1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒரு அபலையின் அஞ்சலி.....)))))

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 26, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஒரு அபலையின் அஞ்சலி

    பள்ளத்தாக்கில்
    பிளந்து போட்ட மரமாய் விமானம்
    கொத்தும் குலையுமாய்
    கரியான காஸ்ட்லி மனித உயிர்கள்.

    இருப்பவர் யார் இறந்தவர் யார் என
    உருவந்தெரியாமல் உருக்குலைந்து
    காப்பாற்றுங்கள் எனச் சொல்லி
    கைகால்களை கடைசியாய் தூக்கிய படி...

    ஈரக் குலை நடுங்க ஓலங்கள் .....
    ஈரமற்ற அக்கினியின் வேட்டையில்
    தப்பிவிடத் துடிக்கும் உயிர்களின் வேட்கை.
    தீயின் காரணமாய் ஈனமாய் அலறல்கள்.....
    எட்ட நின்று எமனைப் பார்த்து
    மீண்டு வந்த மிச்சசொச்ச உயிர்கள்.

    இறுகிய கைக்குள் கருகிய கரடிபொம்மை
    தீயில் பொசுங்கின இளம்பிஞ்சு .
    வெளியில்
    சம்மருக்கு ஊர் போன மகளுக்கு பிடித்த கரடிபொம்மையுடன் தாய்
    சம்மட்டியாய் அவளுக்கு வந்தது
    வெறும் கரிக்கட்டை .
    "பிள்ளைக்கு பிடிக்குமென பொம்மை வாங்கினேன்
    என் பிள்ளையே இல்லாமல் போனதே"
    கல்லையும் கரைக்கும் தாயின் கதறல் !!!!!

    இறந்தவருக்கு ஈமக் கிரியைகள் செய்ய
    பொறுப்பாய்
    இருப்போரை அனுப்பிவிட்டு
    தான் மட்டும் தனித்திருக்க
    இடியாய் இந்த அடி.
    இப்போது
    அழுது அரற்றுகிறது அந்த அநாதை உயிர்!!!!

    தாயை இழந்து, தந்தையை இழந்து
    தங்கை தம்பிகளை இழந்து
    சுற்றம் இழந்து முற்றும் இழந்து
    ஒன்றும் புரியாமல் மௌனமாய்
    கண்ணீரில் கரைகிறது பல உயிர்!!!!!!


    அச்சச்சோ ...ச்சுச்சுச்சுச்சு
    அய்யய்யோ.... பாவம்
    இறந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும்
    இப்போதைக்கு நம்மால் எழுப்ப முடிந்த குரல்.
    முடிந்தால் தெரிந்தவர்களுக்கு தேற்றுதலாய் ஒரு ஆறுதல்.

    இழப்பீடு,காப்பீடு,
    வழக்கு, விசாரணை.
    இறந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும்
    எப்போதும் அவர்களால் முடிந்த செயல்.
    அவ்வப்போது முடிந்தால் மாறுதலாய் ஒரு அரசியல் கோஷம்.

    முடிவில்லா கேள்விகளும் தெளிவில்லா பதில்களும்.....
    ஆங்காங்கே பட்டிமன்றம்.
    விபத்தின் காரணம் ஆராய
    முற்றுபெறாத வெற்றுப் புள்ளிகளாய்
    முடிவில்லா கேள்விகளும் தெளிவில்லா பதில்களும்.

    யாரை குறை சொல்ல
    இயற்கையின் சதியோ???
    இறக்கவேண்டும் என்கிற விதியோ????
    யாரை குறை சொல்ல .
    போனது!
    வராது இனி பொக்கிஷிமான வாழ்க்கை ..

    இத்தனை நடந்தும்
    அமைதியாய் பாஜ்பே விமான நிலையம்....
    தங்கள் பயணச் சீட்டை கையில் வைத்தபடி
    அடுத்த விமானச் சேவைக்காய் காத்திருக்கும்
    மனிதக் கூட்டம்.
    போய்ச் சேரும் இடம் பத்திரமாய் போய்விடுவோம்
    என்ற நம்பிகையில்.
    நம்பிக்கைதானே வாழ்க்கை!!!!!!

