1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மீசை

    (மேல இருக்கற போஸ்ட் ல மீசை பத்தி கொஞ்சமா எழுதிட்டு விட்டுட முடியுமா? மீசைக்கு தனி போஸ்ட் போட்டாகணும்ல :wink::wink:)

    இந்த நாவலில் மூணு இடத்தில மீசை பத்தி வரும்.

    1: கன்னியாகுமாரி ட்ரிப் ல குந்தவி மிமிக்கிரி பண்ணும்போது சிவா அவனது மீசையை வருடுவது போலவும், அவன் தலை கோதுவதை போலவும் மிமிகிரி பண்ணுவாள். (இதெல்லாம் கவனிச்சு இருக்கியா என்று அவளை தனிமையில் கேட்பான்)

    2: நாட்டு நடப்பை பார்த்து அவள் வருந்துவதை பார்த்து அவளை ஏற்காடு அழைத்து வந்திருப்பான். எந்த சீண்டலும் இல்லாமல் அவளோடு துக்கத்தை பகிர்ந்துகொள்வான். அவளை அவளது துக்கம் போக்க அது பற்றி எழுத சொல்வான். அங்கு காலையில் சிவா ஷேவ் பண்ணிட்டு இருப்பான். குந்தவி அவன் தோளில் முகம் புதைத்து கன்னம் இழைத்து, ஒழுங்காதான் ஷேவ் செய்துருக்கீங்க என்று சொல்வாள். அவளை கவிதை கொஞ்சல்களால் குளிப்பாட்டுவான். அவள் இழைந்து கொடுத்த விதத்தில் அவன் குழைந்து போவான்.

    3: திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து இருவரும் வீட்டில் இருக்கும்போது குந்தவி அவனது மீசையை வருடுவாள். என்னடி உனக்கு எப்ப பாரு என்னோட மீசை மேல கண்ணு என்று சொல்வான். அவன் டி போட்டு கூப்பிட்டா அவன் வேறு மாதிரி இருக்கிறான் என்று அவளுக்கு தெரியும்.
     
    suryakala and stayblessed like this.
  2. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Thanks Vedha. After seeing your detailed posts on kanindha mana dheebangalai I doubt you would enjoy the ones I listed. You seem to be a deep reader contrary to what you said you are just reading for a kick. I forgot to mention subashri krishnaveni. Hers is also romantic ones. Her kadhal radhiye specially. Naa enjoy panni dhan padichen adha. Humour and romance nalla irukkum. End of the novel a problem will be handled by the heroine. n.seethalakshmis vayal vizhi is also romantic. May be you can start of with these 2. I liked vayal vizhi a lot. It also handles a social issue. Chinnaponnu the heroine and hero gowtham are so likeable. Chi pos(that's how gowtham.will call her initially) complete surrender to gowtham may not be liked by few. But andha story ku romba porundhichu. It is also humorous and romantic. N.seethalakshmis most novels are humorous and romantic and handles some issue be it social or a personal one. But ennoda favourite ushanthy dhan. Not too romantic but yeno I feel her characters are so relatable and whenever I read hers it feels like someone is saying in my ears that my problems are going to end soon. Ungalukku naa sonna novels pidikkalena thittadheenga munnadiye oru sorry kettukaren:grinning:
     
    singapalsmile likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போட்டோ மட்டும் பார்த்து மீசை இல்லாதது நால ப்ரோபோசல் ப்ரொசீட் பண்ண வேண்டாம் னு சொன்ன மீசை கிறுக்கு பிடித்த பெண் பத்தி எங்காவது கேள்வி பட்ருக்கீங்களா? கட்டிக்க போறவருடன் கடலை போடும்போது என்ன காரணம் னு சொல்லாமலே அவரது மீசை மீது அவருக்கு பற்று இருக்கானு? உறுதி படுத்தின பெண் பத்தி கேள்வி பட்டு இருக்கீங்களா? அது தான் KK. இவருக்கு Stubble சேர்த்து பிடிக்கும் என்பதில் ஆச்சர்யம் இருக்கா என்ன?

