1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நன்றி. அவ்வப்போது இந்தத் தொகுப்பைப் படிப்பதுண்டு - பல பாடல்கள் எனக்கு பிடிக்கும் என்பதனால். அவை குறித்த உங்கள் சுருக்கமான பதிவுகளும் நன்றாக இருக்கின்றன.

    சில நாட்கள் முன்பு தான் "நீ தானே என் பொன்வசந்தம்" பாடல்கள் கேட்டேன் [ரொம்பத் தான் சீக்கிரம்!] அதிலிருந்து இந்த மூன்று பாடல்கள் ரிப்பீட் மோடில், இன்று வரை.
    1. காற்றை கொஞ்சம் நிற்கச் சொன்னேன்!
    2. என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்!
    3. சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப் போக!

    நான் MSV மற்றும் இளையராஜா இசை கேட்பதை மிகவும் விரும்புபவன். கார்த்திக்கும், NSK ரம்யாவும் மிக நன்றாகப் பாடி இருந்தார்கள். கூடவே, சமந்தா மற்றும் ஜீவா - வாவ்! கௌதம் மேனன் பாடல்களை நன்றாகப் படமாக்குவார். இவை மிகவும் பிடித்தன.
     
    singapalsmile and Thyagarajan like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    மிக்க நன்றி. ரசனை தோன்றிய நாள் கல்யாண பரிசு ஃபிரஸ் ஷோ பார்த்த நாளில் துவங்கியது. பள்ளி மாணவனாக பார்த்த சினிமாக்கள் ஒரு சில. கல்லூரி மாணவனாக கண்டது ஏராளம். ஹிந்தி சினிமா கலரில் கண்டது ஏராளம்.
    விசு சோ மனோகர் பாலசன்தர் NKT KALA MANDAPAM Triplicane சபாமேடை நாடகங்கள் பற்பல கண்படது. பரத நாட்டியமும் மிக ரசிப்பேன். KARNATAKA SANGEETHAM கச்சேரி கவனத்துடன் வாணிமஹால் ஈர்க்கும்.
    பலப்பல. ஆங்கிலப்படங்கள் முதல் படம் விட்னஸ் ஃபார் பிராஸிக்யூஷன் தொடங்கி எண்ணற்ற படங்கள். சஃபையர் ப்ளூடைமண்ட் மறக்க இயலாது.
     
    Last edited: Jun 23, 2021
    singapalsmile likes this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male

    அக்‌ஷயாசிவகுமார் மிக அற்புதம். எழுத்துக்கு வலிக்காமால் நுனி நாக்கில் பாடுவது ரசிக்க முடிந்தது. படம் பார்க்க தூண்டுகிறது. நன்றி.

    It was in my SSLC public exam.

    “On running after one ‘s hat” was a lesson in English written in first person. I had already by hearted the whole lesson.

    A question was to narrate a journey to dad in the form of a letter.

    I used that small essay and wrote it verbatim as my journey experience. My mother was wondering whether to appreciate or not? She went to The English class teacher to know whether my answering was correct or not.

    Patting my back, my English master responded to mom that technically nothing wrong and said I must be awarded more marks for my ingenuity.
     
    singapalsmile likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அட விடை கேட்கரீங்கன்னு நினைத்தேன். ஆன படப்பெயருடன் பாடல் முதல் வரிகளை இறுதியில் தந்து விட்டீர்கள். என்ன ஏமாற்றம் எனக்கு!
    சாரதா -
     
  5. Roopamanju

    Roopamanju Platinum IL'ite

    Messages:
    1,835
    Likes Received:
    2,436
    Trophy Points:
    283
    Gender:
    Female
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    தங்களது பதிவிற்கு நன்றி. தங்களது போஸ்ட் எனக்கு ஒரு sweet surprise.

    MSV மற்றும் IR இசையை விரும்பி கேட்கும் நீங்கள் உங்களக்கு பிடித்தமான பாடல்களை அவ்வப்போது இங்கு பகிர்ந்தால் இந்த தொகுப்பிற்கு பெருமை சேரும்.

    நீங்கள் கவிதை எழுதுவதில் கைத்தேர்ந்தவர். அதனால் உங்களிடம் இந்த கேள்விகள் கேட்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நேரமும் விருப்பமும் இருப்பின் விடை அளிக்கலாம்.

