1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Sakthi inraya update padichchaachu .Appuram ean intha Paarthi ippadi kaduvanpoonaiya irukkan .
     
    sreeram likes this.
  2. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 10

    காலை உணவிற்கு பின் டாக்டர் வந்து பரிசோதித்து அவளது தையலை அன்றே பிரிக்கலாம் என்று கூறினார். அதன் படி அன்றே தையல் பிரிக்கப்பட்டது.

    அவளைப் பார்த்த அபி, "அம்மா. இனி கீழ வில்கூடாது. பாரு பெய்ய காயம்"

    அவனைப் பார்த்து புன்னகைத்த மதி, "இனி விழவே மாட்டேன் செல்லம்" என்றாள்.

    "ஓகே Mr. பார்த்திபன். எவரிதிங் ஓகே. பட் அதுக்குள்ள தலைக்கு தண்ணி ஊத்தனுமா?"

    "இல்ல மேடம். ஒரு மாதிரி இருந்துச்சு. அதான்"

    "நல்ல வேல, பிராப்ளம் ஆகல"

    "Mr. பார்த்திபன், இன்னும் ஒரு ஓன் வீக் தலைக்கு ஊத்தாம பார்த்துக்கோங்க"

    "ஓகே டாக்டர்." என்றவன் சந்தேகங்களைக் கேட்டுகொண்டே அவரை கீழே அழைத்துச் சென்றான்.

    அபி அவளது நெற்றியை தொட்டு பார்த்து, "வலிக்கா?"

    "ம்ம்"

    "நா முத்தா தந்தா சயாடும்" என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

    அவளும் பதிலுக்கு அவனுக்கு முத்தமிட்டாள்.

    இருவரையும் பார்த்துக்கொண்டே பார்த்திபன் வெளியே நின்று விட்டான்.

    மதி முன் தினம் காலை நடந்ததை நினைத்து பார்த்தாள்.

    காலை எழுந்த அபி, முதலில் பார்த்தது அவளைத்தான். அவள் தலையில் இருந்த பிளாஸ்டரைப் பார்த்தவன், "அம்மா என்னாச்சு?"

    "அம்மா கீழே விழுந்துட்டேன் செல்லம்"

    "எப்பி?"

    "வேகமா ஓடினேனா விழுந்துட்டேன்"

    "வலிக்கா?"

    "ம்ம். நீ முத்தா தந்தா சரியாய்டும்" என்க அவன் உடனே அவளுக்கு முத்தமிட்டான். பின்பு தான் அருகில் இருந்த பார்த்திபனைப் பார்த்தான். "ஐ அப்பா!"

    "சரி சரி. நீ அப்பாவ எழுப்பு. நான் போயி பாட்டிய பார்க்கிறேன்" என்று அவள் நகர்ந்தாள்.

    அதை நினைவு கூர்ந்த மதி, "நேத்து அம்மா சொன்னத என் பட்டு நியாபகம் வைச்சு இருக்கே. குட் பாய்" என்று அவனைக் கொஞ்ச ஆரம்பித்தாள்.

    அவளைப் பார்த்தவன் மீண்டும் கீழே இறங்கினான். மதியின் மாத்திரைகள் அடங்கிய பார்சல் ராமசாமி கொண்டு வந்து தந்தார். அலுவல் வேலைகள் சிலவற்றை முடித்து விட்டு அதை எடுத்துக்கொண்டு மேலே செல்ல, அபி தூங்கிக்கொண்டு இருந்தான்.

    மதி அவனது படுக்கையை சுற்றி தலையணை வைத்து படுக்கையை சரி செய்து கொண்டு இருந்தாள்.

    உள்ளே வந்தவன், குழந்தை உறங்குவதைப் பார்த்துவிட்டு, "ஒரு நிமிஷம் வெளிய வா" என்றவன் அவர்களது படுக்கையில் வந்து அமர்ந்தான்.

    அவன் அழைத்ததில் பயந்து பயந்து வெளியே சென்றாள்.

    "இங்க உட்கார்"

    அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.

