1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சேடல்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, May 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பெயர் புதிதுதான், ஆனால் மலர் நமக்கு
    முதலிலே அறிமுகமான மலர் தான்
    பவள மல்லி தான் அது.... பவள நிற
    காம்புகள் கொண்ட மலர்

    பளபளக்கும் பவள நிற காம்பிற்கு
    கிரீடமாய், தூய வெள்ளையில் ஆறேழு
    இதழ்களுடன், ஆரஞ்சு வண்ணம் நடுவில்
    கொலுவிருக்க, வண்ணங்களின் நர்த்தனம்
    மலருக்கு மிக நல்ல கீர்த்தனம்

    அடர் பச்சையில் சற்றே நீண்ட இலைகள்
    கூறிய முனையுடன், மரமாய் வளரும்
    தாவர வகை, இரவில் மலர்ந்து ஆதவனின்
    தீண்டலில் உதிரும் மலர்

    மதி மயங்க வைக்கும் மனம் கொண்டது,
    செடியிலிருந்து பறிக்காமல் உதிர்ந்த
    மலர்களை எடுத்து கடவுளுக்கு படைக்கும்
    ஒரே வகை மலர் இதுதான்

    இந்த மலருக்கு மருத்துவ குணமும், புராண
    கதையும் உண்டாம். பாரிஜாதம் என்ற இன்னொரு
    பெயரும் உண்டு. இந்த பெயர் கொண்ட ஒரு
    இளவரசி, ஆதவனை தன் கணவனாக அடைய

    பெரும் பிரயத்தனம் செய்தும் அது
    நிறைவேறாததால் தன்னைத் தானே
    மாய்த்துக் கொண்டாளாம். அவரது
    சாம்பலில் துளிர்த்த மரமாதலால்

    துயரத்தில் அவள் ஆதவனை காண விருப்பம்
    இன்றி, அவன் போனதும் மலர்ந்து, உதிக்கையில்
    உதிர்ந்து விடுவாள் என்று ஒரு கதை உண்டு
    இந்த மலருக்கு

    புராணங்களின் படி (பாகவத புராணம், மகாபாரதம், விஷ்ணு புராணம்) பாற்கடலைக் கடைகையில் வெளிவந்த பொருட்களில் இதுவும் ஒன்று எனவும், கிருஷ்ணரால், பூமிக்கு கொண்டு வரப்பட்ட செடி எனவும் ஒரு கருத்து உண்டு. மேலும், இது இந்திரனின் நந்தவனத்தில் மட்டுமே இருந்தது எனவும், அதை பகவான் கிருஷ்ணர், திருடி பூமிக்கு கொண்டு வந்தார், அதனால் கோபம் கொண்ட இந்திரன், திருடிய குற்றத்துக்காக, இந்த செடிக்கு விதைகள் இருக்காது, என் சபித்ததாகவும், அதனாலே இந்த செடிக்கு காய்களோ, விதைகளோ இருக்காது எனவும் ஒரு கருத்து உண்டு. ஆனாலும் இந்த செடியில் காய்களை கண்டதுண்டு.

    கிருஷ்ணரின் இரு மனைவியருக்கும், இந்த மலர் மீது மோகம், சத்யபாமாவிர்க்கு, தேவேந்திரனின் தோட்டத்தில் இருக்கும் மரம் என் தோட்டத்திலும் இருக்க வேண்டும் என்றும், ருக்மணிக்கு, இந்த மலர்கள் தனக்கு வேண்டும் என்றும், கண்ணனுக்கோ மனைவியர் மீது, இந்திரன், தர மறுக்க, கண்ணன், வெண்ணை திருடியது போல செடியையும் திருடி விட்டார். பாமாவின் தோட்டத்தில் செடி இருக்க, மலர்கள் ருக்மணியின் தோட்டத்தில் விழுமாம். கண்ணன் பிரச்சனையை ஒரு வழியாக தீர்ந்தது. விடுவாரா இந்திரன்??? இந்தா கடவுளானால் என்ன?? பெற்றுக் கொள் சாபத்தை என்று சபித்து விட்டார்.

