1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராசா!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 30, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சுருக்க வாரேன்னு சொல்லீட்டு தூரதேசம் போன ராசா
    வருசம்தான் போனதைய்யா
    நீ வருவேன்னு காத்திருந்து.
    போன வழி மறந்திடுச்சா வந்த வழி தெரியாம.

    போகும்போது தடுக்கலயே இந்த பாவிமக
    இப்ப
    தெரியாம தவிச்சுகிட்டு முழிக்கிறேனே வாழும் வக.

    நாடாள நீ பொறந்தவன்னு
    சொன்னானே நாடிஜோஷியந்தான்
    இப்பிடி
    நாடு விட்டு நாடு போய்
    கூடு விட்டு கூடு பாஞ்சு
    இன்னொரு பொண்ண ஆளப் போறேன்னு
    சொல்லலியே அவனுந்தான்.
    சொல்லி இருந்தா
    முந்தானையில முடிஞ்ச காச
    முச்சந்தியில வீசிப்புட்டு
    முடிஞ்சிருப்பேனே ஒன்னத்தான்
    என் மூச்சோடு முடிச்சாக.

    சொத்து சுகம் கேக்கலியே என் சின்னராசா
    காப்பாத்தி பொத்தி வச்ச
    உன் சிரிச்சமுகம் என் நெஞ்சுக்குள்ள
    அத நேர்ல
    பார்த்திடத்தான் துடிக்குது இந்த பாழும் மனசு.

    படச் சுருளைப் பார்க்கும் போதும் ஒன் நெனப்பு.
    பழைய மஞ்சணாத்தி மரத்த பார்க்கும்போதும் ஒன் நெனப்பு.
    பக்கத்தில் இளஞ்சோடிகள பார்க்கும் போதும் நம்ம நெனப்பு.
    எப்போதும் ஒன நெனப்பு வந்து போகும்
    சிறுக்கி மவ நோகும் மனசுக்குள்ள.
    றெக்க கட்டி பறந்ததைய்யா பட்டாம் பூச்சிதான்.
    படக்குன்னு தான் செறகு ஒடிஞ்சு போச்செனக்கு
    பொசுக்குனு நீ என்னைய விட்டு போன பெறகு.

    கைப்புள்ளையாய் நீ விட்டு போன பொண்ணு
    இன்னைக்கு வளர்ந்து தான் நிக்குதைய்யா பன மரமா

    வருஷம் அஞ்சாச்சு பொண்ணுக்கு செஞ்ச வச்ச சடங்குந்தான்
    ஊரார் ஒன்னக் கேட்டு பட்டேன் நா சங்கடந்தேன்
    என்னப் பார்த்து கேக்குது என் புள்ளையுந்தான்
    அப்பா எப்போதான் வருவார்னு என்னையுந்தான்
    என்ன ராசா சொல்லிடுவேன் நானுந்தான்
    நீ இல்லாம நான் பட்ட அவலந்தான்.

    தன் வயசுப் புள்ளைங்க தங்கத் தோடு கேட்டு அலைய
    அப்பனக் கேட்டு அலையுது இந்த பயபுள்ள.
    சொர்க்கத்த கேக்கலே என் தங்கராசா -நீ
    சொப்பனத்தில் வந்தாலே போதும் லேசா.

    வீராப்பா நா பேசி நின்ன காலம் போச்சு.
    கண்ணீர் கவலை என் மாராப்ப நனைச்சிடுச்சு.
    சோறு தண்ணி எறங்கல என் செவத்த ராசா
    காத்துலேயே கரையுது என் சீவன் முழுசா

    வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராசா
    வேற ஒலகம் உனக்கு ஒன்னு இருந்தாலும்
    என் உலகம் நீந்தானே ஆச ராசா
    மாட்டேன்னு நீயேந்தான் சொன்னாலும்
    மறு சென்மந்தான் நானுமே எடுத்திடுவேன்
    விட்டுவேன்னு நீ நெனைச்சு போய்டாலும்
    விடமாட்டேன் உன்னதான் என் சிங்க ராசா
    வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராசா.
     
    1 person likes this.
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    neenga sogamaa thaan elutheerukeenga akka...... but ennala sirippa niruththa mudiyala.......:rotfl esp that last para.... jenmathukkum thorathuvendrathu thaan super...... nice akka......
     