    கனத்த நெஞ்சுடன் ஒரு அபலையின் கண்ணீர் கவிதை .........
     
    Last edited: May 26, 2010
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    அந்த சம்பவம் கேட்ட போது கூட எனக்கு இத்தனை பாதிப்பு இல்லை தோழி, உன் தமிழில் அதைக் கேட்ட நெஞ்சம் கொஞ்சம் நொறுங்கிப் போகிறது. விழிகளில் கூட நீர் அரும்புகிறது.

    போனவை போகட்டும் என்று போக சற்றும் மனம் இல்லை. நடப்பவை நல்லனவாக நடக்கும் என்ற நம்பிக்கை கூட வர மறுக்கிறது. என்ன வாழ்க்கை இது???

    இதயம் கனக்கிறது. உன் வரிகளின் வீரியம் அப்படி.
     
  3. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Horrible inci(acci)dent ka...
    Ungal varigal athai velipaduthiya vitham arumai...
     
  4. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear saroj


    enna cholla. intha vibathai paditha manitha manangalil enna vellam konthalippu ennagal uyaruma athanaiyum kavithaiyaakki kakki viitai. manitha uyirukku ingu kathirikkai vilai kooda illai enbathai appattamaaga
    kaattivittai. chutram pirintha manangalin vedanai vembalgalai velippaduthivittai. ithanai nadanthum ondrume nadakkathathu pol
    irukka pazhagikkonda maanidangalai unarthivittai.

    kavithai padithu nenjam vimmiyathu nijam. pona uyirgalum avargal anubhavitha vedanaigalum avargalai pirinthavargal anubhavikkum vedanaigalum cheeraaguma.

    azhagaana kavithaikku paaraattukkal anbe. pona aathmaakkalin shanthikkaga oru nimidam praarthanai cheivoma?


    ganges
     
  5. kanaka Raghavan

    kanaka Raghavan IL Hall of Fame

    Messages:
    4,468
    Likes Received:
    1,481
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Very very touching.I did not sleep for couple of days after I saw that on the television.How many parents,sisters,brothers,wives,children would be waiting at the airport to receive their loved ones?How are they to overcome this sorrow and how are they to carry forward?I fail to understand God's theories.Why should innocent lives suffer?With what eagerness the kith andkin would have been waiting for their loved ones to disembark and lo the next moment they are all gone forever.Oh God Help them tide over these traumatic times.I pray God to give us peace.A life is a life .It is precious whom so ever it may be.Thank you for penning such a lovely poem.
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    படித்தவுடன் பார்த்தவுடன் மறக்கமுடியவில்லை மற்றவர் போல்
    ..மரணத்தை அதிகமாய் ருசித்தவள் நான்... நொறுங்கிப் போனேன்
    மரணத்தில் பங்கு கொண்ட என் உடன் பிறப்புகளுக்கு நான் செலுத்தும் கண்ணீர் அஞ்சலி.
    நீயும் அதில் பங்கெடுத்ததுஆறுதலாய் இருக்கிறது
     
  7. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்புத் தோழி,

    மிக அருமையான கண்ணீர் அஞ்சலி...இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திப்போம்....
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    அன்புள்ள சரோஜ்,
    அபலையின் கண்ணீர்,மிகவும் நெஞ்சை உருக்குவதாய் உள்ளது.
    மிக நீளமாய்,மிக அருமையாய்,மிக உருக்கமாய்,அணைவர் மனதையும் அசைக்கச்செய்வதாய் அமந்துள்ளது.
    இனி வேண்டவே வேண்டாம்,இன்னும் ஓர் துயரம்.
     
  9. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Very well written Saroj.
    Just reading between the lines brings tears rolling down my cheeks........so many lives lost in the crash...........doesn't god have mercy !!??
     
  10. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Nice one Saroj, As Sudha I too had the same feeling ... with tears in our heart lets pray for the souls to rest in peace and pray to strengthen the weeken hearts of the departured.
     

Share This Page