1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Nindhaa Stuthi-mangalam Vs Amangalam

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, May 25, 2019.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    On reading the beautiful poem 'Mangalam' written by Shri Srinivasan, I am tempted to write this.
    The following is a poem by poet kaalmegam.A perfect example of Nindhaa Stuthi.

    தம்பியோ பெண் திருடி
    மாமனோ வெண் திருடு
    மாமாயன் மூத்த பிள்ளையாரே முடிச்சவிழ்த்தீர்
    போம் அய்யா
    கோத்திரத்த்ற்குள்ள குணம் .

    முருகன் வள்ளியை மணந்ததும்,கண்ணன் வெண்ணை திருடியதும் புராணத்தில் நாம் அறிந்ததே
    பிள்ளையார் எங்கே முடிச்சவிழ்த்தார் ?

    When Sage Vyasa started composing Mahabhratha,as per Brahma's command he requested
    Lord Vinayaka to write verses as and when he dictated.Ganesha agreed subject to the condition that his pen( a broken dantam)will be writing nonstop and if Vyasa does not cope up with that speed,he will stop in the middle.
    Vyasa agreed on condition that Ganesha should understand the implication of each and every word before he writes.Whenever Vyasa felt that he needed some time to think, he would compose a complicated phraseology so that Ganesha would take a little bit of time to assimilate and write resulting in time gain for Vyasa.
    Out of nearly 1,30,000 slokas, Vyasa has composed nearly 700 slokas needing some split up.
    One such verse is given under:

    நதீ ஜலம் கேசவ நாரி கேது:
    நகாஹ்வ யோனாம்ன நகாரி சூனு:
    ஏஷோங்க நாவேஷதர: கிரீடி
    ஜித்வா வய: நேஷ்ய தி சாத்ய காவ:
    மேலே உள்ள ஸ்லோகத்தை
    நதி ,நீர் ,கேசவ ,நாரி என்று பிரித்தால் ஒரு பொருளும் புரியாது .சரியானபடி முடிச்சை அவிழ்த்தால் தான்
    புரியும்.
    நதீஜ =கங்கையின்மைந்தனே
    லங்கேச =ராவணனின்
    வன அரி=வனத்தின் எதிரி
    கேது:=ஹனுமாரைக்
    கொடியாக உள்ள
    நகாவ்ய:=ஒரு மரத்தின்
    பெயர் உ டையவன்
    நக அரி சூனு:=மலையின் எதிரியான
    இந்திரனின்மகன்
    அனங்க வேஷ தர:= பேடி வேஷம் கொண்ட (அர்ஜுனன்)
    கிரீடி =மகுடம் தரித்தவன்
    வய;=நம்மை
    ஜித்வா =வென்று
    அத்ய =இப்போது
    காவ:=பசுக்களை
    நேஷ்யதி =ஓட்டிச் செல்வான் .
    (Drona says this to Bhishma in Virata parva ,as not to be heard or understood by Duryodhana,after recognising the lady as Arjuna in the company of prince Uttara)

    இப்படி அநேக முடிச்சுகளைப் பதம் பிரித்துப் பொருள் உணர்ந்ததால் "முடிச்சவிழ்த்த பிள்ளையார்"
    ஆனாரோ ?
    Whether Ganesha could not easily understand the meaning,or he pretended to do so,or whether the great Vyasa really needed time-we don't know.
    But out of their contest was born
    Mahabharata,the EPIC of the highest order.
    சாபமா? வாழ்த்தா?

    அந்த காலத்தில் அரசர்களைத் துதித்து பரிசில் பெற்ற புலவர்கள் உண்டு. பணம் கொடுக்காவிடில் நிந்தா ஸ்துதி பாடிய புலவர்களும் உண்டு. காளமேகப் புலவர் எழுதிய நிறைய பாடல்கள் நிந்தனை செய்வது போல் வாழ்த்தியதாக எழுதப் பட்டவை.எனது பாட்டி இது மாதிரி பேசுவதில் வல்லவள்.

    ஊரில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வாள்.மருத்துவ வசதி இல்லாத காலங்களில் பாட்டிதான் பிரசவ காலத்தில் மருத்துவம் பார்ப்பாள் .அவளை ஊர்ப் பாட்டி என்று தான் எல்லோரும் அழைப்பர்.கல்யாண தம்பதி அவளிடம் தான் முதல் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுவார்கள். அவளிடம் ஆசி பெற்றால் எல்லாம் சுபம் தான் என்ற ஆழ்ந்த நம்பிக்கை.

    திருமண தம்பதி காலில் விழுந்து நமஸ்காரம் செய்ததும் அவள் சத்தமாக இப்படித்தான் வாழ்த்துவாள்.

    " ஓலமிட,

    பொட்டு அழிய,

    பூ உதிர ,

    தாலி பெருக '


    இதைக் கேட்டாலே நாராசமாகத் தோன்றும். அதுவும் புது மண தம்பதியைப் பார்த்து இப்படியா வாழ்த்துவது?

    ஆயினும் இப்படி வாழ்த்தும் பாட்டியிடம் ஆசீர்வாதம் பெற யாரும் தயங்கவில்லை/

    இந்த கேள்வியைத் தான் என் அம்மாவிடம் நான் கேட்டேன்.இ ந்த பாட்டி என் அப்பாவின் அம்மா. என் அம்மாவின் தாய் வழிப் பாட்டி.

    என் அம்மா கொடுத்த விளக்கம்.


