1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நான் தமிழாலே சொல்மாலை

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jun 24, 2014.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன்
    நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்! (2)

    நீ அல்லாது யார் மீது கவிபாட வந்தேன்?
    உன் அழகுக்குப் புகழ்சேர்க்கத் தமிழோடு வந்தேன்.

    நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன்
    நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்!


    உன் அங்கங்கள் தனைப்பாட உவமைகள் தேடி
    நான் அலையாத இடமில்லை அறிவாயோ அதை நீ?(2)
    உன் இளமைக்குச் சரியான உவமைகள் இல்லை
    உனைப் பாடாத கவிஞர்க்கு பெருமைகள் இல்லை (2)

    நீ அல்லாது யார் மீது கவிபாட வந்தேன்?
    உன் அழகுக்குப் புகழ்சேர்க்கத் தமிழோடு வந்தேன்.
    நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன்
    நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்!


    ஒரு கவியில்தான் எதுகைகள் மோனைகள் உண்டு
    எனக் கவிஞர்கள் இதுகாறும் எண்ணத்தில் இருந்தார் (2)
    உன் கலைகொண்ட தேர்மேனி இன்றிங்கு கண்டு
    ஒரு கவிதைநீ என்றவரும் மனதாரச் சொன்னார் (2)

    நீ அல்லாது யார் மீது கவிபாட வந்தேன்?
    உன் அழகுக்குப் புகழ்சேர்க்கத் தமிழோடு வந்தேன்.
    நான் தமிழாலே சொல்மாலை உனக்காக நெய்தேன்
    நீ இசையோடு அதைப்பாடிக் கவியாகச் செய்தாய்!
     
    1 person likes this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நன்றாக இருக்கிறது! ஏதோ ஒரு பழைய பாடல் இதே போல தான் வரும்....பாடல் வரிகள் மறந்துவிட்டது...
     
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Kavithai nandru CRV

    (DP - andha paadalin saayal - naan paesa ninaippathellaam....)
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    ம்ம் அதே தான்.....நீங்கள் வளர்ந்த காலத்தில் வந்த பாடல் என்று நினைக்கிறேன்....அதனால் தானே சரியாக சொன்னீர்கள்? :)
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    "நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்" பாடலும் ஏறக்குறைய இப்படி தான் தொடங்கும்...
     
  6. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    Indhap paadal pona vaaram vandhadhungalaa? :):)

    (neengalum andha kaalam thaan polirukkae)
     
    1 person likes this.
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்கள் காலத்து பாடலையும் தான் இப்போது இன்டெர்நெட் உதவியுடன் தெரிந்துகொள்ளலாமே......அப்படி தெரிந்துக் கொண்டது! :)
     
  8. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    இரண்டும் இல்லை. நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? பாடல் மெட்டு. பாடிப் பாருங்கள். சரியாக வரும்.
     
    1 person likes this.
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    உங்கள் வாயாலேயே உண்மையைக் கொண்டு வரத் தான் இந்த திட்டம்....எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நீங்கள் தப்பாக நினைத்துக் கொள்ளக்கூடாது.....சரியா? notdonesmiley
     
  10. velkavi

    velkavi Silver IL'ite

    Messages:
    116
    Likes Received:
    104
    Trophy Points:
    93
    Gender:
    Female
    kavingarukkul pooti irukalam ..poramai kudathu:notthatway:
     

Share This Page