1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீயில் தகித்த மலர்கள்!!!!

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, May 9, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தீயில் தகித்த மலர்கள்

    எனதருமை தோழிகள் தோழர்களுக்கு நான் முதல் முறையாக நாடக வடிவில் கதை எழுத முயற்சித்து இருக்கிறேன். இதில் ஏதாவது தவறு செய்து இருந்தால் எனக்கு சுட்டி காட்டி என்னை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்

    கதாபாத்திரங்கள்

    அருணாசலம் - கதையின் நாயகர்
    அஞ்சுகம் - அருணாச்சலத்தின் மனைவி ஆகபோகிறவர்
    கங்காதரன் - அருணாச்சலத்தின் தந்தை
    வடிவுக்கரசி - அருணாச்சலத்தின் தாய், கங்காதரனின் மனைவி மற்றும் அஞ்சுகத்தின் மாமியார் ஆகபோகிறவர்
    எழிலரசி, சசிரேகா, பாஸ்கர், ராஜா, - இவர்கள் அனைவரும் அருணாச்சலத்தின் தங்கை மற்றும் தம்பிகள்
    வடிவின் தோழி , உறவினர்கள், தரகர், தரகர் மனைவி - இவர்கள் இக்கதையில் வரும் இதர கதாபாத்திரங்கள்
    தேர்ப்பட்டினம் , கல்லான்காடு, திலகர் நகர், குமரன் காலனி - இவை இந்த கதையில் பயன்படுத்தப்படும் ஊரின் பெயர்கள்


    தேர்பட்டினம் இது தான் அருணாசலம் பிறந்த ஊர் . அருணாச்சலத்தின் தாய் தந்தை தாத்தா பாட்டி காலம் காலமாக வாழ்ந்து வந்த ஊர். அருணாச்சலம் படித்தது ஐந்தாம் வகுப்பு தான் அதற்க்கு மேல் படிக்க வசதி இல்லை. வசதி இல்லை என்று சொல்லுவதை விட அவரை படிக்க வைக்க விருப்பம் இல்லை என்றே சொல்லலாம். பள்ளிக்கும் செல்லும் பொது அணிந்து செல்ல ஆடை இல்லாமல் அவர் தாயின் ரவிக்கையை அணிந்து தான் செல்வார். அந்த அளவு பிள்ளைகள் மேல் அக்கறை இல்லாமல் இருந்து வந்தனர். அருணாச்சலம் பள்ளி படிப்பை நிறுத்தும் போது அவருக்கு வயது பதினொன்று. நிறுத்திய மறு கனமே அவர் than தந்தையுடன் நெசவு நெய்ய சென்று விட்டார்.

    அருணாச்சலத்திற்கு நண்பர்கள் அதிகம் அதனால் அவர்கள் மூலம் அவருக்கு வரும் பிரச்சினைகளும் அதிகம். இதனால் மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் பஞ்சாயத்து கூடி விடும். இவர் இப்படி அடிகடி சண்டைக்கு சென்று பஞ்சாயத்தில் நிற்பதால் oor மக்கள் இவரை ஒரு ரௌடியை பார்ப்பது போலவே பார்த்தனர் ஆனாலும் இவரின் நல்ல உள்ளம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

    காட்சி 1

    (வடிவுக்கரசி அவள் வீட்டின் வெளியே பாத்திரம் கழுவிக் கொண்டு இருக்கிறாள், வடிவுக்கரசியின் தோழி கையில் கூடையுடன் சந்தைக்கு செல்ல வந்து கொண்டிருக்கிறாள், வடிவுக்கரசியின் குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருகின்றனர்)
    வடிவின் தோழி : என்னம்மா வடிவு வேலைக்கு கழுவுரியா?
    வடிவு : ஆமாக்கா, நீங்க எங்க சந்தைக்கு கிளம்பிட்டீங்களா....
    வடிவின்தோழி :ஆமா நீங்க வரல
    வடிவு : இதோ ஒரு நிமிசத்துல வந்தர்றேன் (என்று sonnaval சீக்கிரம் சீக்கிரமாக விளக்கி கழுவினால் )
    வடிவின் தோழி : சீக்கிரம் வாங்க உங்க கிட்ட ஒன்ன பத்தி பேசணும் என்று சொன்னதும் வடிவின் வேகம் அதிகமானது)
    (வடிவு சீக்கிரமாக விளக்கி கழுவி கூடையை எடுத்துக்கொண்டு சந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்)
    காட்சி 2
    (வடிவும், வடிவுகரசியின் தோழியும் சந்தைக்கு செல்லும் வழியில்)
    வடிவு : ஏக்கா!! நா வெலக்கி கழுவிட்டு இருக்கும் போது ஏதோ பேசணும் நு சொன்னீங்களே என்ன அது
    வடிவின் தோழி : அது ஒண்ணுமில்ல வடிவு எல்லா உன்னோட மூத்த பையன் அருணாச்சலத்த பத்திதான்
    வடிவு: என்னக்கா சொல்றீங்க மறுபடியும் ஏதாவது பிரச்சினை பண்ணிட்டானா
    வடிவின் தோழி: ஐயையே! நா அவ இனிமே எந்த பிரச்சினைக்கும் போகாம இருக்குறதுக்கு ஒரு வழி சொல்லறதுக்கு தான் உங்கள கூப்ட்டேன்
    வடிவு : என்னக்கா சொல்றீங்க கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க
    வடிவின் தோழி: அட கிறுக்கி உன் பையனுக்கு ஒரு கால் கட்டு போட்டுட்டா அப்புறம் அவ எந்த பிரச்சினைக்கும் போக மாட்டான்னு சொல்ல வந்தேன்
    வடிவு: ஓ!! கல்யாணம் பண்ணிவைக்கிரத பத்தி சொல்றீங்களா சரி கா நா அவரு (கங்காதரன்) கிட்ட இத பத்தி பேசுறேன் கா
    (என்று பேசியவர்கள் சந்தையை அடைந்திருந்தனர். சந்தையில் இருந்து காய்கறி வாங்கிவிட்டு வீடு திரும்பினர்)

