1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உதவிக்கரம்......குற்றமா குறையா

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 21, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உதவி பெறுபவர் உபத்திரவம் தராதவர்
    உதவுபவர் உபத்திரவம் பெறுபவர்.....



    காரியம் என்றால் பேச்சு கற்கண்டாய் இனிப்பு
    முடிந்ததும் வெறும் பல் இளிப்பு
    இவர்களின் வெறுப்பு -சொற்களில் நெருப்பு
    எப்படி முடிகிறது இவர்களால் மட்டும்
    ஏறிவந்த ஏணியை எட்டி உதைக்க
    இது பகட்டு உறவுகளின் பகல் வேஷம்

    பிரதி பலன் கேட்க வில்லை.
    என்னை பின்னால் பிய்த்து போட வேண்டாம் என்கிறேன்
    என்னை மறக்க வேண்டாம் என்று சொல்லவில்லை
    என் மனதை ரணமாக்க வேண்டாம் என்கிறேன்.

    நானும் விழுவதாய் இல்லை
    என் இலக்கில் இருந்து
    அவர்களும் திருந்துவதாய் இல்லை
    அவர்களின் முனைப்பில் இருந்து
    விழி பிதுங்கி நிற்கின்றேன் மீளும் திசை தெரியாமல்.

    கருணையை என் கண்ணில்,
    கனிவை என் பேச்சில்
    உதவும் குணத்தை நெஞ்சில் வைத்தது என் குற்றமா
    செய்ததில் குறையா ...என் செய்கையில் குறையா
    செய்யாமல் விட்டதில் சில பிழையா
    செய்து விட்டதில் சில பிசகா
    புரியாமல் நிற்கிறேன் ...
    கொஞ்சம் காயங்களுடனும் நிறைய பிரியங்களுடனும்
     
    Last edited: May 21, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    arumai akka.....

    but yaara intha thaakku thakkureenga???
     
  3. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    குறை ஒன்றும் இல்லை தோழி, இயல்பிலே நல்லவர்களாய் இருப்பவர்களுக்கு எப்போதும் இருக்கும் தொல்லை தான் இது. தொல்லைகள் இல்லாவிடில் வாழ்வில் சுவாரசியம் இருக்காதே... தொல்லைதான் எல்லை என்று அல்ல, எல்லையில்லாத தொல்லை இருந்தாலும் எல்லை காண முடியாத உன் பிரியத்தால், அவை, உன் வளர்ச்சிக்கு உரமாகட்டும்.

    மிக நல்ல கவிதை, வாழ்வில் வரும் தொல்லைகளைப் பற்றி
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    very nice saroj.......

    utavikkaram endrum kuttram aagathu...

    antha uthavikkarathai....kariyam mudinthathum thatti vittu selbavargalidam than irukkirathu kuttram....
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    nandriyai marappadhu indha kaalaththil sarva saadharanamaai aagiyadhu thozhi!
    adhai paraisaatrum azhagiya kavidhai!
    :thumbsup
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    யாருக்கும் என்று இல்லை இது எல்லோருக்கும் வரும் தொல்லை தான் எனக்கு கொஞ்சம் அதிகமாய் போய்விட்டது அது தான் இந்த அதிரடி பதிலடி
    போட்டால் மட்டும் புரியவா போகிறது அந்த சுயநல சுப்பன்களுக்கு
    பகிர்ந்து கொண்டாதால் பாரம் குறைந்தது எனக்கு.
    மகிழ்ச்சி.:) முதலாய் வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு
    நன்றி
     
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு
    இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்

    உங்கள் கவிதை இந்த இரண்டு குரல்களையும் ஞாபக படுத்துகிறது. மிக நல்ல கவிதை. மிக நல்ல கோபம்
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நல்லவளாய் இருப்பது தான் என் குறையோ என்று பல முறை யோசித்து உண்டு.
    சில சிற்றெம்புகளுக்கக்காக என் சிந்தையை மாற்றி கொள்ள மனம் இல்லை.திட்டவும் மனம் இல்லை. பொறுத்துக் கொள்கிறேன் அதீத பொறுமையை ஆண்டவன் கொடுத்திருப்பதால்.
    அன்பினால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை.


    நன்றி தோழியே நலிந்து கிடந்த என் மெலிந்த மனதிற்கு உரமாய் நீ கொடுத்த வரமான வரிகளுக்கு :bowdown:bowdown:bowdown:bowdown
     
  9. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    அதிரடி கவிதை மிகவும் அருமை தோழி...:)
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அதுவும் சரிதான் லதா .
    ஆனாலும் கொஞ்சம் கூட மன சாட்சி இல்லாம பேசும் போது ,கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது .
    நன்றி .அறுதல் தந்த தோழிக்கு .:bowdown
     

Share This Page