    மீசை இல்லாமல் தனது முகத்தை பார்ப்பதற்கு MR க்கு பிடிக்காது. மீசையை எடுத்தது கிடையாது. ஆனால் நான்கு நாளுக்கு ஒரு முறை ஷேவ் பண்ணும் பழக்கம் இருப்பவர்.

    திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து ஒரு குறிப்பிட்ட நாளில்
    உரையாடல்:

    இன்னைக்கு எனக்கு மீட்டிங் இருக்கு
    அதனால?
    நான் ஷேவ் பண்ணி நாலு நாளாச்சு
    இன்னைக்கு மீட்டிங் திங்கள்கிழமைக்கு மாத்திக்க முடியாதா?
    என்னோட பாஸ் கூட மீட்டிங்
    ஷேவ் பண்ண பெர்மிசன் கொடுத்துட்டேன்

    இப்படி MR பெர்மிசன் கேட்டது ஒரே ஒரு முறை தான். ஆனாலும் KK க்கு அது மறக்க கூடிய விஷயமா? :wink::wink:

    YT - Oh En Kulfi - புத்தம் புது காலை


    உன் எண்ணம் கொஞ்சம் naughty
    என் மீசை எல்லாம் கருப்பாகுதே


    **********************************************

    MR - அலுவலகத்து தினமும் சென்று வேலை பார்க்கும் ஒரு essential worker. No WFH. வீட்டு வேலையிலும் சரி அலுவலகத்து வேலையிலும் சரி இவர் ஒரு சின்சியர் சிகாமணி. அலுவலகத்துக்கு இவர் இன்றியமையாதவர் என்பதால் இவர்க்கு சீக்கிரம் vaccine கிடைக்கும்.

    கடந்த மாத உரையாடல்:


    நான் vaccine போட்டுக்க மாட்டேன்
    நான் சீக்ரம் போட்டுக்கறேன். எனக்கு என்ன ஆகுது னு பார்த்திட்டு அப்புறம் நீ போட்டுக்கோ.
    உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ஊசினா நான் ஓடி போய்டுவேன். சின்ன வயசுல போட்டது தான் கடைசி. அது எப்போனு கூட எனக்கு நினைவில்லை.
    நீ நம்ம ஊருக்கு இந்த வருஷம் போகறதுனா போடாம போக கூடாது

    அன்பு கட்டளை போடற அளவிற்கு இப்போ MR வளர்ந்திட்டார்/வந்துட்டார். ஆனா KK கேப்பாங்களா? காலம் தான் பதில் சொல்லணும். :grinning::grinning:
     
    suryakala and stayblessed like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    I am a person who pays attention to details. Indha month Special assignment enbadhaal dhaan ivlo மெனக்கிடல். Romance nu vandhaa kick dhaan mukkiyam.:wink::wink:

    Neenga oru restaurant poreenga..anga saappaadu super nu recommend panreenga..saappaadu visayathula naan rombave picky..naan adhe restaurant la saaptuvittu saappaadu sariyillai nu ungalai thitradhu endha vidhathil nyaayam? Taste differs (literally and figuratively) :grinning::grinning:
     
    stayblessed likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    மண வாழ்வில் ஊடல் இல்லாமல் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்பது தான் சத்தியம்.
    ஒரே பின்னணியில் வளரும் உடன்பிறப்புக்களுக்கே எல்லாமே ஒத்துப்போகாது. அப்படி இருப்பின் மாறுப்பட்ட பின்னனணியில் வளர்ந்தவர்கள் இணைந்து இருக்கும்போது ஊடல் தவிர்க்க முடியாதது தான். தம்பதிக்குள் சண்டை வந்தால் கொஞ்ச நாட்கள் இடைவெளி கொடுத்து நிதானமாக சிந்தித்து பேசி தீர்த்து விடுவது நல்லது. பேசாமலேயே மண்டையில் வைத்துக்கொண்டு பொறுத்துக்கொண்டிருந்தால் ஒரு நாள் வெடித்து சிதறும் போது மிக கடுமையாக இருக்கும். பின் விளைவுகள் அபாயகரமானது என்பது தான் நிதர்சனம். தீர்க்க முடியாத பிரச்னைகள் இருக்க தான் செய்யும். அதற்காக அதையே நினைத்து கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை. வீட்டு குப்பைகளை trash can ல போடுவது போல மனசில இருக்கற குப்பைகளை போட mind ல ஒரு trash can வைத்து குப்பைகளை ஒதுக்கி வாழ பழகிக்கலாம். வீட்டை துப்புரவு செய்யும்போது வரும் குப்பைகளை trash can ல போட்ட பிறகு என்றாவது கிளறி பார்த்து இருப்போமா? அது போல mind ல இருக்கற trash can குப்பைகளை கிளறாமல் அப்படியே மக்கி மறந்து போக விடுவது நமக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். ஓவரா தனிப்பட்ட கருத்து தெரிவித்து விட்டேன். இப்போ கதைக்கு போகலாம். :grinning::grinning:

