1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

விவசாயம் -வாழ்க்கை முறை

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Nov 6, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இது வரை விவசாயம் பற்றி நான்கு பகுதிகளாக பிரித்து எழுதினேன் .வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல் வீட்டில் இருந்து விதை நெல் கொண்டு போய் விதைத்து பின் நெல் மணிகளாய் வீட்டுக்கு எடுத்து வந்து விட்டோம் .ஒரு சாக்கு நெல் பல சாக்குகளாக வந்திருக்கிறது .இது இயற்கை அன்னையின் கொடை .

    கன்னிப் பெண்ணுக்கும் நாற்றுகன்றுகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு .பருவத்தே பயிர் செய் என்று ஒரு மூதுரை உண்டு .அந்தந்த பருவத்தில் பயிர் செய்தால் அமோக விளைச்சல் இருக்கும் .பட்டம் தவறினால் விட்டத்தை தான் பார்க்க முடியும் .அதாவது காலநிலை தவறி விவசாயம் செய்தால் அது பொய்த்து விடும் .பின் வேலை எதுவும் இல்லாமல் வீட்டு கூரையை தான் வெறித்து பார்க்க முடியும் .அது போல் ஒரு பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்ய வேண்டும் .அப்போது தான் அந்த பெண் எல்லா வளங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ முடியும் .இன்று பெண்களுக்கு திருமண வயது கடந்து போய் விடுகிறது .அவ்வாறு மணம் முடிக்கும் சமயத்தில் குழந்தைப் பேறும் தாமதம் ஆகிறது .இது யார் குற்றம் ?அந்த பெண்ணின் குற்றமா இல்லை இல்லை .காலத்தின் குற்றம் .இதை உணராத அறிவிலிகள் பெண்களை குற்றம் சொல்கிறார்கள் .இது மிகவும் வருத்தம் தரும் செயல் .பயிர் விளையவில்லை என்றால் அது நிலத்தின் குற்றம் அல்ல .பருவம் தவறி விதைத்ததே காரணம் .நாற்றை வளர்த்த இடத்தில் இருந்து வேறொரு இடத்தில் நடும் போது அதற்கு தேவையான நீர் ,ஊட்டசத்து கிடைத்தால் நன்கு செழிப்பாக வளரும் .அதே போல் பெண்களுக்கு புகுந்த வீட்டில் அன்பும் ஆதரவும் கிடைத்தால் அவள் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழச் செய்வாள் .ஆனந்தம் நிறைந்திருந்தால் அனைத்து செல்வங்களும் நிறைந்திருக்கும் .

    அடுத்து பண்டமாற்று முறை :
    முந்தைய பதிவில் களத்துமேடு பற்றி சொல்லி இருந்தேன் .அங்கே தான் கதிரில் இருந்து நெல்மணிகளை பிரித்து எடுப்பார்கள் .அந்த களத்து மேட்டில் சிறு சிறு கடைகளும் இருக்கும் .அங்கே வறுத்த நிலக்கடலை,சுண்டல் மற்றும் வேக வைத்த பனங்கிழங்கு சீனிகிழங்கு விற்பார்கள் .எங்கள் ஊரில் சீனி கிழங்கு என்று சொல்வோம் .அதாவது சர்க்கரை வள்ளி கிழங்கு அல்லது ஆங்கிலத்தில் ஸ்வீட் பொட்டடோ என்று இருக்கலாம் .குவித்து வைத்திருக்கும் நெல்லில் இருந்து கொஞ்சம் நெல் எடுத்து போய் கடையில் கொடுத்து நமக்கு வேண்டியதை வாங்கி கொள்ளாலாம் .இங்கு பணம் செல்லுபடியாகது .நெல்லுக்கு தான் மதிப்பு .நெல்லை கொடுத்து உணவுபொருட்களை வாங்கி கொள்ளும் பண்டமாற்று முறை .எப்பேர்பட்ட முறை .போற்றத்தக்க முறை .

    [​IMG]


    upload_2017-11-6_9-48-21.jpeg
    [​IMG]
     
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    களத்துமேட்டில் வைக்கோல் மேல் உட்கார்ந்து இவற்றை சாப்பிடும் போது கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே அதை வார்த்தைகளில் வடிக்க இயலாது .அனுபவிக்கும் போது தான் அந்த சுகம் தெரியும் .
     
    kaniths, sarajara and PavithraS like this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அருமையான ஒப்பீடு ! எத்துணை உண்மை என்பது பலருக்குப் புரிவதேயில்லை. நன்மையைக் கருதி இவ்வாறு சொன்னால் இப்போதுள்ள கால கட்டத்தில் வம்பாகிவிடுகின்றதே !

