1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

14 கிருஷ்ண லீலா!

Discussion in 'Regional Poetry' started by deepa04, Jun 15, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    14 கிருஷ்ண லீலா!
    பால லீலா!
    ஆதிசேசன் ஆயிரம் தலைகளினால் பாடினாலும் ,முடிவற்றது அவன் பெருமை,
    ஆயிரம்,ஆயிரம்,உபதேசங்களை தன் பவள வாயினால் உதிர்த்த மணிவண்ணன்,
    யசோதயினை அன்னைஎன்றும்,நந்தரை தந்தையென்றும்,பலராமனை அண்ணாஎன்றும்,
    அழைக்க பழகியிருந்தான் ஆராவமுதன் என பெயர் பெற்ற எமது கண்ணன் .
    கண்ணன் அவன் முற்றத்திலே அண்ணனுடன் நடனம் ஆடுகின்றான்,பாட்டு பாடுகின்றான்,
    தன் சின்னச்சிறு பாதம் தனை தூக்கி வைத்து நடனம் ஆடி கண்டவர் மனதினை கவருகின்றான்,
    சில நேரம் முற்றம் விட்டு வீதி சென்று கருப்பு,வெள்ளை பசுக்களை பெரரிட்டு அழைகின்றான்.
    சில நேரம் வீட்டில் உள்ள வெண்ணைதனை,கைநிறைய அள்ளி வாயில் வைத்து சுவைக்கின்றான் ,
    சில பொழுது தன் பிம்பம்தனை,மணி மண்டபத்தில் பார்த்து மகிழ்ச்சி ஒலி எழுப்புகின்றான்,
    இச்செயல் அனைத்தும் கண்ட அன்னையவள் பார்த்த விழி பார்த்தபடி பூத்து நிற்கின்றால்.

    அன்னை யசோதையவள் தன் மைந்தனுக்கு பாலுட்ட விரும்புகின்றாள் .
    பாலை விட நந்த மைந்தனுக்கு வெண்ணை உண்ண அதிக ப்ரியம்,
    பால் நிறைய குடித்தால் தான் பெரியவனாய் ஆகிடலாம் எனசொல்லி,
    அன்னையவள் பால் புகட்ட,அதனை ஏற்றக்க மறுக்கும் மைந்தன் இவிதமாய் இயம்புகின்றான்.
    பாலருந்துவதால் ராம் அண்ணாவைப்போல் பெரியவனாய் ஆகிடலாம் என்று சொன்னாய்,
    கால்கள் கரும்பாம்பெனவே தரையினில் ஊன்றிடலாம் என்றும் சொன்னாய்,
    இவ்வளவு பால் குடித்தும் சிறியவனாய் தான் உள்ளேன்,அண்ணனை போல் இல்லை,
    நீ சொன்னது போல் ஒன்றும் ஆகவும் இல்லை,இதன் காரணம் என்ன தாயே?
    நீ ருசியற்ற பச்சை பாலை தருவதனால் ,அதை குடிப்பதிலே ப்ரியம் ஒன்றும் இல்லை,எனவே,
    எனக்கு, நன்றாக சமைத்த சுவையான ரொட்டியும் ,வெண்ணையும் தருவாய் என் அன்னையே
    தன் சின்ன செப்பு வாய் திறந்து ,மழலை மொழியினிலே கண்ணன் சொல்ல,தனை மறந்து தன்,
    செல்ல மகன் சொல்லும் வார்த்தைகளை மெய் மறந்து கேட்டு நின்றால் யசோதை தானே!

     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    yen deepa ka apdi oru peru vanthuchu? oru paatula koda ketturuken intha word... athu thaan ungakitta kekkuren...

    karum paambena oondridum na yenna ka artham????
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    yasothayai polave intha kavithai mozhiyil naanum mei maranthen...

    arumai thozhi...
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கிருஷ்ண லீலா வுக்கு தவறாமல் வந்து, கதை கேட்டு,கவிதை படித்து பின்னுட்டமும் தரும் தோழிக்கு நன்றிகள் பல!
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    தேவா,
    கால்கள் கரும்பாம்பெனவே தரையினில் ஊன்றிடலாம் என்றும் சொன்னாய்,
    இந்த வரிகள் ,சூர்தாஸ் தன கவிதையில் கையாண்டது.
    ஆதிசேசன் எனும் பாம்பே,நாராயணின் படுக்கையாய் அவரை தாங்கிடும்,எனவே பாம்பை உவமையாய் கொண்டு இந்த வரியை அமைத்து இருப்பார்கள் என்பது என்கருத்து.
    கால்கள் திடம் பெற்றால் நன்றாக ஊன்றிடலாம்,நடந்திடலாம்,ஓடிடலாம்.
    கிருஷ்ணன், தான் சீக்கிரம் வளர்ந்தால் ,தன் அண்ணனைப் போல் வெளியே சென்று விளையாடலாம் என எண்ணியதால்,இந்த வரிகளை சொல்வது போல் எழுதினேன்.
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks dear!
     
  9. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    rottiyum vennaiyum ketta kannan en munne nirkiraan ungal kavithai vadivil.

    Ramavyasarajan
     

Share This Page