    "இந்தா. பத்திரமா எடுத்து வை. தம்பி கீது எடுத்துட போறான்"

    அவனிடம் இருந்து வாங்கியவள் எழ போக, "இன்னும் நான் முடிக்கல"

    அவள் மீண்டும் அமர்ந்தாள்.

    "உன்ன பார்த்த அன்னிக்கே உன்ன கொல்லற அளவுக்கு எனக்கு வெறி வந்துச்சு. உன்ன நான் தேடாத இடம் இல்ல. அதான் அன்னிக்கு உன்ன விட்டுட்டேன். உன்கிட்ட அந்த சின்னத்துரை வம்பு பண்றது தெரிஞ்சு அங்க வந்தேன். என்ன நீ பார்த்தும் பார்க்காத மாறி என்கிட்டே இருந்து தப்பிச்சு போற நினைப்புல நீ போனதும் எனக்கு தெரியும். உன்ன வீட்டுக்கு வர வைக்க நான் பிளான் போட்டா, நீ ஊற விட்டு போக கிளம்பிட்ட. உன்ன வெளிய விடாம இருக்க அங்க ஆள் ஏற்பாடு பண்ணி இருந்தேன். பட் நானும் கிளம்பி வரப்ப தான் நீ வந்து விழுந்த. அதுக்கு காரணமான அந்த நாய் என்ன ஆச்சுனு தெரியுமா? மண்டை உடைஞ்சு படுத்துருக்கான். இல்ல இல்ல உடைச்சு படுக்க வைச்சுட்டேன்"

    அவனது பதிலில் அதிர்ந்தவள் மெல்ல அவனைப் பார்க்க, "இது அவனுக்கு நீ என் பொண்டாட்டின்னு தெரியாது இல்லையா. அதான். அதுவே தெரிஞ்சு இருந்தா உயிர் இருக்கும். பட் வலிய தவிர வேற எதுவும் தெரியாது." என்று கூறியவன் மெல்ல எழுந்து உடை மாற்ற சென்றான்.

    அவன் பேச்சில் அதிர்ந்து இருந்த மதி, சில நிமிடங்கள் செய்வது அறியாது இருந்தவள், அவனது அழைப்பில் தான் உயிர்பெற்றாள்.

    "என்ன கனவா?"

    இல்லை என்று தலையசைத்தாள்.

    "சரி பெர்ஸ்ட் மாத்திரையை எடுத்து வைச்சுட்டு வா"

    எழுந்து சென்று அந்த பையில் இருந்த மாத்திரைகளை சரி பார்த்து எடுத்து வைத்தவள், ஒரு அட்டையை எடுத்ததும் அதிர்ச்சியில் திரும்பி அவனைப் பார்த்தாள்.

    அதுவரை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தவன், "என்ன?" என்றான்.

    கோபமாக அவனிடம் விரைந்தவள், "என்ன இது?" என்றாள்.

    "ஏன் தெரியலையா?"

    "தெரிஞ்சதால தான் கேட்கிறேன். என்ன இது?"

    "இப்போதைக்கு எனக்கு பொண்ணு வேண்டாம்னு அர்த்தம்"

    அதை அவன் மீது கோபமாக விட்டெரிந்தவள், "கனவு காணதிங்க" என்று வேகமாக அவள் உள்ளே செல்ல முயல, அவளை இழுத்து நிறுத்தியவன்,

    "என்னடி, பயம் விட்டு போச்சோ? 3 வருஷம் பிரிஞ்சு இருந்த தைரியமோ? சின்ன பொண்ணு, சொன்னா கேட்டுப்பன்னு பார்த்தா துள்ளற" என்றவன் கைத்தடம் அவள் தோளில் மேலும் அழுந்த, அவள் வலியில் துடித்தாள்.

    "இப்ப சொல்றேன் கேட்டுக்கோ. என் பேச்ச கேட்டு ஒழுங்கா நடந்தா, என்ன மனுசனா பார்க்கலாம். இல்லைனா நான் மிருகமா தான் தெரிவேன்" என்றவன் அவளை கட்டிலில் தள்ளினான்.

