1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    JC songs Playlist 50

    இன்றைய பதிவு ஸ்பெஷல் தான். Playlist ல அரை சதம் அடித்து விட்டதால்.

    ஊஞ்சல் ஆடுவது எனக்கு ரொம்பவே பிடிக்கும். இப்போ வசிக்கும் இடத்திலேயும் swing இருக்கு. முதல் பாடல் - swing பாடல். பாட்டு நம்மள சுத்த வைக்கும்..கிறுக்காக்கி விடும்..முதல் முறையாக போன வார இறுதியில் தான் இந்த பாடல் கேட்டேன்..இன்னும் கிறுக்கா சுத்திட்டு இருக்கேன்..

    இரண்டாவது பாடல் - ரோஜா மலர்களுக்கு இடையில் ஊஞ்சல் ஆடினால் எப்படி இதமாக உணர்வேனோ அந்த உணர்வு இந்த பாடலில்..

    மூன்றாவது பாடல் - ஊஞ்சல் + ரோஜா மலர் + தென்றல் வந்து சேதி சொல்லிட்டு போனால் எப்படி இருக்கும்? சூடா இருக்குமா ? ஜில்லுனு இருக்குமா? :wink::wink:

    நான்காவது பாடல் - மேல சொன்ன ரம்மியமான சூழலில் உள்ளம் கவர்ந்த கள்வன் மனச பறிகொடுத்தா அவரது கால்ல விழ தோணுமா? தோணாதா? பாட்டோட உள் அர்த்தம் எடுத்துட்டு வில்லங்கமா யோசிச்சா நான் அதுக்கு பொறுப்பில்லை. :wink::wink:

    ஐந்தாவது பாடல் - நான் மேல சொன்ன நாலு சங்கதியும் நடந்தா பூவண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடமா போய்டுமா?

    டைரக்டர் பாலு மஹேந்திராவின் படங்களில் வரும் ரொமான்டிக் பாடல்களில் ஒரு பெண்ணின் பார்வையில் அழகிய ரொமான்டிக் டிசைன் இருப்பதை நான் கவனித்து இருக்கிறேன். :wink::wink:
    இன்று பாடல் வரிகள் பாடிய விதம் இசை படுத்தின பாடு பத்தாதா? பாடல் காட்சியும் படுத்தினால் தாங்குமா? இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

    ஆனால் ஒன்னு சொல்லியே ஆகணும் - அநியாயத்திற்கு JC பாடி கொல்றார்.. சொர்க்கத்துக்கு போயிட்டு பூலோகத்திற்கு வர மனசே வரமாட்டேங்குது!!

    Swing swing - வணக்கத்துக்குரிய காதலியே
    ராஜா மகள் ரோஜா மகள் - பிள்ளை நிலா
    தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ - அந்த ஏழு நாட்கள்
    எம்மனச பறிகொடுத்து - உள்ளம் கவர்ந்த கள்வன்
    பூ வண்ணம் போல நெஞ்சம் பூபாளம் பாடும் நேரம் - அழியாத கோலங்கள்
     
    suryakala likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    #7411
    These words made me nostalgic. An image in between would befit the quotes.

    ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

    ( I tried to insert a portrait of RAVI Verma - a swing in verdant serene place with nature panorama but dropped the idea as no image to my satisfaction available free)


     
    Last edited: Apr 15, 2021
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Thyagarajan likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    JC songs Playlist 51

    ஒவ்வொரு பாடலையும் அவ்ளோ லாவகமாக JC பாடி இருக்கிறார். இவரை பாராட்டி கொண்டே இருக்கலாம். ஏன் இவர் SPB அளவிற்கு தமிழில் பாடல்கள் பாடவில்லை என்று ஏங்க வைக்கிறார்.

    இன்னும் நிறைய பாடல்கள் இவர் பாடி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த ரொமான்டிக் பாடல்களை தான் நான் இதுவரை இங்கு பதிவிட்டு இருக்கிறேன். எனது ஆயுள் உள்ள வரை இவரது பாடல்களை நான் கேட்டு ரசிப்பேன். சில மணி நேரங்கள் தரை இறங்காமல் கற்பனையில் மிதப்பேன். :wink::wink:

    இத்துடன் JC பாடல்கள் பதிவை முடித்து கொள்கிறேன்.

