1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா

    movie : Puthumai pithan
    music : Ramanathan g
    singers : Chandrababu jp & jikki
    lyrics : Tn ramiah dhas


    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா
    இங்கு குல்லா நீ போடாதே குள்ள தாரா
    வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா (2)
    எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா
    அய்யய்யோ…
    விழியாலே பலியாவார் வம்புக்காரா
    தில்லானா…தில்லானா…
    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா இங்கு
    குல்லா நீ போடாதே குள்ள தாரா

    ஆ..ஆ..ஆ..ஆஅ
    அந்தமா முனிவரெல்லாம் அடங்கினார்…அந்த காலம்…
    ஆ..ஆ.ஆ.ஆ.ஆ..ஏ..ஏ..ஏ…
    அதை அறிந்ததால் உங்கள் விழியினாலே
    ஆண்கள் அசைய மாட்டார் இந்த காலம்..
    தில்லானா பாட்டு பாடி குள்ள தாரா இங்கு
    குல்லா நீ போடாதே குள்ள தாரா

    வாழைப்பழம் வேண்டாமென்னும் குரங்கு போலே
    வாயாளவில் பேசிடுவார்… பிறகு
    வைத்தியர் அறியாத பைத்தியம் பிடித்தேங்கி
    வலிய வந்து காலில் விழுவார்
    ஆ..ஆ.ஆ.ஆஅ.ஆ
    வில்லாதி வில்லரெல்லாம் வம்பு காரா (2)
    எந்தன் விழியாலே பலியாவார் வம்புக்காரா

    அப்படியா?… பின்னே எப்படியாம்?
    நீரில்லாத நிலமில்லே நிலமில்லாத மரமில்லே
    மரமில்லாத விதை இல்லே விதை இல்லாத மரமில்லே
    ஆணில்லாத பெண் இல்லே பெண் இல்லாத ஆணில்லே
    புரிஞ்சிதா?..
    புரியுதே.. புரியுதே புரியுதே…
    மலையான எம்மனச குள்ள தாரா
    அறிவு உளில்யாலே பேதுட்டியே குள்ள தாரா
    மலையான எம்மனச குள்ள தாரா
    அறிவு உளில்யாலே பேதுட்டியே குள்ள தாரா
    கல்லான ஆம்ப்பிள்ளையும் வம்புக்காரா
    கோவை கனியாலே பலியாவார் வம்புக்காரா
    கனியாலே பலியாவார் வம்புக்காரா
    ….தில்லானா ..தில்லானா…
     
    Last edited: Aug 22, 2010
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பொறந்தாலும் ஆம்ப்பிள்ளையா பொறக்ககூடாது

    movie : Policekaran magal
    music : Viswanathan – ramamurthy
    singers : Chandrababu jp & l r iswari

    பொறந்தாலும் ஆம்ப்பிள்ளையா பொறக்ககூடாது
    அய்யா பொறந்து விட்டா பொம்ப்பிள்ளைய நினைக்க கூடாது
    பொறந்தாலும் பொம்பிள்ளையா பொறக்ககூடாது
    அய்யா பொறந்து விட்டா ஆம்ப்பிள்ளைய நினைக்க கூடாது
    ஆம்பிள்ளை எல்லாம் பொம்பிள்ளை போலே மாறவும் கூடாது
    பெண் ஆடும் ஆட்டத்தை கண்ண்டு நோட்டத்தை கண்டு வாடவும் கூடாது

    ………பொறந்தாலும் ஆம்ப்பிள்ளையா…………

    ஆயிரம் ஆயிரம் ஆண்களிலே அய்யா உன்னை நினைச்சேனே
    அர்ஜ்சுனன் போல அழகிருக்க அனுமார் ஜாதி பிடிச்சேனே
    பரம்பரை ஞாபகம் போகலையே பழையதி இன்னும் மறக்கலையே
    மரத்துக்கு மேலே தாவுறியே மனுசனை குரங்கா நினைகிறியே

    …………..பொறந்தாலும் பொம்பிள்ளையா ………..

    காதலை கவிஞன் பாடி வச்சான் கடவுள் அதுக்கொரு ஜோடி வச்சான்
    உன்னை எனக்குன்னு எழுதி வச்சான் உறவை நனச்சி அழுக வச்சான்
    சிரிக்கிற காதல் முறிந்து விடும் அழுகுற காதல் உறுதி பெறும்
    முடிகிற வரைக்கும் அழுது விடு முடிந்ததும் என்னை மணந்துவிடு
    ……………பொறந்தாலும் ஆம்ப்பிள்ளையா …………..
     