    ஊடல்

    ஒரு நாள் கல்லூரியில் ஒரு பிரச்னை வந்திருக்கும். ஒரு பொண்ணு கிட்ட தப்பா எழுதின லெட்டர் குடுத்த பையனை சிவா தனியா கூப்பிட்டு அறை கொடுத்து இருப்பான். இது பற்றி கேள்வி பட்ட குந்தவி சிவாவை விசாரிப்பான். அவன் ஒழுங்கா பதில் சொல்லாமல் இருப்பான்.

    வில் யு ப்ளீஸ் சட் அப் குந்தவி
    வொய் ஷுட் ஐ . உங்களுக்கு ரொம்ப நினைப்பு சிவா. You think you are capable of solving everything.
    சரி தான் போடி
    இது நல்லதுக்கு இல்லை. You are going to pay for this. கொழுப்பு திமிர் ஈகோ.

    ரெண்டு நாட்கள் அவனது அறைக்கு வர மாட்டாள். அவனை கண்டுக்கவும் மாட்டாள். தனியா அவள் ரூமிற்கு வந்து சிவா அவளிடம் பேச முயற்சி பண்ணுவான்.

    நான் முதலிலேயே சொல்லி இருக்கேன். You can't treat me like that. I am not your slave. ரூம் விட்டு வெளிய போயிருங்க.

    சிவாவின் அம்மாவும் குந்தவியை சமாதானப்படுத்த முயற்சிப்பார்.

    சிவா மேல உயிரையே வைத்து இருக்கேன். அது வேற. இந்த பிரச்னை வேற. சில விஷயங்களில் அடாவடியாக தீர்க்க முடியும் னு அவர் நினைக்கிறார். Feelings manipulate பண்றார். அவருக்கு இது நடந்தா எப்படி இருக்கும் னு தெரியட்டும்.

    மூன்று நாட்கள் இப்படி பேசாமலேயே சென்று விடும். சிவா இறங்கி வருவான்.

    குந்தவி, என்னை ஏன் இப்படி வதைக்கிற? நான் என்ன தப்பு செய்தேன்? திட்டு. ஆனா என்னை விட்டு விலகாதே என்றவன் அழுதே விட்டான்.

    சொல் கண்ணம்மா நான் என்ன தப்பு செஞ்சேன்?
    உங்களுக்கே தெரியும்
    காலேஜ் பிரச்னை எதுக்கு வீட்டுக்கு கொண்டு வர?
    வீட்லயும் நா கேட்டப்ப நடந்த விதமும் என்னை நடத்தின விதமும் எனக்கு பிடிக்கல.
    பிரச்னையை என்கிட்டே சொல்லி இருக்கலாம். அதை விட்டுட்டு சரி தான் போடி..சட் யுவர் மௌத் னு எடுத்தெறிஞ்சு பேசறதா?
    நீ மட்டும் என்னவாம்? கொழுப்பு திமிர் ஈகோ னு என்னை சொல்லல. அதுவும் அம்மா முன்னாடி. நான் என்ன செஞ்சா கோபம் அடங்கும் கண்ணம்மா? மன்னிப்பு கிடையாதா? என்ன செய்யணும்?

