1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் வேடந்தாங்கலின் பறவைகள்--- தூக்கணாங் க&#300

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 23, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
    சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
    கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
    அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?.....பாரதியார்


    சலசலக்கும் அருவிக் கரையில்
    கைக்கு எட்டா தூரத்தில்.....
    கட்டிடக் கலைஞன் இல்லாமல்
    மரத்தில் குட்டி தாஜ்மஹால்.
    சரம் சரமாய்
    ஒற்றையாய் கற்றையாய்......


    திருடி கொணர்ந்த நாணலின் இழையால்
    கூடு கட்டுது ஆண் குருவி.
    வருடிக் கொடுத்து வஞ்சனை இல்லாமல்
    குஞ்சி பொரிக்குது பெண் குருவி.
    பிஞ்சிக் குஞ்சுகளோடு கூடிக் குடும்பமாய்,குதூகலமாய்
    கொஞ்சி விளையாடுது மஞ்சள் குருவி.

    வம்புகள் ஏதும் இல்லை:வாஸ்து வசதிகள் இல்லை
    வண்ணாத்திக் குருவியின் வீடு ஊஞ்சலாய்...உல்லாசமாய்!!!!!

    ஆடம்பரம் இல்லை:அரண்மனை இல்லை
    தும்பைக் கொண்டு தூக்கலாய்,காற்றில் தொங்கும் தூளியாய்!!!!!


    விஞ்ஞானம் இல்லை:விளக்கொளி இல்லை.
    மின்மினிப் பூச்சி சிறை பிடிப்பால் ஒளி கொடுக்கும் கைவிளக்காய்!!!!

    ஆபத்து மட்டும் உண்டு அயலானிடம் இருந்து
    ஆனாலும் வாழுது அழகான வாழ்கையை.
    பஞ்சு மேனி குருவி ...பகட்டில்லாமல், பழுதில்லாமல் .
    இரவு நேரத்தில் இலவச சங்கீதமாய் !!!!

    வியக்க வைக்கிறது:விந்தையாய் இருக்கிறது
    தோரணமாய் தொங்கும் குருவியின் கூடு மட்டுமல்ல
    காரணமாய் கூடி வாழும் கூட்டு எண்ணமும் கூட
    கிறங்கித்தான் போனேன் அதன் அழகான அறிவில் மயங்கி.

    [​IMG]
     
    Last edited: May 23, 2010
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    My dear Saroj

    I got the privilege to give the first fb. super o super un kavidhai. So true they are so happy in their life without any facilitiies just a koodu for them to stay . Very nicely you have narrated about the kuruvi. Hats off to you.
    enakku eppadi unnai parattuvadhu enru theriyavillai.

    love
    viji
     
  3. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    :wow....:wow............ Fantastic lines.......


    "திருடி கொணர்ந்த நாணலின் இழையால்
    கூடு கட்டுது ஆண் குருவி.
    வருடிக் கொடுத்து வஞ்சனை இல்லாமல்
    குஞ்சி பொரிக்குது பெண் குருவி.
    பிஞ்சிக் குஞ்சுகளோடு கூடிக் குடும்பமாய்,குதூகலமாய்
    கொஞ்சி விளையாடுது மஞ்சள் குருவி."

    கூடிவாழும் குருவிகளின் இயல்பான வாழ்க்கையை இனிமையாக எடுத்துரைத்தமைக்கு நன்றி!!!!!!!!!!!
     
  4. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Re: தூக்கணாங் குருவி

    நாமக்கல் கவிஞரின் பெருமையையும், ஊர் பெருமையையும்,
    கவிதைகளின் மூலமாக நிலை நாட்டும் சரோஜுக்கு வாழ்த்துக்கள்.

    நாங்களும் கிறங்கித்தான் போகிறோம் தங்கள் கவிதைகளைப் படித்து.
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: தூக்கணாங் குருவி

    wow superb akka............
    thoonganaa kuruvi koodu katratha discovery oru time paaththen.......cha evlo arumayaa irunthathu.....avlo suru suruppu....amazhing architecture......your poem wording was amazing ka.....
     
  6. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    Beautiful Saroj.......thanimayil kavithai mazhai kottugirathu !!
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி


    ஆச்சரியம் ஆனால் உண்மை
    உங்களின் திடீர் வரவை சொன்னேன் அம்மா. தலை கீழாய் நிற்கின்றேன் [​IMG]!!!!!!!!!!!!!!!!!
    நான் அந்த சொகுசுக் கப்பலில்(கூட்டில்) சுகமாய் உட்கார்ந்து
    காற்றில் மிதப்பது போல் இருக்கிறது.
    தூக்கணாங் குருவி உங்களை மகிழ்வித்ததில் எனக்கும் பெருத்த மகிழ்ச்சியே
    நன்றி நன்றி
    கற்றையாய் நீங்கள் கொடுத்த முதல் பின்னூட்டதிற்கு
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

    கயல் விழியின் அழகான அசலான பின்னூட்டம்
    அதை விட இனிமை.
    நன்றி என் குருவியின் கூட்டிற்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு.
    நிதமும் வாருங்கள் என் பறவைகளின் வேடந்தாங்களுக்கு
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி


    உங்கள் சிந்தைக் கரங்களில் இருந்து வந்த கிறக்கங்களுக்கு நன்றி.
    நாமக்கல் கவிஞர்?????
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: தூக்கணாங் குருவி

    beautiful lines akka....
     

Share This Page