1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கனவில் கவிதையாய் ...

Discussion in 'Regional Poetry' started by jskls, Sep 26, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கனவில் கவிதையாய் ...

    கதிரவன் அஸ்தமிக்கும்
    அந்தி வேளையில்
    கீழ்வானம் தங்கத்தில்
    அழகாய் ஜொலிக்க
    கடற்காற்று மெல்ல
    முகத்தில் வீச
    அலைகளில் நனையாது
    தொடுவானை ரசித்தபடி
    அவர் கரம் பற்றி
    மெதுவாய்
    மணலில் கால் பதித்து
    கடற்கரையில் நடக்க
    மனதில் அத்தருணம்
    மகிழ்ச்சியும் நிறைவும்
    பூரிக்க
    கீழே கொட்டி கிடந்த
    கிளிஞ்சல்ளை கையில்
    அள்ள எத்தனிக்கையில்
    கிளிஞ்சல்கள் மறைய
    கதிரவன் ஒளிமங்க
    இரவில் நிலவை மட்டுமின்றி
    உடனிருந்தவரையும் தேட
    கடலும் மறைந்து
    காற்றும் கரைந்து
    வியர்த்து நின்றாள்
    கனவில் தனியாக ....

    உலக கனவு தினமாம் இன்று
    கனவில் கவிதையாய்
    வந்தாய் நன்று ....
    கனவில் உன்னை
    கண்டது நிஜம்
    கடற்கரையில்
    உலவியது நிஜம்
    உன் குரல் காதில்
    ஒலித்தது நிஜம்
    கண்விழித்தபொழுது
    கனவு மட்டுமே நிஜம் !
     
    Last edited: Sep 26, 2017
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    என்னருமைத் தோழி ! இந்தக் கனவுகள் உங்களை விடுவதாயில்லை போலும் ! ஆயினும் உங்கள் கனவுலகத்தில் எங்களுக்கும் இடம் தரும் வகையில், கவிதைகளைக் கொண்டு தரும் கனவுகளை நாங்கள் எப்படி வைவது ?! கனவுகளுக்கென்று ஓர் தினம் அனுசரிக்கப்படுகின்றதா ? புதிய செய்தி ! நன்றி !
     
    GoogleGlass, periamma and jskls like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    தேவாரம்:

    என் கடன் பனி செய்து கிடப்பதே

    (jskls) கனவோரம்:

    என் கடன் கனவு கண்டு வாழ்வதே :)
     
    periamma, jskls and PavithraS like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி ஒரு கனவு தேவதை ..அவள் காணும் கனவுகளோ தேவலோகத்தையே அசைத்து விடும் .உங்கள் கவிதை கடலோரம் உலவி விட்டு வந்த உணர்வை தந்தது
     
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கனவுகள் இல்லையேல் நானில்லை. World deeam day காக கனவும் கற்பனையும் கலந்தது. நன்றி பவித்ரா
     
    PavithraS and kaniths like this.
  6. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நன்றி !
    கனவுகளே என் வரம் :)
     
    Last edited: Sep 28, 2017
    kaniths likes this.
  7. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    என் தந்தை போலவே சொல்கிறீர்கள் பெரியம்மா. நன்றி மா.
     
    Last edited: Sep 28, 2017
    kaniths likes this.
  8. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    அழகான கவிதை
     

Share This Page