1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தாய் மொழி !

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Apr 6, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இங்கே தான் நாம் நம்மை அறியாமல் தவறு செய்கிறோம் லக்ஷ்மி, நான் மேலே முதலில் போட்டிருப்பதை பாருங்கள்............தமிழ் பேசினால் அவமானம் என்று நினைப்பவர்கள் நிறைய பேர் ஆகிவிட்டார்கள்.......வெள்ளைக்காரர்கள் எப்பவோ போய்விட்டார்கள், ஆனால் மழைவிட்டும் தூவானம் விடலை என்பது போல அவர்களின் தாக்கம் இன்னும் நம்மிடம் .குறிப்பாக தமிழர்களிடம்.........வேரோடி இருக்கு...........:angry:.....வேறு என்ன சொல்ல?
     
    jskls likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    குங்குமத்தில் வெளி வந்த கதை இது...படியுங்களேன் ! :)

    பேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது
    அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி,
    அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை
    அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர்
    தட்சிணாமூர்த்தி.

    தன் பேரனிடம் மட்டுமல்ல… அவன் ஈடு
    பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி,
    சிரித்து கலகலவென்று இருக்கும்
    தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ‘‘தாத்தான்னா
    இப்படித்தான் இருக்கணும்’’ என்பார்கள்
    எல்லோரும்!

    சமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க
    முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும்
    மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென
    மூச்சுப் பேச்சில்லாமல் படுக்கையில் விழுந்தவர்,
    அப்படியே முடிந்து போனார்.

    ரமணா அப்போது வீட்டில் இல்லை. அவனிடம்
    தாத்தாவின் மறைவுச் செய்தியைச் சொல்ல,
    ஊர்ப் பெரியவர் கணேசன் பழசை எல்லாம்
    நினைத்துப் பார்த்துக்கொண்டே ரமணாவைத் தேடி
    பிள்ளையார் கோயிலுக்கு வந்தார்.

    இளைஞர்கள் தனித்தனியே ஆளுக்கொரு செல்லை
    தடவித் தடவிப் பார்த்து, அதன் திரையில் மூழ்கியபடி
    அமைதியாக இருந்தார்கள். அவர் வந்ததைக்கூட
    யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

    ‘‘ரமணா…’’
    ‘‘ஊம்… ஊம்…’’
    ‘‘தாத்தா…’’
    ‘‘ஊம்… ஊம்…’’
    ‘‘தாத்தா…’’
    ‘‘ஊம்… ஊம்…’’
    கணேசன் ஒரு முடிவுக்கு வந்தவராக தன்
    செல்போனை எடுத்து வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் ப
    கிர்ந்தார்.

    ‘‘ஐயோ தாத்தா… போயிட்டீங்களா!’’ –
    கதறி அழுதான் ரமணா. ?????............:flushed::flushed::flushed:
     
  3. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Nalla muyarchi..Enakum andha varutham irukindradhu. Naame nam thai mozhiyai madhika vital veru yar madhipargal..
     
    jskls likes this.
  4. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Proactive ah ipo ipdi kadhai eludhi irukalam Ma. But future ah than predict panni irukanga. Phone la busy ya irukara husband ah whats app la sapda koopadra wife ipo irukanga nu sonna nambuveengala..ana adhu than unmai..enaku therinju 1 veedu..theriyama innum ethanai veedugalo..
     
    jskls likes this.
  5. Rith

    Rith IL Hall of Fame

    Messages:
    2,642
    Likes Received:
    2,660
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Unga muyarchi sooper. En support epovum ungaluku undu..
     
    krishnaamma likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வாஸ்த்தவம், முதலில் நாம் நம் மொழியை மதிக்கணும் :)
     
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹா...ஹா..ஹா ... அதுபோலவும் ஒருகதை வந்தது...........என்ன கொடுமை பாருங்கோ.......காலத்தின் கோலம் என்று சொல்லுவதா?.....இல்லை பெரியவர்களே இப்படி என்றால் குழந்தைகள்????என நினைத்து மனம் நடுங்குவதா?...தெரியலையே............:grinning:
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி........நீங்களும் தமிழில் அடிக்கலாமே ! .........என்னால் முடிந்தது, எல்லோருக்கும் இந்த லிங்க் தந்து விடுகிறேன்.....முடிந்தவர்கள் உபயோகப்படுத்துங்கள் !

