1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வானம் வசப்படும்......

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, May 8, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    கண் சிமிட்டும் விண்மீன்களோ
    கைக்கு எட்டாத தூரத்தில்
    விண்ணைத் தொடும் உன் லட்சியங்களோ
    கைக்கு எட்டும் தூரத்தில்.

    இளைய நண்பா!!!!!!
    தூரத்தை எண்ணி உன் தூக்கத்தை தொலைக்காதே
    தூரத்தில் தொலைந்து போகாதே
    தோல்வியில் துவண்டு போகாதே
    தூரத்தை தூரி ஆக்கிடு
    தோல்வியை போர்வை ஆக்கிடு

    உன் லட்சிய ரகசியங்கள் அக்னியாய் இருக்கட்டும்

    வானம் வசப்படும்
    உன் மனம் அசைபோட்டால்
    வாழ்க்கையும் கூட.
    தொடுவானம் தூரமில்லை
    தொட்டுவிடலாம் .
     
    Last edited: May 8, 2010
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    தொட்டு விடலாம் லட்சியத் தீ நம் மனதில் எரிந்து கொண்டே இருந்தால்
    என்பதை மிக அழகாக சொன்னீர்கள் யஷிகுஷி.
    இந்த கவிதை என்னை போல் லட்சியம் உள்ளவர்களுக்கு ஊக்க மருந்து.
    அருமையான கருத்து சொன்ன உங்களுக்கு நன்றிகள் பல.
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்றி நண்பா
    புரிந்து கொண்டால் புள்ளிகள் கோலங்கள் ஆகும்
    கலக்கங்கள் காணாமல் போகும்
    உங்கள் லட்சிய வாழ்விற்கு என் வாழ்த்துக்கள்.
     
  4. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you very much ka
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எனதன்பு ரோஜாவே,

    தூரிகை கொண்டு தீட்டிய ஓவியமாய், காரிகை நீ கூறிய கவிதை மிக அருமை. அக்கினிக் குஞ்சை மரப் பொந்திடை வைத்தது போல லட்சியக் கனலை அடிமனதில் வைத்தால் எண்ணியவை ஈடேறும், வானமும் தொட்டுவிடும் தூரம்தான் என்பதை அழகாய் சொன்ன தோழிக்கு :clap:clap:clap
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    கவிக்குயிலாய் வந்த என் தோழி
    பனிக் கட்டியாய் உன் பின்னூட்டம்
    கனலாய் கக்கும் உன் எண்ண ஓட்டம்
    அருமை அருமை அருமை
    நன்றி :bowdown
     
  7. Meenamohan

    Meenamohan Silver IL'ite

    Messages:
    1,247
    Likes Received:
    30
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Yashi ... You have well described Bharathiyaar's dream ....

    Agni kunjondru kanden adhai angoru kaatil pondhidai vaithen ......

    I read this kavi actually sing it whenever i am little bit dull or under stress ... the moment you read Bharathiyarr KAvidhaigal you can get the feel uproaring in your spirits .... Yours is one such thing. This is a must faith everyone should have in them ....
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    மனம் அசை போட்டால்;
    வானம் வசப்படும். :thumbsup

    வாய் அசை போட்டால்;
    மாட்டிற்கு புண்ணாக்காக ஆகிவிடுவோம்.
    வேறு ஒன்றும் சாதிக்க முடியாது, வெட்டி வம்பு பேசித் திரிவதைத் தவிர.

    அருமையாக (எருமைக்காக) சொல்லி இருக்கிறீர்கள் சரோஜ்.
     
  9. rajiravi

    rajiravi Bronze IL'ite

    Messages:
    979
    Likes Received:
    14
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அன்புத் தோழியே,

    மிக மிக அருமையான கவிதை.....எத்தனை நம்பிக்கையூட்டும் வரிகள்....இதை படிக்கும்போது எனக்கு "ஒவ்வொரு பூக்களுமே" பாடல் வரிகள் நினைவில் வருகிறது....கருத்தான கவிதை தந்தமைக்கு நன்றி...
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீங்க சொன்னதும்தான் அது என் நினைவுக்கு வருகிறது .
    சோர்ந்து போன ஒரு இளைய சமுதாய சாதனை மாணவனுக்கு இது என் அறிவுரை
    வார்த்தைகளுக்கே இவ்வளவு தணல் என்றால் உங்கள் பாட்டிற்கு எவ்வளவு ????
    நன்றி என் தோழியே
     

Share This Page