1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

.... ...காதல் இசை ........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உனது சுவாசம் கொண்டு
    துளைகளுக்கிடையே
    நான் இசைக்கும்
    ஒற்றை ராகம்.

    காற்றின் இசை
    காதல் இசை
    நமது காதல்.
    இனிய புல்லாங்குழல் .........
     
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஓங்காரமாய் மிகச் சில நேரங்களில்
    ஒலித்தாலும், பல நேரங்களில்
    சில் வண்டின் ரீங்காரமாய்
    மனதை நிறைக்கும் உன் இசை

    இசை தரும் காற்றாய் உன்
    சுவாசம் வருவதானால்,
    துளை கொண்ட குழலாய்
    மாற எனக்கும் சித்தம்தான்
     
    Last edited: Jun 26, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    புல்லின் நுனியும் ரசிக்கத் தெரியும் .
    புல்லாங்குழலும் இசைக்கத் தெரியும்.

    என் இசைப்பில் நீ இசையானால்
    உன்
    வசம் இருக்கும்
    இசைக்கு எல்லாம்
    இசைவாய்
    அசையாய் நான் இருப்பேன்...:thumbsup
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அந்த இசையின் அசைவில்
    உள்ளம் உருகி உயிர் உடலை
    விட்டு சஞ்சலமின்றி வான
    வெளியில் சஞ்சாரம்
    செய்தாலும் சலிக்காது எனக்கு :)
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சலிப்பில்லா சஞ்சாரம் செய்ய
    உன் உயிர்க்கு வலிக்காமல்
    நான் தருகிறேன்
    சஞ்சீவினியாய்
    சங்கீத கீர்த்தனைகள்....
    அடங்கிடு நீ என் சிதைக்குள்....:coffee
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சலிப்பின்றி சஞ்சாரம் செய்ய இசையாய் உன் கவி கேட்டால்,
    சிதைக்குள் அடங்கச் சொல்கிறாய் செல்வமே...
    சிதைக்குள்ளும் ஒரு விதையாய் தான் அடங்குவேன்
    உனக்கு சம்மதமா??? :thumbsup
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சம்மதமே ....நீ சங்கீதம் என் சரீரமானால்
    வான வெளியில் சஞ்சரிப்பவளை
    என் சிதைக்குள் வரச் சொன்னால் ......
    என் சித்தமும் சிதையும் இசையாய் நீயாய் இருக்கவே.....
    விதையும் அங்கே விருட்சமாய்
    என் வரிகளுக்கு ஒரு வெளிச்சமாய் :)
     
  8. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அருமை... உங்கள் இருவரின் நட்பும் வார்த்தை விளையாட்டும்...
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்த உங்கள் ரசனைக்கு நன்றி
     
  10. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    உங்கள் புல்லாங்குழலின் ஒற்றை நாதம் மிக அருமை யாஷிகுஷி.

    தொடர்ந்த வேணி அவர்களின் கவிதைகளும், கவிதையில் உங்கள் உரையாடலும் ரசிக்க அழகாய் உள்ளது.

    விற்போர், சொற்போர் என பல போர்களைப் பற்றி கேட்டதுண்டு. இங்கென்ன கவிப் போர், போர் கூட அல்ல, மிக அழகான ஒரு கருத்துப் பரிமாறல் கவி வழி... அருமை, அருமை... நான் ஏன் இதை இத்துனை நாள் காண வில்லை???
     

Share This Page