1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அவளின்றி உலகேது ?

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 25, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    ஓய்வு எடுத்துக் கொள்வது அம்மாக்கள் அறியாதது !
    சாய்ந்து வீழும் வரை சக்கரமாய்ச் சுழல்வார்கள் !
    தேய்பிறை ஆனாலும் அன்பின் ஒளி பொழிவார்கள் !
    காய்ந்து போகும் வரை நமக்கிறைஞ்சி அழுவார்கள் !
    வாய்ச்சுவை அழிந்து, சேய்ச்சுவைக் கைசேர்ந்துப்,
    பாய்ந்து மார்முட்டிப் பாலைக் குடித்த பிள்ளைப்
    பேய் என்று வைதாலும் பேரன்பைத் தருவார்கள் !
    சீய் என்று வதைத்தாலும் பசிக்குச் சோறிடுவார்கள் !
    வேய்ந்த உறவுக்கூரை நிழலென்றும் குறைக்காமல்,
    தோய்ந்த அன்புருவாய்த் தன்னலமில் தகைமையுடன்,
    தாய் என்றவுறவு மட்டும் மண்ணுலகில் இல்லையெனில்,
    நாய்ப் பிறவியும் கிடையாது, அவளின்றி உலகேது ?

    Regards,

    Pavithra
     
  2. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    super super

    apdiyae yenga chinnammaakku onnu yeduththu vidunga
    romba famous aayiduveenga pavithra :):):)
     
  3. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தாய் என்றவுறவு மட்டும் மண்ணுலகில் இல்லையெனில்,
    நாய்ப் பிறவியும் கிடையாது, அவளின்றி உலகேது ?
    :clap2::clap2:
     
    periamma, PavithraS and jskls like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Pavithra தாயை பற்றி மிக மிக உயர்வாக இயற்றி விட்டீர்கள் ... excellent
     
    periamma and PavithraS like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ங்கா என்று முதலில் பேச கற்று கொடுத்த ஆசான் அல்லவோ அன்னை .என்றும் உயர்வான உறவு அன்னை எனும் உறவு .பவித்ரா உயர்வான கவிதை
     
    PavithraS and jskls like this.
  6. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you GG !
    Thanks, Deepthi :)
    நன்றி லக்ஷ்மி !
    சரியாகச் சொன்னீர்கள் பெரியம்மா !
    உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி !
     
    jskls and GoogleGlass like this.
  7. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Well done,pavithra!
    Jayasala 42
     
  8. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Pavithra azha vechittinga. Unga kavidhai padithuvittu en thayidam pesinen.
     
  9. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Lol
     
    GoogleGlass likes this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Thank you for the appreciation, Madam !
    உங்களது உணர்வுபூர்வமான இரசனைக்கும் பாராட்டிற்கும் நன்றி ! இக்கவிதையின் உந்துதலால் உங்கள் அம்மாவோடு பேசியதைப் பற்றி மகிழ்ச்சி ! As per your virtual name, stay blessed !
     
    stayblessed likes this.

Share This Page