1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகிழ்ந்திரு மன்னவனே

Discussion in 'Regional Poetry' started by Sanmithran, Jun 15, 2010.

  1. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    துன்பங்கள் கண்ட போதும்
    துவளாமல் இரு துணைவனே
    துயரங்கள் வருகையில்
    தூணாய் தாங்கிடு தூயவனே
    இரங்கல்கள் வந்தாலும்
    இறுகாமல் இருந்திடு என்னவனே
    உன் முகம் கண்டு அகம் மலரும்
    எனக்காக....
    வாடிய உன் கண்கள் கண்டால்
    வதங்கிடும் என் ஜீவன்
    கூம்பிய உன் முகம் கண்டால்
    சோம்பிடும் என் இதயம்
    மகிழ்வற்ற உன் தோற்றம்
    என் உயிரின் வாட்டம்
    மகிழ்ந்திரு என் மன்னவனே
    உன் மகிழ்வால் என்னை
    மகிழ்வித்தே இரு ...
    ஒருவர், ஒருவராய் தனித்து
    இல்லாமல், இணைந்து ஒருவராய்
    ஓர் உயிராய் சேர்ந்திருப்போம் ..
    சோகம் வரினும் ஒருவரை
    ஒருவர் சார்ந்திருப்போம்
     
  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒரு புரிதலின்,
    உறவின் புரிதலின்,
    மகத்துவம் விளக்கும்
    கவிதை - தோள் கொடுத்து,
    துயரம் பங்கிட்டுத் தொடரும்,
    உறவு மிக அருமை தோழி.......
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஓருடல் ஈருயிர் என்பதை
    நேசம் மாறிடாமல்
    உங்கள் மன்னவன் மனம் நோகிடாமல்
    அவர் முகம் ஏரிடாமல் உள்மனம் வாடாமல்
    அள்ளாமல் குறையாமல்
    அலுங்காமல் குலுங்காமல்
    அழகாய் உங்கள் மனம் விரும்புபவனுக்கு
    நீங்க கூறிய உயிரின் வார்த்தை அருமை.
    சோகம் வந்தால் சோம்பிப் போகாமல்
    சேர்ந்தே இருப்போம்.......வெகு அழகு...
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஆஹா.....அருமையாய் சொன்னீர்கள்...மித்ரா....
    மகிழ்ந்திரு மன்னவனே ..என்னை மகிழ்வித்தே இரு....ஆழமான வரிகள்....


    நான் முகம் பார்க்கும் கண்ணாடி நீ
    நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்...
    நீ அழுதால் நான் இறப்பேன்....
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    really wonderful words you have chosen.........:thumbsup
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    நன்றி நட்புடன் அவர்களே....

    தோல்வியில் தோள் கொடுப்போம், சேர்ந்தே, ஒருவரை ஒருவர் சார்ந்தே இருப்போம் என்ற புரிதலை, இயல்பாய், இலகுவாய் சொன்னமைக்கு நன்றி
     
  7. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    எனது கவிதையின் கருத்தை என்னை விட அழகாக, அருமையாய் சொல்லி விட்டீர்கள் யாஷிகுஷி. நன்றி
     
  8. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    காட்சி ஒன்றாகினும் காணும் கண்களுக்கு அது வேறு வேறு விதமாய் பதியும். ஆனாலும் என் அகம் கட்டும் கண்ணாடி நீ. உன் முன்னாடி நான். உன் உணர்வுகளின் பிரதிபலிப்பை என் பிம்பம். என்று உங்கள் கருத்தை அழகாய் சொன்னமைக்கு நன்றி லதா
     
  9. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    எம் வார்த்தைகளின் அழகை சில வார்த்தைகளில் சொன்ன உங்கள் அன்புக்கு நன்றி தேவப்ரியா
     
  10. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice lines sanjana...
     
    Last edited: Jun 29, 2010

Share This Page