1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஜீவனாம்சம்

Discussion in 'Regional Poetry' started by DDC, Jul 16, 2010.

  1. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Disclaimer: இது வெறும் கற்பனை கவிதை-யாரையும் காயப்படுத்தவோ என் அன்புக்கணவரை குறிப்பிடுவதோ இல்லை:notthatway:


    கூடுவிட்டு கூடு பாய்வதுபோல்
    வீடுவிட்டு நாடுவிட்டு நம்பிவந்த என்மீது
    நீ தெளித்த திராவகத்துளிகள் எத்தனை!!
    நான் பார்த்தே இராத பழக்கங்கள்
    இதுவரை கேட்டே இராத வார்த்தைகள்

    வார்த்தைகளால் விரல்களால் வாலிபத்தால்
    என்னை வதைப்பதற்கு உனக்கு
    உரிமை கொடுப்பது எது?
    என் கழுத்தில் நீ கட்டிய
    அந்த ஒரு முழக்கயிரா ?

    என் நல்லகாலம் குரல் கொடுத்தால்
    நீதி ஓடிவரும் நாட்டில் இருந்தது
    காசு வாங்கிக் கொண்டு
    நீதி கண்மூடி தூங்கியிருந்தால்
    என் மீது புல்பூண்டு அல்ல
    புளிய மரமே வேரூன்றி இருக்குமோ?

    உனக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும்?
    நான் புரிந்துகொள்ளவில்லையா? நீ தெளிவுபடுத்தவில்லையா?
    என்னை நேசிக்கவே இல்லாத உனக்கு
    என் பெற்றோரின் பணம்மீது மட்டும்
    ஏன் இந்த தணியாத காதல்?

    உன்னிடம் நானும் கற்றுக் கொண்டுவிட்டேன்
    வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வித்தை
    உனக்கு புரியும் ஒரேமொழியில் பேசுகிறேன்
    எனக்கு உன் பாதிசொத்தாவது வேண்டும்
    ஜீவனை பரித்தவனிடம் ஜீவனாம்சம் பிடுங்கி
    அதை கல்லைக் கட்டிகடலில் வீசுவேனோ
    இல்லை காற்றில் பறக்கவிட்டு கைதட்டுவேனோ
    ஒவ்வொரு தாளும் உனக்கில்லாமல் போகையில்தான்,
    என் வலி உனக்கு உரைக்கும்,
    என் ருத்ர தாண்டவம் நிற்கும்.
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சொல்லப்பட்ட உணர்வுகள் ஒவ்வொரு வரியிலும் அருமை... ஆனால் காதல் இல்லாமல் காசு இருந்து மட்டும் என்ன பயன்.... நம் உயிரை எடுத்துவிட்ட அவன் உயிரை வாங்க அவனிடம் இருந்து வாங்கும் பணம் கூட அழித்துவிடும் நம் மதிப்பை.........

    Really a very good poem DDC...
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  4. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    Thanks Deva & Vaishu.
    Deva: That is why "kallai katti kadalil poduvathum, katril vesuvathum" Hit 'em where it hurts:crazy
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஜீவனாம்சம் ஒரு ஜீவனை நாசம் செய்ததற்கு ஈடாகுமா?
    இல்லை அந்த உயிரை மீண்டும் உயிர்பிக்கத் தான் முடியுமா?
    ஆனால் அதை பெற்று அந்த வலி உணரச் செய்தல் வேண்டும்.
    அவன் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம், தன்னில் பாதியாய் இருந்தவளை,
    தவிக்க விட்டு சென்றது கொடுமை, கொடுமைப் படுத்தியது கொடுமையிலும் கொடுமை.

    உங்கள் ஆக்ரோஷம் அருமை.
     
  6. samyukthasharma

    samyukthasharma New IL'ite

    Messages:
    16
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Female
    a very beautiful poem conveying the emotions so well!
    :thumbsup
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female


    புல் பூண்டு தழைக்க புளிய மரம் முளைக்க நாம் என்ன பட்டா நிலங்களா

    பட்டென்று முடிவு தேவை படும்முன் தெளிவு தேவை.
    பார்த்துக் கொண்டிருந்தால்
    பாதி ஜீவன் போய் விடுமே
    ஜீவன் போன பின் ஜீவனாம்சம் அவசியமா?
    அவசிமாய் கனிய வைப்போம்
    கனிமொழி பேசி அன்றி கல்லால் அடித்து
    கனியாத, அந்த திருந்தாத நாய் குணத்தை .
    கல்லடி.உணர்த்தும் நம் வலி
    கண்டிப்பாய் கிடைக்கும் மறு வழி


    உரத்து நீங்கள் சொன்ன இந்த உரைகல் வார்த்தைகள்
    கன்னத்தில் ஓங்கி அறைந்து அந்தக் கயவனை கணவனை
    உறையச்செய்பவை
    உண்மையில் நடந்தால் பலன் இன்னும் அதிகம்.

