Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    ஸ்ரீ ஸூக்த்தம்


    (1) அக்னிதேவனே! பொன் போன்ற காந்தியுடையவளும் பாவங்களைப் போக்குபவளும் பொன்னாலும் வெள்ளியாலுமான ஹாரங்களை அணிந்தவளும் பொன்மயமானவளுமாகிய ஸ்ரீதேவியை எனக்கருள்புரியுமாறு எழுந்தருளச் செய்வீர்.



    (2) அக்கினி தேவனே! எவளுடைய அருளால் நான் பொன்னையும் பசுக்களையும் குதிரைகளையும் உற்றார் உறவினரையும் அடைவேனோ அந்த ஸ்ரீ தேவியை எனக்கருள்புரியுமாறு எழுந்தருளச் செய்து என்னை விட்டு விலகாதிருக்கும்படி செய்வீர்.



    (3) யானைகளின் ஒலியைத் தன் வரவின் அறிகுறியாகக் கொண்டவளும் முன்னே குதிரைகளும் நடுவில் ரதங்களும் புடை சூழ வருபவளுமாகிய ஸ்ரீதேவியை அண்டையில் வந்து அருள் புரியும்படி கூவுகின்றேன். ஸ்ரீ தேவியே! என்னிடம் புகுந்துறைதல் வேண்டும்,



    (4) இன்பமே உருவாகியவளும், புன்முறுவல் பூத்தவளும், தங்கக் கோட்டையில் இருப்பவளும், கருணை உள்ளவளும், பிரகாசம் பொருந்தியவளும், ஸந்தோஷம் நிறைந்தவளும், பிறரை மகிழ்விப்பவளும், தாமரையில் உறைபவளும், தாமரை வர்ணத்தினளுமான அந்த ஸ்ரீதேவியை இங்கே எழுந்தருளப்
    பிரார்த்திக்கின்றேன்.



    (5) சந்திரனைப் போன்றவளும், ஒளிமிக்கவளும், தன்மகிமையால் சுடர்விட்டுப் பிரகாசிப்பவளும்,தேவர்களால் வழிபடப் பெறுபவளும், கருணை மிக்கவளும், தாமரையைத் தாங்கியவளும், ஈம் என்ற பீஜமந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளுமான அந்த மகா லட்சுமியை நான் சரணடைகிறேன். எனது வறுமை விலகுமாறு அருள்வாய்!



    (6) சூரியனின் நிறத்தவளே, காட்டிற்குத் தலைவனாகிய வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று.அதனுடைய (ஞான மயமான) பழங்கள் உள்ளே உறையும் அவித்தைகளையும்வெளியே உள்ள அசுபங்களையும் போக்கடிக்கட்டும்



    (7) மகாதேவனுக்குத் தோழமை பூண்ட குபேரனும், நற்கீர்த்தியின் அபிமான தேவதையும் செல்வங்களுடன் என்னை நாடி வரவேண்டும். (நான் உங்கள் அருளுக்குப் பாத்திரமான) இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன். எனக்குக் கீர்த்தியையும் செல்வத்தின் நிறைவையும் தந்தருளவேண்டும்..



    ( பசி தாகத்தால் மெலிந்தவளும் (பசி தாகக்கொடுமையை உண்டாக்குபவளும்) முன்னே பிறந்தவளுமான மூதேவியை நான் (உன்னுடைய அருளால்) அகற்றுகிறேன். ஏழைமையும் செழிப்பின்மையும் என் வீட்டிலிருந்து அகற்றியருள்வாய்.



    (9) சுகந்தத்தின் மூலம் ப்ரீதி செய்யக் கூடியவளும், எவராலும் ஜயிக்கமுடியாதவளும், என்றும் புஷ்டியை அளிப்பவளும், எல்லாம் நிறைந்தவளும், எல்லா உயிர்களுக்கும் ஈசுவரியுமான மஹாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்.



    (10) ஸ்ரீதேவியே! மனத்திலெழும் நல்ல விருப்பத்தையும் பொங்கும் மகிழ்ச்சியையும் வாக்கில் உண்மையையும் பசுக்களின் நிறைவாலும் ஏற்படும் அழகையும் நான் அனுபவிக்க நீ அருள்புரிவாய். என்னிடத்தில் நல்ல கீர்த்தி உண்டாகட்டும்.



