1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மானை விரும்பா புலிகள் உண்டோ?!

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Jun 27, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    இது சிறுகதையில் என் புது முயற்சி!
    காத்திருகிறேன்! தங்கள் கருத்துக்களுக்காய்!:bowdown


    "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"
    எங்கிருந்தோ கசிந்து வந்த பாடல் கேட்க மாலினியின் முகத்தில் ஓர் விரக்தி புன்னகை!
    இன்று பல பேர் மற்றவர் உழைப்பில் அல்லவா உடலை வளர்கிறார்கள்!
    அந்த காலத்தில் எழுத பட்ட இந்த பாட்டு இப்போதைய நடைமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதாய்!
    "அம்மா! பாத்து கொஞ்சம் ஓரமா போங்க மா!" மெல்ல அந்த குரலுக்காய் திரும்பியவளின் முகம் வேதனையில் கருத்தது!
    மிகவும் மெலிந்து காண பட்ட ஒரு உழைப்பாளி மூட்டை தூக்கி கொண்டு நின்றான்!
    "என்ன மா?? கொஞ்சம் நகருங்க இத அந்த லாரில வைக்கணும்!"
    மெல்ல நகர்ந்தவளுக்கு சற்று முன் தான் நினைத்தது நிழலாடியது! இன்னும் உழைக்கும் வர்க்கம் மறையவில்லையே! இருக்க தான் செய்கிறது! நலிந்து!! உடல் சோர்ந்து! தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் வீட்டில் இருக்கும் வயிற்கள் வாடாமல் பார்த்து கொள்ளும் தெய்வங்கள் அவை!
    இவர்கள் கால் தொட்டு பணிந்தால் கூட தவறேது??
    ஆனால் ஏசி சேரில் ஹாயாய் உட்கார்ந்து மற்றவர் பணத்தில் உடல் வளர்க்கும் பணந்தின்னி கழுகுகள் நிறைய!
    அதில் ஒன்றை எப்படியும் இன்று பார்க்க போகிறோம்! தன் பணத்தாசைக்கு என்னவெல்லாம் கேட்க போகிறதோ??
    பணத்தை விலையாய் கேட்டால் கூட கொடுத்து விடலாம்! ஆனால் மானத்தையும் அல்லவா சில பேய்கள் விலையாய் கேட்கின்றன!
    இதில் வயிற்று பசிக்காய் மானத்தை அடகு வைக்கும் பல கண்ணகிகளை போல் தன் மனம் ஏன் ஒப்பு கொள்ள மாட்டேன் என்கிறது??
    ஒரு வேலை தான் மட்டும் தான் அந்த கண்ணகியின், சீதையின் கடைசி வாரிசோ??
    நினைக்கும் போதே சிரிப்பு தான் வந்தது!
    பூனை கண்களை மூடினால் உலகமே இருட்டி விட்டதாய் நினைக்குமாம்! அது போல் ஒரு சில பெண்களால் இப்படி மங்கையர் குல மாணிக்கங்களாய் இருக்கும் பலரையும் சேர்த்து தவறாய் நினைப்பது சரியா?? ஏதோ இதுவரை தான் அப்படி யாரையும் காணாத கொடுமைக்கு அனைவரின் மீதும் சாக்கடையை அள்ளி போடுவது எந்த விதத்தில் நியாயமாகும்?? சற்று முன் உழைக்கும் வர்க்கம் இருப்பதை கண்டது போல் என்றாவது ஒரு நாள் மங்கையர் திலகமான தன்னையும் மிஞ்சும் ஒருத்தியை காண நேரும்! (நினைக்கும் போதே காண முடியுமா என்ற சந்தேகமும் எழுந்ததை அவளால் தடுக்க முடியாமல் போனது காரணம் சமுதாயத்தில் சீர்கேடுகள் பெருகிவிட்டதே! கடைசியாய் அவள் வேலை பார்த்த இடத்தில் தோழி காசுக்காய் தன்னை கூட்டி கொடுத்த கொடுமையும் கண்ட பின் ஏன் வராது இப்படி ஒரு சந்தேகம்?? வராமல் இருந்தால் தான் ஆச்சர்யமே!)
    மெல்ல யோசனையில் நடந்தவளுக்கு இடம் நெருங்கவும் தன்னையும் அறியாமல் அடி வயிற்றில் ஒரு குளிர் பரவியது!
    காட்டை நெருங்குவது போல் ஒரு பிரம்மை!
    உள்ளே ஆளை அடித்து தின்னும் புலியும் இருக்கலாம்! கூடவே மனதை கவரும் மான் கூட்டங்களும் இருக்கலாம்! எல்லாம் ஒரு நாள் அந்த புலிக்கு பலியாக போவன!
    இன்று அந்த கூட்டத்தில் சேர விருக்கும் மற்றொரு மானாய் தான்!
    ஆனால் விதி வலியதாயிற்றே! காது வரை பசி அடைக்க அதை தீர்க்க கிடைத்த ஒரே மார்க்கம் இது தான்! எனினும் மானத்திற்கு கேடு என்றால் அரை வினாடியும் தாமதிக்காமல் உயிர் நீப்பதே சரி! மான்களின் வரிசையின் கவரி மானாய் அவள்! என்ன செய்வது பிறப்பில் இருந்தே வளர்ந்த முறை!

