1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படைப்பு கடவுளுக்கு ஒரு வேண்டுகோள்

Discussion in 'Regional Poetry' started by periamma, Jun 8, 2010.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அனுபவிப்பதற்கு ஒரு இனம்

    வதைபடுவதற்கு ஒரு இனம்

    இறைவா உன் படைப்பில்

    ஏன் இந்த ஓரவஞ்சனை

    உன்னிடமும் ஆணாதிக்கம் உள்ளதால் தான்

    உன் இனத்தவரிடமும் ஆணாதிக்கம் உள்ளதா

    நீ அனைவருக்கும் உரியவன்

    அதனால் சமமாக படைத்திடு
     
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பெரியம்மா....

    வதைக்க படுவோரின் மனதின் அழுகையை அழகான வரிகள் கொண்டு கேள்வியாய் கேட்டு விட்டீர்கள்.... இதார்க்கு பதில் யார் குடுப்பாரோ.... ஆனால் இந்த ஓரவஞ்சனைக்கு தடை இல்லை அல்லவா... அது பாட்டுக்கு நடந்துகொண்டிருக்கிறது......
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி சந்தியா.நம் தோழிகள் பலர்(நானும் அதில் அடக்கம்) மிகவும் பாதிக்கப்படிருக்கிறார்கள்.அதனால் வந்த வேண்டுகோள் இது.
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    ருக்மணி,
    உங்களுக்கு,கடவுள் மேல் கோவம் அதிகம் தானோ!
    ஆணாதிக்க வர்க்கம் என,அவரையும் சாடியுள்ளீரே!
    கடவுள்,ஆண் தான்,என்பதில் ஐயம் இல்லையா?
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள அம்மா,

    ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் தானே.... படைக்கப் படும் அனைத்தும் அவருக்கு சமம்தான். சமுதாய ஏற்றத் தாழ்வுகள் கடவுளால் உருவாக்கப் பட்டவை அல்ல, மனிதர்களால். மனிதர்கள் இருக்கிறார்கள் நிறைய. ஆனால் மனிதம் தான் செத்துக் கொண்டிருக்கிறது......
     
    Last edited: Jun 8, 2010
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female

    தீபா

    உங்கள் fbக்கு நன்றி.அருகில் உள்ள மனிதர்களிடம் கோபப்பட முடியவில்லை.அதனால் தான் ஆண்டவனிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எல்லா ஆண்களும் இல்லமா..... சிலரின் தவறால் அனுபவிகின்றனர் அனைவரும்
    ஆண்டவனும் தப்பவில்லை அதிலிருந்து உங்களிடம்...... அருமை அம்மா........
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    வேணி
    சமுதாய வேறுபாடுகளை நான் குறிப்பிடவில்லை. ஆணாதிக்கத்தை தான் நான் கூறியுள்ளேன்.செத்துக்கொண்டிருக்கும் மனித நேயத்திற்கு உயிர்ருட்டத்தான் ஆண்டவனை வேண்டுகிறேன்.
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பிரியா

    விதிவிலக்கு உண்டு.ஒரு சிலர் அல்ல பலர் தவறு செய்கின்றனர்.படைப்புகள் உணரவில்லை என்றால் படைத்தவனை தானே கேட்கவேண்டும்.பம்பரம் சரியாக சுழலவில்லை என்றால் சுற்றியவனைதானே கேட்கமுடியும்.நன்றி பிரியா.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அது புரிந்தது அம்மா. முதலில் நான் எழுதியது வேறு. பின்னர் அதை இங்கே அனைவரும் படிக்கும் இடத்தில் போடுவது அத்துணை சிறப்பாய் இருக்காது என்பதால் இப்போது இருப்பது போலே எழுதினேன்.
     

Share This Page