    1 person likes this.
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    அக்கா உங்கள் சிற்பியில்
    உண்டான புது முத்து
    அழகான முத்து
    புதுமையான முத்து

    ஊரு விட்டு ஊரு போன மகராசன
    நெனச்சு ஏங்குற மகராசிக நெறயா பேரு
    இருக்குற ஊரு நம்ம ஊரு
    காசு ஆச காட்டி புட்டான கடவுளு
    இல்ல
    பொழைக்க வேற வழி இல்லையா
    அந்த சின்ன ராசாவுக்கு நம்ம ஊருல
    நம்ம ஊரு பணம் செல்லாமத்தான் போயிருச்சா
    இல்லை
    வெளி நாட்டு பணம் மட்டும் தான் பணமா
    என் ராசா
    இருந்திருக்கலாமே சின்ன ராசா
    இருந்திருந்தா ஆயிருப்ப - நீ
    தேசிங்கு ராசா

    அக்கா கவிதை மிக மிக அருமை.
    நான் சொன்னதுல தப்பு இருந்தா மன்னிச்சிருங்க
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    duplicate message
     
    Last edited: May 30, 2010
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300


    கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான் .நிறைய பேருக்குத் தெரியாது இந்த உண்மை.எனக்கு தெரிஞ்ச நெறைய பேர் இப்பிடி பொலம்பிகிட்டு இருக்காங்க.கேக்கும் போது மனசு வலிக்கும்.அதான் மருந்தா இத எழுதினேன்.என்ன ஆனாலும் சரி விடக் கூடாதுன்னு கொஞ்சப் பேர். போனா போகுதுன்னு கொஞ்சப் பேர்.நம்ம தலை எழுதுன்னு மீதி பேர் ....எப்பிடியோ காலம் போய்கிட்டு தான் இருக்கு கெட்டவங்களுக்கு துணையா.

    நன்றி தோழியே.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    தப்பேதும் இல்லை ram!
    காசு பணம் பெருசுன்னு கட்டிய பொண்டாட்டி விட்டு
    காலைக் கட்டிய பிள்ளை விட்டு, பணத்த பார்த்தவுடன் பொணமா போன பல ஜென்மங்கள் நம்மள சுத்தி இருக்கு .
    போன மனுஷன் திரும்பி வருவர், திருந்தி வருவார்னு எத்தனை பெண்கள் பட்ட மரமாய் நம் எதிரில்.ஏமாரவுங்க இருக்கிற வரையில் ஏமாத்துறவங்க இருப்பாங்க .

    நாட்டுப் புற மொழியில் என் நடையை மாற்றி வரிகள் கொடுக்க முதல் முறையாய் முயற்சி செய்தேன்.உன் பின்னூட்டம் எனக்கு வெற்றி என்பதை சொல்லாமல் சொல்கிறது .நன்றி முத்தான உன் முழு நீள விளக்கத்திற்கு .:)
     
  7. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    Saroj, kavithai pramaadham.
    Varthaigalin veechu abaaram !!
     
  8. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    saroj...romba azhgana nadayil...azhmana oru pulambal...

    padikkum pothe...nenjil param yerukirathu...
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    dear saroj

    wow. sambaathikka endru marudesam pogum aangalin manaivigalin avalangalai romba azhagaga kavithaiyaai vadithirukkirai. naattuppura paadalgalin mettudan thaan naan intha kavithaiyai manathil vaasithen. antha slang abaaramaaga manage panniyirukkai. Rams in fb super aaga irukkirathu. saro, niraya ezhuthavum. enakku naatuppura paadalgal na oru kick eridum. I love that. thank you da

    ganges
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: வந்துடைய்யா சீக்கிரமா என் தேசிங்குராச&#300

    அம்மா சரோசா....
    என்ன அருமையா தேசிங்கு ராசாவோட,
    குதிர வாழ்க்கைப் பாதையல தடம் புரண்டு ஓடரத,
    உணர்ச்சி பிரளாம எங்க உள்ளம் பதற படம் பிடிச்சிருக்கீங்க...

    அருமை சரோஜ்.
     

Share This Page