சிறிய சிறிய வேலைகளாக நிறைய இருக்கின்றன . "எதை முதலில் செய்வது என்று தெரியவில்லை ", என்று ஒரு சாக்குச் சொல்லிக்கொண்டு ஒரு வேலையையும் எடுக்காமல் இருக்கிறீர்களா ? இட்லியோ தோசையோ ," எங்கிருந்து சாப்பிட ஆரம்பிப்பது என்று தெரியவில்லை ", என்று சாப்பிடாமல் இருந்துவிடுகிறோமா , அல்லது அம்மாதான் starting line கோடு போட்டுக் கொடுக்கிறார்களா ? அதே மாதிரி ஏதோ ஒரு வேலையை எடுத்துக் கொண்டு ஆரம்பித்து , எல்லா வேலைகளையும் கட கட என்று முடித்தால் , வேலைகளும் முடியும் , நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகமாகும் .