    (11) கர்த்தமரே! கர்த்தமர் எனப் பெயர்பெற்ற உம்மிடம் மஹாலக்ஷ்மி பெண்ணாக ஆனாள்.(நீர்) என்னிடம் தோன்றவேண்டும். தாமரை மாலையுடன் விளங்கும் தாயான லக்ஷ்மியை என் குலத்தில் நித்திய வாஸம் செய்யும்படி அருள் செய்யவேண்டும்.



    (12)பால், நெய் முதலிய பசையுள்ள பொருட்களை உற்பத்தி செய்யட்டும். நீர் என் வீட்டில் வாசம் செய்யவேண்டும். தாயான ஸ்ரீதேவியை என்குலத்தில் நித்திய வாசம் செய்யும்படி அருள்புரிதல் வேண்டும்.



    (13) அக்னி தேவனே! (நெஞ்சில்) ஈரமுள்ளவளாயும் தாமரையில் வசிப்பவளாயும் உலகை ஊட்டுபவளாயும் பொன் நிறத்திளாயும் தாமரை மாலை அணிந்தவளாயும் சந்திரனைப் போல் மகிழ்ச்சி பொங்கச் செய்பவளாயும் சுத்த சத்துவ வடிவினளாயும் உள்ள மஹாலக்ஷ்மி என்னிடம் வந்துரையும்படி அனுக்கிரகம் செய்யும்.



    (14) அக்னி தேவனே! (நெஞ்சில்) ஈரமுள்ளவளாயும் கரத்தில் செங்கோல் ஏந்தியவளாயும் கொடி போன்ற உடல் படைத்தவளாயும் அழகிய நிறத்தினளாயும் ச்வர்ணமாலை அணிந்தவளாயும் சூரியனைப் போல் பிரகாசிப்பவளாயும் சுத்த ஸத்துவ வடிவினளாயும் உள மஹாலக்ஷ்மி என்னிடம் வந்துரையும்படி அனுக்கிரகம் செய்யும்.



    (15) அக்கினி தேவனே! எவளுடைய அருளால் நான் பெருமிதமான பொன்னையும் பசுக்களையும் பணிப்பெண்களையும் குதிரைகளையும் ஆட்களையும் அடைவேனோ அப்படிப் பட்ட லக்ஷ்மிதேவி என்னைவிட்டு விலகாதிருக்கும்படி கூட்டிவைத்தருளும்.



    (16)எவன் ஸ்ரீதேவியின் அருளை வேண்டுகிறானோ அவன் பரிசுத்தனாகவும் மனத்தை அட்க்கியவனாகவும் இருந்துகொண்டு நாள் தோறும் (இம் மந்திரங்களைக் கூறி) நெய்யைஹோமம் செய்யவேண்டும். ஸ்ரீதேவியினுடைய (மேற்கூறிய) பதினைந்து ரிக்குகளையும் எப்போதும் ஜபம் ஜெய்யவேண்டும்.



    (17) ஆனந்தர், கர்த்தமர், சிக்லீதர் என்று பிரசித்தி பெற்ற மூவரும் (இந்த சூக்ததிற்கு) ரிஷிகள், மஹாலக்ஷ்மியே அதிதேவதை.



    (1தாமரையில் வீற்றிருப்பவளே! தாமரை போன்ற துடையினளே! தாமரை போன்ற கண்ணுடையாளே! தாமரையில் தோன்றியவளே! எதனால் நான் லாபத்தை ஸக்கியத்தை அடைவேனோ அதை எனக்கு அருளவேண்டும்.



    (19) குதிரைகளைத் தருபவளும் பசுக்களைத் தருபவளும். செல்வதைத் தருபவளும் செல்வதிற்கரசியுமான லக்ஷ்மிதேவியே! எனக்கு எல்லாவிருப்பங்களும் ஸித்திக்கும் பொருட்டுச் செல்வத்தை கூட்டிவைத்தருள்வாயாக.



    (20) புத்திரர்கள் தனம் தானியம் யானை குதிரை வெள்ளாடு செம்மறியாடு பசுக்கள் தேர் (எல்லவற்றையும் கொடுதருள்வாய் நீயே மக்களுக்கெலாம் தாய். என்னை ஆயுள் உடையானாகச் செய்தருள்வாய்.



    (21) சந்திரன் போல் குளிர்ந்து பிரகாசிப்பவளும், ஈசுவர்களுடய சக்தியாய் இருப்பவளும், சூரியனைப்போல் கடுமையாய்ப் பிரகாசிப்பவளும் ஸ்ரீ தேவியும் ஈசுவரியும்,
    சந்திரன் சூரியன் அக்கினி ஆகியமூன்று கலை வடிவினளும் ஆகிய மஹா லக்ஷ்மியை உபாசிக்கிறேன்.