    English to Tamil Converter
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    குழந்தைகளுக்கு அவர்களுடன் பேசணும் என்று ஆசையாய் இருந்தாலும் ஒண்ணும் பண்ண முடியாது.........வயதானவர்களுக்கும் ஆசை தான் என்றாலும் இனி அவர்களால் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியாது...........தாத்தா பாட்டிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற சொந்த பந்தங்களுக்கு ?.....சொல்லவே வேண்டாம் ...........ஒரு கல்யாணம், கார்த்திகை என்றால் கூட மற்றவர்களுடன் ஓட்டமுடியாத இவர்கள், வேறு வழி இன்றி, தங்கள் தங்கள் கை இல் இருக்கும் ipod , phone இவற்றுடன் முழ்கி விடுவார்கள் .....ஒதுங்கியே இருப்பார்கள் ......கொஞ்ச வருடத்தில் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் நான் இந்தியா வரலை அங்கு எனக்கு போர் அடிக்கும் என்பார்கள் ...........சரிதானே ?

    ஒன்றும் இல்லை, நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இங்கே IL உள்ளே வந்ததும் யாராவது , உற்சாகமாய், ஹாய், என்று போட்டால் எவ்வளவு மகிழ்கிறீர்கள்?.......முன்ன பின்னே தெரியாமல் இருப்பவர்களே நம்மை குசலம் விசாரிக்கும்போது நம் மனம் எவ்வளவு மகிழ்கிறது? அப்படி இருக்க சொந்த பேரன் பேத்திகள் வரும்போது, அவர்களுடன் ஆசையால் அளவளாவக் கூட முடியாது போகும்போது, அந்த வயதானவர்கள் எவ்வளவு நொந்து போவார்கள் ......யோசியுங்கள்............


    ச்சே! இதுக்கா நாம் இவங்களை படிக்க வைத்தோம் என்று வருத்தப்படமாட்டர்களா?..........கொஞ்ச நாள் முன்பு ஒரு செய்தி பார்த்தேன், சீனாவில் எல்லோரும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளணும் என்று, நிறைய முயற்சி எடுத்து அப்ளிகேஷன் செய்து போன் இல் போட்டுக்கொண்டு கத்துக்கறாங்களாம் . ஒரு அயல்நாட்டு மொழியையே இப்படி கற்றுக்கொள்ள முடியுமானால் நம்மால் தம் தாய் மொழியை கற்க முடியாதா என்ன ?........நமக்குத் தேவை சிறு சிறு முயற்சிகள் தான்...........அதை செய்தாலே நம் தாய்மொழி காப்பாற்றப்படும்.

    .................
     
    jskls and vaidehi71 like this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அதற்காக எனக்குத் தெரிந்த வழிகள், நான் பின்பற்றும் வழிகள் சிலதை இங்கே சொல்கிறேன், உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்தால் இங்கே பகிருங்கள் :)


    முதலில் நாம் செய்யவேண்டியது, முக்கியமானதும் கூட, என்ன தான் ஆனாலும் வாசலில் செருப்பைக் கழட்டும் போது , மத்த மொழிகளையும் கழட்டி வைத்து விட்டு, வீட்டுக்குள் தமிழ் மட்டுமே பேசுவோம் என்கிற ஒரு எழுதாத சட்டத்தை, நம் வீட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.

    இது ஒவ்வோவோர்வரும் கட்டாயம் செய்யணும்......அந்த இடத்து மொழியை, நாம் வீட்டில் பேசாமல் இருந்தாலும், குழந்தைகள் வெளியே வாசலில் போவதால், அங்கு பேசப்படும் பாஷையை எளிதாக கத்துப்பா, ஒன்றும் கஷ்டம் இல்லை அதில், நாம் அதற்காக மெனக்கெட வேண்டாம்......வீட்டுப்பாடம் படிக்கும்போது படிப்பதே போறும்..நம் தமிழுக்குத்தான் ஆதரவு இல்லாமல் போச்சு, எனவே, முதல்வேலையாய் இப்போ அதைக் கவனிப்போம் :)

    தாய் மொழிஇல் பேசுவதால் , குழந்தைகளுடன் உங்களுக்குள்ள நெருக்கமும் அதிகமாகும். எப்பவுமே நம் தாய் மொழி இல் பேசினால் இன்பமாக இருக்கும், இது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை :)பாரதி சொன்னது போல தேனினும் இனிதான மொழி, தமிழ் மொழிஆச்சே !

    .......................
     
    jskls and vaidehi71 like this.

Share This Page