    மெல்ல அந்த கட்டிடத்தில் கால் எடுத்து வைத்தவளுக்கு உடல் அதிர்ந்தது!
    இது பயத்தால் வந்த உபாதை என்று சற்றே மனதை திடபடுத்தி கொண்டவள் அங்கிருக்கும் அழகிய பெண்ணிடம் சென்றாள்!
    வரவேற்பு!
    கண்டிப்பாய் இவள் அழகை பார்த்து ரசிக்கவே இங்கு கூட்டம்
    கூடும் போல!
    இனிய மொழியால் கொஞ்சினாள்!
    "தங்களுக்கு என்ன வேண்டும்?"
    சுயநினைவிற்கு மீள சற்று நேரம் பிடித்தாலும் முயன்று மீண்டவள் தன் இனிய குரலால் "முதலாளியை பார்க்க வேண்டும் இங்கு புதியதாய் வேலைக்கு சேர்ந்தவள்!" என்று கூற தொலைபேசி வாயில் அவள் உள்ளே செல்ல அனுமதி தர பட்டது!
    ஓ! பெண்னென்றதும் உடனே அனுமதியா?? கண்டிப்பாய் புலி குகை தான்! வெளி வருவேனா? இல்லை அங்கேயே மயிர் நீத்து உயிர் விடுவேனா????
    புலிவாலை பிடித்த கதையாய் உள்ளே செல்லவும் முடியாமல் வெளியிலேயே இருக்கவும் முடியாமல் தவித்தாள்!
    திடமே மனோபலம்!
    அதை மெல்ல கொண்டு வந்தவள் அறை கதவில் கை வைத்து கதவுக்கும் வலிக்குமோ என்பதாய் தட்ட அது கேட்டு விட்டதற்கு அறிகுறியாய் வரலாம் என்ற பதில்!
    உள்ளே சென்றவளுக்கு எதிரே கம்பீரமாய் ஒரு ஐம்பது வயதில் ஆண் சிங்கம் போல் நாற்காலியில்
    ஒருவர் வீற்றிருந்தார்!
    அவருக்கே செய்தார் போன்ற கம்பீரத்துடன்!
    குரலில் இனிமையை கூட்டி மரியாதை நிமித்தம் "உள்ளே வரலாமா அய்யா?" என்று அவள் கொஞ்ச அதற்கு எதிரொலியாய் அவர் கண்களின் ஒரு பளிச்சிடல்!
    ஆகா தனக்கு சரியான தீனி என்ற மகிழ்ச்சியா? இப்போதும் தாமதமில்லை வெளியே ஓடிவிடலாம் ஆனால் தன்னை போல் வீட்டில் காயும் இரண்டு வயிர்களுக்கு என்ன பதில் சொல்வது????

