1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இதுவல்லவோ பாசம்!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 3, 2010.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female

    உல்லாச பறவை கூட்டங்களுக்குகிடையே!
    நானும் ஓர் பறவையாய்!
    விரும்பி வந்த இடம் இன்று தனிமையாய் தோன்ற!
    துக்கமாய் திரும்பி பார்க்க!
    தோள்கொடுக்க காத்திருந்தனர் என் பின்னே!

    வேதனையில் நான் வீழ்ந்து விடாமல்
    தாங்கி பிடிக்கவே என்று அறிந்தேன்!

    மனம் மட்டுமல்ல!
    இன்று விழிகளும் கலங்கியது இதுவல்லவோ பாசம் என்று!:bowdown
     
    Loading...

  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மற்றவர் உற்றவர் ஒதுங்கினாலும் கை கொடுக்கும் நேசமாய்
    நெஞ்சிலே உள்ள பாரம் இறக்கி வைக்கும் சுமை தாங்கியாய்
    துவண்டாலும் தோளோடு தோளாய் ஆறுதல் தரும் தேராய்..
    நம் பின்னால்,பக்கத்தில்,முன்னாள் செல்லும் இந்தக் கூட்டம்
    நமக்கு புதிய உத்வேகம் கொடுக்கும் கூட்டம்...நம் நண்பர் கூட்டம்...
    இன்னும்..இன்னும்.....
    நான் நிறைய அனுபவித்து விட்டேன்...இங்கு வந்த பிறகு
    மகிழ்ச்சி.உன் வேதனை காணாமல் போனதற்காய்.
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ் அது வேதனையே அல்ல
    சூரியன் மறைத்த மேகமாய் என்னை சூழ்ந்ததென அறிந்தேன்!
    இப்போது சுடர்விட்டு பிரகாசிக்க!
    மனமோடு கூடிய முகமும் மலர்ந்திருக்கிறது!
    நன்றி சரோஜ்!:bowdown
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear yams kanna

    paasangal palavitham kanna. entha uyirum muthan muthalil anubhavikkum thaai paasam . piragu arigirom matra paasangalai. un varigalil milirnthiruppathu thol kodukkum nanbargal paasam. athuvum oru paasam.
    kavithai super dear.

    ganges
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    நன்றி கங்கா மா!
    தோள் கொடுப்பதை இங்கு நண்பர்கள் பாசம் மட்டுமா??
    இதோ இந்த அன்னையின் பாசம் அக்காகளின் பாசம் அண்ணனின் பாசம்!
    தங்கையின் பாசம் என்று பாசகடலில் தத்தளிக்கும் நான்!
     
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஏ யாம்ஸ் - நீ என்ன இந்த புவனா ஒரு கேள்விக்குறி ரேஞ்சிலேயே இருக்க?

    சில நாள் ஒரே காதல் கவிதை மழை, சில நாள் காதலில் சோக கீதம், சில நாள் நட்பினை சோதிப்பாய்?

    சின்னப் பொண்ணு நீ - வாழ்கையை சிரித்து அனுபவிக்க வேண்டும் யாமினி என்றும்.
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என்ன செய்வது வாழ்க்கை என்னை பார்த்து சிரிக்கிறதே!
    ஆனால் என் கதையை எடுத்தால் ரத்தகண்ணீர் படத்திற்கு பிறகு அழுகாச்சி காவியம் இதுவாய் தான் இருக்கும்!
    கவலை வேண்டாம் எதையும் ஏற்பேன் புன்சிரிப்புடன்!
    நன்றி நட்ஸ்!
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பாசம் வைக்க, பாசத்தின் வாசத்தை உன் சுவாசத்தில் நிரப்ப நான் இருக்கிறேன் என் செல்லமே. வரிகள் அருமையாய் இருந்தாலும், அதன் உள்ளே இழையோடும் வருத்தம் தான் கொஞ்சம் வருத்தமாக உள்ளது...
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    வருத்தம் வேண்டாம் தோழி!
    வாழ்கையில் வருத்தம் சகஜம் தானே!
    அது வரும் நேரம் கலங்கினால் பின் காணமல்
    போய் விடும் என்று மனதை தேற்றி கொள்வது மனத இயல்பே!
    நானும் விதிவிலக்கல்ல!
    நன்றி வேணி மா!
     
  10. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    யாமினி...ஏன் இந்த வருத்தம்...

    உன்னை விரும்பி வந்தவர்கள் யாராலும் உன்னை விட்டு விலகி செல்லவே முடியாது ...
    அதுவும் நண்பர்கள் எப்போதும் தோல் கொடுப்பவர்களாகத்தான் இருக்க முடியும் ...அப்படி இல்லையெனில் அஃது உண்மையானதாக இருக்காது...

    நீ இன்னும் கடக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளது இப்போதே என் இந்த விரக்தி தோழி...
    நாங்கள் எதிர் பார்ப்பது தானும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கும் யாமினியை....
    என்றும் புத்துணர்ச்சியுடன் உன்னை எதிர்பார்க்கிறோம் தோழி....

    கவிதை அருமை .......ஆனால் இந்த மாதிரி சோகமான கவிதை வேண்டாமே ...

    இது ஒரு நட்பின் கோரிக்கை....................
     

Share This Page