1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சில தவறுகளும், இலவச மன்னிப்புகளும் .......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 15, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உள்ளுக்குள் அடக்கி வைத்த இயலாமைச் சாபம்
    பிள்ளையின் கன்னத்தில் பளீரென்று தன் கை எரிய
    அறைந்து விட்டு அடங்கியது தாயின் கோபம்.
    கையின் தவறுக்காய் வருந்தியது கண்.
    கண்ணீர்!!!!!

    திருமணத்தை நீட்டிக்கும் காதல் கயவன் மேல்
    நம்பிக்கை அவமதிப்பு.
    சட்டை உலுக்கி சகட்டு மேனிக்கு சம்மட்டி வார்த்தை கொண்டு
    சவமாக்கி சவட்டியபின் சாந்தமானது காதலியின் தாபம்
    வாயின் தவறுக்காய் வருந்தியது உடல்
    உண்ணாவிரதம்!!!!!

    சம்பள பாக்கி :வறுமையின் தாண்டவம்
    தவறேதும் செய்யாத
    மாணவனின் காது திருகி பிரம்படி கொடுத்து மதிப்பெண் குறைத்து
    அசிங்கப்பட்டது ஆசிரியரின் அறியாமை.
    கையின் தவறுக்காய் வருந்தியது மனம்
    இலவச மாலை நேரக் கல்வி!!!!!!

    காதர் சட்டை:கந்தல் வேட்டி
    உரிமையைப் பெற
    உயிரோடு எரிக்கப் படும் உண்மைத்(ஊமை) தியாகி.
    பணம் பாக்கி மறுத்து மனசாட்சி விற்று,
    மகுடம் ஏறும் அரசியல் அல்லக் கைகள்
    மனித நேயத்தின் தவறுக்காய் வருந்தியது குணம்.
    இலவச முதியோர் காப்பீடு.!!!!!!!

    காடு அழித்து மண்மேடு செப்பனிட்டு
    மச்சு வீடு மாளிகை கட்டி
    இயற்கையைச் சீண்டி செயற்கைத் தரம் உயர்த்தும் காட்டு மிராண்டி.
    செலுலோயிடின் தவறுக்காய் மனம் வருந்தியது இயற்கை
    மிச்சம் இருக்கும் பசுமை!!!!!!

    விழாகால இலவசமாய் மன்னிப்புகள் இருக்கும் வரை
    விசேஷ விருந்தாளியாய் இதர சில தவறுகளும் தொடரும்….
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    :biglaugh:biglaugh:biglaugh
    unmai than... manipugal kurainthal thappugal kuraiyum...
    super... super oh super...
     
  3. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    edho oru padathula vara mathri Manippu oru vaarthai irukka poi thaana bayam illaama thappu panraanga..I second that..

    Arumaiyana sammatti varigal Saroj :thumbsup
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba arumayaa sonneenga saroj....

    unga ilavasa mannippugal romba arumai...:thumbsup
     
  5. Priesh

    Priesh Platinum IL'ite

    Messages:
    2,066
    Likes Received:
    633
    Trophy Points:
    208
    Gender:
    Female
    :clap:clap:clap simply superb saroj. arumayana varigal.
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தவறுகளின் மூலம் இயலாமை
    மன்னிப்பின் மூலம் அன்பும்,
    பண்புமாய் மிச்சம் இருக்கும் மனிதம்
    தவறு செய்வது மனித இயல்புதான்,
    மாற்ற இயலாது அவர்களாய் முயலும் வரை.
    தண்டனையை விட மன்னிப்பு
    அதிகம் வலிக்கும் என்பது
    என் கருத்து.

    மன்னிப்பு இருக்கும் வரை தவறுகள் தொடரும்... ஆனால் அதே மாதிரியான தவறுகளாய் இருக்காது, மன்னிப்பு பெற்றவர் அதை உண்மையில் மதித்தால்.
     
    Last edited: Jul 19, 2010
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    காதர் சட்டை:கந்தல் வேட்டி
    உரிமையைப் பெற
    உயிரோடு எரிக்கப் படும் உண்மைத்(ஊமை) தியாகி.
    பணம் பாக்கி மறுத்து மனசாட்சி விற்று,
    மகுடம் ஏறும் அரசியல் அல்லக் கைகள்
    மனித நேயத்தின் தவறுக்காய் வருந்தியது குணம்.
    இலவச முதியோர் காப்பீடு.!!!!!!!

    really nice and hats off to you my dear.
    very nice and brave poem.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    ஆமாம்.
    மன்னிப்பு இருக்கும் வரை
    தப்பும் தடை இல்லாமல் நீண்டு கொண்டே போகும்
    உன் பண்பான முதல் வரவுக்கும் மிக்க நன்றி தங்கையே
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    பயம் அது இருக்கு
    தப்பு செஞ்சுடோம்ன்னு இல்ல
    எங்க செஞ்ச தப்பு வெளியில தெரிஞ்சு மாட்டிப்பமோன்னு....
    "எனக்கு தமிழ்ல புடிக்காத வார்த்தை மனிப்பு தான்"னு நம்ம விஜயகாந்த சொல்றமாதிரி சொல்லி ..சாட்டைய சுத்தினா தான் சரிப் படும் போல ....
    ரொம்ப நன்றி உங்கள் கருத்துக்கும் கனிவான வருகைக்கும்
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    என்னாமா பஞ்ச் குடுக்குறீங்க சரோஜ்...:):)
    நல்ல கவிதை...இதை படித்த ஞாபகமும் இருக்கிறது, ஆனால் எப்படி பின்னூட்டம் கொடுக்காமல் விட்டேன் என்பது தான் தெரியவில்லை. :spin:spin
    நான் மறதியில் செய்த இந்த தவறுக்காக வருந்த விட மாட்டேன் என் மூளையை..நான் போயி சூடா ரெண்டு கப் வல்லாரை சூப் குடுச்சுட்டு வரேன்.. ஓகே?:coffee:coffee
     

Share This Page