1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

71-கிருஷ்ண லீலா-ராதா மாதவ்

Discussion in 'Regional Poetry' started by deepa04, Aug 21, 2011.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கிருஷ்ண லீலா-ராதா மாதவ்
    கோகுலத்தின் குறைகளை போக்கிடவே,கோபாலக்ருஷ்ணன் அவன் ,
    ஆவணியில்,அருமையான ஒரு அஷ்டமி திதியன்று அவதரித்தான்,
    அவன் ஆயர்பாடி மாளிகையை ,ஆனந்தமயமானதாக மாற்றிவிட்டான்,

    இத்தனைநாள்,தன்கண்ணில் மறைந்திருந்த ராதையை கண்டபோது,
    கார்மேக வண்ணனுக்கும்,செம்பவள தையலுக்கும் ,தம் கண்கள் இமைக்க மறந்தது,
    பார்வைகள் பரிமாறியது,அவர்களின் அந்தரங்கம் அதன்வழி அரங்கேறியது.

    ராதையும்,மாதவனும்,தங்களின் ஜென்மஜென்ம பந்தத்தை உணர்ந்தனர்,
    மங்கையின் மனம் மாதவனை சரணடைய,மாதவன் அன்புடன் அவளை நோக்கி
    ஆர்வமாய் அழைப்பினை விடுத்தான் தன்னை சிநேகிதனாய் ஏற்க.

    இந்த பிருந்தாவனத்துக்கு, நீ விளையாட வருவாய்,இங்கே உனக்கு உற்ற
    நண்பனாய் நான் இருப்பேன்,இந்த இடம் தொலைவென நீ நினைக்கின்,உன்
    மனதினில் என்னை நிறுத்து , உன் இருப்பிடம் தேடி நானே வருவேன் என்றான்.

    இனிய பெண்ணை தான் கண்ட கண்ணன்,தன் தாயும் அவளை காணவென,
    ]ராதையை கையுடன் கூட்டி தன் அழகிய மாளிகையை அடைந்தான்,அங்கே
    நந்த ராணி,தன் இனிய அன்னை யசோதையை அழைத்து அறிமுகம் செய்தான்,

    எப்போதும் ,தன் மகன் அழைக்க ,பாசமுடன் ஓடிவரும் தாய் ,அன்று தன் மகன்
    ஓர் அழகிய யுவதியுடன் சித்திரமாய்,ஒப்பற்ற ஓவியமாய்,இணையான இணையுடன்,
    இணைந்து நிற்க ,கண்ட தாய்,உடனே ஓடிவந்து,இருவர் முகம் வழித்து நெட்டி முறித்து,

    தன் கண்ணே பட்டுவிடுமோ என அஞ்சி திர்ஷ்டி கழித்து பின்னே ,யாரிவள் எனக்கேட்டால்,
    மாதவனின் அன்னையாம் தாய்மை மிக்க யசோதையை கண்ட ராதை அவளின் அன்பால்
    வசிகரமுற்று,தான் விருஷ பானு பெற்ற மகள் என தன் பூர்விகம் எடுத்துரைத்தால்.

    பின்னர் தான்,வீடு விட்டு வந்து வெகுநேரம் ஆகிவிட்டது,என் அன்னையவள் பதரிடுவாள்,
    விரைந்து வீடு செல்லவேண்டும் என விளித்து விட்டு தன் வீடு நோக்கி புறப்பட்டால்,அன்று,
    வந்தபோது தன் உடைமையாய் இருந்த தன் மனதை அவிடத்தே விட்டு விட்டு மறைந்தால்.

    அவ்விடம் விட்டு அகன்றது அவள் தேகம் மட்டுமே,அவம் மனம்தான் அவ்விடமே நின்றதுவே,
    கனபொழுது கண்டபோதும் கண் நிறைக்கும் கண்ணன் அவன் கருத்தையும் கவர்ந்த மாது,இனி
    உறக்கம் கொள்வதும் தான் ஏது,கனவினிலும் நினைவினிலும் இனி இருப்பதெல்லாம் மாது.


    [/SIZE]
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எத்தனை நாட்கள் ஆகிவிட்டன அக்கா....உங்கள் தொடர் படித்து....சரியாக கிருஷ்ணா ஜெயந்தி அன்று வந்துவிட்டீர்களே....நலமா அக்கா? ஓவிய பணி தொடர்கிறதா?
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    ஹாய் கா எப்டி இருக்கீங்க...........ரொம்ப நாள் ஆச்சு பாத்து...........கிருஷ்ணன் வந்தால் தான் நீங்களும் வருவீர்களா..........
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    வாங்க தீபா.
    எங்க போனீங்க?
    அழகிரி தான் உங்க ஊர்ல
    பதுங்கி இருக்கார்னா நீங்களுமா?

    கிருஷ்ணர் காணாம போயிட்டார்ன்னு விளம்பரம் குடுக்கறதா இருந்தேன்,
    நல்ல வேளை அவரோட லீலைகளோட வந்துட்டீங்க திரும்ப...
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    hi deva,
    naan nalla iruken ,how is your studies?....
    oviya panikku siru oivu.
    krishna jeyanthiyil meendum krishna leela.
    thanks for your reply.
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    nalla iruken thambi.
    neram ippathan kidaichirukku.....
    neenka epadi irukienga?
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    நட்ஸ்,
    எப்டி இருக்கீங்க,
    அழகிரி ஆர்பட்டமை இல்லாத ஊரை,போஸ்டர்கள் இல்லாத மதுரைய பார்க்க பிடிக்கலை,அதுனால செட்டிநாட்டு பக்கம் ஒதுங்கியாச்சு!!!!!!
    கிருஷ்ணன் மத்த நாள் காணாம போயிருந்தாலும்,கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கி வந்துருவார்ல!
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒ செட்டிநாடு பக்கமா?
    நா கூட அரியக்குடி தான்.
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அரியக்குடி போயிட்டு வந்தோம் சார்,
    ராமானுஜர் பிறந்த ஊர்,தென் திருப்பதிகளில் ஒன்று,பழமையான பெரிய கோவில்,
    இத்தைனையும் சொன்னாங்க,ஆனா உங்க ஊர்ன்னு இப்பதான தெரியிது
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஹை சூப்பர். அந்த கோவில் கட்டினதே எங்க
    அய்யாவும் அவரின் சகோதரர்களும் தான். அய்யாவோட சிலை
    மூலவருக்கு ஜஸ்ட் வெளியே இருக்கும். எனக்கு இறை நம்பிக்கை
    இல்லை எனினும் கோவில் முறைகளை இன்று வரை செய்து கொண்டிருக்கிறோம்.

    நீங்கள் அங்கு சென்றது மகிழ்ச்சியைத் தருகிறது தீபா.
     

Share This Page