1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண்களால் கைது.....

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 11, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உன் கருவண்டு கண்மணிகள்
    சிறைபடுகின்றன
    நீ கண்களை மூடும்போது
    சிப்பிக்குள் தத்திய முத்துக்களாய்.........

    திறந்து விடு.
    என் கற்பனையின்
    வழித்தடங்கள் அவை.
    என் பிரவாகத்தின்
    பிறப்பிடம் அவை ......
    பிழைத்துக் கொள்ளட்டும்
    உன்னை மீண்டும் ஜனிப்பிக்க !!!!!!!


    [​IMG]
     
  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிப்பியில் தப்பிய
    நித்திலமே என்
    அஞ்சுகமே....

    உன் கண்களால்
    கைதாக ஏங்கி
    நிற்கும் இந்தப்
    பேதை....

    சிறையோ
    உன் இதயப்
    பேழை
     
    Last edited: Jun 11, 2010
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    nandru ungal varigal....:)

    vizhi thiranthu ungala oru thadava paathutta marupadiyum polaikka mudiyuma ka?????:hide:
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சூப்பர் சரோஜ்.

    கண்கள் மூடும்பொழுது,
    சிப்பிக்குள் இருந்து தப்பிச்,
    சிதறிய முத்தாய் ஓடிடுவேன்,
    தப்பிப் பிழைத்து மீண்டும் ஜனிக்க,
    உன் கண்கள் எனும் சிறையில் வதை படாமல்.
     
  5. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    கவிக்குயிலின் கவிதை பிறக்கும் கரு விழிகள் எங்கேயோ?
    சிப்பிக்குள் முத்து ! கண்ணுக்குள் கருமணி ,பாப்பா!-அருமை!
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    azhagaana..kavithai......saroj..:thumbsup

    kangalai thirakkatha pothey...ivvalavu kavithaigal kottukirathey....
    innum kangalai thiranthu vittal....
    appapa...thaanga mudiyaathu pola irukke...:hide:
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கைதுக்கு ஏங்கும் என் பேதையே
    என் இதயப் பேழையில்
    உன்னை பொதிந்து வைத்திருக்கிறேன்
    தங்க இழையால்....
    சிறை என்று சொல்லாதே....
    சிறகடித்து பறக்கும் தங்க வனம் என்று சொல்.:)
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female


    என் விழி பார்த்தால் நீயும் எழுதுவாய் இதுபோல் ஆயிரம் கவிதை.....
    இதை நான் சொல்ல வில்லை....படத்தில் இருக்கும் விழியாள் சொல்லுகிறாள்.
    நன்றி
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சரோஜ் - ஏதாவது கிராபிக்ஸ் படம் அட்டாச் பண்ணி இருக்கீங்களா?

    எனக்குத் தெரிய வில்லையே ஒன்றும்?
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதல் மூன்று வரிகள் நன்று.
    நான் சொன்ன கருத்தின் எதிர் முனை தாக்குதல் மீதி வரிகள்.
    கைதியாய் நின்றாலும் பரவாய் இல்லை.உன் விழிகளில் என்னை படர விடு .தப்பிச் சென்று உன்னை ஜீவனாய் தாங்கும் பொறுப்பு எனக்கே......
    மிக அருமையான சொல்வளம் உங்கள் பின்னூட்டத்தில்.நன்றி:thumbsup
     

Share This Page