    ஆமா அதையும் வேற சொல்லி தரணும் என்று தலையில் அடித்து கொள்வாள். அவன் பிராகாசமாவான். எப்படி மன்னிப்பு கேக்கணும் என்று அவள் அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள். :wink::wink:

    குந்தவி நிஜம்மா என் மேல கோபப்பட்டாயா?
    முதல் நாள் மட்டும் உண்மை கோபம். மத்ததெல்லாம் நடிப்பு. எனக்கு டெஸ்ட் வச்சுக்கிட்டேன். உங்ககிட்ட ஒதுங்கி இருக்க முடியுமா? கோபப்பட முடியுமா னு. எனக்கு இன்னொரு விஷயமும் தெரிய வேண்டியதா இருந்தது. தி கிரேட் சிவநாதன் எனக்காக அழுவாரா னு?

    கண்ணம்மா உன் கணவன் காதலன் உனக்காக அழுவான் கண்ணம்மா. சேவை செய்வான்.


    விலாவரியாக அவன் தான் அவள் மீது கொண்ட காதலை எடுத்து சொல்வான். (அதை படிக்கும்போது இப்படியும் ஒருத்தனால காதலிக்க முடியுமா னு ஏங்க வைக்கும்..புக் ல படிச்சு அனுபவிங்க.)
    அது கேட்டு அவள் கலங்கி போவாள்.
    அவர்கள் அறைக்கு போவார்கள்.

    சொல் கண்ணம்மா எப்படி நிருபிக்கணும்?
    ப்ளீஸ் சிவா அப்படி பேசாதீங்க. எனக்கு புத்தியே இல்லை. நமக்கு நிருபணம் வேண்டாம்..நம்பிக்கை போதும்..
    இனிமே டெஸ்ட் உண்டா இல்லையா?
    உங்களுக்கு டெஸ்ட் வைக்க எனக்கு அருகதையில்லை. சிவா உங்களை நான் புரிந்து கொண்டேன். உங்கள் வார்த்தையின் பொருள் அணு அணுவாக எனக்கு புரிந்தது. இத்தனையெல்லாம் போட்டு புதைத்து கொண்டு உரம் போட்டு வளர்ப்பதற்கு நான் எந்த விதத்தில் தகுதி சிவா? இலட்சக்கணக்கான பேர் ரசிக்கற கவிதைகளை கொடுக்கற கவிஞனின் காதல் எனக்கு கிடைக்க என்னிடம் அப்படி என்ன இருக்கிறது? இவ்வளவு பெரிய விசயத்துக்கு நான் என்ன விலை கொடுக்க வேண்டும் சிவா?

    உன்னை கொடு கண்ணம்மா..ஹார்ட் அண்ட் சோல்..
    நீ உன் அன்பு மனம் எல்லாமும் எனக்கு வேண்டும் வித் அவுட் எனி ரிசர்வேஷன்ஸ்.


    YT - மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் - ஆசை

    சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும்
    மின்னல் போல வந்து வந்து போகும்
    மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும்
    இங்கு காதல் மட்டும் காயம் இன்றி வாழும்
     
    suryakala and stayblessed like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    KK க்கு கடல் அளவு பொறுமை என்றால் MR க்கு பெருங்கடல் அளவு பொறுமை. ரெண்டு பேருக்கும் அவ்ளோ சீக்கிரம் கோபமும் வராது. ஒரு சின்ன கெட்ட வார்த்தை கூட வீட்டில் பேசும்போது இருக்காது. மெத்த படிப்பு படிச்சா ஈகோ நிறைந்து கர்வம் பிடிச்சவங்களா தான் இருப்பாங்க என்ற ஆதாரமற்ற சொற்பேச்சை பொய் ஆக்குபவர்கள்.

    இவங்களுக்கு சண்டை வந்தா எப்படி இருக்கும்?

    சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு இவர்களது கொழுந்த கோபக்கனலில் வீடு பத்தி எரியாம போனது தான் அதிசயம். நல்ல வேளை சொந்தமான தனி வீடா போச்சு. இல்லனா போட்ட சத்தத்திற்கு பக்கத்துக்கு வீட்டு நபர்கள் கம்ப்ளெண் பண்ணி வீட்டை காலி பண்ண சொல்லி இருப்பாங்க.