    ஓலம் இட ---இந்த பெண் பிரசவ வலி யால் துடிக்க வேண்டும்( சீக்கிரமே குழந்தை பாக்கியம் பெற வேண்டும்)

    பொட்டு அழிய ----சின்ன குழந்தைக்கு அம்மாவின் நெற்றியிலுள்ள பொட்டு தான் முதல் குறி .எப்போதுபார்த்தாலும் பொட்டை அழித்துக் கொண்டே இருக்கும்.அதுவும் sticker pottu என்றால் கேட்கவே வேண்டாம். அதை உரித்து எடுப்பதும் உடலில் கை, கால் எல்லா இடத்திலும் ஒட்ட வைத்து வேடிக்கை பார்க்கும்.( அதாவது சின்னக் குழந்தையுடன் அந்த பெண் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பாள் என்று பொருள்)

    பூ உதிர --- குழந்தை அம்மாவைச் சுற்றிச் சுற்றி தலைப் பின்னலி லுள்ள பூவைப் பிடித்து இழுத்து விளையாடும். பூ உதிரும்போது கை கொட்டி சிரிக்கும் .( குழந்தை தாயுடன் ஒட்டி உறவாடும் )


    கடைசி வாழ்த்து-- இது மிக மிக அமங்கலமாகவே தோன்றும்.ஆனால் இது தான் எல்லாப் பெண்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்று என் அம்மா சொல்வாள்.


    தாலி-பெருக --எனும் வார்த்தை "தாலி அறுந்து போதல் ' என்று தான் பொருள் படும். பாட்டியின் வாழ்த்துப் படி இதுஆண் குழந்தை பிறப்பதற்கான வாழ்த்தாம்.குழந்தை தன தாயின் மார்பிலிருந்து பால் பருகும் போ து அளவில்லா மகிழ்ச்சியுடன் உல்லாசமாகக் கை கால்களை ஆட்டிக் கொண்டே பால் குடிக்கும். குழந்தைக்குக் கைக்கு அடவாக இருப்பது அம்மாவின் கழுத்திலுள்ள தாலிக் கயிறு. அதைத் கை விரல்களால் வேகமாகப் பிடித்து இழுத்துக் கொண்டே பால் குடிக்கும்.சாதாரணமாக ஆண் குழந்தைகள் மிக வேகமாகத் தாலியைப் பிடித்து இழுக்கும் போது அது அறுந்து போய்க் கீழே விழும் வாய்ப்பு அதிகம். ஆண் குழந்தை, அதுவும் பலம் பொருந்திய( strong and healthy ) ஆண் குழந்தை பிறக்கும் என்றால் தாயின் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்?

    சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை 'என்ற ஆண் ஆதிக்க சமுதாயத்தை ஆதரிக்கும் பெண்களுக்கு இந்த ஆசி பெரும் பாகயமாகவே தோன்றியிருக்கலாம்.

    பாட்டி ஆசி பெற்ற 99% பெண்களுக்கு ஆசி பலித்திருக்கும் .

    தொட்டதெற்கெல்லாம் அபசகுனம், அச்சானியம் பார்த்த அந்த நாளில் பாட்டியின் ஆசியை ,உள் அர்த்தம் பார்த்துப் புரிந்து கொண்டு எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்பது புரியாத புதிர்தான்.

    பாட்டியின் ஆசியை ராசியாக மதித்தது ஆச்சரியம் தான்.


    ஜெயசாலா 42

    There was my grand oldma-She was called as the patti of the village. All couples after marriage would seek her blessings.


    Her blessings were of a different style altogether.
    She would say in Tamil
    " olam ida,pottu azhiya, poo uthira , thali peruga'



    Literally this means" Let there be laments,Let your tilakam get removed.

    Let your flowers scatter. and let your thali get cut off)


    What an inauspicious blessing for a newly wedded ones!.Still people would come to her eagerly longing to listen to this apparently inauspicious blessing. Because for 80 long years they had her blessings and their families prospered.
    Real meaning:-
    Olam ida_Let the girl cry out of delivery pangs.


    Pottu Azhiya:You will be blessed with a child soon. Children of seven or 8 months are crazy about removing the tilak on their mother's forehead.Not to talk of sticker tilakm which babies find interesting to remove.

    Similarly a child of two or three will go round his/her mother to pull the flowers from her plaits of hair.

    The last one which looks more inauspicious means:-You will have a healthy strong child. When the mother feeds the baby, the child is all happy and often holds the thali thread in its hands and go on pulling the same with much enthusiasm( almost all mothers would have experienced this) the grandma blesses that the child be so strong ,that as she suckles and pulls the thali with great force and strength the, there is a possibility of thali getting cut off.Normally it was believed male babies pull it with great force.So this is indicative of birth of a male child.

    The villagers were fond of her blessing and brought even their relatives .It was believed that my patti's blessings would necessarily bring in child birth at home.
    Even now I wonder how in those days dominated by bad sakuns ,people were desirous of seeking her blessings.Perhaps they had great faith in her rasi.
     
    Rajijb and Thyagarajan like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,718
    Likes Received:
    12,541
    Trophy Points:
    615
    Gender:
    Male
    I enjoyed reading the Tamil part and its English translation too
    2. double entendre in English literature examples from google:
    Double Entendre Examples
    3. I think kavinjer kannadasan too known for writing lyrics for party and cinema.
    Thanks & regards.
     

Share This Page