    காட்சி 3
    ( கதாபாத்திரங்கள் : வடிவு , கங்காதரன். கங்காதரன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ரேடியோ கேட்டு கொண்டு இருக்கிறார் வடிவு சமையல் கட்டு வாசலில் நின்று கொண்டு இருக்கிறார் )
    வடிவு: (மனதில் என்ன சொல்லுவாரோ என்ற பயத்துடனே கேட்கிறார் ) என்னங்க! (கங்காதரனுக்கு கேட்கவில்லை) மீண்டும் கொஞ்சம் சத்தாமா உயற்றி என்னங்க! கங்காதரன் (மனைவியீன் பக்கம் திரும்புகிறார் )
    கங்காதரன்: ஏன் டி (என்று ஆணுக்கே உண்டான மிடுக்குடன் கேட்கிறார்)
    வடிவு : அது ஒன்ன்மில்லைங்க. namma பையன் இப்படியே பசங்க கூட சேந்துட்டு பிரச்சினை மேல பிரச்சினை பண்ணிட்டு இருக்கான். நம்ம பையன் சும்மா இருந்தாலும் அவனோட சேந்து சுத்துரவணுக அவன பிரச்சினைல சிக்க வச்சர்றாங்க. இதுனால நம்ம பையனுக்கு தான் கெட்ட பேரு
    கங்காதரன்: இப்ப நீ எல்லா சொல்ல வர்ற (என்று முகத்தை கேள்விக்குரியாக்கியவாறு கேட்கிறார்)
    வடிவு: அதுனால நம்ம பையனுக்கு ஒரு கல்யாணத பண்ணி வச்சுட்டோம்னா எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டான் எனக்கும் கூட மாட வேல செய்ய ஒரு ஒத்தாசையா இருக்கும் (என்று சொல்லியவாறே நெளிய)
    கங்காதரன்: சரி! சரி! நானும் இத பத்தி தான் யோசித்து இருந்தேன். நாளிக்கே நம்ம சொந்த காரங்க வீட்டுல வரன் ஏதாவது இருக்கணு தரகர்த்ட விசாரிக்கிறேன் (என்று சொல்லியவர் மீண்டும் காதுகளை ரேடியோவிர்க்குள் புதைத்தார்).

