1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    RC நாவல் சில படிக்க ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்த போது இதமாக தான் இருந்தது. ஆனால் எனது சிற்றறிவுக்கு எதுவுமே எட்டவுமில்லை/ஒட்டவுமில்லை. நான் தேர்வு செய்த/படித்த கதைகள் தவறானதா என்றும் தெரியவில்லை.

    'Template' வைத்து கதை எழுதியது போன்று இருந்தது. இருவருக்கும் மனம் ஒப்பாத திருமணம். ஒருத்தருக்கு விருப்பம் இருக்கும். இன்னொருத்தருக்கு விருப்பம் இருக்காது. இடையில்/கடைசியில் மனம் மாறி பேசி சுபமாக முடிப்பது.

    'ஒன் நைட் ஸ்டாண்ட்' இதை பற்றி நான் பேசியதே கிடையாது. சில கதையில் இதெல்லாம் சாதாரணமா வருது. சிலது லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் என்பதா பிஸிக்கல் மிஸ்டேக்ஸ் என்பதா என்றே தெரியல. நான் பின்தங்கி இருக்கிறேனோ என்னவோ? இதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை. பெண்கள் வீக் ஆக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேறு எழுத்தாளர் எழுதியதை தேடி பார்க்கிறேன். தேடல் தொடரும்..
     
    candidheart and suryakala like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Th #6: Positive Thinking

    நம்ம மைண்ட் ஓட ரிமோட் கண்ட்ரோல் நம்ம கிட்ட மட்டும் தான் இருக்கணும். நம்ம மைண்ட் நாம தான் பழக்கி வைக்கணும்.

    எல்லோருக்கும் எல்லாத்தையும் கடவுள் கொடுக்க மாட்டார். எதிலோ ஒரு பெரிய ஆப்பு வைத்து இருப்பார். நாம அந்த ஆப்பு மட்டுமே நினைத்து செத்து சுண்ணாம்பாகி நமக்கே நாம சாவு மணி அடித்து விட கூடாது.

    'Count your blessings' னு சொல்வாங்க. நாம எதிலெல்லாம் குடுத்து வச்சிருக்கோம் னு பார்ப்பது. இந்த நல்ல எண்ணம் மட்டும் போதாது. இன்னும் ஒரு படி மேல போக சொல்றேன். 'சீ சீ இந்த பழம் புளிக்கும்' கேள்வி பட்டு இருக்கீங்களா? இது ஒரு negative connotation. நான் இதுக்கு ஒரு 'positive spin' கொடுக்கறேன். நமக்கு கொடுத்து வைக்காத (அதாவது கடவுள் கொடுத்த ஆப்பு) விஷயத்தில் இருக்கும் நெகட்டீவ்ஸ் எல்லாம் ஒரு பட்டியல் போடுங்க. உதாரணம்: கல்யாணம் ஆகலையா? அதுக்காக வருத்தப்படுறீங்களா? கல்யாணத்தில் வரக்கூடிய பிரச்னைகள் எல்லாமே லிஸ்ட் பண்ணுங்க. என்ன பிரச்னைகள் லிஸ்ட் பண்றது னு தெரியல யா? IL la தேடி பார்த்துக்கோங்க. :wink::wink:அந்த லிஸ்ட் படிச்சு பாருங்க. கல்யாணத்துல இவ்ளோ இடியாப்ப சிக்கலா? நல்ல வேளை கல்யாணம் ஆகல னு சந்தோசப்படுவீங்க.

    இதென்ன நியாயம்? நீங்க மட்டும் கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இல்லையா னு கேக்கறீங்களா? இக்கரைக்கு அக்கரை பச்சை. அவங்க அவங்களுக்கு தான் அவங்க கஷ்டம் தெரியும். எல்லாம் பட்டா தான் தெரியுது. ஞானம் லேட்டா வந்திருக்கு :wink::wink:

    எனக்கு கடவுள் குடுத்து ஒரு mega size ஆப்புக்கு ஒரு super duper நெகடிவ் லிஸ்ட் இப்படி வச்சு இருக்கேன். அந்த லிஸ்ட் படிக்கும்போதெல்லாம் ஒரு வித சந்தோஷம் தரும். ஆப்பு பற்றிய கவலை பஞ்சாய் பறந்திடும். :grinning::grinning:

    YT - என்னடா பொல்லாத வாழ்க்கை - தப்பு தாளங்கள் - SPB

    இதுக்கு போய் அலட்டிக்கலாமா ?
     
    suryakala likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    நான் தேடிய ரொமான்டிக் நாவல் கைக்கு எட்டிய தூரத்தில் வந்து விட்டது என்று நினைக்கிறேன். ஒரு நாவல் படித்த மயக்கம் இன்னும் தீரவில்லை. :wink::wink:

    கவிஞர் தாமரையின் பாடல் வரிகள் எனக்கு வெகுவாக பிடிக்கும்.

    YT - என் வசீகரா - மின்னலே

    ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பேச்சை கேட்க ரொம்பவே பிடிக்கும்.

    YT - Motivational speech - JB

    எனது மரியாதைக்கு உரிய ஒரு குறிப்பிட்ட ஊரில் குடிக்கும் தண்ணீரில் மகிமை இருக்கு என்று சொன்னா நம்புவீர்களா? அந்த ஊர் தண்ணீரை பற்றி நான் எழுதும்போதே நாக்கில் இப்போ எச்சில் ஊறுகிறது.

