1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஓ..ரா...யி..ர..ம் பார்வையிலே....!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 19, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கணவனை இழந்த ஒரு இளம் பெண்ணின் பழைய வாழ்க்கைக்கான புதிய அஸ்திவாரம்..........

    வீட்டுக்குள் இருக்கையில்
    வேகமாய் என்மேல் படும் பார்வைகள்
    சாக்கடைக்குத் தப்பிய வார்த்தைகள்.

    வீதியில் நடக்கையில்
    வீணாய் என்மேல் படும் பார்வைகள்
    வீச்சருவாளுக்குத் தப்பிய வார்த்தைகள்

    வீடுவந்து சேர்கையில்
    எரிச்சலாய் என்மேல் படும் பார்வைகள்
    தற்கொலைக்குத் தப்பிய வார்த்தைகள்.

    தப்பர்த்தங்களாய் எப்போதும் பார்வைகள்
    என்மேல்.
    ஏகமாய்,ஏகாந்தமாய்,ஏளனமாய்
    அக்கினியாய்,அழுக்காய்,அசிங்கமாய்
    கடினமாய் ,கல்வெட்டாய், கரடுமுரடாய்
    முகஸ்துதியாய்,முகாந்திரமாய்.முணுமுணுப்பாய்
    பார்வைகளின் வெப்பம் தாளாமல்
    அவைகளின் அர்த்தம் தெரியாமல்
    நானும் என் விழியும்
    மனதோடு ஈரமாய் ........

    இத்தனைப் பார்வை என் மேல் ஏன் என்று
    அவள் அவனிடம்.
    ஒரு மணம் முறிந்து
    நான் மறுமணம் தேடுவதாலேயா ?
    ஒரு கணம் சிந்தித்து
    நான் உன்மனம் நிற்பதாலேயா?
    ஒரு கனம் குறைந்து
    நான் உள்மனம் நிறைவதாலேயா ?

    இத்தனைப் பார்வை என் மேல் ஏன் என்று
    அவள் அவனிடம்.

    அத்தனை பார்வைகள் இருந்தாலும்
    கரை தாண்டா அவை
    என் காதல் என்னும் திரை தாண்டி

    என் பார்வைக்குள் நீ இருக்கும்போது.
    ஓராயிரம் பார்வையில்
    உன் பார்வையை நான் அறிவேன்.
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்.

    அவன் அவளிடம்.


    ஊரார் பார்வைகள்
    இப்போது
    அட்ஷதைகள் எங்கள் வழிகளில் !!!!!!
     
    Last edited: Jun 19, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு ரோஜா,

    புண்படுத்தும் பேச்சினால், புண்பட்டு, பின்னாலே பண்பட்ட விதவையின் மனதை, வேர் முதல் விழுது வரை விளக்கிய உங்கள் வரிகள் அற்புதம். உங்கள் வார்த்தையில் அவளது உணர்வுகள் பளிச்சிடுகிறது. அவளது எண்ணங்கள் இன்னும் கொஞ்சம் நீள்கிறது .....

    கத்தி போல பார்வையும்
    கத்திச் சொன்ன சொல்லும்
    வத்திப் போன என் நெஞ்சில்
    சக்தி ஊற செஞ்சதம்மா....

    நிற்கதியா நின்ன என்னை
    உன் கதியா நீ நெனச்சே
    உன் வாழ்வில் என்ன இணைச்சு
    மறு வாழ்வு எனக்கு தந்தே

    ஓராயிரம் பார்வையில், உன் பார்வை தனிதான்
    உன் காலடி ஓசையிலும், உன் காதல் தடம் தான்
     
    Last edited: Jun 19, 2010
  3. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    கணவனை இழந்த இளம் பெண்ணுக்கு உங்கள் கவிதை, அவர்களது மறு வாழ்வு பற்றிய மனித சிந்தனைக்கு ஊன்றப்பட்ட விதை.

    திண்ணமாய் வெளிப்பட்ட
    உங்கள் எண்ணங்கள்
    தீர்க்கமாய் வெளிப்படுத்தின
    வெண்மைக்கு வண்ணங்கள்

    மிக நல்ல கவிதை யாஷிகுஷி
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நாம் வருந்தினாலும் வாடினாலும் மாறபோவதில்லை அவர்களின் குணம் என்பதை அழுத்தமாய் சொல்லியிருக்கிறது உங்கள் கவிதை......:thumbsup
     
    Last edited: Jun 19, 2010
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    சூரியனை பார்த்து நாய் குறைத்தால் அதற்காக சூரியன் வருத்தப்பட முடியாது...

    அருமை உங்கள் கவிதையும் அதன் கருத்தும்...
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Marumanam patriya ungal kavithai varaverka thakkadhu Saroj.......
    Samudhaay seerthirutham nam pola pudhumai pennalthaan miduyum !!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் வரிகளுக்கு நீங்கள் கொடுத்த அடி நாதம் அருமை....
    நன்றி :thumbsup
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    களத்தில் இறங்கி போராட முடியா விட்டாலும் என் கவிவரிகளில் அவற்றை கொடுக்கும் சுதந்திரமாவது மிஞ்சி இருக்கிறதே....அதற்காக மகிழ்கிறேன் ...கூடவே மென்மையான உங்கள் வரிகள் ...நன்றி
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உண்மைதான் பெண்ணே
    யார் மடிந்தால் என்ன யார் வாடினால் இவர்களுக்கென்ன ..பேசுகிற வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும்...அவர்களின் குணம் நமக்கு பலமாய் ....உறவுகளின் பாலமாய்...:thumbsup
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கணவனை இழந்தவளுக்கு பரிதாபப்படும் சமுதாயம் ஏன் இன்னும் அவள் மறுவாழ்வு கொள்ளும் விருப்பத்தை ஏற்பதில்லை!
    புலம்பும் வாய்கள் புலம்பி தான் தீர்க்கும்! உன்னை மட்டும் அல்ல அவனையும் தான்! அத்தனை தடைகளையும் மீறி
    உன் அருமை கண்ணாளன் உன்னை தாங்க காத்திருக்கையில் சமுதாயத்தை நீ தாங்குவதில் தவறேது பெண்ணே!
    வாழ்வு இனி உன் பக்கம்!
    அருமை சரோஜ்!:cheers
     

Share This Page