    தகவல்கள் இணையத்திலிருந்து எடுத்தவை, உண்மையா இல்லையா எனத் தெரிய வில்லை. சுவாரஸ்யமாக இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்.

    Name : Night flowering Jasmine (Pavazhamalli)
    Botanical Name : Nyctanthes arbor-tristis
    Family : Oleaceae
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இன்று உங்களின் தேடல்.. சேடலா???
    அருமை.!!!!!!!உங்கள் செய்தியும் சேகரிப்பும்


    புலர்ந்தும் புலராத அந்த அதிகாலையில் வீதி ஓரத்தில் மெல்லிதழ் கொண்டு கிளி மூக்கின் வடிவமான அதன் அழகிய இதழ்களையும் செம்பவள நிறம் கொண்ட காம்பையும் நானும் கண்டு ரசித்திருக்கிறேன்... .காலை நேர கால் நடையின் போது. காண கண் கோடி வேண்டும்.மணமும் மனமும் ரம்யமானது.
    பவளத்தை கவனமாய் கவளமாய்
    கவிச் சரமாய் தேடி கொடுத்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கு
    கோடி நமஸ்காரம்

    TAIL-piece
    அதன் அழகில் நான் லயித்திருக்க(தாவரவியல் மாணவி ஆயிற்றே) பின்னால் வந்த காளை என்னைக் காலி செய்யக் காத்திருக்க.உதவிக்கு நான் ஒருவர் பின்னால் ஓட ...அன்றோடு முடிந்தது என் காலைப் பயிற்சி...ஆனாலும் என் ரசனை விட வில்லை...
     
    Last edited: May 13, 2010
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    veni mavin kaviyum padangalum endrum arumayae!:thumbsup
     
  4. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதருமை ரோஜாவே,

    அந்தக் காலையிலும் காளை உன்னைத் துரத்தி வர உனது ராஜா எங்கு சென்று விட்டார்?? இப்படியா வேளை, காளை தெரியாமல் வேடிக்கை பார்ப்பது.

    எனது கவிதையும், படங்களையும், பிற தகவல்களையும், படித்து ரசித்து அழகாய் பின்னூட்டம் தந்த தோழிக்கு நன்றி

    ரசனை, இருக்கும் வரைதான் வாழ்க்கை ரசிக்கும். என்றும் தொடரட்டும் உங்கள் ரசனை
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nandri Yamini.
     
  6. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    intha malargal enakku romba pidikkum veni ka.......
    athan ithazhil niramum, kaambin niramum, parthuk konde irukkalam pola irukkum......

    ungal kavithayai patri sollavum venduma.......nandri veni neengal paditha seithiyinai engallida pagirnthu kondatharkku.......
     
  7. ramvino

    ramvino Platinum IL'ite

    Messages:
    4,510
    Likes Received:
    278
    Trophy Points:
    200
    Gender:
    Female
    yeah venima!!
    nalla arumaiyana kavithai dear and came to know abt the story of the flower which krrishna did in his leelai............very nice dear..........
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நாள் தவறாது என் கவிதை படித்து, ரசித்து கருத்து சொல்ல நண்பர்கள் நீங்கள் இருக்கையில் எனக்கும் படைக்க ஒரு தடையும் இல்லை.

    நன்றிகள் தோழி
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஹே வினு மா,

    தினமும் மலரும் என் பூக்களை, வாடும் முன் வசந்தமாய் வந்து பாராட்டும் உங்கள் அன்புக்கு என் நன்றிகள் பல தோழி
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கொலுவிருக்க, வண்ணங்களின் நர்த்தனம்
    மலருக்கு மிக நல்ல கீர்த்தனம்


    intha varigal romba nallairukku venima...
     

Share This Page