1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கருங்குவளை

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 18, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பள்ளிப் பருவத்திலே நானறிந்த மலர்
    இலக்கியம் கற்றுத் தந்த ஆசிரியை
    பெண்களின் கண்களை ஒத்த மலரென
    அறிமுகம் செய்த நீல நிற மலர்

    நீர் நிலைகளில் நிறைந்திருக்கும்
    காண்போர் கண்களை நிறைத்திருக்கும்
    ஆம்பலின் வகைதான் இதுவும் - இதன்
    நிறத்தருகே நிற்க முடியாது எதுவும்

    ஊதா கலந்த நீலம் அதன் வண்ணம்,
    பச்சை அதன் காம்பின் வண்ணம்
    இவை இரண்டும் கலந்து நிற்கையில்
    நம் மதி மயங்கும் என்பது திண்ணம்

    பெரிதாய் இதழ்கள் மூன்று
    சிறிதாய் இதழ்கள் மூன்று
    மொத்தம் இவை ஆறு - இதைக்
    காண்பதே பெரும் பேறு

    பல சங்கப் பாடல்களில் உவமையாய்
    வந்து போகும் அழகிய மலர். தேவாரம்,
    திருப் புகழ், திருமந்திரம் என அனைத்திலும்
    வந்த பழகிய மலர்

    Name : Oval Leaf Pond weed
    Botanical Name : Monochoria vaginalis
    Family : Pontederiaceae (Pickerel weed family)
    Flowering : August to March
    (Thank you Saroj for your timely help)
     
    Last edited: May 18, 2010
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இந்தக் குவளையை தேடி ஒரே கவலை:hide:

    பார்த்த,கேட்ட,மலர்தான் எனினும் ...
    இணைய தளத்தையே புரட்டிப் போட்டு அல்லவே
    புட்டு வைத்து, பொட்டு வைத்து இருக்கிறீர்கள்
    இந்த மலருக்கு.
    பாராட்டுக்கள்!!!!!!
    உங்கள் பரவலான இந்த பகிர்வுக்கு.:bowdown:bowdown:bowdown:bowdown
    கவிநடை மிக அருமை .
    நான் எதிர் பார்த்ததை விட
     
    Last edited: May 18, 2010
  3. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    இந்த குவளை மலரை நானும் எனது ஆசிரியர் கூறக் கேட்டு இருக்கிறேன்
    ஆனால்!!!!!!!! இன்று தான் அந்த மலரை காணும் பாக்கியம் தங்கள் வாயிலாக எனக்கு கிடைத்தது.......

    அழகான கவிதையை தந்த தோழிக்கு ............

    நன்றிகள் பல உங்களுக்கு வேணி :thumbsup
     
    Last edited: May 18, 2010
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள ரோஜா,

    இட்டுக் கட்டிப் பாடவோ, மெட்டுக் கட்டிப் பாடவோ இயலாத வகையில் என் கைகள் மலர்களால் கட்டப் பட்டு உள்ளன. தவறாக எழுதினால், பட்டென மண்டையில் போட நீயே இருக்கிறாய், நான் என்ன செய்வேன்?? நேற்று முழுதும் தேடி கிடைக்கவில்லை, இன்றும் நீங்கள் செய்த உதவியின் பயனாய், அதன் தாவரவியல் பெயர் மற்றும் குடும்பப் பெயர் விவரங்கள் கிடைத்தன. இல்லாவிடில் இன்றும் விடுமுறை (சொல்லாமலே ) எடுத்திருப்பேன். நன்றி தோழி எல்லாவற்றுக்கும்.

    வழி நடத்த நண்பர்கள் இருக்கையில் கவி நடைக்கா பஞ்சம், அது போலெல்லாம் என்னிடம் இல்லை வஞ்சம். :)
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Love the colour of this flower !!
    Nicely written again !!
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புள்ள லதா,

    எனது கவிதை படித்து, ரசித்து, அழகாய் கருத்தும் சொன்ன இனிய தோழிக்கு நன்றிகள் பல
     
  7. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Anbe Sudha,

    I saw you were on line. Was thinking why there is no reply for this flower???

    Thanks for the lovely FB Sudha.
     
  8. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    wonderful dear!
    Keep writing!
    :thumbsup
     
  9. Chitra29

    Chitra29 Moderator Staff Member Platinum IL'ite

    Messages:
    2,471
    Likes Received:
    937
    Trophy Points:
    240
    Gender:
    Female
    அன்பு வேணி அவர்களே,
    இன்றுதான் இந்த பக்கமே அடியெடுத்து வைத்தேன்.
    இந்த நீல கருங்குவளையைக் கண்டேன்.
    மிக்க மகிழ்ச்சி.
    தொடரட்டும் தங்கள் இந்திய மலர்களின் அறிமுகம்.
    வாழ்க! வளர்க! தங்கள் பணி.
    அன்புடன்
    சித்ரா.
     
  10. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thank you Yamini.
     

Share This Page