1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவே என் உறுதி மொழி!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 10, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    உணர்ச்சி பொங்க கவிபாடினான்!
    கடைசியில் அவன் கவி மட்டுமே வாழ்ந்தது நிலையாக!!
    அதன் கருத்துகளுக்கு ஏது இங்கு மரியாதை?
    நாட்கள் செல்ல செல்ல
    அடுத்த தலைமுறை கேட்கிறார்கள் இவர் யாரென்று??
    மகாகவியே!
    தமிழ் மொழியாம் ஆணி வேர் நீ!
    உனக்கே இந்நிலை என்றால்?
    அம்மர கிளை துளி நீரான எங்களின் நிலை என்ன??
    காற்றடித்தால் காணாமல் போய் விடுவோம் போல!
    இருந்தும் அயராது உழைப்போம்!
    உயிர் இருக்கும் வரை!
    தமிழ் மொழிக்கு உயிர் கூட்ட!
    அதை அழியாமல் காப்பேன் என் உயிர் உள்ள வரை!
    இதுவே என் உறுதி மொழி!:bowdown
     
    Loading...

  2. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    யாமினி அருமை உன் உறுதி மொழி.

    காதலா? கவிதையா? காதல் கவிதையா?

    இறுதியாகச் சொல்.....உறுதியாகச் சொல்.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    காதல் என் உயிர்!
    கவிதை என் சுவாச காற்று!
    இதில் எதை நான் துறக்க??
    இரண்டுமே எனக்கு வேண்டும்!
    நன்றி தோழரே!
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அவன் இல்லாமல் தமிழ் அவணி இல்லை
    இதை ஆணித்தரமாய் நான் சொல்வேன்
    உயிர் கொடுத்த கவிஞனின்
    வரிகளை வாழ வைக்கும் உன்னுடைய உறுதியில்
    நானும் நுழைகிறேன் சடுதியில்
    அந்த ஆணி வேர்களின் கிளை வேர்களாய் நாம் நிற்போம்
    தமிழ் பரப்பும் ஊடகமாய் ......

    வீழ்வது நாம இருப்பினும் வாழ்வது நம் தமிழாக இருக்கட்டும் ....Bow.
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள யாமினி,

    அவர் உயிருடன் இருக்கையில் கை கொடுக்கத்தான் யாரும் இல்லை அவருக்கு. அவர் வளர்த்த தமிழை வளர்க்கவாவது கை கோர்த்து காத்து நிற்போம், நாம் வீழும் வரை. அவர் மறைந்து போனாலும் மறவாது தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையே உருவாக்கிய பெருமை அவரையே சாரும். ஆணி வேறாக, ஆல மரமாக அவர் இருக்க, அதை தாங்கும் விழுதுகள் வளர நாம் சிறு துளி மழையாகவாவது இருப்போம் என உன்னுடன் நானும் உறுதி கூறுகிறேன்.
     
  6. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    yamini ka.... azhagaana urithimozhi.....:clap urithimozhi eppothum nilaikka en vaazhthukkal....:):thumbsup
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    ஆம் தோழியே ......நீ சொல்வது உண்மைதான்..

    தமிழுக்காக தன் வாழ்வையே கொடுத்திட்ட நம் மகாகவியின் வழியில் நாமும் நம் தித்திக்கும் தாய் மொழியாம் தமிழ் மொழியை சுவாசிப்பதே பிறவிப் பயன் என்று கருதுவோமாக .....

    நின் உறுதியில் நாங்களும் பங்கு கொள்கிறோம்....:thumbsup
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    சடுதியில் நுழைந்து உறுதிமொழியில் பங்கு கொண்டு தரணியில் தமிழுக்கு துணையாய் நிற்கும் என் அன்பு ரோஜாவே என்றும் நின் அழகு கவிகள் அதை தாங்கியே பிடிக்கும் என்பது நிச்சயம்!:thumbsup
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    உயிர் தமிழ் கொண்ட மர வேர் உறுதியாய் நிற்க துணையான மழை நீராய் தாகம் தணிப்போம் நம் தமிழ்த்தாய்க்கு என்று கை கொடுத்த அன்பு தோழிக்கு நன்றிகள் பல!
    நின் கவி நீர்களால் கண்டிப்பாய் அதன் தாகம் தணிப்பாய்!
    :cheers
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    தித்திக்கும் தாய் மொழியாம் தமிழ் மொழி என்றுமே திகட்டாது!
    அதன் சுவையை மற்றோருக்கு பகிர்ந்து மேலும் சுவை காண கை கொடுக்கும் இனிய தோழிக்கு நன்றிகள் பல!
    உறுதி மொழி காப்போம் ஒன்றாக!:thumbsup
     

Share This Page