    Volcanic eruption? இதோ:

    சாப்பாடு செஞ்சு போடற ல..அதுல விஷம் கலந்து என்னை கொன்னுடு..
    கடையில போய் நீங்களே வாங்கிக்கறது தான?
    I am already dead inside
    I am dying..நரக வேதனையில் என்னை கொண்டு வந்து விட்ருக்கீங்க..
    .........
    .........
    நீ ரொம்ப பேசற
    அது கல்யாணத்துக்கு முன்னால தெரியாதா? பேசுவேன் னு தெரிஞ்சு கல்யாணம் பண்ணா அது உங்களோட தப்பு. இந்த பொண்ணு வேண்டாம் னு சொல்லிருக்க வேண்டியாது தானே?
    நீ என்னை கல்யாணம் பண்றதுக்கு வேண்டாம் னு சொல்லிருக்க வேண்டியது தானே?
    (அன்னிக்கு சொல்லாத ஆனா இரண்டு வருடங்களுக்கு பிறகு MR க்கு மண்டையில உரச்ச KK's mind voice: லூசா டா நீ ? கல்யாணத்துக்கு முன்னாலேயே உன்னை காதலித்தவள் நான். நா எதுக்கு கல்யாணம் வேண்டாம் னு சொல்ல போறேன்?)
    ..........
    ..........
    சண்டை உச்ச கட்டம் அடைந்து விட்டது. அதிர்ந்து கூட பேசாத MR's மென்மையான கரங்கள் பேசி கறைபட்டு விடுமா என்ன? (அன்றைய சூழலுக்கு வெந்நீராய் கொட்டிய வார்த்தைகளுக்கு MR's கரம் கறைபட்டு இருந்தாலும் காதல் குறைந்து இருக்காது KK க்கு என்பது வேறு விஷயம்)

    KK வ சாத்தறதுக்கு பதிலா MR வேகமாக ரூமுக்கு சென்று கதவை ஓங்கி சாத்திவிட்டார்.

    ஒரு வாரம் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
    உணவு தயாரிக்க டைம் டேபிள் இருந்தது - யார் எந்த நாள் சமைப்பாங்க என்று.
    யார் உணவை தயாரிச்சாங்களோ அவங்க உணவை தயாரித்து விட்டு சாப்பாடு ரெடி னு மெசேஜ் மட்டும் போனில் பகிரப்பட்டது.

    KK தனியா யோசிச்சிட்டே இருக்காங்க:
    கோபத்துல கூட டீ போட்டு பேசல.. சட் அப் சொல்லல..நீ ரொம்ப பேசற னு மட்டும் தானே சொன்னார்? நாம எப்போ கம்மியா பேசிருக்கோம்? தப்பு செஞ்சவங்க தானே இறங்கி வரணும்?

    ஒரு வாரம் கழித்து இறங்கி வந்து சாரி கேட்டது MR தான். அதுவும் நீ ரொம்ப பேசற என்று சொன்னதுக்கு மட்டும். அது தான் முதலும் கடைசியுமாக போர் புரிந்தது..கண்மூடி தனமா காதலிப்பது தவறில்லை அந்த காதலுக்கு உரியர் அந்த காதலை புரிந்து கொள்ளும் வரை. :wink::wink:
     
    suryakala and stayblessed like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்றைய போஸ்ட் V-Day ஸ்பெஷல்..நேத்து ஊடல் நா இன்னைக்கு நான் என்ன எழுதப்போறேன்னு கெஸ் பண்றது ராக்கெட் சயின்ஸ் கிடையாது..இந்த நாவலில் என்னை தரையில் இறங்க விடாமல் உயர உயர பறக்க வைத்த பகுதி..:wink::wink: இது பத்தி நான் மேலும் எழுதினா வில்லங்கம் ஆய்டும்..வாங்க நாவல் க்கு போகலாம்..

    சிறுத்தை சிவநாதா

    சிவா மனதில் பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கும். கையில் பேப்பரை சுருட்டி கோபமாக சுவற்றில் வீசி கொண்டிருப்பான்.

    குந்தவி சற்று நேரம் அவன் பாரா வண்ணம் அதை பார்த்து கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து ஒரு தீர்மானத்துக்கு வந்து அவனிடம் சென்று, என்ன சார் விலை நிர்ணயம் முடிஞ்சுதா? பாதியா? முக்காலா? கைப்பொருளா? மெய்ப்பொருளா? என்றாள்.