    (22) அக்னி செல்வத்தை யனுபவிப்பதும் வாயு செல்வத்தை யனுபவிப்பதும், சூரியன் செல்வத்தை யனுபவிப்பதும், அஷ்ட வசுக்கள் செல்வத்தை அனுபவிப்பதும், இந்திரன் செல்வத்தை யனுபவிப்பதும், ப்ருஹஸ்பதி செல்வத்தை யனுபவிப்பதும், வருணன் செல்வத்தை யனுபவிப்பதும் (உன் அருளாலே.)



    (23)கருடனே! ஸோம ரஸத்தைப் பருகு. விருத்திரனைக் கொன்ற இந்திரன் ஸோமரஸத்தைப் பருகட்டும்.
    ஸோம பானம் செய்த தேவர்கள் ஸோம யாஹம் செய்யும் எனக்குச் செல்வத்தைக் கொடுத் தருளட்டும்.



    (24) புண்ணியம் செய்த பக்தர்களுக்குக் கோபமோ, பொறாமையோ, கெட்ட புத்தியோ உண்டாவதில்லை. (அந்தப் பக்தி வளர்வதற்காக) ஸ்ரீ ஸடக்தத்தை எப்போதும் ஜபிக்க வேண்டும்.


    (25) தேவியே! உனது கருணையினால் ஆகாயத்திடை மின்னலுடன் கூடிய மேகங்கள் மழை பொழியட்டும். எல்லா விதைகளும் நன்கு முளைத்து வளரட்டும். தேவ மார்க்கத்தைப் பகைப்பவர்களை அழித்துவிடு.


    (26) பத்மினி! தாமரையில் பிரியங் கொண்டவளே! தாமரையைக் கையில் ஏந்தியவளே! தாமரையில் வசிப்பவளே! உலகனைத்திற்கும் பிரியமானவளே! விஷ்ணுவின் மனத்திற்குகந்தவளே! உனது திருவடித்தாமரையை என்னிடம் வைத்தருள்வாய்.



    (27) மஹாதேவியை உபதேசப்படி அறிவோம். விஷ்ணு பத்னியாகிய அவளைத் தியானம் செய்வோம்.அவ்விஷயத்தில் அந்த லக்ஷ்மிதேவி நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்ட வேண்டும்.



    (2 தாமரையில் வீற்றிருப்பவளாகவும் பருத்த நிதம்பம் உடையவளாகவும் தாமரையிதழ் போல் அகன்ற கண்களை உடையவளாகவும், கம்பீரமான சுழல் பொருந்திய நாபி யுடையவளாகவும், ஸ்தன பாரத்தால் வளைந்தவளாகவும், வெள்ளை வஸ்த்ரமும் உத்ரீயமும் அணிந்தவளாகவும், ரத்னங்கள் இழைத்த பொற்கலச நீரால் தேவலோகத்துச் சிறந்த யானைகளால் அபிஷேகம் செய்விக்கப் பட்டவளாகவும், தாமரையைக் கையிலேந்தியவளாகவும், எல்லா மங்களங்களுடன் கூடியவளாகவும் உள்ள லக்ஷ்மி தேவி எப்போதும் என் வீட்டில் வாசம் செய்தருளவேண்டும்.



    (29) பாற்கடலாசனின் புத்ரியும் ஸ்ரீரங்கநாயகியும் தேவஸ்த்ரீகள் அனைவரையும் பணிப் பெண்களாய்க் கொண்டவளும், உலகுக்கெல்லாம் விளக்குப் போன்றவளும், இந்திரன் பிரம்மா சிவன் ஆகியோரின் பெருமைக்குத் தனது அழகிய கடைக் கண்பார்வையைக் காரணமாயுடையவளும், தாமரைத் தடாகத்தில் தோன்றுபவளும், முகுந்தனுக்குப் பிரியமானவளுமான உனக்கு வந்தனம் செய்கின்றேன்.



    (30) ஸித்த லக்ஷ்மியாகவும் மோக்ஷ லக்ஷ்மியாகவும் ஜயலக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் ஸ்ரீலக்ஷ்மியாகவும் வரலக்ஷ்மியாகவும் உள்ள நீ எப்போதும் என்னிடம் பிரஸன்னமா யிருக்க வேண்டும்.



    (31) வரம் அங்குசம் பாசம் அபய முத்ரை ஆகியவறைக் கைகளில் கொண்டவளும், தாமரையில் வீற்றிருப்பவளும் கோடி உதய சூரியபிரகாசம் பொருந்தியவளும் மூன்று கண்களை உடையவளும் ஜகதீச்வரியும் ஆதிசக்தியுமன அவளைத் துதிக்கின்றேன்.