    கட்சி 4
    கதாபாத்திரங்கள்: தரகர், கங்காதரன், தரகர் மனைவி
    இடம் : தரகர் வீடு (தரகர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் அந்த சமயம் கங்காதரன் அவர் வீட்டிருக்கு செல்கிறார்)
    தரகர்: (வீட்டின் வெளியே நின்று கொண்டு இருக்கும் கங்காதரனை பார்த்து) அட தே கங்காதரனா வாப்பா வாப்பா பாத்து எம்புட்டு நாள் ஆச்சு சாப்பிடுப்பா (என்ன்று சொல்லிக்கொண்டே மனைவியிடம்) ஏமா யாரு வந்துருக்காங்கன்னு பாரு
    தரகர் மனைவி: (யார் வந்துருகுறாங்க என்ற எதிர் பார்ப்புடன் கங்காதரனை பார்த்ததும்) அண்ணே வாங்கண்ணே நல்லா இருக்கீங்களா வீட்டுல அக்கா, புள்ளைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா (என்று விசாரிக்க )
    கங்காதரன்: ம் எல்லா நல்லா இருக்குகான்கமா. நீங்க சௌக்கியம் தான (என்று கேட்டுக்கொண்டே) எங்கம்மா உன் பையன காணோம்
    தரகர் மனைவி: அவ எங்கயாவது வெளயாட போயிருப்பானே என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே தரகர் குரல் கேட்கிறது)
    தரகர்: சரி சரி பேசிட்டே இருக்காம சீக்கிரம் போயி காப்பி போட்டு எடுத்தது வா ம (என்று சொன்னதும் தரகர் மனைவி உள்ளே செல்கிறார்)
    தரகர்: சரிப்பா என்ன விஷயமா இங்க வந்த. ஓ புரிஞ்சு போச்சு புரிஞ்சு போச்சு அருனாச்சலதுக்கு கல்யாணம் பண்றத பத்தி தான பேச வந்த (என்று தரகர் சரியாக சொல்ல)
    கங்காதரன்: (முகத்தில் ஆச்சர்யத்துடன் ) அது எப்படிப்பா உனக்கு தெரியும் என்று கேட்க
    தரகர்: நீ காரணமில்லாம இந்த பக்கம் வரமாட்டியே atha vachchu தான் சொன்னேன் (சொல்லி கொண்டு இருக்கும் போதே தரகர் மனைவி கையில் காப்பியுடன் நிற்க ) சரிப்பா காப்பிய குடி என்று கூற (கங்காதரன் காப்பியை குடித்து கொண்டே தான் வந்த விஷயத்தை சொல்கிறார்)
    கங்காதரன்: இது தாம்ப்பா விஷயம் சீக்கிரமா ஒரு பொண்ண பாத்து சொல்லு (என்று சொல்லி முடிக்க தரகர் சாப்பிட்டு முடித்து எழுந்திருந்தார்)
    தரகர்: (கை கழுவி விட்டு துண்டால் கையை துடைத்து கொண்டே) இது தான் விசயமா சரி சரி என் கிட்ட ஒரு வரன் இருக்கு நல்ல இடம் போயி பாருங்க புடிச்சிருந்தா மத்த விசயங்கள பேசிக்கலாம் என்று பெண் வீட்டு முகவரியை கொடுத்தார்
    கங்காதரன்: (முகவரியை பெற்று கொண்டு) சரிப்பா நா போயிட்டு வர்றேன் (என்று சொன்னவர் எதையோ மறந்து வைத்ததை போல) அப்புறம் நீ ஒரு வார்த்த பொண்ணு வீட்டுல சொல்லிருப்பா வர்ற புதன் கிழமை பொன்னு பார்க்க வர்றோம் நு (என்று சொல்ல )
    தரகர்: கண்டிப்பா !! (என்று சொன்னவர்) என்னோட வேலையே அது தான என்று புன்னகைக்க கங்காதரனும் நகைத்து விட்டு வீடு திரும்பினார்)

    பெண்பார்க்கும் படலம் நாளை
     
    Last edited: May 9, 2010
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: theeyil thakiththa malarkal!!!!

    un kadhai ezhudhum padalamum aarambamaa???:)
    vaazhththukal!! :thumbsup
    kadhai adhuvum naadaga vadivil!!:coffee
    arumai arumai!!:spin:spin
    un kadhai illai illai naadagam amoga varavaerppu paera en manamaarndha vaazhththukal anna!
    :thumbsup
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: theeyil thakiththa malarkal!!!!

    eppavum pola nallarukku ram anna....
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: theeyil thakiththa malarkal!!!!

    thank you very much yams. katha nalla irukkula
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: theeyil thakiththa malarkal!!!!

    nalla dhaan da irukku!!:thumbsup
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: theeyil thakiththa malarkal!!!!

    thank you very much priyaa. and yams again thanks
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: theeyil thakiththa malarkal!!!!

    நல்ல ஆரம்பம் Ram.
    தொடரட்டும் உங்கள் நாடக பா(ப )ணி
    Its different.
    உங்கள் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    Re: theeyil thakiththa malarkal!!!!

    thank you very much saroj. naa bayanthutte thaan post pannuna. thank you for the recognition
     
  9. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    anbu raam

    naadaga baniyil kathai exhuthum puthiya muyarchiku muthal paarattukkal. Thudakkame asathalaaga thanthamaikku meendum meendum paaraatukkal. migavum nandraaga irukkirathu ram. Pen paarkkum padalathukku naanum varalaama?
    aanal pen veettu mugavai tharavillaye ? paravayillai. nalai santhippom.


    ganges
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    you are always welcome ma. address IndusLadies - Global Online Community of Indian Ladies. tommorrow evening intha address ku vanthurunga naama pen paarka polaam ok. thank you very much ma
     

Share This Page