    இப்போ நான் நானா இல்லை. போயிடு குந்தவி என்றான். அவள் பயப்படவில்லை. என்னவா இருக்கீங்க? தெரிஞ்சுக்கலாமா?

    காதல் மனைவி கண்ணம்மா என்பதை மறந்தான். அன்று காதல் இல்லை மோக வயப்பட்டிருந்தான். அவள் கொஞ்சம் அச்சப்பட்டாலும் தாங்கி கொண்டாள். வருட கணக்கில் விரதம் காத்த கணவனின் மறுபக்கம் அறிந்து ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கையில் அவன் அவளிடம் எளிதாக பதில்கள் பெற்றுக்கொள்வதையும் உணர்ந்தாள்.

    விலை கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டாமோ என்கிற அளவிற்கு அவன் காதல் இல்லை மோக வயப்பட்டிருந்தான்.


    ஐ அம் சாரி கண்ணம்மா நோகடிச்சுட்டேன்.

    அதெல்லாம் ஒண்ணுமில்லை. யோசிச்சு தான் நான் வம்பிழுதேன். அவனிடம் சற்று குழைந்து சிவா என்னை மட்டும் கூட்டுக்குள் இருக்கேன் னு சொல்வீங்க. உங்களுக்குள்ளும் இன்னொரு ஆள் இருக்கான். சிறுத்தை சிவநாதன்.


    சொல்லு சிவநாதா
    என்ன மரியாதை குறைகிறது?
    அது கொடுக்கற மாதிரி நடக்கனும்மாக்கும் தெரியுமா
    முதல் நாளே காதலுக்கு கண்ணியமில்லை னு விளக்கமா சொல்லியாச்சு. ஒன்னு சொல்லட்டுமா? உன்னோட அந்த வெட்கத்தின் பொருள் என்ன தெரியுமா? காதல் கண்ணம்மா காதல். என்னிடம் மட்டும் அப்படி என்ன வெட்கம் என்று காத்திருந்தேன். காதலில் மேதமைக்கு இடம் இல்லை. கண்ணம்மா பேதமைதான் வேண்டும்
    .

    காத்திருத்தலின் சுகம் புரிந்தது
    சேர்ந்திருந்தவளின் சாகசம் அறிந்தது
    காலம் என் மேல் கருணை வைத்தது


    கதியே நீயாய்க்
    கலந்ததி லுந்தன்
    கவிதை கிங்கே
    பொழிப்புரை கிடைத்தது


    களப்பணி பாதி முடிந்தது கண்ணம்மா நாணம் கெல்லி எடுத்தாயிற்று. இனிமேல் தான் அடுத்த பாடம் சொல்லி குடுக்க வேண்டும். அகப்போராட்டம் நிறைவுற்றது கண்ணம்மா. இனிமேல் சுகப்போராட்டம் தான்.

    இந்த ஹாட் சம்பவத்திற்கு பிறகு இரண்டு பேரும் காதல் தீவிரவாதி ஆகிவிடுவார்கள். அவள் அவனை 'சிறுத்தை சிவநாதா' என்று காதலோடு அழைப்பது நான்கு இடங்களில் இந்த நாவலில் வரும். அதற்கு தகுந்தாற்போல அந்தந்த இடங்களில் வரும் வரிகள் செம கிக். எங்கெங்கோ அழைத்து செல்லும்!! :wink::wink:

    Happy V-Day!! வருடம் முழுதும் காதல் நாட்களாக இருந்தாலும் ஒரு நாள் இன்னும் ஸ்பெஷல் காதலோடு இருக்கலாம். :wink::wink:

    YT - காத்தோடு காத்தானேன் - ஜெயில்
    YT - காட்டு பயலே - சூரரை போற்று
     
    Last edited: Feb 12, 2021
    suryakala and stayblessed like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று MR and KK கட்டாய லீவு ல அனுப்பப்பட்டு விட்டார்கள். :grinning::grinning:

    ரொம்ப நாளுக்கு அப்புறம் நான் கிறுக்கியது இந்த வருடத்தில் தான்..இதெல்லாம் கவிதையா னு சண்டைக்கு வராதீங்க.. வரது தான எழுத முடியும்..:wink::wink:

    பிடிச்சிருக்கு என்ற சொல்லை
    பயன்படுத்த பயப்படுகிறேன் உன்னிடம்
    தாரம் சொல்லிய சொல்லை
    தாரக மந்திரமாய் உருப்போட்டு செயலாற்றி
    பிடிச்சதுக்கும் மேலே பிடிக்க வைத்து
    மதி மயங்க செய்வாய் என்னை
    இதற்கு மேலும் உன் மேல்
    பைத்தியமாவதற்கு என்னிடம் திராணியில்லை
     
    suryakala and stayblessed like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஒருவரது உயரம் நிறம் தோற்றம் அந்த ஒருத்தர் கையிலா இருக்கு? அதெல்லாம் பெற்றோர்கள் கிட்ட இருந்து குழந்தைகளுக்கு இயற்கையாக வருவது. எல்லாமே செதுக்கி வச்ச சிற்பம் போல சிறப்பா அமைந்தாலும் அதில ஒருத்தர் எப்படி கிரெடிட் எடுத்துக்க முடியும்?

    அதென்ன ரொமான்ஸ் நாவல்களில் பொதுவாக ஹீரோவை குறிப்பிடும் போது TDH - Tall, Dark and Handsome னு வருது? உயரம் கம்மியா இருந்து நிறமா இருந்து பழமா இருந்தா அட்ராக்ஷன் வராதா? பொண்ணோட உயரத்துக்கு தகுந்த உயரம் ஆணுக்கு போதாதா? நிறமா இருந்தா கன்னத்தில் நகத்தால் செல்லமாக கிறுக்கினால் குட்டி நிலவு போல எவ்ளோ எடுப்பா தெரியும்? :wink::wink: நிறமா இருக்கறவங்களுக்கு மீசை தூக்கலா தெரியாதா? பழமா இருந்தா பால் வடியும் முகம் பார்க்க எவ்ளோ அழகா இருக்கும்?

    ஆண் என்றால் கம்பீரமா /ஆளுமை நிறைந்தவனாக தான் இருக்கணுமா? ஒரு பொண்ணா யோசிச்சு பாருங்க - எப்படி பட்ட கணவன் அமைந்தால் மனைவி குடுத்து வைத்திருப்பாள் என்று சொல்வோம் - ஆளுமை நிறைந்தவனை யா? அல்லது கால்ல விழறவனையா? கணவனும் ஆளுமை நிறைந்தவனாக இருந்து மனைவியும் ஆளுமை நிறைந்து இருந்தா குடும்பம் என்கிற வண்டி எப்படி ஓடும்? ஆள் ஆளுக்கு மாத்தி மாத்தி அவங்க அவங்க பக்கம் இழுத்தா வண்டி சீரா எப்படி ஓடும்? ஆனா மாத்தி மாத்தி கால்ல விழுந்து பாருங்க வண்டி விழாம ஒரு வழியா ஓடிரும். :wink::wink:

    ஹீரோவை stereotype பண்ற கதைகளை இளம் வயதில் படிக்கும் பெண்களுக்கு தப்பு தப்பா மனதில் விதைகள் தூவப்படாதா? Knight in shining armor வேணுமா? உங்களுக்கு உங்களை காப்பாத்திக்க தெரிய வேணாமா?

    இப்படி பேசறது நால என்னை feminist னு நினைச்சுக்காதீங்க..ஆணின் பலமும் அறிவேன்..பெண்ணின் பலவீனங்களையும் ஒத்துக்கொள்வேன்.. ஏதோ படித்த சில ரொமான்ஸ் புத்தகங்கள் பற்றிய எனது பார்வையை கிறுக்கணும் னு தோணுச்சு..கிறுக்கியாச்சு..:grinning::grinning:
     
    suryakala and stayblessed like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அஞ்சறை பெட்டி தத்துவம்

    நாவலில் சொல்லப்பட்ட அஞ்சறை பெட்டி தத்துவம் என்னை வெகுவாக கவர்ந்தது.