    (32) எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைவதற்குரியவளே! மூன்று கண்களையுடையவளே! நாராயணி தேவியே! உனக்கு நமஸ்காரம்.
     
    Last edited: Sep 10, 2007
  2. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    ஸ்ரீஸூக்த்தம்


    ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸஞ்வர்ண ரஜதஸ்ரஜாம்|
    சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ





    பத்மாஸனே பத்மோரு பத்மாக்ஷச் பத்மஸம்பவே|
    த்வம்மாம் பஜஸ்வ பத்மாக்ஷச் யேந ஸௌக்யம் லபாம்யஹம்




    லக்ஷ்மீம் க்ஷஞர-ஸமுத்ரராஜ-தநயாம் ஸ்ரீரங்கதாமேச்வரீம் தாஸீபூத-ஸமஸ்த-தேவ வநிதாம் லோகைக-தீபாங்குராம்|
    ஸ்ரீமன்-மந்த கடாக்ஷ-லப்தவிபவ-ப்ரஹ்மேந்த்ர-கங்காதராம் த்வாம் த்ரைலோக்ய-குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்தப்ரியாம் ||
     
  3. vista

    vista New IL'ite

    Messages:
    59
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Male
    Re: Tamil Slogams தமிழ் ஸ்லோஹம்

    நவகிரக ஸ்லோகம்

    ஆரோக்யத்தை ஸடர்யனும், சுத்தமான கீர்த்தியை சந்த்ரம், ஐச்வர்யத்தை அங்காரகனும், நல்ல புத்தியை புதனும், நல்ல மதிப்பை பிரஹஸ்பதி பகவானும், இணையற்றதும், அழகியதுமான பேசும் திறமையை சுக்ரனும், எப்பொழுதும் ஸந்தோஷத்தை சனைச்சரனும், புஜ பலத்தையும், சத்ருநிக்ரஹத்தையும்ராஹஞ்வும், குலத்தின் அபிவிருத்தியை கேதுவும் நம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்
     
  4. Tamildownunder

    Tamildownunder Bronze IL'ite

    Messages:
    921
    Likes Received:
    30
    Trophy Points:
    48
    Gender:
    Male
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: Tamil Slogams தமிழ் slokam

    Dear Madam,
    Thank you very much for your tamil translation for Kanakadhara stotram.
     
    Last edited by a moderator: Sep 27, 2007
  6. preethi27

    preethi27 Senior IL'ite

    Messages:
    123
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Vinayakar Kaappu

    Pilaiyar is looking nice. Thanks for the slokas too.

    Preethi
     
  7. Vijayageetha

    Vijayageetha New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Female
    Hi,
    I am a 27 yr old girl. Can someone tell me any sloka for getting married. Also can someone tell me any parikaram that has to be done.

    Rgds and Thanks in advance
    Geetha8)
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Sarasvathi - The Goddess of Knowledge (Navarathri Special 3)

    ஸரஸ்வதியின் தமிழ் சுலோகங்கள்:

    ஓம் ஊழ்வினை போக்குபவளே போற்றி
    ஓம் ஊமைக்கும் அருள்பவளே போற்றி
    ஓம் ஊரார் மெச்ச வைப்பவளே போற்றி
    ஓம் ஊரும், பேரும் தருபவளே போற்றி
    ஓம் ஊழியின் சக்தியே போற்றி
    ஓம் ஊனக்கண் நீக்கி, ஞானக்கண் அருள்பவளே போற்றி

    கம்பர் அருளிய அந்தாதியைப் படித்தால், கலையும் கல்வியும் மனதில் ஏறும்:
    ஆயகலைகள் அறுபாத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என்னம்மை தூய
    உருப்பளிக்கு போலாவாள் என் உள்ளத்தினுள்ளே
    இருப்பன் இங்கு வாராது இடர்.

    அன்புடன்,
    சித்ரா.
     
  9. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
  10. rkramya

    rkramya New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    i am very much interested to get the hanumanji devotional sanskri hymn by
    name, sri madh hanumadhashtakam, rendered by sri p .b srinivas [hmv cassette] hope you have the same. do provide it at your earliest.
    the hymn begins with ...........sri raghu raja padhaja nevesana pankaja lochana mangala ....... [i may wrong while producing the sanskrit wordings]

    thanks in advance

    rkramya,
     
    Last edited by a moderator: Oct 20, 2007

Share This Page