    1) தமிழ் மாநாட்டில் தூய தமிழில் மரபு கவிதைகள் எழுதி பகிர்ந்து கொள்ளலாம். தமிழ் மொழியின் வளம் அறிந்தவர்கள் பொருள் உணர்ந்து ரசிப்பார்கள். IL தளத்தில் தூய தமிழில் எத்தனை பேர் பொருள் புரிந்து கொள்வார்கள்? தங்களது பார்வையில், கவிஞன் எதில் அதிக சந்தோசம் கொள்வான் -- தான் எழுதிய கவிதையின் உட்பொருள் புரிந்து கவிதையை அனைவரும் ரசிப்பதிலா? கொஞ்சம் கடினமான சொல் வளம் கொண்டு எழுதிய கவிதையை ஒரு சாரார் மட்டும் ரசிப்பதிலா?

    2) ஹைக்கூ - திரைப்பாடல் பாடல் வரிகள் - மரபு கவிதை - புது கவிதை: இதில் எழுதுவதற்கு கடினமானது எது? இதில் எது சூப்பர் எது சுமார்? விளக்கம் தரவும்.

    3) கௌதம் மேனன் பாடல்களை நன்றாகப் படமாக்குவார் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அவரது படங்களில் இருந்து உங்களக்கு சிறந்ததாக பட்ட ஒரு பாடல் எதுவாக இருக்கும்? அந்த பாடல் சிறந்ததாக பட்டதிற்கு என்ன காரணம்?
     
    rgsrinivasan and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    தங்களது ரசனை பற்றிய பதிவு படிப்பதற்கு ரசமாக இருந்தது. ரசனை என்பது தானாக வருவதா? பார்க்கும் காட்சிகள் (சினிமாக்கள்) வரவழைப்பதா? சினிமா பார்க்கும் நபர்கள் அனைவருக்கும் ரசனை இருக்கிறது என்று பொதுவாக சொல்லி விட முடியாது அல்லவா?

    தங்களது SSLC exam பற்றிய பதிவிற்கு பாராட்டுக்குள். உங்களது narrative style க்கு நீங்களே சொந்தமாக எழுதி இருந்தால் இன்னும் அதிகம் மதிப்பெண் பெற்று இருந்து இருப்பீர்கள் என்பது எனது அபிப்ராயம்.
     
    Thyagarajan likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RM,

    எப்படி இருக்கீங்க? நான் போஸ்ட் பண்ற பழைய பாடல்களுக்கு கம்பெனி கொடுத்து நீங்களும் இரண்டு பழைய பாடல்கள் போஸ்ட் பண்ணதுக்கு நன்றி. இரண்டு பாடல்களிலும் PS அவர்களின் குரல் வசீகரிக்கிறது. இவங்க தண்ணீரை விட தேன் அதிகமாக பருகுவார்கள் போல -- குரலில் தேன் வழிகிறது. TMS songs - வெயிட்டிங் லிஸ்ட் ல இருக்கிறது - அவரது playlist விரைவில்.

    நாணமோ பாடலுக்கு இங்கு ஒரு First bench நண்பர் விளக்கம் கொடுத்து இருந்தார். பாடலை விட அவர் கொடுத்த விளக்கத்தில் கிக் அதிகம். :wink::wink: தேடி பிடித்து படித்து கொள்ளுங்கள். First bench ல இருக்கறவங்க என்றோ ஒரு நாள் Last bench வந்தால் Last bench capacity காலி பண்ணிடுவாங்க. :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PBS songs Playlist 56

    கற்பனை வளம் நிறைந்து எளிமையான நடையில் அமைந்த பாடல்கள். அந்த காலத்தில் பாடல்கள் படம் பிடித்த விதமும் அழகு. இயற்கை சுற்றுப்புறம் செயற்கை செட் எல்லாமே பாந்தமாக பொருந்துகிறது.

    இன்றைய பாடல்கள் பதிவில் இரண்டாவது பாடலில் ஒரு ஹாட் வரி இருக்கிறது. :wink::wink:இங்கு நான் இந்த வருடம் Feb மாதம் அலசிய நாவலில் அந்த வரிகள் வரும்.