    விழுந்தவள் அழுதுகொண்டே படுத்துவிட்டாள்.

    "சாயந்திரம் கிளம்பு. கோவிலுக்கு போகணும். புடைவைல வர்ற" என்றவன் அபியிடம் சென்று உறங்கினான்.

    மாலை கோவிலுக்கு கிளம்பாமல், அமர்ந்து இருந்தவளை பார்த்தவன், அவள் அருகில் வந்து, "கோவிலுக்கு கிளம்ப சொன்னதா நியாபகம்"

    அவளுக்கு பயத்தில் உடல் நடுங்கினாலும், பதிலேதும் பேசாமல் அமர்ந்து இருந்தாள்.

    அவளது கையை பிடித்து எழுப்பியவன், இப்ப கிளம்பல, நான் கிளப்ப வேண்டி வரும். வசதி எப்படி?"

    அவள் உடல் வெகுவாக அதிர்ந்தது.

    மெல்ல அவன் பிடியில் இருந்து நகர்ந்து கோவிலுக்கு கிளம்பினாள்.

    மூவரும் கோவிலில் பிரியா மற்றும் ராதியை பார்த்தனர். அவர்கள் பார்வையைத் தவிர்த்தவள் பார்த்திபனின் பின்னாலேயே அலைந்தாள்.

    ஊர் மக்கள் அவர்களை வணங்க, பார்த்திபன் பதிலளித்துக்கொண்டே வந்தான்.

    அவர்கள் குல தெய்வ கோவிலில் அன்று சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மூவரும் காருக்கு வர, பிரியா மதியிடம் வந்தாள்.

    அவள் வந்ததும் மதி மெல்ல பார்த்திபனை பார்க்க, அவன் பார்வை அவளுக்கு அச்சத்தை விதைக்க, "சொல்லுங்க பிரியா?"

    அவளது கேள்வியில் அதிர்ந்த பிரியா, சற்றே நிதானித்து, "உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்"

    "என்ன விஷயம்?"

    "நீங்க சடனா உங்க வேலைய விட போறீங்க, சோ உங்க பார்ட்ல எங்களுக்கு டௌட் வரும். எனக்கு ஏற்கனவே தெரியும் நீங்க எமெர்ஜென்சி காரணமா சில பிரசீஜர் எங்கையாவது ஸ்டோர் பண்ணி இருப்பிங்கன்னு. அதான்"


    அவளது பதிலில் உடனே சுதாரித்த மதி, "புல் டீடைல்ஸ் ஒரு CD ல காப்பி பண்ணி சரதாம்மாட்ட தந்து இருக்கேன். யாரையாவது அனுப்பி வாங்கிக்கோங்க" என்றவள் கிளம்ப முயற்சித்தாள்.

    மூவரும் வீட்டை அடைந்தனர். மதி மேலே செல்ல, அபியும், பார்த்திபனும் கீழே தோட்டத்தில் விளையாட சென்றனர்.

    இரவு அவனுக்கு இட்லி எடுத்துகொண்டு மதி இருவரையும் தேட, இருவரும் தோட்டத்தில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக்கொண்டு இருந்தனர்.

    அவர்களை நோக்கி அவள் வருவதை பார்த்த பார்த்திபன், ஆடுவதை நிறுத்த, அவள் அபிக்கு மறுபுறம் அமர்ந்து கதை சொல்லிக்கொண்டே ஊட்ட ஆரம்பித்தாள்.

    அவனுக்கு ஊட்டி முடிக்கும் வரை, பார்த்திபன் மறந்தும் கண்களை அவள் மீது இருந்து திருப்பவில்லை.

    ஒரு வழியாக அவனுக்கு ஊட்டி முடித்து, எழுந்தவள், அவனைப் பார்த்து, "வாங்க சாப்பிடலாம்" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள்.

    அவளது அழைப்பில் மனம் குளிர்ந்த பார்த்திபன் அபியை தூக்கிக்கொண்டு அவள் பின்னே சென்றான்.

