1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எண்ண எண்ண திகட்டாத எண்ணற்ற தமிழ் பாடல்கள் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலாத பாடல் வரிகள்.கேட்கும் போதே மனம் லேசாகி கண்கள் இமைக்க மறுப்பவை சில.....பல வரிகள் கேட்டவுடன் கண் இமைகள் தாமாய் மூடிக்கொள்ளும் ...கண்களை நீரை வரவழைப்பன பல.காதல் நேசம் பாசம்.நட்பு,குடும்பம்,குதூகலம் என் அவை தொடாத உணர்வுகளே இல்லை. அருமையான மறக்க முடியாத அழியாத பாடல்கள் இப்போது நம் நினைவில் வந்து நிற்கின்றன.


    உங்களுக்காய் அவற்றைத் தொகுத்து கதம்பமாய் கொடுக்க இது ஒரு சிறு முயற்சி.உங்களுக்கு தெரிந்த பாடல்களின் வரிகள் இருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்... உங்களின் மனதிற்கினிய பாடல் வரிகள் வேண்டும் எனில் அதனையும் இங்கு பதிவு செய்யுங்கள் .உங்களுக்காய் இந்த தளத்தில் அவை இன்ப இசையாய் ........





    பாடல்: தமிழுக்கும் அமுதென்று பேர்
    திரைப்படம்: பஞ்சவர்ணக் கிளி
    பாடியவர்: பி.சுசிலா
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமுர்த்தி
    வரிகள்: பாரதிதாசன்


    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்!

    தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
    தமிழுக்கு மணமென்று பேர்!

    இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
    தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்
    தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
    தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்

    தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்
    தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
    சுடர்தந்த தேன்

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்

    தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்
    தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
    வயிரத் தின் வாள்

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
    இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்.
     
    Last edited: Jun 21, 2010
    3 people like this.
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    பொன்னை விரும்பும் பூமியிலே
    திரைப்படம் : ஆலயமணி
    பாடியவர் : T.m.செளந்தரராஜன்
    இயற்றியவர் : கண்ணதாசன்
    திரையிசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி

    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே
    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே

    ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
    ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
    தாய்மை எனக்கே தந்தவள் நீயே
    தங்க கோபுரம் போல வந்தாயே
    புதிய உலகம் புதிய பாசம்
    புதிய தீபம் கொண்டு வந்தாயே

    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
    பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
    அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
    அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
    இந்த மனமும் இந்த குணமும்
    என்றும் வேண்டும் என்னுயிரே

    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    ஆலமரத்தின் விழுதினைப் போலே
    அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
    வாழைக் கன்று அன்னையின் நிழலில்
    வாழ்வது போலே வாழவைத்தாயே
    உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
    உள்ளம் ஒன்றே என்னுயிரே

    (பொன்னை விரும்பும் பூமியிலே)
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்.

    திரைப்படம்:வீரத்திருமகன்
    பாடியவர்: Pb. ஸ்ரீநிவாஸ் , s. ஜானகி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை:விஸ்வநாதன் - ராமமூர்த்தி

    பாடாத பாட்டெலாம் பாடவந்தாள்...
    காணாத கண்களை காணவந்தாள்...
    பேசாத மொழியெலாம் பேசவந்தாள்

    பெண்ப்பாவை நெஞ்சிலே ஆடவந்தாள்...(2)

    மேலாடை தென்றலில் ஆகாகா
    பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
    கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
    கண்ணோடு பேசவா சொல் சொல்சொல் (பாடாத பாட்டெலாம்)

    அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா?
    அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா?
    மிச்சமா மீதமா இந்த நாடகம்..
    மென்மையே பெண்மையே வா வா வா (பாடாத பாட்டெலாம்)

    நிலவிலே நிலவிலே சேதி வந்ததா?
    உறவிலே உறவிலே ஆசை வந்ததா?
    மறைவிலே மறைவிலே ஆடலாகுமா?
    அருகிலே அருகிலே வந்து பேசம்மா.. (பாடாத பாட்டெலாம்)
     
    1 person likes this.
  4. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    டியர் சரோஜ்
    இந்த புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
    எனக்காக அமுதை பொழியும் நிலவே வரிகள் கொஞ்சம்
    முழுவதுமாக தர இயலுமா
    kantha
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    வாழ நினைத்தால் வாழலாம்
    திரைப்படம்: பலே பாண்டியா
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி


    ஆ...ஆ...ஆஹஹா ஓஹொஹோ... ஆ...ஆ...ஆஹஹா

    ஓஹொஹோ...

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
    ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா
    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
    ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம்
    தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி
    கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்.....

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
    ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

    கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால்
    வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால் த்ன்னை மறந்தே
    வாழலாம்..........

    வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில்
    ஆழக்கடலில் தோணியாக அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்

    ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
    துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி துடித்து நிற்கும் இளமை சாட்சி
    இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம்

    வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
    வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில்
    காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    பாடியவர்: எஸ். ஜானகி
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    திரைப்படம்: ஆலயமணி

    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
    தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
    தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    காலையில் நான் ஓர் கனவு கண்டேன் - அதை
    கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
    எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்
    கொடுத்து விட்டேன் உன்தன் கண்களிலே
    கண்களிலே கண்களிலே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    மனமென்னும் மாளிகை திறந்திருக்க
    மையிட்ட கண்கள் சிவந்திருக்க
    இரு கரம் நீட்டி திரு முகம் காட்டி
    தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
    தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
    தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
    தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
    ஆஹஹஹாஹஹா ஆஹஹஹா
    அஹஹஹஹாஹா ஹாஹஹஹா
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    அன்புள்ள ரோஜா,

    நல்ல முயற்சி. மிகவும் அருமையான சிந்தனை. கடல் போல குவிந்துள்ள பாடல் வரிகள், அதை அனுபவித்து கேட்ட உங்கள் வரிகள் மிகவும் உதவும். எனது பங்களிப்பும் நிச்சயம் உண்டு இதில். வருகிறேன் பாடல்களின் பட்டியலோடு....:thumbsup :cheers
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    உங்கள் முதல் பூங்கொத்து வாழ்த்துக்கு நன்றி..இதோ உங்கள் மனம் நிறைந்த பாடல் வரிகள் .......


    பாடல்: அமுதைப் பொழியும் நிலவே
    திரைப்படம்: தங்கமலை ரகசியம்
    பாடியவர்: பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கல்யாணசுந்தரம்
    இசை: டி.ஜி. லிங்கப்பா

    அமுதை பொழியும் நிலவே
    நீ அருகில் வராததேனோ
    அருகில் வராததேனோ?
    அருகில் வராததேனோ?

    அமுதை பொழியும் நிலவே
    நீ அருகில் வராததேனோ
    அருகில் வராததேனோ?

    அமுதை பொழியும் நிலவே
    நீ அருகில் வராததேனோ
    அருகில் வராததேனோ?

    இதயம் மேவிய காதலினாலே
    ஏங்கிடும் அல்லியை பாராய்
    ஆஆ.....
    இதயம் மேவிய காதலினாலே
    ஏங்கிடும் அல்லியை பாராய்

    புது மலர் வீணே வாடிவிடாமல்
    புது மலர் வீணே வாடிவிடாமல்
    புன்னகை வீசி ஆறுதல் கூற
    அருகில் வராததேனோ?
    அருகில் வராததேனோ?

    அமுதை பொழியும் நிலவே
    நீ அருகில் வராததேனோ
    அருகில் வராததேனோ?

    மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
    மறந்தே ஓடிடலாமா?
    ஆஆ.......
    மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
    மறந்தே ஓடிடலாமா?

    இனிமை நினைவும் இளமை வளமும்
    இனிமை நினைவும் இளமை வளமும்
    கனவாய் கதையாய் முடியும் முன்னே
    அருகில் வராததேனோ
    அருகில் வராததேனோ

    அமுதை பொழியும் நிலவே
    நீ அருகில் வராததேனோ
    அருகில் வராதாதேனோ?

    அமுதை பொழியும் நிலவே
    நீ அருகில் வராததேனோ
    அருகில் வராதாதேனோ?

    அமுதை பொழியும் நிலவே
    நீ அருகில் வராததேனோ
    அருகில் வராதாதேனோ?

     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்


    உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி....
    உங்கள் பாடல் பாட்டியல் வரும் முன் என்ன மனம் நிறைந்த பிரத்யோகமான பாடல் உங்களுக்காக :thumbsup:-)

    காதோடுதான் நான் பாடுவேன்
    படம் : வெள்ளி விழா
    இசை : குமார்.V
    பாடல் : வாலி
    பாடியவர் : L.R. ஈஸ்வரி

    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்
    விழியோடுதான் விளையாடுவேன் - உன்
    மடிமீதுதான் கள் மூடுவேன்

    (காதோடுதான்)

    வளர்ந்தாலும் நானின்னும் சிறுபிள்ளைதான் - நான்
    அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
    உனக்கேற்ற துனையாக எனை மாற்ற வா - குல
    விளக்காக நான் வாழ வழி காட்ட வா
    (காதோடுதான்)

    பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
    நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
    எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது - இதில்
    யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

    (காதோடுதான்)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: பழைய தமிழ் திரைப்பட பாடல்...வரிகள்

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
    படம்: இருவர் உள்ளம்.
    இசை : K.v.மகாதேவன்.
    இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்.
    பாடியவர்: பி.சுசீலா.

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
    உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
    உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
    விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
    வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
    பாடுமா

    (இதய வீணை தூங்கும் போது...)

    மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
    சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
    அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
    அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை
    செய்தானே

    உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
    உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
    பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
    பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
     

Share This Page