1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்---கிளி!!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jun 6, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
    கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
    அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?.....பாரதியார்




    [​IMG]


    இல்லுப்பை மரத்தின்
    கிளைகளின் இலைகளில்
    ஆரவாரக் கூச்சலுடன்
    இலைப்புதருக்குள் இலைப்பொதி போல
    எரி நட்சத்திரமாய் கிளிக் கூட்டம்.
    உருட்டிபார்த்த வல்லூருவின் ஓர் அசைவில்
    அத்தனை இலைகளும் கிளிகளாய்.
    மேலெழுந்து
    வானின் நிறத்தை தம்
    சிறகுகளால் மூடி
    காற்றி வெளியை கூடாக்கி
    பூமியை நெல் தானியமாக்கி
    அண்டவெளியே
    ஆலோலங்கிளியின் தேசமாய் போனது.

    விச்சு,,,, கிச்சு
    கீச் கீச்......
    ஸ்வீட்டி,,,, ட்வீட்டி
    கீச் கீச் ......
    இவையெல்லாம்
    உனக்குச் செல்லப் பெயராம்!
    சொன்னதைச் சொல்லுமாம் கிளிப் பிள்ளை.
    சொல்லித்தான் பாரேன்
    நீயும் உன் பெயரை
    கீச் கீச் ......

    ஊஞ்சலில் ஆடி
    வித்தைகள் செய்யும்
    வித்தாரக் கள்ளி நீ!
    மோசமான முடக்கு வாதத்தால்
    செயலிழந்து, பேச்சற்று
    ஞாபகம் அற்று சஞ்சலம் உற்று
    இருப்பவர்க்கும் இறப்பவர்க்கும்
    நோய் போக்கும்
    வைத்தியம் செய்யும்
    மருத்துவ மேதாவி நீ!

    தேசியப் பறவையைத் தோற்கடித்த
    ஜோஷியப் பறவை நீ !!!!
    ஹாசியமாய் இருந்தாலும்
    பாஷைகளைப் பேசும்
    ஞானமுள்ள தனிப்பிறவி நீ!

    கிச்சு கிச்சு கீச்சுக் குரலில்
    உன் பேச்சு கேட்கவா?
    கீதம் போல்
    மேல் அலகு மட்டுமே ஆட
    கிள்ளைமொழி கேட்கவா?

    எழுத்தறிவும் இருந்ததில்லை
    எழுதிவைத்தும் படிப்பதில்லை
    ஆய்வும் செய்வதில்லை
    அந்த பயம் உனக்கில்லை
    உள்வாங்கி பின் பேசும்
    உன் பேச்சு
    அச்சச்சோ கிளியக்கா.....
    என் சொல்வேன்
    உன் அருமை!

    வதவத இனப்பெருக்கம் உன்னிடம் இல்லை
    ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே
    என்னே உன் சிக்கனம்!!!!!!!

    தளிர்ப்பச்சை, எலுமிச்சை
    தங்ககிரணம் பஞ்சவர்ணம்
    வெண்பஞ்சு வெண்சாம்பல்
    பட்டுத்துணி,கெட்டிநீலம்
    இத்தனையும் உன் நிறமா????????

    எத்தனை வண்ணங்கள் இயற்கையிலே
    அத்தனையும் உண்டு உன் மேனியிலே
    பித்தனாய்
    நான் மட்டும் உன் பச்சையிலே!!!!!
    சிறகடித்துப் பறந்தோடும்
    படபடக்கும் பாய்மரச் சிறகுகள்.
    தொட்டு விட்டு குட்டு வைத்தாற்போல்
    பொட்டுவடிவ விழிகள்.
    மங்கையர் கை வளையலாய்
    மாறிவிட்ட உன் மணிக்கழுத்து.
    தன்னாலே தன்னாலே

    குட்டைகுடை விரித்து அதன் நடுவே கம்பிகளாய்
    தத்தித் தாவும் உன் கட்டை விரல்கள் .....
    நிலத்தில் விளைந்த வளைந்த நெடுங்காயாய்
    கொவ்வைப்பழச் சொண்டு.......
    மாலைக் கதிரவனின் உரம் பாய்ந்த ஒளிக்கற்றாய்
    கொத்தித் தின்னும் உன் கூர் மூக்கு......
    முக்கனிகளில் முதல் கனி உன் மூக்கு -மனித
    முகம் காட்டும் வளை மூக்கும் உன் மூக்கே.
    கிளிபோல பெண் என்றும் சொன்னதெங்கே
    உவமை உருமாறிப் தடுமாறிப் போனதிங்கே.
    உன்னாலே உன்னாலே!!!!


    உன்னைச்சுற்றி ஓராயிரம் கனி இருக்க
    கனியாத இலவம் காய்க்காய்
    நீ காத்திருந்ததும் ஏனடி?
    இலவு காத்த கிளியென
    ஏளனப் பேச்சும் எதற்கடி?
    காதலுக்கு உருவகம் நீயடி
    அதற்காய்
    நிலவு காக்கும் கிளியென
    பட்டமும் கொடுப்பேனடி.

