1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நவ பாரதம் நம் கையிலே...

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 15, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வீட்டிற்கு இரு மரங்கள்
    குப்பையில்லாத தெருக்கள்
    ஆர்ப்பாட்டமில்லாத திருவிழாக்கள்
    மேடு பள்ளமில்லா சாலைகள்
    சாலரயோர மரங்கள், வீதிக்கொரு பூங்கா
    சுத்தமான காற்று, கழிவு நீர் சேராத ஆறுகள்
    சுகாதாராமான உணவு பழக்கங்கள்
    சுயநலமில்லா மனிதர்கள்
    புழுதி பறக்காத சாலைகள்
    நெரிசலில்லா போக்குவரத்து
    புகையில்லா வாகனங்கள்
    விபத்தில்லா பயணங்கள்
    பிளாஸ்டிக் தவிர்த்த கடைகள்

    எங்கு நோக்கினும் பசுமை
    அது தரும் குளுமை
    எங்கு நோக்கினும் சுத்தம்
    அது தரும் இதம்
    எங்கு நோக்கினும் ஒழுங்கு
    அதுவே நமக்கு அழகு

    இதெல்லாம் யாரோ நட்டு வைத்த மரத்தில்
    மொட்டு விடும் மலராய் நமக்கு கிடைக்காது
    நம் பாரதம் என்ற நினைவை மனதில்
    ஆழப் பதித்து, நீர் பாய்ச்சி, உரமேற்றி
    உருவாக்குவோம்

    வந்தோம், வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல்
    வந்தோம், வாழ்ந்தோம், வரலாறானோம் என்று வாழ்வோம்.

    நவபாரதம் நம் கையிலே ....
     
    Loading...

  2. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    wow veni ka...
    nalla karuthulla kavithai...
    arumai...

    :hiya naan than 1st...
     
    Last edited: Jun 15, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    என்னை போல நல்ல பிள்ளைகள் வேண்டும் ன்னு ஏன் சொல்லல????? :cry::cry:

    நானும் அப்படி தான் வேணி எப்படியாவது வரலாறுல என் பேரு இருக்கனும் ன்னு history book ல என் பேர எழுதி வச்சுருக்கேன்......... :rotfl

    அருமை உங்கள் கவிதையும் அதில் உள்ள கருத்தும்.....
    பின்பற்ற முயற்சிக்கிறேன் நான் நிச்சயமாக...
     
  4. reshmanoor

    reshmanoor New IL'ite

    Messages:
    41
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hi
    andha history book avathu ungakitta irukka illa edaiku pottacha?
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Veni...........idhu nadanthaal nalladhu........
    Ellorukkum indha madhiri vizhipunarchi vendum penne !!
    Selfishaaga illaamal seyal pattal nadakkum !!
     
  6. reshmanoor

    reshmanoor New IL'ite

    Messages:
    41
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hi veni
    these r all kanavugal namakku aanal ayal nadugalil adhuve nadaimurai.i am in australia and i too have think about these things but iam not a poet like you to pen those things coming to my mind.ungal kavithai arumai.adhuvum "yaro nattu vaitha marathil mottu vidum malargal" i like these lines very much.regards
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வேணி நானும் இதுபோல் கனவுகள் கண்டேன்
    பக்கம் பக்கமாய் வரிகள் கிறுக்கினேன்.
    ஆர்வக் கோளாறில்
    பூமி ஆர்வலர் அமைப்புகளில் உறுப்பினர் ஆனேன்
    நட்டது ஒன்றும் இல்லை நடந்ததும் ஒன்றும் இல்லை
    கெட்டது களைத்து கேடு நீக்கி என் பூமியை
    பசுமைப் படுத்திட நானும் முயன்றேன்.....
    கானல் நீராய் போனது என் கை காரியமெல்லாம்
    அரசியல் சாயம் ,அருவருப்பான மனித நேயம்....
    நான் அதில் தொலைந்து போக மன இல்லாமல்
    வந்து விட்டேன் என் கனவுப் பைகளுடன் பத்திரமாய்

    என் பிள்ளைக்கும் இதே ஆசை....
    தீபாவளி பட்டாசு அவனுக்கு எட்டிக்காய் ......மாசு கட்டுப்பாடு அவனுக்கு தித்திப்பாய் ...அவனது சமூக அக்கறை எனக்கு தேவாமிர்தமாய் ....வளரட்டும் இதுபோல் உரமான வருங்காலத் தூண்கள்...
    அப்போ நாம் ?????????
    நெஞ்சம் கணக்க இந்த பின்னூட்டம்....
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வேணி,
    அருமையான நவ பாரதம் கண் முன்னே விரிந்தது உங்கள் கவிதையில்.
    ஆனால்,கவிதையில் மட்டுமே காண முடிகிற பாரதமாய் உள்ளதே!
    கனவை ,நினைவாக்க என்னால் முயன்றதை முயற்ச்சிக்கிறேன்!
    இதுவே ஒவ்வொரு ,இந்தியனும் செய்ய வேண்டியதும் ,
    முயல்வோம் ,முடிப்போம் !
    கண் முன்னே வடிப்போம் நவ பாரதத்தை!
     
  9. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    veni...arumayaana karuthulla kavithai....

    naam ondru nenaithu seyal pattal..athai thakarkka aayiram per varugiraargal...enna seiyya....
    saroj neengal solvathu migavum sari...namathu ennangalai..intha thalaimuraiyin manathil pathippom...ini varum samuthaayathaiyaavathu kaappom....
     

Share This Page