    மனசு உணர்வுகளை அஞ்சறை பெட்டி மாதிரி அங்கங்கே போட்டுவிடுவது. கம்பார்ட்மெண்டல் சிஸ்டம். வேலை செய்யும்போது வேலையாம். விளையாடும்போது விளையாட்டாம்.

    சிவாவிற்கு குந்தவியிடம் மட்டும் இந்த அஞ்சறை பெட்டி தத்துவமெல்லாம் வேறாகி விடும். அதுதானே காதலுக்கு அழகு ? :wink::wink:

    *************************************************

    'அஞ்சறை பெட்டி தத்துவம்' படிப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும் இதை நடைமுறைப்படுத்துவது எல்லோருக்கும் அவ்ளோ சுலபம் அல்ல என்று நினைக்கிறேன். மைண்ட் கண்ட்ரோல் இதற்கு நிறைய தேவை. வேலை செய்யும்போது விளையாடினால் கவனம் சிதறி வேலையை ஒழுங்கா முடிக்க முடியாது. விளையாடும்போது வேலை பற்றிய சிந்தனை இருந்தால் ஒருமித்த மனதோடு விளையாட முடியாது. கடைசியில் ரெண்டையும் அனுபவிக்க முடியாமல் ரெண்டுங்கெட்டான மனநிலையில் இருக்க வைக்கும்.

    நான் இதை இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி பார்க்கிறேன். வாழ்க்கையில் எல்லாத்தையும் கம்பார்ட்மெண்டல்ல பிரிச்சு வச்சுக்கோங்க. அதில் முக்கியமான ஒன்றில்/சிலவற்றில் தோத்தாலும் வாழ்க்கையில் மொத்தமும் தோத்து விட்டோம் என்ற உணர்வு மட்டும் வரவே கூடாது. வாழ்வில் நிறைய விஷயங்கள் மீது காதல் வேண்டும். அப்போ தான் ஒரு காதல் தோத்தாலும் இன்னொரு காதல் வாழ வைக்கும். வாழ்வதற்கு உந்துதல் கொடுக்கும். வேலை மீது காதல் இருக்கலாம் குடும்பம் மீது இருக்கலாம் நட்பு வட்டம் மீது கவிதைகள் மீது பாடல்கள் மீது திரைப்படங்கள் மீது ஓவியங்கள் மீது கை பொருட்கள் செய்வது (handicraft) பொதுநல சேவை செய்வது படித்தவற்றை கற்றுக்கொடுப்பது உடல் நலத்தை பேணி காப்பது இயற்கையை ரசிப்பது புத்தகங்கள் படிப்பது என்று சில உதாரணங்களை சொல்லலாம். உங்களுக்கு எதெல்லாம் பிடித்து இருக்கிறதோ அதெல்லாம் பட்டியல் போட்டு பிடித்ததை செய்ய தினமும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி அதற்காக செலவிடுங்கள். புத்துணர்ச்சி கிடைக்கும்.

    குடும்பத்தில் பிரச்னை என்பதற்காக வேலையில் குடும்ப சிக்கலை நினைத்து வேலையில் கோட்டை விட்டு விட கூடாது. எந்த கசப்பான மனநிலையில் இருந்தாலும் பாடல்கள்/ இயற்கையை ரசிக்க தெரிந்தால்/உங்களுக்கு விருப்பமான வேறு ஏதாவது ரசிக்க தெரிந்தால் மனசு கொஞ்சமாவது லேசாகி விடும் என்று நான் நம்புகிறேன். அஞ்சறை பெட்டி மாதிரி அங்கங்கு உணர்வுகளை பிரித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு உணர்வோடு மற்றதை முடிந்த அளவிற்கு கலக்க வேண்டாம். இது எனக்கு வேலை செய்யுது. அதனால் பகிர்ந்து கொள்கிறேன்.

    *************************************************

    போஸ்ட் கொஞ்சம் சீரியஸ் ஆக இருந்தால் இந்த பாடல் கேட்டு குளுமை அடைந்து கொள்ளுங்கள்:

    YT - கொஞ்சி பேசிட வேணாம் - சேதுபதி
     
    Thyagarajan and suryakala like this.

Share This Page