    இதய வாசல் வருக - நெஞ்சில் ஒரு ராகம்
    செம்மீனே செம்மீனே - செவ்வந்தி
    பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள்
    பூ முடிச்சு பொட்டு வச்சு - என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
    பூந்தென்றல் காற்றே வா - மஞ்சள் நிலா
     
    Last edited: Apr 22, 2021
    Thyagarajan and suryakala like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இங்கு நான் சோகமான பாடல்கள் பதிவிடுவதில்லை. அவரவர் வாழ்வில் இருக்கும் சோகங்கள் பத்தாதா? எல்லாவற்றையும் மறந்து சில நிமிடங்கள் ஜாலியாக இருப்பதற்கு தான் இந்த thread என்ற எண்ணத்தை கடைப்பிடித்து செயலாற்றி வருகிறேன்.

    நிஜ வாழ்வில், சோகம் இருந்தாலும் அதை எப்படி கடந்து சென்று முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்கின்ற சிந்தனை தான் என்னுள் அதிகமாக ஊற்றெடுக்கும். சோகத்தில் ஊறினால் என்ன பிரயோஜனம்? உலகில் எதுவுமே நிரந்திரமில்லை. எது நடந்தாலும் துடைச்சு போட்டு போயிட்டே இருக்கணும். சோகத்திலே மூழ்கி வாழ்வை தொலைத்து விட கூடாது.

    எல்லாமே நல்லா தான் போயிட்டு இருக்கு. எதுக்கு இவ்ளோ தத்துபித்துவம் கிறுக்கறேன் என்று தெரியனுமா? என்னவோ இந்த பாடல் இன்று பதிவிட தோன்றியது. இந்த பாடலில் சோக ரசம் பிழிந்து எடுக்கும். பாடல் வரிகள் மனதை தொட்டது. ஆணின் வலி எப்படி இருக்கும் என்பதை சொல்லும். மனதில் வலி என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். அதில் ஆண் பெண் பேதம் இல்லை என்பது தான் நிதர்சனம்.

    கடவுள் வாழும் கோவிலிலே - ஒரு தலை ராகம் - சோக ரசம் - JC

    குறிப்பு : சோக பாட்டு போஸ்ட் போட்டால் ராகிங் பண்ணுவது எனது வழக்கம். இங்கு விதிமுறை எல்லோருக்கும் பொதுவானது. இந்த போஸ்ட் க்கு எனக்கு ராகிங் கேள்வி போஸ்ட் பண்ணனும் என்று தோன்றினால் போஸ்ட் பண்ணலாம். எனக்கு கேள்வி கேட்கவும் பிடிக்கும். பதில் சொல்வதும் பிடிக்கும். :grinning::grinning:
     
    Thyagarajan and suryakala like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சோக பாட்டோடு முடிக்க மனசு வரல. பாசிட்டிவ் பதிவுடன் இன்று முடித்து கொள்கிறேன்.

    T's ஊஞ்சல் portrait என்னுள் இனிய நினைவலைகளை தட்டி எழுப்பியது.

    படித்து முடித்து வேலைக்கு போன முதல் மாத சம்பளத்தில் நான் ஒரு ஆயில் பெயின்டிங் ஓவியம் வாங்கி இருக்கிறேன். ஒரு கல்லூரி மாணவர் ஓவியங்கள் வரைந்து ஒரு நல்ல காரியத்திற்காக அந்த ஓவியங்களை விற்று கொண்டிருந்தார். நான் வாங்கியது ஒரு ரொமான்டிக் ஓவியம். ராதா கிருஷ்ணன் பெயின்டிங் கலெக்ஷன் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நான் வாங்கியதும் அது போல தான் இருக்கும். அந்த அழகிய ரொமான்டிக் ஓவியத்தை பொருத்தமான பிரேமில் பொருத்தி எனது அக நண்பருக்கு எங்களது இரண்டாவது சந்திப்பில் திருமணத்திற்கு முன் பரிசளித்தேன். இன்றும் அந்த ஓவியம் பொலிவுடன் மிளிர்கிறது.

