக்கம் தொடரனும் என்ற எதிர்ப்பார்ப்பு அவர் மனதில் செட் ஆய்டும். தினமும் காபி போட்டு குடுத்துவிட்டு ஒரு நாள் லேட்டா காபி போட்டா complaint வரும். தினமும் காபி போடாம என்றோ அதிசயமா காபி போட்டு குடுத்தா compliment கிடைக்கும். எது வேணும் னு நீ முடிவு பண்ணிக்கோ..உன்னை கஷ்டப்படுத்தாம எதெல்லாம் முடியுமோ அதெல்லாம் செய். ஆரம்பத்தில் இருந்தே நீ நீயாகவே இருந்துக்கொள்.

    குறிப்பு: அந்த ஒரு நாள் காபி compliment கூட V இன்று வரை முயற்சி பண்ணியது இல்லை என்று சொல்லவும் வேண்டுமா? :wink::wink:
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,
    அட்டகாசமான பதில்கள். :clap2::clap2:தமிழ் கவி அரங்கில் நுழைந்து தேன் தமிழில் ஒரு இனிய கவிதை கேட்ட உணர்வு. என் எண்ணங்களை அப்படியே பிரதிபலிப்பது போல இருந்தது தங்களது கருத்து. அசந்து போய் நிற்கிறேன். கவிதை பற்றிய கருத்தில் ஒரே எண்ண அலைவரிசை கொண்ட ஒரு நண்பரை சந்தித்த சந்தோசம் எனக்கு. விடை அளித்ததிற்கு நன்றி. தங்களது பதிவிற்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள். இரண்டு முறை என்னை திரும்ப படிக்க வைத்தது தங்களது பதிவு.

    இன்னும் கவிதை பற்றிய கேள்விகள் இருக்கிறது. கேள்விகள் தொடரும். தங்களது பதில்கள் வரும் வரையில். :grinning::grinning:

    எனக்கான பாடல் எனது விருப்ப பாடல் இல்லை என்றாலும் - எஸ் ஜானகியின் தேன் குரல் என்னை மயக்க தான் செய்கிறது. நன்றி. நான் தேடி பிடித்து கேட்ட SJ's தேன் குரல் பாடல்கள்:

    ஊரு சனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு
    ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை
    நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்
     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,
    • தேர்ந்தெடுத்த ஒரு தமிழ் ஆசிரியை போல கம்பீரமாக உங்களது தமிழ் குரல் ஒலித்தது
    • உரையாடலுக்கு மட்டுமில்லை பாடலுக்கும் உங்களது குரல் பாந்தமாக பொருந்துகிறது
    • வார்த்தைகள் தேர்வும் MSV பாடல்கள் தேர்வும் நன்றாக இருந்தது
    • Stage fear எதுவும் இல்லாமல் confident ஆக உரையாற்றி இருக்கீங்க
    • உங்களை ஒரு சிறந்த மேடை பேச்சாளர் என்று பாராட்டலாம்
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பதிவிற்கு நன்றி.
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    உங்களுக்கு இரண்டாவது செட் கவிதை கேள்விகள்.

    4) தங்களது கவிதையின் கரு எப்படி உருவாகிறது? வீட்டில்/ சுற்றி நடக்கும் சம்பவங்களா? இயற்கை சூழல்களா (நீர்வீழ்ச்சி, மலை பிரதேசம், மழை)? அன்று தோன்றும் எண்ணங்களா ?

    5) எழுதும் கவிதைக்கும் இருக்கும் மன நிலைக்கும் ஆழ்ந்த தொடர்பு இருக்கிறதா? சுகமா இருக்கும்போது கவிதை எழுதினால் கவிதையில் சுகம் கூடுமா? சோகமா இருந்தால் கவிதையில் வலி கூடுதலாக கடத்தப் பட்டிருக்குமா?
     
    rgsrinivasan and Thyagarajan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அலுவலகத்து வேலை பளுவின் காரணமாக PBS பாடல்கள் தேடி பிடித்து கேட்க நேரமில்லை. அதனால் இந்த வாரம் PBS பாடல்கள் கிடையாது. IL நண்பர் ஒருவர் எனக்கு WAல அனுப்பிய எனது விருப்ப பாடல் இன்று பகிர்ந்து கொள்கிறேன். அவருக்கு நன்றி.

    ஒரு வார இடைவேளைக்கு பிறகு உள்ளம் குளிர வைக்கும் ஒரு ரொமான்டிக் பாடல் கேட்கிறேன். :wink::wink:

    அடியே என்ன ராகம் - ரம்மி

    அடியே என்ன ராகம் நீயும் பாடுற
    அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற
    வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற
    சக்கரைய சாதம் போல ஊட்டுற
    என்ன எண்ணி ஏணி மேல ஏத்துற ஏத்துற
     
    Thyagarajan likes this.
  10. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நன்றிகள் ! எம். எஸ். வி. பற்றிய கருத்தரங்கத்தில் அவர் ஒரு
    பாடகர் என்ற தலைப்பு என் தேர்வு. பல ஆண்டுகளாக
    பட்டிமன்ற பேச்சாளராக உள்ளேன். கொரோனா தந்த
    கொடையாக இணைய வழியே பேச்சுகள் தொடர்கின்றன.
    தமிழ் ஆர்வமும் , பேசும் ஆர்வமும் தொடர்ந்து என்னை
    செலுத்திக் கொண்டிருக்கும் தூண்டுகோல்கள் !
     
    singapalsmile and Thyagarajan like this.

Share This Page