    Last edited: Aug 22, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    தனியா தவிக்கிற வயசு....

    movie : Paathakaanikkai
    music : Viswanathan-ramamurthy
    singer ; chandrababu j p
    lyrics : Kannadasan.

    தனியா தவிக்கிற வயசு
    இந்த தவிப்பும் எனக்கு புதுசு
    நெனைச்சா இனிக்குது மனசு
    என்னை நெருங்க விடலையே விலக்கு
    தனியா தவிக்கிற வயசு.
    துப்பாக்கி முனையின் ?போலே துரத்துது கண்கள் ரெண்டு
    தூக்கணாங்க்குருவி கூடினை போலே ஆடுது மனசு கண்டு
    முத்து பந்தாட்டம் போலாடும் சிரிப்பு
    பட்டு பாவாடை போலாடும் நினைப்பு
    னெஞ்சில் துள்ளாட்டம் போடுதே களிப்பு
    உன்னை தொட்டாலும் தீராது துடிப்பு

    …………தனியா தவிக்குற……………..

    கட்டான உடம்பு இனிகிற கரும்பு கைகளில் படாத அரும்பு
    எட்டாத இடத்தில் சிட்டாக பறந்து உட்காந்து செய்யுதே குறும்பு.
    கட்டான உடம்பு இனிகிற கரும்பு கைகளில் படாத அரும்பு
    எட்டாத இடத்தில் சிட்டாக பறந்து உட்காந்து செய்யுதே குறும்பு.
    அடி முத்தான மொட்டே நீ திரும்பு
    இந்த பித்தான அதானை விரும்பு
    கரு வண்டாட்டம் ஓடிவா பறந்து
    நாம் கொண்டாட்டம் போடலாம் கலந்து

    …………தனியா தவிக்குற…………..
     
    Last edited: Aug 22, 2010
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே....
    MOVIE : MAAMAN MAGAL
    SINGER : CHANDRABABU JP

    ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
    மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
    பச்சை கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே
    ஜில்லா எங்கும் குல்ல போடும் பலே கில்லாடி
    உன்னை தேடி வந்தேன் தில்லாலங்கடி சிஙார லேடி.
    பட்டு பட்டுன்னு வெட்டிகிட்டு எட்டி எட்டி என்னை பாத்துகிட்டு
    பட கண்ணாடிய தேச்சிகிட்டு..? பொட்டுகிட்டு
    குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி
    கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே..
    குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி
    ஆ…ஆ.ஆ.ஆ.ஆ.
    மினிக்கு ஜடையும் குலுக்கு இடையும் சிலுக்கு உடையும்
    தளுக்கு நடையும் என்னை புடிச்சி மயக்கி புடிச்சி
    உன்ன நினைச்சி கிறுக்கு புடிச்சி புலம்புறேனே அப்போ புடிச்சி
    மானே தேனே கண்ணே பொன்னே வா.

    …………ஹே ..கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே………….
    1 2 3 4 …. 5 6 7 8 ..
    நண்டு வந்து நரிகிட்ட தான் சொல்லிகிச்சாம் குட் நைட்டு
    அங்கெ நாத்தியும் மதினியுமா போடுறாளே லெfட் ரிக்க்டு..
    கோவா மாம்பழமே…
    நண்டு வந்து நரிகிட்ட தான் சொல்லிகிச்சாம் குட் நைட்டு.
    கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
    மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
    பச்சை கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே
     
    Last edited: Aug 22, 2010
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உனக்காக எல்லம் உனக்காக

    movie : Pudhayal
    music : Viswanathan – ramamurthy
    singer : Chandrababu jp

    உனக்காக எல்லம் உனக்காக (2)
    இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
    எதுக்காக கண்ணே எதுக்காக நீ
    எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதுக்காக
    கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதுக்காக (2)
    மெல்ல காதுக்குள்ளே உந்தன் கருத்தை சொல்லிடு முடிவாக
    உனக்காக எல்லம் உனக்காக
    இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக



    பள்ளியிலே இன்னும் ஒரு தரம் படிக்கணுமா?
    இல்ல பைத்தியமா பாடி ஆடி நடக்கணுமா?
    துள்ளி வரும் காவேரியில் குளிக்கணுமா? (2)
    சொல்லு சோறு தண்ணி அது ஏதுமில்லாம கிடக்கணுமா?

