1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்-அழகிய மயில்

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 24, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அழகிய மயில்

    நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
    கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
    அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?.....பாரதியார்


    யாரும் தீட்டாத இயற்கையின் ஓவியம்தானோ
    தெவிட்டாத தீண்டும் இன்பத் தோகைதானோ
    தமிழ் கடவுளுக்கு உன் தேகந்தான் வாகனமோ
    உன் அழகில் கண்அயர்ந்து இயற்கையும் பண் பாடுதோ?????

    உன் கனக அழகில் தன்னைத் தொலைத்தான் கம்பன்
    உன் தோகை விரிப்பில் தன் மீசை வழுக்கினான் பாரதி
    உன் கொண்டை ஆட்டலில் கொள்ளை போனான் கவியரசு
    மழை மேகம் கண்டு தோகை விரிக்கும் ஆண் மயிலே
    உன் நடனத்தால்
    சிலிர்க்கிறது தென்றல் உலவும் சோலையே.

    அள்ளித் தெளித்த ஆயிரம் பொற்காசுகள்
    உன் பச்சை மரகத மேனி.

    உருக்கி வார்த்த வண்ணத் தடாகம்
    உன் அழகிய பிறைநிலவு கழுத்து.

    நீளமாய் நவமணி களஞ்சியம்
    உன் உச்சியின் ஒய்யாரக் கொண்டை.

    இருபுறமும் திருப்புகின்ற சிறிய வில்
    உன் அலகு நுனிப் பார்வை.

    ஓவியனின் தூரிகையின் பல வண்ணக் கலவை
    உன் குறையில்லா பொன் பட்டுத் தோகை.

    அழகோடு ஆடலும் போடும்
    உன் அச்சடித்த அருவெருப்பு பாதம்
    உன் அழகில் நீ மயங்கி
    அதிகமாய் ஆடக் கூடாதென்று
    ஆண்டவன் கொடுத்த சாபம்.

    உன் குரலும் அப்படியே
    அகவினால் அகமும் சுருங்கும்.
    தலைக் கனத்தால் நீ கிறங்கி
    தம்பட்டம் போடக் கூடாதென்று
    உன்னைப் படைத்தவன் கொண்ட கோபம்

    ஆனாலும் என்ன அடங்கியா கிடக்கிறாய்
    நீ.
    நாங்கள் அல்லவோ
    அடிமைப் பட்டு அடங்கிக் கிடக்கிறோம்
    உன் அழகில் !!!!!!!
    வண்ண மாயத்தில் மாத்திரம் அல்ல
    கொஞ்சும் உன் வெள்ளை நிறத்திலும்.

    உன் அழகில் மயங்கி
    பெண்ணை நீ என்று வருணித்து
    பின்......

    புத்தி பேதலித்து
    பெண் அழகில் மயங்கி
    பித்தனாய் எத்தனை இளைஞர்கள்
    தத்துவமாய் ஆனார்கள் கவிஞர்கள்.
    நுணுக்கமுள்ள கலைஞனும்
    கொஞ்சம் கலங்கித்தான் போகிறான்
    மதி மயங்கித்தான் போகிறான்
    உன்னைக் கண்ட மாத்திரத்தில்.

    இத்தனை அழகு அருவியாய் இருந்தும்
    அழகுக்கு நீ என்று சொன்னாலும்
    அறிவுக்கு நீ என்று அறுதியாய் சொல்வதற்கில்லை.
    கொஞ்சம் குறைவான அழகோடு
    கூடுதலான அறிவோடு நீ இருந்தால்
    உறுதியாய் சொல்லிருப்பேன்
    அழகிய அறிவு நீ என்று
    அசத்தும் உணர்வு உனதென்று

    இருந்தும் சொல்கிறேன்
    தேசியப் பறவை மட்டும் அல்ல
    என் ஹோஷியப் பறவையும் நீயே.
    [​IMG]
     
    Last edited: May 24, 2010
    1 person likes this.
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    colorful picture and brightful words......
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அக்கா அருமையான கவிதை தந்த உங்களுக்கு மிக்க நன்றி
    ஆண்களுக்கு அழகு சேர்க்கும் பறவை மயில்
    நீங்கள் உங்கள் வரிகளால் அந்த மயிலுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்
    கவிதை சில அருமையான கருதும் உள்ளது உங்கள் கவியில் kurippaaka இந்த வரிகளில்
    "அழகோடு ஆடலும் போடும்
    உன் அச்சடித்த அருவெருப்பு பாதம்
    உன் அழகில் நீ மயங்கி
    அதிகமாய் ஆடக் கூடாதென்று
    ஆண்டவன் கொடுத்த சாபம்.

    உன் குரலும் அப்படியே
    அகவினால் அகமும் சுருங்கும்.
    தலைக் கனத்தால் நீ கிறங்கி
    தம்பட்டம் போடக் கூடாதென்று
    உன்னைப் படைத்தவன் கொண்ட கோபம்"

    தலைகனம் ஆணவம் கூடாது என்று சொல்கின்றன இந்த வரிகள்
    மயிலில் உள்ள வர்ணங்கள் அதற்கு பெருமை தேடி தருகிறது
    நம்மில் உள்ள வர்ணங்கள் நமக்கு சிறுமையை தேடி தருகின்றன .

    உங்கள் இந்த பறவைகள் கவிதை பயணம் தொடர என் அன்பான வாழத்துக்கள். கோடைக்கு இதம் எங்களுக்கும் உங்களுக்கும் பறவைகளுக்கும் .
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    hiyo evlo neelamana kavithai...azhagiya mayilai patriya azhagu kavithai...miga miga arumai saroj......
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    My favourite Peacock in full glory !!
    Kavithaiyum mayil pola azhagaga irukku !!
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மயிலின் அழகைவிட மிக அழகான பின்னூட்டம் கொடுத்த தோழிக்கு நன்றி
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இயற்கை நமக்கு நிறைய கற்றுக் கொடுகிறது.நாம்தான் அதை உணர்வதில்லை.என் ஒவ்வொரு பறவையும் அதில் சில உண்மைகளை நமக்கு உணர்த்தும் தம் வாழ்வின் வழியாய்.நானும் சிறு முயற்சி எடுத்துள்ளேன் என் கவியின் வழியாய் .
    மிகவும் சந்தோசமாய் இருக்கிறது .உங்கள் புரிந்துகொண்ட.நீளமான பின்னூட்டத்தைக் கண்டு.வாழ்த்துக்களுக்கும் வழித்துணையாய் வருவதற்கும் நன்றிகள் பல.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அழகைப் பார்த்து நீங்கள் ஆகாசப் பட்டு கொடுத்த பாராட்டுப் பத்திரம் பவித்ரம் எனக்கு.
    நன்றி.
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    மயில் போன்ற அழகான கவிதைக்கு குயில் போன்ற உங்கள் இனிமையான பின்னூட்டம் அருமை.
    நன்றி.
    தொடர்ந்து வந்தால் கால் வலி தெரியாமல் என் கவிப் பயணம் தொடரும் :)
     
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ஒரு ஜூவாலஜிஸ்ட் கவிஞர் ஆனால்,
    இப்படித்தான் மயிலைப் பாடியிருப்பார்.

    வேணியோ பூக்களைப் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்,
    அவர் தோழி சரோஜ் நீங்களோ பறவைகளை பேட்டி எடுக்கத் தொடங்கி உள்ளீர்கள்.

    ரொம்ப அருமை கவிதை - அதன் நீளத்திலும்,
    மயிலின் வர்ணத்திலும் நான் தொலைந்து தான் போய் விட்டேன்.
     

Share This Page