    இரவு உணவு அருந்தி அவன் அலுவல் அறைக்குள் நுழைய, மதி அபியுடன் உறங்கச் சென்றாள்.

    வெகு நேரத்திற்கு பின் அறைக்கு வந்தவன், மனைவியும் மகனும் உறங்குவதைப் பார்த்தான்.

    மெல்ல வந்து மகனை கொஞ்சியவன், மதியை எழுப்பினான்.

    "மதி... மதி..."

    மெல்ல கண்களைத் திறந்து பார்த்தவள் அவனை அருகில் கண்டு விதிர்த்து எழுந்தாள். அவளைப் பார்த்து புன்னகைத்தவன், "வா கொஞ்சநேரம் பால்கனில நிற்கலாம்"

    "இல்ல. எனக்கு தூக்கம் வருது. நீங்க போங்க" என்றவள் படுக்க முயல, அவளை அள்ளியெடுத்தவன் அவனது அறைக்குள் நுழைந்தான்.

    அவனிடம் இருந்து திமிறியவளை, மெல்ல கட்டிலில் இறக்கிவிட்டவன், விளக்கை அணைக்கச் சென்றான்.

    அவள் வேகமாக எழுந்து வெளியேற முயல, அவளைத் தடுத்தவன், அவளை அணைத்தவாறே உறங்க ஆரம்பித்தான்.

    கண்களில் நீர் வழிய மதி உறங்கமால் படுத்து இருந்தாள்.

    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
    Caide, IniyaaSri, Deepu04 and 3 others like this.
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    அம்மாடியோ.... பார்த்திபன் செம்ம terror party போல... மதியை நினைத்தால் ரொம்ப பாவமா இருக்கு.

    நீங்க எழுதற விதம் ரொம்ப அருமையா இருக்கு சக்தி. வாழ்த்துக்கள்.
     
    IniyaaSri and Sivasakthigopi like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ப்ரியா அங்க உள்ள கூட்டத்தை இங்க கூட்டிட்டு வாங்க .எல்லாரும் பார்த்திபனை கதற கதற அடிச்சுருவாங்க .
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சக்தி கதை ரொம்ப விறுவிறுப்பா இருக்கு .கொஞ்சம் முன்கதை சுருக்கம் குடுங்களேன் .
     
    Sivasakthigopi likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சக்தி கதை ரொம்ப விறுவிறுப்பா இருக்கு .கொஞ்சம் முன்கதை சுருக்கம் குடுங்களேன் .
     
    Sivasakthigopi likes this.
  7. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Sakthi super.waiting for the next part

     
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    :lol::lol::lol::lol: :roflmao:
    கூட்டிட்டு வந்துட்டா போச்சு....

    @Mahavid, @meerasrini, @Rith, @Miracle1000, @IniyaaSri, @Deepu04, @inboxsweetee,
    Gals.... bring all your tamil reading friends in IL here... Let them also enjoy reading Sakthi's wonderful writing. Have tagged those people whom i know that they can read tamil.
     
    Sivasakthigopi, Deepu04 and IniyaaSri like this.
  9. IniyaaSri

    IniyaaSri IL Hall of Fame

    Messages:
    3,711
    Likes Received:
    5,476
    Trophy Points:
    415
    Gender:
    Female
    Wow!!! Pri darling!!! Thanks!!
    I think this will be my first ever tamizh story (to read :wink:)!!!! :thumbup:
    Going to enjoy this like anything!!!
    Happy that you tagged me here!!! :cheer::cheer::cheer:
    Btw எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கம் :blush::blush::blush:
     
    Sivasakthigopi and sreeram like this.
  10. meerasrini

    meerasrini Platinum IL'ite

    Messages:
    1,522
    Likes Received:
    1,360
    Trophy Points:
    283
    Gender:
    Female
    :tearsofjoy::tearsofjoy::tearsofjoy::tearsofjoy: hahha amma :) Dho vandhutom :) :)
     
    Sivasakthigopi, sreeram and IniyaaSri like this.

Share This Page