1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொங்கனச்சி!!!

Discussion in 'Regional Poetry' started by pgraman, May 30, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எங்கள் கொங்கனச்சிகள்
    கொள்கையிலும் வீரத்திலும்
    தீரத்திலும் ஆயுளிலும் சிறந்தவர்கள்

    என்னென்ன வேலைகள் செய்கிறார்கள் என்பதை
    கணிக்க முடியாது
    சதா ஏதாவது செய்து கொண்டிருக்கும்
    எங்கள் கொங்கனச்சிகளை
    எறும்பிற்கு உதாரணமாக கூறலாம்
    தேனீக்கு போட்டியாக பாடலாம்

    ஒரு பக்கம் டொக்.... டொக்... என்று
    பாட்டியின் பாக்கு குத்தும் சத்தம்

    ஒரு புறம் ஒர்.. ஒர்... என்று
    அம்மாவின் உரலாட்டும் சத்தம்

    மறு புறம் மத்... மத்... என்று
    அக்கா தங்கையின் உலக்கை குத்தும் சத்தம்

    இன்னொரு புறம் சலக்.... சலக்...... என்று
    மதினியின் தயிர் கடையும் சத்தம்

    பாட்டி காதில் தொங்க விட்டிருக்கும்
    பெரிய கம்மலை எப்படியாவது கலட்டி விட வேண்டும்
    என்று முயற்சிக்கும் பேரன்கள்
    டேய் கண்ணுங்களா நா உங்க அப்பன பெத்தவ
    என்ன ஏமாத்த முடியாது என்று கூறும் பாட்டி

    ஏனுங்க கௌண்டரே கௌண்டச்சி ஊட்டுல இருக்காங்களா
    அவங்க கையாள ஒரு சொம்பு மோரு குடிச்சிட்டு மரத்துல ஏறுனா
    மரம் ஏறுற அழுப்பே தெரியாது பாருங்க
    என்று கேட்கும் இளநீர் போடா வந்தவர் குரல்
    கௌண்டர் கூட தன் மனைவியை இப்படி அழைப்பாரா
    என்பது சந்தேகம் தான்

    அவர்களின் சாபமா?? பாவமா???
    விரைவிலேயே
    வீட்டிற்கு ஒருவர் அல்லது இருவர்
    வெள்ளை புடவை அணியும் கொடுமைக்கு
    காரணம் என்னவோ

    வெள்ளை புடவை அணிந்தாலும்
    எங்கள் கொங்கனச்சிகளின்
    செயலில் வேகம் குறைவதில்லை
    தீரம் தீர்ந்து விடுவதில்லை
    சோகம் நிலைத்து விடுவதில்லை

    கொங்கனச்சியே உன் கையில்
    ஒட்டிய சோற்றை காகங்களுக்காக
    கழுவி விடு
    முழுவதும் விழுங்கி விடாதே
    அந்த புண்ணியம்
    சாபத்தையும் பாவத்தையும்
    உன்னை அண்ட விடாமல் செய்து விடும்

    ஆண் மகனே தனியாக இருக்க
    அஞ்சும் காட்டில்
    தனி ஒருத்தியாக இருக்கும்
    தீரம் உனக்கு இறைவன் அளித்த வரம்
    அந்த தீரதிருக்கு
    என்று எங்கள் தலை வணங்கும்
     
    Last edited: May 30, 2010
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கொங்கனச்சி கொண்ட வீரத்திலும் தீரத்திலும்
    கொஞ்சம் உண்டு எனக்கும் என் தம்பி பயலே
    என் குருதியிலும் கொப்பளிக்குது அவள்
    கொடுத்து விட்டுச் சென்ற மிச்சமே
    ஆனாலும் வராது அவள் போல் தீரமே!
    ஆகையால் கொடுத்திடுவேன் என் தங்கமே
    அவளுக்கு மகுடம் சூட்டிய உனக்கு என் நன்றியையே.
    [​IMG]
    தமிழுக்கு வணக்கம் வைக்கும் என் கரங்களே
    உனக்கும்
    தான் வணக்கம் சொல்லுதே. [​IMG]
     
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    arumayana kavithai ram....
    konganachigalin theerathai pathi miga azhagaga sonnai ....

    thodarattum un kavithai pani...
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    akkaa ungal pinnoottam
    en munnottathirku eppoluthum thunai puriyum
    enbathil aiyam illai akkaa
    mikka nandri akka:bowdown
     
    Last edited: May 30, 2010
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much akka.
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எங்கள் கொங்கணச்சி
    பல் தேய்ப்பது வேப்பங்குச்சியில்
    சுத்தமாக இருக்கும் அவளின் வார்த்தைகள்!!!!!!

    நல்ல கவிதை ram........
     

Share This Page