1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் கள்வனே .....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கணவனாய் வந்த
    என் கள்வனே
    என்னுள் நிறைந்து
    எனக்குள் வழிகின்ற
    நம்
    காதலின் உணர்வு ......
    படிந்து படிகமான
    உன்
    பரிசுத்த அன்பு.:)
     
    Last edited: Jun 26, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    உன் உள்ளம் கொள்ளை கொண்ட
    உன் கள்வனுக்காய் உனது
    உணர்வுகள் கண்டு நான்
    மீள முடியாது வீழ்ந்தேன்
    மீட்க கூட யாரும் வேண்டாம்
    உன் வரிகளின் சுகத்தில்
    நான் திளைக்கையில்

    அடடா உன் கவிதைய விட பெரிய பின்னூட்டமாப் போச்சே ??? :crazy
     
    Last edited: Jun 26, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மூன்று நாட்களாய் இங்கு பெய்து வரும் சாரல் மழை.
    அவர் பக்கத்தில் இல்லை.
    எனக்கு வேறு என்ன வேலை
    மழைத் துளி பார்த்ததும் எங்கள் முதல் காதல் ஞாபகம்.
    முதல் துளி முதல் காதல்...நெஞ்சில் பட்டாம் பூச்சி....:)
    கணவனே கள்வனாய் காதலனாய்.
    மழை எனக்கு சில சமயங்களில் மழையோடு சேர்த்து
    கவிதையும் தருகிறது ......
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    தங்கள் மனதின் ஆழத்தில்
    உறைந்து போன உங்கள்
    மன்னவன் நினைவை
    அகழ்ந்தெடுக்க மழை
    போன்று யாராவது
    வந்தால் தான் முடியுமா??? :)
    இல்லை... மன்னவர்
    பிரிந்ததும், பிரிவு துயரில்
    மழை கண்ட மண்வாசமாய்
    கவிதை வருகிறதா?? :)

    எது எப்படியோ.....
    மழையால் வந்தால் என்ன???
    பிரிவால் வந்தால் என்ன??
    எனக்கு உங்கள் கவிதை
    வருவதே மிக்க மகிழ்ச்சி :crazy
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இது பிரிவென்று நான் நினைக்கவில்லை
    நினைத்திருந்தால் நின்றுப்பேன்....அவர் விட்டுச் சென்ற புள்ளியிலேயே .....
    ஆரம்பம் அது அன்பின் பிரவாகமாய்
    தொடரும் எங்கள் தொலை தூரக் காதல்
    (வேற வழி):hide:
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Neenga lucky ah... illa enga BIL(unga DH) lucky ah...

    Nice kavithai...
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    படிந்து படிகம் ஆனதால் ஸ்படிகம்,
    போன்றது அந்த பரிசுத்தமான அன்பு.
    மணாளனே மங்கையின் பாக்கியம் என்பது போல்,
    காதல் கள்வனே, கணவனாகி ஆயுள் கைதியாய் உன் மனச் சிறையில்.

    நன்று சரோஜ்.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இருவருமே கொடுத்து வைத்தவர்கள் உங்களின் பாராட்டைப் பெற.:)
    நன்றி என் தங்கையே.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஸ்படிகம் ஆன எங்கள் காதல் வைரமிழைத்த படிகமாய் உறுதியாய் அஸ்திவாரம் இட்டு நிற்கிறது
    பரிசுத்த அன்பினால் .....
    இருவருமே சிறை கைதிகள் தாம்....ஆனாலும் சுதந்திரமாய் காதல் வானில்

    அப்பாடா...இன்னைக்கு தான் நீங்க சந்தேகம் இல்லாம பதில் கொடுத்து இருக்கீங்க.:ideaபக்கத்தில அக்கா இருந்தாங்களோ ????

    பாருடா இப்போ எனக்கு சந்தேகம்....:hide:
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    good poem:thumbsup

    Saroj... paavam avara yen ipdi mariyaatha illaama avan ivan nu soldreenga... intha vishayam avarukku theriyuma????:)

    oru paravaiyum innum sikkaliya saroj?:hide:
     

Share This Page