1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

மகளே !! இதோ உன் தந்தை !!!

Discussion in 'Regional Poetry' started by devapriya, May 31, 2010.

  1. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எனக்கு கவிதை எழுத தெரியாது - தெரிந்திருந்தால்
    எழுதியிருப்பேன்!!

    உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்தபொழுது - நான்
    உங்கள் இருவரையும் என் நெஞ்சில் சுமந்ததை!!!


    எனக்கு கவிதை எழுத தெரியாது - தெரிந்திருந்தால்
    எழுதியிருப்பேன் !!

    உன் தாய் பிரசவ வலியில் துடித்தபோது - உங்கள்
    இருவருக்காய் நான் மரண வலியில் துடித்ததை!!!



    எனக்கு கவிதை எழுத தெரியாது - தெரிந்திருந்தால்
    எழுதியிருப்பேன்!!

    உன் பிஞ்சு கால்கள் எனை தொட்டபொழுது பஞ்சு மேகம்
    ஒன்று எனை தீண்டி
    ச் சென்ற சுகத்தை!!!


    எனக்கு கவிதை எழுத தெரியாது - தெரிந்திருந்தால்
    எழுதியிருப்பேன்!!

    நீ வளர்ந்தபொழுது உன்னோடுக் கூட
    நானும் சேர்ந்து வளர்ந்ததை!!!


    எனக்கு கவிதை எழுத தெரியாது - தெரிந்திருந்தால்
    எழுதியிருப்பேன்!!

    நீ பருவம் அடைந்தபொழுது - தந்தையாய்
    நான் பக்குவம் அடைந்ததை!!!



    எனக்கு கவிதை எழுத தெரியாது - தெரிந்திருந்தால்
    எழுதியிருப்பேன்!!

    உனக்கு திருமணம் செய்வித்தபொழுது நான்
    உலகக் கோப்பை பெற்றதை!!!



    புரிந்துக்கொள் என் கண்ணம்மா !!
    உன் தாய் உன்னை சுமந்தாள் பத்து மாதம்
    நான் சுமந்தேன்
    உனை என் ஆயுட்காலம்!!!


     
    Last edited: May 31, 2010
    Loading...

  2. shreyashreyas

    shreyashreyas Gold IL'ite

    Messages:
    4,914
    Likes Received:
    156
    Trophy Points:
    160
    Gender:
    Female
    deva priya....

    oru thanthaiyin payanathai azhagaana varigal kondu sedhukki irukke.....

    magalin pirappilirunthu... thirumanam varai oru thanthaiyin paasa payanam miga arumai....

    Sandhya
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ப்ரியா,

    கொஞ்ச நாளைக்கு முன்பு உனக்கு,
    கவிதை எழுதத் தெரியாது என்று சாதித்தாயே,
    இன்று உண்மையிலேயே சாதித்து விட்டாயே....

    ரொம்ப ரொம்ப அருமை - ஒரு தந்தையின் உணர்சிகளின் பிரதிபலிப்பு.

    கடைசி வரியில் மாத்திரம், உன் அன்னையுடன் சேர்ந்து என்றிருந்தால் மிக நன்றாக இருக்கும்.

    புரிந்துக்கொள் என் கண்ணம்மா !!
    உன் தாய் உன்னை சுமந்தாள் பத்து மாதம்
    சேர்ந்தே சுமக்கிறோம் உனை எங்கள் ஆயுட்காலம்!!!
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    தேவா,
    யார் சொன்னார் ,உனக்கு கவிதை எழுத தெரியாது என்று,
    தெரியாத வரியே இவ்வளவு அருமை என்றால்
    தெரியும் என்ற வரிகள் எவ்வளவு அருமையாய் இருக்கும்!
    வரி,வரியாய், பல கவிதை படைக்க என் வாழ்த்துக்கள் !
     
  5. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks sandhya ka......
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female

    Ellam ungala paathu kathukittathu thaan nats...:hide:

    nalla vela sothithaaya engala kavithai eluthi nu neenga sollala...... :rotflthanks nats.....
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அருமையான வரிகள் தேவா!
    தந்தையாய் அவர் நம்மை சுமக்க ஆயுள் வரை அவர் கடன் தீர்ப்பது முடியாத ஒன்றே!
    என்னை கேட்டால் தந்தை தான் எல்லாமும் என்பேன் அவ்வளவு பிடிக்கும் என் தந்தையை!
    :bowdown
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very nice dear......

    thanthai ku oru keetham............super...
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    thanks deepa ka......
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    enakkum thaan ka.... thanks....
     

Share This Page