    உனக்காக எல்லம் உனக்காக (2)

    இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக
    இலங்கை நகரத்திலே இன்ப வல்லி நீ இருந்தா
    இந்து மகா சமுத்திரத்தை இங்கே இருந்தே தாண்டிடுவேன்
    மேகம் போலே வான வீதியில் நின்னு நகர்ந்திடுவேன்
    இடி மின்னை மழை புயல் ஆனாலும் துணிந்து இறங்கிடுவேன்
     
    Last edited: Aug 22, 2010
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

    திரைப்படம்: ஆண்டவன் கட்டளை
    பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்


    ம்..ஹா..ஹா.. ஹஹஹஹா

    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
    சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
    சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

    ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா

    லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
    லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

    மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
    மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
    கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
    கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
    காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
    ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா

    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
    சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

    ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
    லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
    லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா

    உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
    உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு
    ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
    ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
    நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
    நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து

    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
    சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

     
    Last edited: Aug 22, 2010
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    பார்த்த ஞாபகம் இல்லையோ....

    படம் :
    புதிய பறவை
    பாடியவர்: p சுசீலா
    பாடலாசிரியர் : கவியரசர் கண்ணதாசன்
    இசை : m.s விஸ்வநாதன்

    பார்த்த ஞாபகம் இல்லையோ
    பருவ நாடகம் தொல்லையோ
    வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
    மறந்ததே என் நெஞ்சமோ?

    (பார்த்த ஞாபகம் இல்லையோ)

    அந்த நீல நதிக்கரை ஓரம்
    நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
    நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
    நாம் பழகி வந்தோம் சிலகாலம்!

    (பார்த்த ஞாபகம் இல்லையோ)

    இந்த இரவைக் கேளது சொல்லும்
    அந்த நிலவைக் கேளது சொல்லும்
    உந்தன் மனதைக் கேளது சொல்லும்
    நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்!

    (பார்த்த ஞாபகம் இல்லையோ)

    அன்று சென்றதும் மறந்தாய் உறவை
    இன்று வந்ததே புதிய பறவை
    எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
    நாம் சந்திப்போம் இந்த நிலவை

    (பார்த்த ஞாபகம் இல்லையோ)
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை...

    திரைப்படம்:
    நெஞ்சில் ஓர் ஆலயம்
    பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி


    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

    முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
    தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

    ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
    யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
    ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
    ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

    எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
    இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
    பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்
    மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை
    நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை.....

    படம்:
    காதலிக்க நேரமில்லை (1964)
    பாடல் வரிகள்: கவியரசு கண்ணதாசன்
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
    இசை: எம்.எஸ்.வி & டி.கே.ஆர்

    காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
    வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை

    பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை
    வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை
    பஞ்சுபோல நரைவிழுந்து பார்வையும் குழிவிழுந்து
    இரண்டு கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி

    காயிலே சுவைப்பதில்லை கனிந்ததும் கசப்பதில்லை
    நோயில்லா உடலிருந்தால் நு}றுவரை காதல் வரும்
    மாமியார் கொடுமையில்லை மாமனார் யாருமில்லை இந்த
    சாமியை மணம் முடித்தால் சந்தோசம் குறைவதில்லை

    (மாறுவேடம் கலைந்தபின்பு)

    அவ்வுலகம் சென்று வந்தேன் அமுதம் குடித்துவந்தேன்
    பொன்னுலகம் போவதற்கு புதுஉடல் வாங்கி வந்தேன்
    இந்திரனைக் கண்டு வந்தேன் இதுபற்றிக் கேட்டுவந்தேன்
    சந்திரனைக் கண்டுவந்தேன் சரசம் நடத்த வந்தேன்

    காதலிக்க நேரமுண்டு கன்னியுண்டு காளையுண்டு!
    வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமுண்டு!
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆடி அடங்கும் வாழ்க்கையடா!

    திரைப்படம் :
    நீர்க்குமிழி
    பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
    இசை : v. குமார்
    வரிகள் : ஆலங்குடி சோமு
    பாடல் : ஆடியடங்கும் வாழ்க்கையடா

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா!
    ஆறடி நிலமே சொந்தமடா!

    முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
    மூடினால் காலில்லாக் கட்டிலடா!

    பிறந்தோம் என்பதே முகவுரையாம்
    பேசினோம் என்பதே வாழ்மொழியாம்
    மறந்தோம் என்பதே நித்திரையாம்
    மரணம் என்பதே முடிவுரையாம்

    சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
    தீமைகள் செய்பவன் அழுகின்றான்
    இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
    இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்!

    வகுப்பான் அதுபோல் வாழ்வதில்லை
    வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
    தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
    தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
     

Share This Page