    வண்ணங்கள் பலவென்றாலும்
    கர்வம் ஏதும் இல்லாமல்
    நட்புடன்
    பகிர்ந்துண்ணும் பாசக் கிளிகள்.
    நாளையும் வேண்டும் பணம்
    என்கிறது மனிதமனம்
    நாளையே மாயை என்பது
    உன் குணம்.

    கிளுகிளுப்பு நிறத்தாலே
    கிறங்கடிக்கும் பேச்சாலே
    சிரிப்பும் சிறு கெக்கலிப்புமாய்
    சுதந்திரமாய் சுற்றித் திரிந்த
    என் மனக்கவர்ந்த பச்சைக்கிளி
    பக்கத்துக்கு வீட்டு
    விட்டத்தில்
    தொங்க விட்ட கூண்டுக்குள்
    பாவமாய்.......!!!!

    தோளில் அமர்ந்து
    கொஞ்சி துஞ்சும் வேளை போக
    மீதி நேரம்
    தங்கக் கூட்டுக்குள்.....

    பச்சைப் பசேல் காடும்
    பறந்து திரியும்
    உரிமையும் பறிக்கப் பட்ட
    சிறகடித்து சிறகொடிந்து சிறகுதிர்ந்த
    என் செல்லக் கிளி........


    கூண்டுக்குள் நான்
    என்
    மனசாட்சிக் கூண்டுக்குள் நான்!!!!!!!



    [​IMG]

    என் கிளியின் பேச்சையும் என் கவியின் நீளத்தையும் பொறுத்துக் கொண்டு பொறுமையாய் படித்ததற்கு நன்றி.[​IMG].[​IMG].[​IMG].
     
    Last edited: Jun 6, 2010
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜாவே!
    அச்சோ உன் கிளி பேச்சில் மயங்கியே போனேனே!
    என் உள்ளம் கவர்ந்த அழகு கிளி இன்று உன் சொற்களையும் கவர்ந்ததுவோ??
    நன்றாக தெரிந்ததடி அவை சொல்லபட்ட அழகுதனில்!
    இன்று வரை கிளியை காண ஏங்கிய என் இதயம் இன்று நிம்மதி பெற்றது உன் கவிகிளியின் அழகில் மயங்கி!
    அருமை தோழி! ஒவ்வொரு வார்த்தையும்!:thumbsup
     
  3. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    hey saroj dear,
    superb poem from great poetess.....abt parrot :thumbsup. post more n more.....
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Saroj, how can you write such lengthy poetry pa.......
    Even to form one single whole sentence makes me tired ........my god, amazed at your tamizh valam !1
     
  5. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    wow...super poem saroj...:thumbsup

    enakkum kiligalai romba pidikkum...anal avatrinai patri neraya visayangal ungalin kavithai moolam therinthu konden...

    migavum azhagana kavithai...:)
     
  6. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    saroj,
    very nice .
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கொஞ்சும் கிளி மொழி பற்றி அதே போன்று அழகாய் கொஞ்சும் தமிழ் மொழியில் சொன்ன தங்களுக்கு என் பாராட்டுக்கள்...... :)
     
  8. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    First of all, wanna say thank u and :bowdown:bowdown:bowdown this is for the excellent poem at the earliest (for my request) ....

    Its really a great pleasure to see a poem on my chella pullai "Vichu"...
    I love him and he will call me as Bharu, bharu pappa and sometimes "Amma vaa" I missed him a lot when i came to here...

    தேசியப் பறவையைத் தோற்கடித்த
    ஜோஷியப் பறவை நீ !!!! :biglaugh
    ஹாசியமாய் இருந்தாலும்
    பாஷைகளைப் பேசும்
    ஞானமுள்ள தனிப்பிறவி நீ!:thumbsup

    But ur poem made me to feel the feeling of having him with me now..

    U are reflected my mindset about my vichu on the last lines of this poem very exactly...

    கூண்டுக்குள் நான்
    என் மனசாட்சிக் கூண்டுக்குள் நான்!!!!!!!

    But he is with me from his birth... he started to sleep on my hand in his first day... till that day, he became my child..

    Kuyilidamirundhu en kili patriya paadal, arumai.... no words to say... only

    :bowdown:bowdown:bowdown:bowdown:bowdown
     
  9. tbharathit

    tbharathit Silver IL'ite

    Messages:
    1,124
    Likes Received:
    18
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hi Saroj,

    Pl see my avatar.. adhu dhan en chella pillai vichu voda photo...
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யாம்ஸ் குட்டி
    கிளி குயில் மைனா பார்க்கணும்னா, உடனே என் வீட்டுக்கு வரவும்
    உங்கள் வருகையை முன் பதிவு செய்தால்
    முற்றிலும் வித்தியாசமான வரவேற்பு கிடைக்கும்
    என் என் வேடந்தாங்கலின் பறவைகளிடமிருந்து:rotfl
    எப்பவுமே இவைகளின் சங்கீதம் தான் என் காதுகளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும் ரம்யமாய்
    நன்றி என் கிளியின் குயில் பேச்சைக் கேட்டு ரசித்து மயங்கி மகிழ்ந்து ........
     

Share This Page