    அக நண்பரது அகத்தில் முதல் முதலாக நான் காலடி எடுத்து வைத்த போது எனக்கு MIL பரிசளித்தது - ராதா கிருஷ்ணன் பெயின்டிங் கலெக்ஷன். இன்னும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். பிரேமில் பொறுத்தவில்லை. தேர்ந்து எடுத்து பிரேம் இனிமேல் தான் வாங்க வேண்டும்.

    தற்போது வசிக்கும் இடத்தில ஒரு ஆர்ட் மியூசியம் இருக்கிறது. அங்கு உலக புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் இடம் பெற்று இருக்கும். முதல் முதலாக அந்த ஓவியங்களை பார்த்து ரசித்த தினம் இன்றும் எனது நினைவில் பசுமையாக இருக்கிறது.

    இன்று தான் ஓவியம் வரைய கற்றுக்கொள்ளும் எண்ணம் உதித்து இருக்கிறது. செயல் படுத்துவேனா என்று தெரியல..தேடல் தொடரும். தேடல் உள்ளவரை தான் வாழ்வில் ருசி இருக்கும். :grinning::grinning:
     
    suryakala and Thyagarajan like this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:I agree in toto. Thanks.
    God Bless.
     
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Thanks & Regards.
    2. Upon reading the above, I had an irresistible urge to post here, a similar event but that painting was gifted to my spouse & I in an expensive frame on our wedding day by our ஸம்பந்தி a year before.
    upload_2021-4-22_11-23-40.jpeg
     
    singapalsmile and suryakala like this.
  10. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,722
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
    கவிஞர் கண்ணதாசனும் திருமிகு ஆருத்ரா.. தெலுங்குக் கவிஞரும் நல்ல நண்பர்கள்..
    இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று அருத்ரா கேட்க அவர் ஒரு பாடல் சொன்னார். "அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன்.

    அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா? லட்சுமி கல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய ‘ராமன் எத்தனை ராமனடி’ என்கிற பாடல்தான் அது".

    "கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப்படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன்".

    கண்ணதாசன் சொன்னார்..

    இராமயணத்தில் பட்டாபிஷேகப் படலத்திற்குப்பிறகுவரும் இரண்டாம் காதையில் சலவைத் தொழிலாளி ஒருவர் சொன்னார் என்பதற்காக.. ராமன் சீதையைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி தம்பி லக்குவனனிடம் ஆணையிடுவான். அவ்வாய்ச் சொல் ஏற்று லக்குவனன் சீதையைக் காட்டில் விட்டு வீடு திரும்பியபோது ராமன் நிலைப்படியில் தலையை வைத்து அழுது கொண்டிருப்பான்.. அப்போது லக்குவனன் அண்ணன் ராமனைப் பார்த்து.. ஏனன்னா.. இது என்ன ? நீங்கள் தான் ஆணையிட்டீர்கள்.. இப்போது அழுதுகொண்டிருப்பதென்ன? என்று கேட்க..

    ஆணையிட்டது கோசலராமன்..
    அழுதுகொண்டிருப்பது சீதாராமன்’ என்று


    இப்பொறிதான் .. இப்பாடல் உருவானதற்கான கருவானது என்றார்.

    கல்யாண கோலம் கொண்ட கல்யாணராமன்..
    காதலித்த தெய்வம் அந்த சீதாராமன்..
    அரசாள வந்த மன்னன் ராஜாராமன்..
    அலங்கார ரூபன் அந்த சுந்தரராமன் ..
    தாயே என் தெய்வம் என்ற கோசலராமன்..
    தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்..
    வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்டராமன்..
    வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீ ஜெயராமன்.
    வம்சத்துக்கொருவன் ரகுராமன்.
    மனங்களை இணைப்பவன் ஸ்ரீராமன்.
    மூர்த்திக்கொருவன் ஸ்ரீராமன்.
    முடிவில்லாதவன் அனந்தராமன்.

    ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
    நம்பிய பேருக்கு ஏது பயம்..
    ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
    ராமனின் கைகளில் நான் அபயம்..

    என ராமன்களின் பவனியல்லவா இந்தப் பாட்டு!
     
    rgsrinivasan likes this.

Share This Page