    அழகிய மிதிலை நகரினிலே - அன்னை
    மையேந்தும் விழியாட - பூஜைக்கு வந்த மலர்
    மாம்பழத்து வண்டு- சுமை தாங்கி
    அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை - நெஞ்சம் மறப்பதில்லை
    மதுரா நகரில் தமிழ் சங்கம் - பார் மகளே பார்
     
    Thyagarajan likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பள்ளி பருவத்தில் எனக்கு பிடிக்காத ஒரு பாடம் சயின்ஸ். Biology என்றாலே எனக்கு அலர்ஜி. அதனால் டென்த் படித்தவுடன் சயின்ஸ் க்கு முழுக்கு போட்டாச்சு. 12th la படிச்சது first group - Biology க்கு பதிலா Computer science படிச்சேன். இப்பவும் எப்பவும் எனக்கு கணிதம் மேல் காதல் உண்டு. ஒரு நாள் கணிதம் சம்பந்தப்பட்ட problem க்கு தீர்வை ப்ரோக்ராம் எழுத Computer science மிஸ் சொன்னார். வீட்டிற்கு வந்து யோசித்து நோட் ல ப்ரோக்ராம் எழுதினேன். அடுத்த நாள் கிளாஸ் ல சப்மிட் பண்ணினேன். அதற்கு அடுத்த நாள் மிஸ் கிளாஸ் ல கரெக்ட் பண்ண நோட்ஸ் திருப்பி தந்தாங்க. என்னோட நோட் கடைசி வரைக்கும் தரல. கடைசியாக என்னோட நோட் தருவதற்கு முன்னர் போர்டு ல நான் எழுதிய ப்ரோக்ராம் எழுத சொன்னார். நானும் போர்டு ல ப்ரோக்ராம் எழுதி விட்டு அவர்கள் முகத்தை பார்த்து கொண்டு நின்றேன். அவர்கள் அப்போ சொன்னது: எல்லோருக்குமே புரியற மாதிரி சிம்பிள் லாஜிக் ல ப்ரோக்ராம் எழுதி இருக்கே. இப்படி தான் லாஜிக்கலா யோசிக்கணும் என்று கிளாஸ் முன்னிலையில் பாராட்டினார்.

    அந்த வயதில் அந்த பாராட்டு எனக்கு பெரிதாக பட்டது. ப்ரோக்ராம் எழுதுவதில் ஆர்வம் அளவில்லாமல் துள்ளி குதித்தது. ப்ரோக்ராம் நோட் ல எல்லா பக்கங்களிலும் V.Good or Good வாங்கி இருக்கிறேன். ஒரு முறை மிஸ் கிட்ட கேட்டேன் - எதுக்கு Good மட்டும் போட்டு இருக்கீங்க. V போடல என்று. அதற்கு அவர் சொன்ன பதில் - அதான் உன் பேர் ல ரெண்டு V இருக்கு ல என்று. இது தான் 12th படிக்கும்போது எனக்கு கிடைத்த அதிக பட்ச பாராட்டாக நான் நினைக்கிறேன்.

    என்றாவது low வாக இருந்தால் அவர் பாராட்டியதை நினைத்து பார்த்தால் 0 வில் இருந்து 100 மதிப்பெண்கள் பெற்ற எனர்ஜி எனக்கு வந்துவிடும். V stands for Victory என்று அடிக்கடி எனக்குள் சொல்லிக்கொள்வதும் உண்டு. இது என்னை நெகடிவ் ல இருந்து பாசிட்டிவ் ஆக்கும் சீக்ரட்ஸ் ல ஒன்று. :grinning::grinning:

    பள்ளி பருவத்தில் நான் ட்யூசன் படிச்சதே கிடையாது. பாடத்தில் சந்தேகம் இருந்தால் ஸ்கூல் மிஸ் கிட்ட கேட்டு தீர்த்து கொள்வேன். கற்று கொண்டதை நான் என்னுடன் படித்தவர்களுக்கும் என்னோட சக வயது உறவினர் நண்பர்களுக்கும் கற்று தருவேன். படித்த பாடம் மறக்காது. இப்போ 12th பாடம் சம்பந்தமா ஏதாவது கேள்வி கேட்டு டெஸ்ட் வைக்காதீங்க. பாடல் நினைவில் இருப்பது போல பாடம் நினைவில் நிற்கவில்லை. ஆனா லாஜிக்கல் திங்கிங் அப்படியே தான் இருக்கு. அதனால தான் வேலை வண்டி சீராக ஓடிட்டு இருக்கு --> ப்ரோக்ராம் எழுதுவதில் இல்லை என்றாலும்.
     
    rgsrinivasan and Thyagarajan like this.

Share This Page