1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஞானக்கவிதைகள் - நிலாரசிகன்

Discussion in 'Regional Poetry' started by Nilaraseegan, Jun 3, 2010.

  1. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    1.
    வெண்ணிற பூக்கள் சிதறிக்கிடக்கும்
    மண்பாதையில் ஒரு பலூனுடன்
    நடக்கிறாள் சிறுமி.

    வண்ணத்துப்பூச்சியை விரட்டிக்கொண்டு
    ஓடுகிறான் காவி உடை அணிந்த
    சிறுவன்.

    நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்
    மஞ்சள் நிற ஆற்றில் இரண்டு மீன்கள்
    துள்ளி விழுகின்றன.

    தன் குஞ்சுப்பறவையை முத்தமிட்டு
    சிறகடிக்கிறது தாய்பறவையொன்று.

    கருநீல வானை கிழித்துக்கொண்டு
    வீழ்கிறது மழைத்துளி.

    தெருவோர
    ஓவியத்திலும் மிச்சமிருக்கிறது
    வாழ்க்கை.


    2.


    நீந்துதலின் சுகம் பற்றியும்
    சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
    இரு மீன்கள்.

    குளம் வற்றிய ஓர் இரவில்
    பறத்தலின் சுகம் பற்றி அவை
    பேச ஆரம்பித்தன.

    உரையாடல் முடியும் முன்பே
    நின்றுபோனது அனைத்தும்.

    மெளனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
    நிலா.

    3.

    எறும்பின் மரணம் குறித்த
    விவாதம் துவங்கிற்று.

    முதலாமவன் எறும்பின் மரணம்
    நிச்சயம் என்றான்.

    இரண்டாமவன் எறும்பிற்கு மரணமில்லை
    என்று வாதிட்டான்.

    மூன்றாமவன் எறும்பின் மரணம்
    கவனத்துக்குரியதல்ல என்றான்.

    ரயிலைப் பற்றிய அக்கறையின்றி
    தண்டவாள விவாதத்தில் ஊர்ந்து செல்கிறது
    ஓர் எறும்பு.

    4.

    காற்றுப்புகாத கண்ணாடிச்சுவரின்
    மறுபக்கத்தில்
    கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்
    அவர்.

    ஓர் இலையை இழுத்துக்கொண்டு
    மரமேறிக்கொண்டிருக்கிறது
    கட்டெறும்பு.

    இறைக்கும் இயற்கைக்கும்
    நடுவே
    தங்கள் நிழலுடன் யுத்தமிட்டு
    சரிகிறார்கள்
    இந்த வழிப்போக்கர்கள்.

    - நிலாரசிகன்.
     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Saatharanama nadakkuratha evlo arumaya sollirukkeenga........ Fantastic......
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள நிலாரசிகரே!
    உண்மையிலேயே ரசிகர் ஐயா நீர்!
    என்னே உனது கற்பனை?? என்னே உனது வரி திறன்??
    அற்புதம்!
    மேலும் படைத்திடும்!
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    romba arumaya...elimaya solli irukeenga rasigare.....
    ungalukku thaguntha peyar than...

    innum engalukku theriviyungal ungalin rasanagailai....
     
  5. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    anbulla nilarasigan

    ungal peyarileye ungal rasigathanmai velippadugirathu. paarkkum idangalellaam neer kavithaiyai kaangireer. romba yathaarthamaana vishayangal ungal varigalaal kaaviyama aagirathu.


    ganges
     
  6. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு என் நன்றி :)
     
  7. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Nilaraseegan,

    சாதரணமாக நடக்கும் விசயங்களை கூட,
    இரசனைக்குரிய விதமாக மாற்றும்
    இரசவாதம் கற்றவர் நீங்கள்....
    எனக்கு வியப்பு தான் மிஞ்சுகிறது...
    அது எப்படி நீங்கள் தூரிகை பிடித்து,
    எழுதுவதெல்லாம் தூவானமாய்
    எங்கள் இதயம் நிறைக்கிறது..
    நிலவொளி இரசிக்கும் இரசிகை நான்
    இன்று இந்த நிலாரசிகனின் இரசிகையாகவும்...
     
  8. Nilaraseegan

    Nilaraseegan Bronze IL'ite

    Messages:
    253
    Likes Received:
    24
    Trophy Points:
    33
    Gender:
    Male
    சாதாரணங்கள்தான் சதா ரணமாக்குகிறது மனதை...
    நன்றி பாரதி :)
     

Share This Page