    தாமரை அவர்களும் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களும் அந்த ஸ்பெஷல் தண்ணீரை குடித்து வளர்ந்தவர்கள். எனக்கு இப்போ பிடித்த அந்த ரொமான்டிக் நாவலை எழுதிய பெண் எழுத்தாளரும் அந்த ஸ்பெஷல் தண்ணீரை இன்றும் குடிக்க கொடுத்து வைத்தவர்.

    எழுத்தாளரை கண்டு பிடிப்பவர்களுக்கு அந்த மரியாதைக்கு உரிய ஊரில் புகழ் பெற்ற ஒரு இனிப்பு கடையில் இருந்து இனிப்பு வாங்கி பங்கு போட்டு கொள்ள எனக்கு மனசு வராது. அதனால் இனிப்பு படம் பரிசா இங்கு போடறேன். Any takers? :grinning::grinning:
     
    suryakala likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்னைக்கு படித்த நாவல் நேத்திக்கு படிச்சத விட சூப்பர் ரொமான்ஸ்.

    ரொமான்ஸ்னா நான் சும்மாவே Flight ஓட்டுவேன். அந்த எழுத்தாளர் Fuel போட்டுட்டே இருக்காங்க. தரையில் இறங்க முடியல. :wink::wink: விண்ணை தாண்டி பறக்க விட்ருவாங்க போல இருக்கு!! அந்த எழுத்தாளர் யார்/ அவரது எந்த புத்தகம் Feb 2021 Assignment க்கு நான் தேர்ந்து எடுக்கிறேன் என்பதை ஆங்கில புத்தாண்டு ஆரம்பிக்கும் முன் இங்கு பதிவிடுகிறேன். ரொமான்டிக் பூகம்பம் ஏற்படுத்தும் புத்தகம் இன்னும் ரிசர்ச் பண்ணிட்டு தான் இருக்கேன்.

    கவிஞர் தாமரை வடித்த கவிதையான ரொமான்டிக் பாடல்கள் போஸ்ட் பண்றேன். பாடல் வரிகள் மட்டுமல்ல படம் பிடித்து இருக்கும் விதமும் பாடி இருக்கும் விதமும் மனதை கொள்ளை கொண்டு போகும்.

    YT - ஒரு வெட்கம் வருதே - பசங்க
    YT - கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்
    YT - நான் போகிறேன் மேலே - நாணயம்
    YT - முன்தினம் பார்த்தேனே - வாரணம் ஆயிரம்
    YT - என்னை கொஞ்சம் மாற்றி - காக்க காக்க
     
    suryakala likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடத்தின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். யாருக்கெல்லாம் நன்றி சொல்ல ஆசைப்படுகிறீர்கள்? நான் நன்றி சொல்ல ஆசைப்பட்டவர்கள்:

    1:குடும்பம்
    நான் நானாக இருக்கும் தருணங்கள் எனக்கு பொக்கிஷமானவை. எந்தவித குறுக்கீடும் இல்லாமல் என்னை என் வழியிலே வாழ விட்ட/விடும் எனது குடும்பத்து நபர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    2: நண்பர்கள்
    கடைக்கு செல்லும்போதெல்லாம் எந்த பொருள் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி தந்த நண்பர்கள், வாழ்வின் சுய அலசலின் போது சில சந்தேகங்கள் வர மனம் விட்டு பேச வேண்டும் என்று சொன்னவுடனே வீடு தேடி வந்து மூன்று மணி நேரங்கள் என்னோடு பேசிய ஒரு நெருங்கிய நண்பர், லாக் டவுன் க்கு அப்புறம் வந்த பிறந்த நாள் அன்று நள்ளிரவு வீட்டிற்கு வந்து அவர்களது வீட்டில் தயாரித்த சாக்லேட் கேக் கொண்டு வந்து என்னை கட் பண்ண சொன்ன இரண்டு நண்பர்கள், அடிக்கடி போனில் பேசும் ஒரு நண்பர், WhatsApp ல தொடர்பில் இருக்கும் நண்பர்கள், இங்க போஸ்ட் போட்ட IL நண்பர்கள், என்னோட IL போஸ்டஸ் தவறாது படித்து லைக் கொடுக்கும் SK அவர்களுக்கு மிக்க நன்றி.

    3. அலுவலகத்து பாஸ்
    அலுவலகத்தில் மென்மேலும் உயர எனக்கு எல்லாவிதத்திலும் வழி காட்டும் பாஸ்.

    4. Indian ஸ்டார் உரிமையாளர்
    பர்சனல் போன் நம்பர் குடுத்து இருக்கிறார். எனக்கு வேண்டிய மளிகை சாமான்கள் லிஸ்ட் அனுப்பினால் எல்லாம் பேக் பண்ணி வைத்து இருப்பார். கடையின் முன்னால் காரை நிறுத்தி மெசேஜ் அனுப்பியவுடன் பொருட்களை அவராகவே car trunk ல வைத்து விடுவார். காரை விட்டு இறங்கும் அவசியமே இருக்காது. இந்த தீபாவளிக்கு கடவுள் உருவம் பதித்த ஒரு வெள்ளிக்காசு கொடுத்தார்.

    5. கடவுள்
    சொசைட்டி சொல்லும் Template வாழ்வு எனக்கு பொருந்தாது. இதற்கு ஏற்றார் போல சரியாக கணக்கு போட்டு சோதனைகள் கொடுத்து மீள்வதற்கு தக்க அறிவை கொடுத்ததிற்கு.

    முடிந்தவரைக்கும் எல்லோருக்கும் நன்றியை கோவிலுள்/நேரில்/ஆன் லைன் ல சொல்லி விட்டேன் :grinning::grinning:
     
    suryakala likes this.

Share This Page