    நாவில் நீர் ஊற வைக்கும் வரிகளும்,படங்களும் !
    நிலக்கடலை,வேர்க்கடலை என்று குறிக்கப்பெறும் இந்தக் கடலையை எங்கள் ஊர்ப்பக்கங்களில் 'மல்லாட்டை' என்போம். பலருக்குத் தெரியாது. திருமணமான புதிதில்,என் கணவருக்கே அது பழக்கமில்லாத வார்த்தையாக இருந்தது. 'மணிலா கொட்டை' என்ற பெயர் மருவி இப்படியாகியிருக்கக் கூடும். பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவிலிருந்து வந்தப் பயிராதலால் காரணப் பெயர். பனங்கிழங்கு எனக்கு மிகவும் பிடித்த உணவுப்பண்டம். நானும் என் தோழியும்,பொங்கல் சமயத்தில் அவளுடைய கிராமத்திற்குச் சென்றுவிடுவோம். காலை முதல் மாலை வரை கிராமத்தினரின் பாரம்பரியமிக்கப் பண்டிகைக் கொண்டாட்டங்கள், விளையாட்டுகள் , ரேக்ளா வண்டி,கும்மி என்று மகிழ்ச்சியாகப் பொழுது போக்குவோம். வயல்காட்டிற்குச் சென்று அங்கே விற்பனை செய்யப்படும் எளிய உணவு வகைகளை உண்டு, வாய்க்கால் வரப்பில் ஆனந்தமாக சுற்றித் திரிவோம்.மரக்கிளையில் ஊஞ்சல் ஆடுவோம். ஓ ! என்ன ஓர் சுகமான அனுபவங்கள் !

    இந்த சுகங்களை எதிர்வரும் காலத்தில்,ஏன் இப்போதே கூட பல குழந்தைகள் இழந்து வருவதைக் காண வேதனையாக உள்ளது. தெருவில் இறங்கி விளையாடக் கூட வழியில்லாத வாழ்க்கையே பலருக்கும் வாய்த்திருக்கிறது. இதிலெங்கே,கிராமம்,வயக்காட்டு விளையாட்டுகள் பற்றிப் பேசுவது ? பிள்ளைப் பருவமென்னும் நினைவுச் சாலையில் பயணிக்கச் செய்யும் உங்கள் பதிவிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது பெரியம்மா !
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா நீங்கள் நன்கு ரசித்து படித்திருக்கிரீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் .மிக்க நன்றி மா
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @sarajara நீண்ட நாட்கள் கழித்து தங்களை இங்கு பார்க்கிறேன் .என் பதிவுக்கு விருப்பம் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
     
    sarajara likes this.
  6. sarajara

    sarajara Gold IL'ite

    Messages:
    890
    Likes Received:
    429
    Trophy Points:
    145
    Gender:
    Female
    Dear Periamma,

    Nijamagave neenga periamma than!

    Azhindhu/ azhikkapattu varum vivasayam endra unnadha thozhilai, vaazhkai murai pattri vivaramai ezhudhi varugindreergal. Ennai pondra vivasaya pinbulathil pirandhu, vivasyathai vittu veru naaatrangalil nadavagi pirndha mannin nilamaiyai ninaithu engubavargalukku arumarundhu ungal padhivugal!
     
    periamma likes this.
  7. sarajara

    sarajara Gold IL'ite

    Messages:
    890
    Likes Received:
    429
    Trophy Points:
    145
    Gender:
    Female
    aamam. :) paniyil irundha podhu idhu pola padhivida niraya neram irundhadhu. paniyai viduthu naangu varudangalagindrana.. veetuppani mudivadhillai! ippodhu oru oayvu kidaithirukiradhu.. manam vizhithukkondadhu :)
     
    periamma likes this.
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @sarajara சவிதா என்ன ஒரு அருமையான பின்னூட்டம் .தங்களை போன்றோருக்கு என் பதிவு பிடித்திருக்கிறது என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி .விவசாயத்தை உள்வாங்கி பிரதிபலித்திருப்பது அழகு
     
    kaniths and sarajara like this.
  9. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    பெண்ணையும் நாற்றுக்களயும் மிக எளிமையாக,அழகாக ஒப்பிடதற்க்கு பாராட்டுக்கள் ருக்மணி. பனங்கிழங்கு,சர்க்கரைவள்ளிக்கிழங்கை பார்க்கும் போது பள்ளி நாட்களில் கூறுகட்டி விற்ற பனங்கிழங்கு,கொடுக்காய்புளி, இலந்தைப்பழம் போன்றவற்றை வாங்கி சாப்பிடது ஞாபகத்திற்க்கு வருகிறது.
     
    periamma likes this.
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu உஷா ஆமா மா .முற்றிலும் உண்மை .பள்ளி நாட்களில் மதிய உணவு இடைவேளையில் இவற்றை வாங்கி சாப்பிடுவோம் .என்னே ஒரு சுவையான சத்தான நொறுக்குதீனி :blush:
     
    kaniths likes this.

Share This Page