    உள்ளே கால் பதித்து மெல்ல நடந்தவளை உட்கார சொன்னவரது குரல் அவர் கம்பீரத்திற்கு ஏற்றாய் போல் ஒலித்தது!
    "நீ இங்கு வேலைக்கு தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி அம்மா! உன் சான்றிதழ்களை கண்டேன்! நல்ல புதிசாலி பெண்! நீ வாழ்வில் மேலும் முன்னேற என் வாழ்த்துக்கள்!" என்று கர்ஜனை செய்தார்!
    மரியாதை நிமித்தம் இரு புன்னகை செய்தவளுக்கு இன்னும் அந்த குளிர் முழுவதாய் நீங்குவதாய் இல்லை!
    அதை உணர்ந்தார் போல் அவர் குரல் ஒலித்தது!
    "ஏனம்மா ஒரு மாதிரி இருக்கிறாய்! பதட்டம் கொள்ள தேவை இல்லை! வேலையில் நான் உனக்கு முதலாய் என்றாலும் உணர்வில் அப்படி அல்ல! என்னை நெருங்கிய உறவாகவே கொள்ளலாம்!"
    அவள் உடல் மேலும் சில்லிட்டது!
    நெருக்கமான உறவென்றால் எந்த அளவு?? அளவு மீறி சென்றாள்?? ஒரு வேலை அதற்கு தான் இந்த அடிதளமா? எந்த அளவு நெருக்கத்தை குறிப்பிடுகிறீர் என்று கேட்டு விடலாமா?? என்று கூட தோன்றியது!

    அவள் பதட்டம் சற்றும் குறையாததை உணர்ந்தவர் போல் மெல்ல எழுந்து அவள் அருகில் வந்தார்!
    இதய துடிப்பு அவளுக்கு பந்தய குதிரையின் வேகத்தை மிஞ்சியது! பின்னங்கால் பிடரியில் பட ஓடி விடலாம் போல் ஓர் வேகம்!
    வந்தவரும் அதற்கு மகுடம் வைத்தார் போல் தலையை வருட அப்படியே எழுந்து விட்டாள்!
    "பதட்டம் கொள்ள வேண்டாம் மகளே! என்னவோ தெரியவில்லை! இந்த பிள்ளையற்ற கிழவனுக்கு உன்னை பார்த்தால் சொந்த மகளை பார்த்ததை போல் பாசம் ஊற்றெடுக்கிறது!"
    அவர் முடிக்கும் முன் அவள் விழி நீர் நிலத்தை தொட்டது!
    சே! எத்தகைய பெரிய மனிதரை தவறாய் கணித்தோம்! மகளே என்றவரை போய் வேட்டையாடும் புலிக்கு ஒப்புமை செய்தாளே!
    ஆனால் இவரோ அதற்கு நேர்மாறாய்!
    கண்கள் பணிந்து அவள் நிற்க "சென்று வா மகளே! உனக்கு ஏதேனும் தேவை என்றால் இந்த தந்தையிடம் தயங்காமல் கேள்!"
    திரும்பி நடந்தவளுக்கு ஏதோ ஒன்று தன்னிடம் இருந்து விலகியதாய்!
    இத்தனை நாள் பட்ட துயரமும் வேதனையும் நீங்கு ஒரு ஒளி தூரத்தில் தன்னை அழைப்பதாய்!
    கதவை திறந்து வெளியில் வந்தவளிடம் இருந்து அனைத்து ஆண்களையும் தவறாய் நினைக்கும் எண்ணம் விலகி ஓடியது!

    -
    முற்றும்-
     
    Last edited: Jun 27, 2010
    2 people like this.
  2. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    Nalla thuvakkam than....:)

    Maliniyin manathil oodum ennangalai azhagai sollirka yams.


    Keep going...:thumbsup




     
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female

    Nalla thuvakkam than....:)

    Maliniyin manathil oodum ennangalai azhagai sollirka yams.


    Keep going...:thumbsup
     
  4. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Good opening da...:wave
    Aana ulla hero irupaaru "M..." nra perla nu ninaichen...
    Just miss...shakehead

    Keep Rocking...:2thumbsup:
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks jaya akka!
    keep reading!:cheers
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    illa da i just wanted to try a different style adhaan!
    thanks dear!:cheers
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    appo ithu love story ilaya? shakehead
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    dai vaishu chumma oru short story! in one page!
    over that's all!:biglaugh:biglaugh
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    appo kathai mudinthatha... solave illa...:rant:rant:rant
     
    Last edited: Jun 27, 2010
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    mutrum pottutaen de!
     

Share This Page