    விவேகமாய் வீராவேசமாய் உங்கள் வைர வரிகள் படித்து நானும் ஆனேன் கண்ணகி போல். கை கொடுத்து என் பாராட்டுகளை தெரிவிக்றேன் என் நண்பியே.Bow.Bow.Bow.
    எழுதுங்கள் இதுபோல் நல்ல கவிதைகளை எங்களுக்குத் தாருங்கள்.வாழ்க பெண்ணியம்!!!!!!
     
  8. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    இந்த காலத்தில் ரொம்பவும் தேவையான கவிதை.. :thumbsup

    எல்லாமும் எளிதில் கிடைக்க, நீதி மட்டும் தடுமாறி வர மனித உணர்வுகள் மிக எளிதாய் வதைக்கபடுகிறது..

    ஓங்கும் கையை முறிக்க ஜீவனாம்சம் போதுமா??
    மீண்டும் கையை நீட்டி இன்னோர் கைபிடித்து
    அவன் மீதும் செல்வம் சேர்ப்பான்
    மேலும் ஜீவனை வதைப்பான்..

    ஜீவன் வதைக்கும் இவனை மனிதனாயிருக்க
    இன்னொரு மனிதன் இவனை தீண்டாதிருக்க
    ஒதுக்கப்பட வேண்டும்.. ஒடுக்கப்பட வேண்டும்..
    அவன் சொத்துக்கள் யாவும் இல்லாதவர் சேரவேண்டும்..
    இவன் யாரும் இல்லாதவர் ஆக வேண்டும்..

    ஓங்கி ஓங்கித் தட்டுகையில் பெருங்கதவும் திறந்திடும்
    பாறையும் இரண்டாய் பிளந்திடும்
    அந்த தட்டில் இரண்டு இவனை தட்டினால்???
    அவன் மண்டையும் இரண்டாய் பிளக்காதா??
    பலமான படிப்பினையும் கிடைக்காதா??
     
  9. DDC

    DDC Silver IL'ite

    Messages:
    479
    Likes Received:
    39
    Trophy Points:
    50
    Gender:
    Female
    ஜீவனாம்சம் தலைப்பு misleading a இருக்கோ ?கவிதை எழுதினவளுக்கு தலைப்பே தோணாமல் just picked the word from the poem. It is not about money, its about ‘hitting where it hurts & talking in a language that he understands’. Dont know if my idea comes across. சாட்டையாக சுழற்ற நினைத்தது சனலாக மாறிவிட்டதோ ?
    100% true, its shameful that it happens even today.

    ஒடுக்க ஒரு வழிதான் உயிரான பணத்தை பிடுங்குவது. அனால் ஒடுக்குவதும், ஒதுக்குவதும் ஒருத்தி கையில் மட்டும் இல்லை முழு சமுதாயத்தின் கையிலும் இருக்கு. மகளுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணினால் போதும் என்று compromise செய்வதை நிறுத்த வேண்டும். Women should have the guts to say”I have tried my best, Im done with you, I'm leaving” & parents to say “ whatever you decide DD, Im there for you”
    இதற்க்கு எல்லாம் படிப்பு வேண்டும், சொந்த காலில் நிற்கும் தைரியம்வேண்டும்.. நம் அடுத்த தலைமுறையையாவது அப்படி வளர்ப்போம்.

    Saroj aka Kannagi: உங்கள் சீற்றமும் சிந்தனையும் சூப்பர் pa.

    Nats, Samy, Ramya :Thanks for the fb.

    Looking forward to more interesting fbs & discussion.
     
    Last edited: Jul 17, 2010
  10. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    DDC I hope I didn't offend you.. :) sorry pa ennoda panga solli ungaloda kavithaiya kulapitana??

    I just said othukavum sattam varam vendum.. like blacklisting the person from constitution.. namma panchayathula solra mathri naata vittu othukanum.. :) Just I put across my views..
     

Share This Page